Baby Care Myths & facts
4 December 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பச்சிளம் குழந்தைகளுக்கு பரு என்பது சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்பாகும். இது அளவில் சிறியதாக சிவப்பு அல்லது வெள்ளை நிற புடைப்புகள் அல்லது பருக்கள் போன்ற வகையைச் சேர்ந்ததாகும். குழந்தை பிறந்து ஒன்று முதல் 4 வாரங்களில் இது பலருக்கும் ஏற்படும் என்றாலும், சிலருக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு பரு உருவாகுவது மிகவும் இயல்பான விஷயம் தான் என்றாலும், அந்த பருக்கள் மிக தீவிரமானதாக வளருவதை பார்க்கையில் நம் மனம் வேதனைபடக் கூடும்.
எரித்மா டாக்ஸிகம் நியோனடோரம் (Erythema toxicum neonatorum - ETN) என்பதுதான் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பருக்களுக்கான மருத்துவ சொல் ஆகும். ஆனால், இந்த பெயரை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். தோராயமாக 10 குழந்தைகளை எடுத்துக் கொண்டால் 4.5 பேருக்கு இந்தப் பரு பிரச்சினை வருகிறது. ஆக, இது அதிகமானோரை பாதிக்கக் கூடிய பொதுவான நோயாக உள்ளது.
பச்சிளம் குழந்தைக்கான பரு என்பது செபாலிக் பஸ்டுலோசிஸ் (cephalic pustulosis) என்று அழைக்கப்படுகிறது அல்லது பிறந்த குழந்தைக்கான பரு என்று குறிப்பிடலாம். இரண்டு முதல் 4 வாரங்கள் ஆன குழந்தைகளின் தலை மற்றும் முகத்தில் சிறிய பருக்கள் அல்லது கொப்பளங்கள் ஏற்படக் கூடும்.
மூன்று முதல் 6 மாதங்களை கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பருக்களை ஒப்பிடும்போது பச்சிளம் குழந்தைகளுக்கான பரு என்பது முற்றிலும் வேறானது ஆகும். இதுகுறித்து உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
குழந்தைகளின் சருமத்தில் குறுகிய காலத்திற்கு நீடிக்கக் கூடிய ஒரு பிரச்சினை தான் பரு ஆகும். இது குழந்தைகளின் முகத்தில் அல்லது உடலில் ஏற்படலாம். சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் சின்ன புடைப்புகளாக அல்லது பருக்களாக இது இருக்கும். எந்தவித சிகிச்சையும் இல்லாமல் பருக்கள் எப்போதும் தாமாகவே குணமாகிவிடும்.
குழந்தைகளுக்கான பரு என்பது நியோநேடல் பரு என்றும் அழைக்கப்படும். சுமார் 20 சதவீத குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த உடனேயே இது ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பருவானது பச்சிளம் குழந்தைகளுக்கான பருவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பொதுவாக இதில் தடிப்புகள் அல்லது கரும்புள்ளிகள் இருக்காது. ஒரு குழந்தைக்கு பரு உண்டாகும்போது இந்த அறிகுறிகள் பொதுவானதாகும். குழந்தைகளுக்கு இருக்கக் கூடிய பருக்களை கட்டிகள் அல்லது மொட்டுகள் என்று குறிப்பிடலாம். சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் சில சமயம் தழும்புகள் ஏற்படக் கூடும்.
குழந்தைகளுக்கான பரு என்பது அவர்களது வாழ்நாளில் முதல் சில மாதங்களுக்கு மட்டும் தான் ஏற்படும். சில குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரையில் நீடிக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கான பருக்களை காட்டிலும் குழந்தைகளுக்கான பரு மிக பொதுவான பாதிப்பு ஆகும்.
பொதுவாக குழந்தைகளின் பரு என்பது சிவப்பு நிற புடைப்புகள் அல்லது கட்டிகள் போல காட்சியளிக்கும். வளர் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கு இருப்பதை போலவே அவை தோற்றமளிக்கும். சில சமயம் வெள்ளை நிற கொப்பளங்கள் அல்லது வெள்ளைநிற மொட்டுகள் தென்படும். அந்த கொப்பளத்தை சுற்றியுள்ள சருமம் சிவந்து போய் காட்சியளிக்கும்.
குழந்தையின் முகத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பரு வளரலாம். ஆனால், பொதுவாக அது பக்கவாட்டு கன்னப் பகுதியில் தோன்றும். சில குழந்தைகளுக்கு மேல் நெத்திகள் அல்லது கழுத்துப் பகுதிகளில் கூட பருக்கள் வரும்.
குழந்தை நிறைய வீம்பு செய்கிறது அல்லது மிகுதியாக அழுகிறது என்றால் பருக்கள் மிக மோசமானதாக மாறும். குழந்தைக்கு அணிவிக்கும் ஆடைகள் இறுக்கமாக இருந்தால் அல்லது குழந்தை எடுக்கும் எச்சில், வாந்தி போன்றவை முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்சத்தில் பருக்களின் நிலைமை மோசம் அடையும்.
சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே பரு ஏற்படும். பொதுவாக குழந்தை பிறந்த இரண்டு முதல் 4 வாரங்களில் இது தோன்றும். இன்னும் சிலருக்கு ஒருசில மாதங்களில் இது ஏற்படலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு பரு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஆனால், நிபுணர்கள் சிலவற்றை குறிப்பிடுகின்றனர்.
பச்சிளம் குழந்தையின் சருமத்தில் பூஞ்சை தொற்று மூலமாக ஏற்படும் அரிப்பு காரணமாக பரு ஏற்படலாம்.
நஞ்சுக்கொடியில் ஏற்படும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக குழந்தையின் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியாகுவதால் பரு உண்டாகலாம்.
தாய்மார்களின் மரபணுக்கள் மற்றும் ஹார்மோன்கள் காரணமாக குழந்தைகளுக்கு இதுபோன்று பருக்கள் உருவாகுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேபோல சுற்றுப்புறச்சூழல் காரணமாக சருமத்தில் ஏற்படும் எரிச்சல் காரணமாகவும் இது நிகழக்கூடும். குழந்தைகளுக்கான பரு என்பது இயல்பான விஷயமாகும். இது மிக விரைவாக மறைந்துவிடும்.
பருவ வயதினர் மற்றும் பெரியவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் பரு உண்டாகும். தாய்மார்களின் உடலில் இருந்து பெறப்பட்ட ஹார்மோன்கள் குழந்தைகளின் உடலில் சில வாரங்கள் வரையிலும் தங்கியிருக்கும். இவ்வாறு வந்து சேர்ந்த ஹார்மோன்கள் காரணமாக குழந்தைகளுக்கான பரு உருவாகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தையின் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளை உருவாக்கக் கூடிய நஞ்சுக்கொடி ஹார்மோன்கள் மிகுதியாக வேலை செய்யும். இதுதான் பின்னர் பருக்களாக மாறுகின்றன.
குழந்தையின் சருமத்தில் உள்ள துளைகள் பிறப்புக்கு பிறகும் முழுமையாக மூடுவதில்லை. வெளியுலகிற்கு வந்த பிறகு இதில் ஏற்படும் எரிச்சல் காரணமாக பருக்கள் உண்டாகலாம். பருவ வயதினருக்கு ஏற்படும் பருக்களை ஒப்பிடும்போது குழந்தையின் உடலில் ஏற்படக் கூடிய பருவானது ஒரு பெரிய விஷயமே அல்ல.
பச்சிளம் குழந்தைக்கு பரு வளருவது இயல்பானது தான் என்றாலும், அது பரவும்போது நம் மனதை புண்படுத்தக் கூடியதாக அமையும். குழந்தைகளுக்கான பருக்களுக்கு தற்சமயம் சிகிச்சை எதுவும் கிடையாது. இருப்பினும், இதுகுறித்து கவலை கொண்டுள்ள பெற்றோர் குழந்தை நல மருத்துவரை ஆலோசிக்கலாம். குழந்தைகளுக்கான சிறப்பு நல சிகிச்சை அல்லது பொதுவான ஆலோசனை நேரத்தில் அவர்களுக்கான பரு மற்றும் இதர உடல்நல சிக்கல்கள் குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
கரும்புள்ளிகள், கொப்பளங்கள் மற்றும் வீக்கம் போன்ற அனைத்துமே பருக்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் தான். இதற்கு உரிய மருத்துவ கண்காணிப்பு தேவை. பருக்கள் காரணமாக பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படுகிறது அல்லது அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றால் மருத்துவரை பார்க்க வேண்டும்.
வீட்டு முறை சிகிச்சையில் குழந்தையின் பருக்கள் குணமடையாமல் சில மாதங்கள் வரையில் நீடிக்கிறது என்றால் 2.5 சதவீத பென்சாயில் பெராக்சைடு கொண்ட லோஷன் ஒன்றை மருத்துவர் பரிந்துரை செய்வார்.
பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் விரைவாக மறைவதற்கு எரித்ரோமைசின் அல்லது ஐசோட்ரெடினோய்ன் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை செய்வார். மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட பருக்கள் கொண்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த சிகிச்சை தேவைப்படும்.
எனினும், குழந்தைகள் பருவம் அடைவதற்கு முன்பாக மீண்டும் பருக்கள் வருகிறது என்றால், அதை தீவிரத்தன்மை கொண்ட பிரச்சினையாக கருதி, மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
Tags
Baby Acne in English Baby Acne in Bengali, Baby Acne in Hindi, Baby Acne in Telegu
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் இடையூறு இல்லாமல் தூங்குவது எப்படி?|How to have an undisturbed sleeping hour at the time of pregnancy in Tamil
கருவில் இருப்பது ஆணா பெண்ணா: பாலின கணிப்பு | Baby Girl Belly Vs Baby Boy Belly in Tamil
கர்ப்ப காலத்தில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லதா? | Is Ghee Good During Pregnancy in Tamil
சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம், இரண்டில் எது சிறந்தது | Which Is Better Normal Or Cesarean Delivery in Tamil
ஆனியன் ஆயிலுடன் இயற்கையான முடி பராமரிப்பு முறையை உருவாக்கி தலைமுடிக்கு பொலிவைச் சேர்க்க 3 படிகள் | 3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in Tamil
பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா, தாய்ப்பால் கசிவைத் தடுக்குமா? | Can A Padded Maternity Bra Prevent Breastmilk Leakage in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |