hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Diet & Nutrition arrow
  • கர்ப்பகாலத்தின் 9வது வார டயட்டில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் arrow

In this Article

    கர்ப்பகாலத்தின் 9வது வார டயட்டில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்

    Diet & Nutrition

    கர்ப்பகாலத்தின் 9வது வார டயட்டில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    ஒரு பெண்ணின் வாழ்வில் மிக அழகானதும், சவால் நிறைந்ததுமாக விளங்குவது அவளின் கர்ப்பகாலம் தான். குழந்தையின் நலனை காப்பதற்கு, தாயின் உணவுமுறை (டயட்) மிக முக்கியமானது. கர்ப்பமாக இருக்கும் போது, பெரும்பாலான பண்டங்களும், பானங்களும் சாப்பிடத் தகுந்தது தான் என்றாலும் கூட, இந்த காலகட்டத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. சில உணவுகளை அவ்வப்போது சாப்பிடலாம், மற்றவற்றை மொத்தமாகவே தவிர்த்து விட வேண்டும். இந்த கட்டுரையில், தாய் மற்றும் குழந்தையின் நலனை காப்பதன் பொருட்டு, 9 வார கர்ப்பகால டயட் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

    கர்ப்ப காலத்தின் 9-வது வார நிலைமை

    கர்ப்ப காலத்தோடு தொடர்புடைய ஹார்மோன்களானது, அதிகப்படியான ஊட்டச்சத்தினை உட்கொள்ளும் தன்மையை உடலுக்கு உண்டாக்குவதால், உப்பிசம் அல்லது மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. உணவுக் குழாயினையும், வயிற்றினையும் தளர்த்துவதால், இந்த ஹார்மோன்கள் நெஞ்செரிச்சலையும் கூட ஏற்படுத்தக் கூடும். குழந்தையின் கண்ணிமைகள் உருவாகும். ஆனால் மூடியே இருக்கும். உங்கள் குழந்தை கர்ப்பப்பையில் இருக்கும் போது, சுமார் 0.70 இஞ்சு நீளத்திற்கு, ஒரு வேர்க்கடலை அளவிற்கு இருக்கும். கழுத்து அதிக வளர்ச்சியடைந்து, தலை இன்னும் நிமிர்ந்து காணப்படும். உங்கள் குழந்தையின் எலும்புகள் வளர்கின்றன. ஆயினும் அவை மென்மையாக இருக்கும். முகத்தில் சிறிய மூக்கையும், மூடிய இமைகளையும் நீங்கள் காணலாம். இந்த காலகட்டத்தில், கர்ப்பிணிப் பெண்கள் நாள் முழுவதும் போதுமான அளவிற்கு ஆற்றல் சக்தியை பெறுவதற்கு கார்போஹைட்ரேட்-களிலிருந்து 50 முதல் 60 சதவிகிதம் வரை கலோரிகளை பெற வேண்டும்.

    9-வது வார டயட்டில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

    கேஃபின்

    உலகம் முழுவதும் மக்களால் பயன்படுத்தப்படும் மிகப் பிரபலமான தூண்டு பொருள்களில் கேஃபின் ஒன்றாக உள்ளது. எனினும், 9 வார கர்ப்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்தை உயர்த்தி விடும் அபாயம் இருப்பதால், கேஃபின் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டெடிரிஷியன் மற்றும் கைனகாலஜிஸ்ட் (ஏசிஓஜி) கர்ப்ப காலத்தில் மிதமான அளவில் கேஃபின் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறது. அதாவது, ஒரு நாளைக்கு 200 எம்ஜி-க்கும் குறைவாக எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கிறது. கேஃபின் எடுத்துக் கொள்வதனால், கருப்பை மற்றும் பனிக்குடத்திலுள்ள இரத்த நாளங்களை குறுகச் செய்து, கருவிலுள்ள சிசுவிற்கு இரத்தம் செல்வது தடுக்கப்பட்டு, அதன் வளர்ச்சி தடைபட நேரலாம் என்று சொல்லப்படுகிறது. காஃபியை போலவே, இதுவும் பிரசவத்திற்கு முந்திய மன அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்களின் உருவாக்கத்தில் ஈடுபட நேரிடலாம். இதனால், பிரசவத்திற்கு பிறகு வேகமாக எடை அதிகரிப்பதும், உடற்பருமனும், இதய நோயும், குழந்தைகளுக்கு சர்க்கரை நோயும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    பப்பாளிகள்

    பப்பாளிப் பழங்கள் அதன் ஊட்டச்சத்திற்காகவும், சுவைக்காகவும் மற்றும் ஹோமியோபதி முறையிலான அஜீரணத்திற்கான சிகிச்சைக்காகவும் நன்கு அறியப்படும் ஒன்றாக உள்ளது. ஆயினும், கர்ப்பிணிப் பெண்கள் முதிராத, பாதி பழுத்த நிலையிலிருக்கும் இந்த பழ வகைகளை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது இதை உண்பதால் கருக்கலைப்பிற்கு இட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது என்பதால், இது மிகவும் தீங்கு விளைவிப்பது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பப்பாய்ன் மற்றும் பெப்சினின் செறிவு கருவிலுள்ள சிசுவின் வளர்ச்சியை குறைக்கிறது. குறைப் பிரசவத்தை ஊக்கப்படுத்தும் திறன் பப்பாய்ன்-க்கு உள்ளது என்பது இதன் எதிர்மறையான விளைவுகளுள் ஒன்றாகும். பப்பாய்னை போலவே உருவ ஒற்றுமையுள்ள இதே வேலையைச் செய்யும் இன்னொரு மூலக்கூறு இருப்பதால், உடல் அதற்கு பதிலாக தவறுதலாக பப்பாய்னை எடுத்துக் கொள்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்களும், பிற நிபுணர்களும் கர்ப்பமாக இருக்கும் போது பழுக்காத பப்பாளி உண்பதை தவிர்க்குமாறு பரிந்துரைக்கின்றனர்.

    பச்சையான முளைப்பயிர்

    பச்சையான முளை கட்டிய பயிர்களிலிருந்து முழுமையாக பாக்டீரியாவை நீக்குவதென்பது கடினமானது. கடுமையான உடல்நலக் குறைவும், மரணமும் கூட சால்மொனெல்லா மற்றும் இ-கோலை போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படலாம். அவை நீங்களே முளை கட்டிய பயராக இருந்தாலும் கூட பச்சையாக உண்ணக் கூடாது. ஏனென்றால், அவற்றிலும் கூட பாக்டீரியா இருக்கும் வாய்ப்புள்ளது. உடல் நலமின்மை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு, பச்சை முளைப்பயிர்களை தவிர்க்கவும். ஏற்கனவே, தயார் செய்யப்பட்ட டெலி சாண்ட்விச்-கள் போன்ற உணவுப் பொருட்களிலும் கூட, பச்சையான முளைப்பயிர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா என சாப்பிடுவதற்கு முன் சோதித்துப் பார்க்கவும். நோய்த் தொற்றினை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிப்பதற்கு, எப்போதுமே கழுவி, வேக வைத்த பின் முளைப் பயிர்களை உண்ணுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

    பதப்படுத்தப்படாத பால் மற்றும் மென்மையான பாலாடைக்கட்டிகள்

    கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே, பதப்படுத்தப்படாத பாலை எடுத்துக் கொள்வது ஆபத்தானது. ஆட்டுப் பாலும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் லிஸ்டீரியோசிஸ் என்னும் நோய்த்தொற்றினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், பச்சைப் பால் மிகவும் ஆபத்தானது. லிஸ்டீரியோசிஸ் கருச்சிதைவினை கூட ஏற்படுத்தக் கூடும். 9-வது வார கர்ப்ப கால டயட்டில், பாலுடன் கூடவே, மென்மையான பாலாடைக்கட்டிகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இந்த பாலாடைக்கட்டிகளில் லிஸ்டீரியாவும், பிற பாக்டீரியாக்களும் பரவலாக உள்ளன. அவை பதப்படுத்தப்படவில்லை, இதன் விளைவாக சால்மொனெல்லா, லிஸ்டீரியா மற்றும் ப்ருசெல்லா போன்ற பல நோய்களும் ஏற்படக் கூடும். குழந்தை பிறக்கும் போது சால்மொனெல்லா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு காய்ச்சல் வரலாம். மூளைக்காய்ச்சல் (மெனிஞ்சிட்டீஸ்/meningitis) கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.

    மீன்

    பெரிய மீன்களில் உள்ள அதிக அளவிலான மெர்க்குரியானது, குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஸ்வார்ட் மீன், வாலி, மர்லின், சுறா, சூரை மீன் போன்ற பெரிய மீன்களை உண்ணுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கடுமையான நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளவர்கள், நன்றாக சமைத்த மீன் உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். ஏனென்றால், புகையில் வேக வைக்கப்படும் மீன்களால் (smoked fish) லிஸ்டீரியா நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை உங்களால் மீன் சாப்பிடாமல் இருக்க முடியாதென்றால், சுத்தமான, தூயநீரில் வாழும் குறைந்த அளவு மெர்க்குரியை கொண்ட, இறால், வஞ்சிர மீன் வகை (சால்மன்), திலாபியா போன்ற மீன் வகைகளை உண்ணலாம். சுஷி மற்றும் பிற சரியாக சமைக்கப்படாத உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

    இதையும் படிக்கலாமே! -, கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த உணவுகள்

    முடிவுரை

    9 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து கொள்வது தாயின் ஆரோக்கியத்திற்கும், பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. பெரும்பாலான உணவுப் பண்டங்களையும், பானங்களையும் எந்த பிரச்சினையும் இன்றி உண்ணலாம் என்றாலும், பச்சையான மீன், பதப்படுத்தப்படாத பால் பொருட்கள், மது, மற்றும் அதிக மெர்க்குரி கொண்ட கடல் சார் உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சுவைமிகுந்த இந்த உணவுகளை தவிர்ப்பது கடினம் தான். எனினும், மேற்சொல்லப்பட்ட பட்டியலில் உள்ள உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது உங்கள் கர்ப்பகாலத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வழிவகை செய்யும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.