Want to raise a happy & healthy Baby?
Twins & Triplets
3 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் இரட்டை குழந்தைகளை ஒரே நேரத்தில் தூங்கவைப்பது அவசியம். இல்லையெனில், நீங்கள் தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவளிப்பதும், பராமரிப்பதுமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது ஒரு குழந்தை சாப்பிடத் தயாராக இருக்கும் நிலையில், மற்றொறு குழந்தை தூங்கத் தயாராகிவிடும். இதனால் உங்களுக்கு சரியான ஓய்வு கிடைக்காது.
உங்கள் இரட்டை குழந்தைகளுக்கு முழு இரவும் தூங்கும் பழக்கம் ஏற்பட்ட பின்னர், நீங்கள் அவர்கள் ஒருவரையொருவர் எழுப்பாதபடி தூங்க அவர்களை தனித்தனி இடங்களில் தூங்கவைக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், நீங்கள் உங்கள் இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக தூங்க வைப்பதே சிறந்ததாகும். ஏனெனில், இவ்வாறு தூங்கும் போது ஒரு குழந்தை மற்ற குழந்தையின் அழுகை சத்தத்திற்கு பழகிவிடும். இதன் மூலம் அவர்கள் வேறு எவ்வித சத்தம் ஏற்பட்டாலும் அழ்ந்து தூங்கப் பழகிக்கொள்வார்கள்.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்றால் உங்களுக்கு எல்லாப் பொருட்களும் இரண்டாக தேவைப்படும் என்று அர்த்தமல்ல. உங்கள் குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியாது. எனவே, நீங்கள் வெவ்வேறு பொருட்களின் கலவையை முயற்சி செய்யலாம். இருப்பினும், நீங்கள் தொட்டில்கள், கார் இருக்கைகள் அத்துடன் மற்ற குழந்தைப் பராமரிப்பு அத்தியாவசியப் பொருட்களை அவசியம் இரண்டு வாங்க வேண்டும்.
இரட்டைக் குழந்தைகளை நிர்வகிப்பது என்பது எளிதான காரியமல்ல. தேவைப்படும்போது நீங்கள் உதவிக்கு பிறரை அழைக்கலாம், அதாவது, முடிந்தவரை உங்களுக்கு உதவ உங்கள் குடும்பத்தினரையோ நண்பர்களையோ அழைக்கலாம். நீங்கள் குழந்தைகளைப் பராமரிக்கும் போது உங்களுக்கு உதவ வந்தவர் உணவை சமைக்கட்டும் அல்லது நீங்கள் மளிகை பொருட்கள் வாங்கச் செல்லும் போது அவர் உங்கள் சு, வுப் ம ஆட் ஆன் அப்குழந்தைகளை பார்த்துக்கொள்ளட்டும்.
உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் இருந்தால், நீங்கள் ஜிப்பர் டிரஸ்களைத் தேர்வுசெய்தால், ஆரம்ப மாதங்களில் அவர்களுக்கு ஆடை அணிவிப்பது மிகவும் எளிதாகவும் விரைவாகவும் இருக்கும். இவ்வாறு செய்வதால் நீங்கள் இரண்டு குழந்தைகளைக் கையாளும்போது, உங்களின் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது, இரண்டு குழந்தைகளும் சம அளவு பால் பெறுவதை உறுதி செய்வதற்காக, மாற்று மார்பகங்களில் இருந்து உங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் இரட்டை குழந்தைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம் ஆனால் வித்தியாசமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - உங்கள் குழந்தைகளிடையே உள்ள நல்ல பழக்க வழக்கங்களை எப்போதும் ஊக்குவிக்கவும், ஒருபோதும் அவர்களை ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்கென்று சொந்த பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளன, இதில் இரட்டை குழந்தைகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. ‘உன் சகோதரன் நல்ல பையன், ஆனால் நீ ஏன் அப்படி இல்லை?’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
இதையும் படிக்கலாமே! - இரட்டைக் குழந்தைகள் உருவாகக் காரணங்கள்
Yes
No
Written by
Chandrika Iyer
புதிதாக பிறந்துள்ள உங்கள் குழந்தையை அவர்களின் மூத்த சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்துதல்
பேரண்ட்டிங் முறை குழந்தை வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது?
தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
பிறந்த குழந்தையுடன் பயணம் செய்ய முக்கியமான பாதுகாப்பு குறிப்புகள்
குழந்தை பிறந்த பிறகு வரும் மாதவிடாய் பற்றிய தகவல்கள்
குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்பு சத்து குறைபாடு அறிகுறிகள் மற்றும் அதன் தீர்வுகள்
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Immunity | By Ingredient | Saffron | Wheatgrass | Skin - Weight | By Concern | Weight Management | By Ingredient | Apple Cider Vinegar | Skin - Bath & Body | By Concern | Body Moisturizer | Brightening | Tan Removal | By Ingredient | Skin - Hygiene | By Concern | UTIs & Infections | Diapers & Wipes | Disposable Diapers | Cloth Diaper | Maternity dresses | Stretch Marks Kit | Stroller |