
கர்ப்பத்தின் போது உங்கள் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை அறியமுடியும். வயிற்றின் அளவு அதிகரித்துக் கொண்டு செல்வதைத் தவிர, இதயப் படபடப்பு மற்றும் உறங்கும் போது குறட்டை விடுதல் போன்ற பிரச்சனைகளையும் கவனிக்க நேரிடலாம். கருத்தரிப்புக் காலத்தில் குறட்டை விட்டு தூங்குவது பொதுவான ஒன்றே. 50% கர்ப்பிணிப் பெண்கள் குறட்டை விடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்களில் பலர் இதற்கு முன் குறட்டை விட்டதில்லை.
பொதுவாக, ஆண்களை விட பெண்கள் குறைவாகக் குறட்டை விடுவார்கள் என்று ஒரு கருத்து உண்டு. பொதுவாகவே, சுமார் 20% பெண்கள் குறட்டை விடுகிறார்கள் என்பது நீங்கள் அறிய வேண்டிய தகவல். கர்ப்ப காலத்தில் பல மாற்றங்கள் நிகழ்வதால், புதிதாக குறட்டை விடும் சிக்கலுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படாமல் இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது ஏன் நடக்கிறது, இது கவலைப்பட வேண்டிய ஒன்றா? அதைத் தடுப்பதற்கு வழிகள் என்ன? என்பது போன்ற பல கேள்விகள் மற்றும் கவலைகள் இருக்கலாம்!
கர்ப்பமாக இருக்கும் போது குறட்டை விடுவது முற்றிலும் இயல்பானது என்றாலும், மேல் சுவாசக் குழாயில் வீக்கம், எடை அதிகரிப்பு மற்றும் இருவருக்கு மூச்சு விடுதல் ஆகிய அனைத்தும் சேரும் போது குறட்டை அதிகமாகிறது. பிற காரணங்களில் பின்வருவன அடங்கும்:
கர்ப்பத்தின் போது இரத்த பிளாஸ்மா அளவு சாதாரண நிலையை விட 40-50% அதிகமாக இருக்கும். வளர்ந்து வரும் கருவின் தேவையைப் பூர்த்தி செய்யவும் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய இரத்த இழப்பிலிருந்தும் பாதுகாக்க இது அவசியமானது. இருப்பினும், குறட்டைக்குக் காரணமான பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் இரத்த அளவு அதிகரிப்பது உடலில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரத்தம் பெருகுவதால் சுவாசப் பாதை சுருங்கக்கூடும். இது வழியாகச் செல்லும் காற்று இதனால் அதிக எதிர்ப்பை எதிர்கொள்கிறது. உங்கள் மூக்கு அடிக்கடி அடைபடுவதையும் நீங்கள் கவனிக்கலாம். ஏறக்குறைய 42% பெண்களுக்கு மூன்றாவது மூன்றாம் மாத முடிவில் கர்ப்ப நாசியழற்சி அல்லது நாசி வீக்கம் உள்ளது. எனவே, காற்றை வாய் வழியாகச் சுவாசிக்கவும், குறட்டை விடவும் வழிவகுக்கிறது.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பதால் சுவாசிக்கும் விதம் மாறுகிறது. கருப்பை விரிவடையும் போது, அது மேல்நோக்கி மற்றும் வெளிப்புறமாகத் தள்ளப்படுகிறது, இதனால் உதரவிதானமும் மேலே தள்ளப்படுகிறது. நுரையீரலின் கொள்ளளவு குறைவதால் தொண்டை அடைப்பு மற்றும் குறட்டைக்கு வழிவகுக்கும்.
கர்ப்பத்தின் போது, நீங்கள் இரண்டு பேருக்குச் சாப்பிடுகிறீர்கள், இரண்டு பேருக்கு சுவாசிக்கிறீர்கள். இது சுவாச இயக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் சுவாசிக்கும் மற்றும் வெளியேற்றும் காற்றின் விகிதத்தை அதிகரிக்கிறது. இது, எதிர்மறையான அழுத்தங்களை உருவாக்கி, குறட்டைக்கு வழிவகுக்கும்.
கருவில் வளரும் குழந்தைக்கு ஆதரவு வழங்க ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் உயர்கின்றன. இது, காற்றுப்பாதை அழுத்தத்தை மாற்றுவதால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டைக்கு வழிவகுக்கும். ஹார்மோன் அதிகரிப்பு காரணமாக வீங்கிய திசுக்களால் உங்கள் மூக்கு அடைபடலாம் அல்லது கர்ப்ப நாசியழற்சியை ஏற்படுத்தலாம்.
உலர்ந்த காற்று அல்லது மற்ற சூழ்நிலைகள் நாசி பத்திகளுடன் உணர்திறன் இருக்கலாம், இது குறட்டைக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் குறட்டை மற்றும் தூக்கம் தொடர்பான பிற கோளாறுகளுக்கு மற்றொரு சாத்தியமான காரணம் புகைபிடித்தல் அல்லது புகைபிடிப்பதால் ஏற்படும் எரிச்சல்.
கர்ப்பிணிப் பெண்களில் குறட்டை விடாதோருடன் ஒப்பிடும்போது குறட்டை விடுபவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவை குறட்டையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட காரணங்கள் அல்ல, வேறு பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தப்படலாம். உயர் இரத்த அழுத்தம், குறைப்பிரசவம் மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்ற எதிர்மறையான கர்ப்ப விளைவுகளுக்கும் குறட்டை க்கும் இடையே தொடர்ந்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் காட்டுகின்றன. பேறுகாலத்தில் குறட்டை விடுவதில் ஏற்படும் சில பிரச்சனைகள் பின்வருமாறு:
குறட்டை விடும் அனைவருக்கும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருக்காது அல்லது உருவாகாது என்றாலும், சுவாசத் தேவை, உலர்ந்த வாய், அடிக்கடி எழுந்திருத்தல் மற்றும் சுவாசத்தில் இடைநிறுத்தம் மற்றும் சோர்வு போன்ற பிற அறிகுறிகளுடன் குறட்டை இருந்தால் இந்த நிலையைக் குறிக்கலாம். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆக்ஸிஜன் குறைவு ஏற்படும், இது இதய நோய் மற்றும் நுரையீரல் காற்றடைப்பு போன்ற சிக்கல்கள் வர ஏதுவாகும். இரவுகளில் குறட்டை விடுவதுடன், இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.
ப்ரீக்ளாம்ப்சியா /முன்சூல்வலிப்பு என்பது ஒரு பேறுகால உயர் இரத்த அழுத்த கோளாறு ஆகும். ப்ரீக்ளாம்ப்சியா உட்பட கர்ப்பத்தின் உயர் இரத்த அழுத்த கோளாறுகளுக்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சில நேரங்களில் கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு, ப்ரீக்ளாம்ப்சியா உருவாகிறது. வேறு சில அறிகுறிகளில் தலைவலி, விரைவான எடை அதிகரிப்பு, மூச்சுத் திணறல், மங்கலான பார்வை மற்றும் சிறுநீரில் புரதம் மற்றும் கணுக்கால், கைகள் மற்றும் முகம் வீக்கம் ஆகியவை அடங்கும். இந்தத் தாக்கத்தால் மற்ற சிக்கல்களை ஏற்படுத்துவதைத் தடுக்க இது நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஆய்வுகளின்படி, கர்ப்பிணிப் பெண்களில் 2 இலிருந்து 10 சதவீதம் பேர் கர்ப்பகால நீரிழிவு நோய் தாக்கம் பெறுகின்றனர். சில ஆய்வுகள் கர்ப்பம் சார்ந்த உறக்கப் பிரச்சனைகளுக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கும் இடையே தொடர்பு உள்ளதாக் கண்டறிந்துள்ளன. குறட்டை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் குறைந்த அளவு தூக்கம் ஆகியவை பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோயை உருவாகும் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கர்ப்பகால நீரிழிவு நோயின் மற்ற அறிகுறிகளைச் சரிபார்க்க கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் உங்கள் உடல் குளுகோசுக்கு காட்டும் எதிர்வினையைச் சோதிக்கலாம்.
கர்ப்பத்தின் போது குறட்டை விடுவது பேறுகால மன அழுத்தத்திற்குக் காரணியாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஏறக்குறைய 34 சதவீத பெண்கள் வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை குறட்டை விடுகிறார்கள் என்றும், குறட்டை விடாத பெண்களை விட இந்த பெண்களுக்கு மனச்சோர்வு அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.
மூன்றாவது மூன்று மாதங்களில் வற்றின் அளவு பெரியதாக இருக்கும் காலகட்டத்தில் குறட்டை எழுவதை அறியமுடியும். இருப்பினும், இது இரண்டாவது மூன்று மாதங்களில் தொடங்குகிறது. முதல் மூன்று மாதங்களில் நீங்கள் குறட்டை விட ஆரம்பித்திருந்தால், அதை உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். வயிறன் அளவு அதிகரிப்பு அல்லது அதிகரித்த இரத்த ஓட்டத்துடன் தொடர்பில்லாத ஒரு தீவிரமான பிரச்சனையை இது குறிக்கலாம்.
குழந்தை பிறந்து, உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், வயிற்றின் எடை குறைந்து, குழந்தையின் எடையையும் கொண்டிருப்பது குறைத்ததும் குறட்டை நின்றுவிடும்.
உங்கள் குறட்டை பிரச்சனையைச் சீர் செய்ய வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய விஷயங்கள் இவை.
கர்ப்பமாக இருக்கும்போது, பக்கவாட்டில் உறங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உறுப்புகள் மற்றும் மூட்டுகளில் இருந்து எடையைக் குறைக்கிறது. முதுகுப்புறமாக உறங்குவது சுவாசப்பாதைகளை அழுத்தி குறட்டையை மோசமாக்குகிறது. மேலும் வயிற்றின் அளவு அதிகரித்து வரும்போது அது வசதியாக இருக்காது. பொதுவாக, குறட்டையைத் தடுக்க இடது பக்கம் ஒருக்களித்து உறங்குதல் நல்லது.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு வரம்பை மீறினால் அது குறட்டைக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில், ஒரு பெண் சராசரியாக 25 பவுண்டுகள் பெறலாம். கூடுதல் எடை யினால் காற்றுப்பாதைகளில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு குறட்டையை ஏற்படுத்தும். இந்நிலையை அறிந்தால் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் அல்லது உணவில் ஆரோக்கியமற்ற, கலோரி நிறைந்த உணவுகளை ஆரோக்கியமான உணவுகளுடன் ம
தூக்க மாத்திரைகள் குழந்தையின் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது. தொண்டை உலர்ந்தால் குறட்டைக்கு வழிவகுக்கும். உதாரணத்திற்கு புகையிலை மற்றும் மது, தொண்டையை உலர வைப்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.
சில நேரங்களில், உங்கள் தலையை உயர்திய நிலையில் வைப்பது எளிதான தீர்வாக இருக்கும். கர்ப்ப காலத்தில், பல பெண்கள் தலைக்கு கீழ் ஒரு தலையணை, வயிற்றுக்கு கீழ் மற்றும் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்து தூங்குவார்கள். உங்கள் தலையை உயர்த்துவது உங்கள் சுவாசப்பாதையில் உள்ள தடையை நீக்க உதவும். இது கர்ப்பத்தின் பிற்கால கட்டங்களில் ரிஃப்ளக்ஸ் சிண்ட்ரோமில் உதவுகிறது.
மேலே குறிப்பிட்ட உதவிக் குறிப்புகள் பலன் தரவில்லை எனில் உங்கள் மருத்துவரை அணுகி, குறட்டையைக் குறைக்க சில நல்ல தயாரிப்புகளை முயற்சிக்கவும்.
இவை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற மருந்து அற்ற தயாரிப்பு. இது உங்கள் நாசிக்குள் அல்லது உங்கள் மூக்குப் பாலப் பகுதியின் குறுக்கே பொருந்துகின்றன. இது நாசிப் பாதைகளில் உள்ள தடைகளை நீக்கி குறட்டையைக் குறைக்கிறது. அவை மலிவானவை, ப்ரிஸ்க்ரிப்ஷன் இன்றி கிடைக்கின்றன மற்றும் பயன்படுத்த எளிதானது.
வார்ம் மிஸ்ட் அல்லது கூல் மிஸ்ட் ஹியுமிடிபையர் பயன்படுத்தவும். குறட்டைக்கு முக்கிய காரணமான நாசி அடைப்பை நீக்க உதவுகிறது. நேசல் ஸ்ட்ரிப் உடன் இணைந்து பயன்படுத்துவது நல்ல பலன் தரும். இருப்பினும், குழந்தை குளிர்ச்சியின் போது இதைப் பின்னர் குழந்தையும் பயன்படுத்தலாம் என்பதால் இது ஒரு நீண்ட காலம் பயன் தருகிறது.
குறட்டையைத் தடுக்க இவை உங்கள் சுவாசப்பாதைகளைத் திறந்து, தெளிவாக வைத்திருக்க உதவுவதால் இது நல்ல முதலீடு எனலாம். இவை உங்கள் எடையை சமமாக விநியோகிப்பதன் மூலம் நன்றாக தூங்கவும் உதவும்.
நல்ல உறக்கம் அவசியமான ஒன்று. அனைத்து விதமான வலி, நோவு, குறட்டை ஆகிய தூக்கமின்மைக்கான போக்குகள் உங்களுக்கு போதுமான ஓய்வு வழங்காமல் இன்சோம்னியாவுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் நன்றாக உறங்க சில உதவிகுறிப்புகள்:
குறிப்பிட்ட நேரத்தில் உறங்கும் பழக்கத்தைக் கொண்டுவரவும், இதனால் உங்கள் உடலை ஒரு நிலையான போக்கைப் பின்பற்றும். அதேபோல, நிலையான விழிப்பு நேரத்தையும் அமைக்கவும்.
உறங்குவதற்கு முன் உடலும் மனமும் அமைதி பெறும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக, சூடான குளியல் மற்றும் புத்தகம் படித்தல்.
அறையை இருட்டாகவும், குளிர்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்திருப்பது உறக்கத்தைத் தூண்டும்.
உறங்கும் நேரத்தை நெருங்கும் போது சிறு ஓய்வைத் தவிர்க்கவும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கப் பழகுங்கள்.
ஒவ்வொரு வாரமும் மிதமான உடற்பயிற்சிகளைச் சேர்ப்பதன் மூலம் உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக, 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சிபரிந்துரைக்கப்படுகிறது. நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற செயல்களை நீங்கள் முயற்சி செய்யலாம், இது உடலுக்கு நோவு ஏற்படுத்தாமல் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும்.
இரவு நேர தின்பண்டங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் உறங்கும் நேரத்திற்கு மிக அருகில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் உங்கள் வயிறு வளரும்போது அமில வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
மதியம் மற்றும் மாலை வேளைகளில் காஃபினைத் தவிர்க்கவும், இது நன்கு உறங்க உதவும்.
உங்கள் படுக்கை மற்றும் படுக்கையறையைத் தூங்க பயன்படுத்தவும். உங்கள் ஸ்மார்ட்போனில் உலாவுதல் போன்ற பிற செயல்களைச் செய்யாதீர்கள், இவை தூங்கும் நேரம் வரும்போது உங்கள் மூளையை அமைதிப்படுத்துவதைக் கடினமாக்கும்.
ஒவ்வொரு இரவும் 8.5 முதல் 9.5 மணிநேரம் தூங்குவதை நோக்கமாகக் கொள்ளுங்கள், குறிப்பாக நீங்கள் இரவில் அடிக்கடி எழுபவர் என்றால்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்
பேறுகாலத்தின் போது மாற்றங்கள் விரைவாக ஏற்படும். இதேபோல், குழந்தை பெற்றெடுத்தவுடன் நின்றுவிடும். குறட்டை விடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். குறட்டையை நிறுத்த சில தீர்வுகளை முயற்சிக்கவும் மற்றும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
TAGS :
Snoring During Pregnancy In Tamil, how to stop snoring during pregnancy In tamil, treatments for snoring in pregnancy in tamil, How Can I Stop Snoring During Pregnancy In English, How Can I Stop Snoring During Pregnancy In Hindi, How Can I Stop Snoring During Pregnancy In Telugu, How Can I Stop Snoring During Pregnancy In Bengali
Yes
No


















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |