
உங்கள் பிறந்த குழந்தையை உங்கள் முதல் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது உங்களின் மன உணர்வானது மன அழுத்தம், பதட்டம் மற்றும் உற்சாகத்தின் கலவையாக இருக்கலாம். ஆனால், இந்த நேரத்தில் பலவிதமான உணர்ச்சிகளை அனுபவிப்பது முற்றிலும் இயல்பானது என்பதால், இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். புதிய குழந்தையை வரவேற்க உங்கள் முதல் குழந்தையை எவ்வளவு தயார்படுத்த முயற்சித்தாலும், அவர்கள் தங்கள் சிறிய உடன்பிறந்த சகோதரியை/சகோதரனை ஏற்றுக்கொள்கிறாரா அல்லது முற்றிலும் ஆர்வமற்று உள்ளாரா என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது.
இந்த புதிய உறவுகளின் தொடக்கத்தை மிகவும் சௌகரியமாக மாற்றுவதற்கு, நீங்கள் முயற்சி செய்து உறுதிசெய்யக்கூடிய விஷயங்களின் லிஸ்ட் இதோ.
உங்கள் கர்ப்ப காலத்தின் போதே, அவர்களோடு இணைந்து விளையாடும் நேரத்தில் புதிய குழந்தை வருவதைப் பற்றி அவ்வப்போது எடுத்துக்கூறி, அவர்களுடன் விளையாடுவதற்கு ஒரு புதிய நண்பர் வரப்போவதை தெரிவித்து அவர்களை உற்சாகப்படுத்த முயற்சியுங்கள்.
குழந்தை பிறந்த பிறகு, குழந்தையைப் பராமரிப்பதில் அவர்களையும் ஈடுபடுத்துங்கள். குழந்தையின் பாசிஃபையரைக் கொண்டு வரும்படி அவர்களிடம் கேளுங்கள் அல்லது குழந்தைக்கு விளையாட பொம்மைகளைத் தேர்வுசெய்ய உதவும்படி கேளுங்கள்.
புதிய குழந்தையைப் பார்க்க உறவினர்கள் வரும்போது, உங்கள் மூத்த குழந்தை அவர்களை அந்த குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்படி கேளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு புதிய பொம்மையை வாங்கும் போது, உங்கள் மூத்த குழந்தைக்கும் அவர்கள் விரும்பும் பொம்மையை வாங்குங்கள்.
எந்தவொரு அசம்பாவிதத்தையும் தவிர்க்கும் பொருட்டு, 5 வயதுக்கு குறைவான வயதுடைய குழந்தையின் அருகில் பிறந்த குழந்தையை தனியாக விட்டுவிட்டுச் செல்ல வேண்டாம்.
பிறந்த குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொருட்டு உங்கள் மூத்த குழந்தைக்கு சில எளிய பணிகளை ஒதுக்குங்கள்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகின்ற அதே நேரத்தில், உங்கள் முதல் குழந்தை தாம் ஒதுக்கப்படுவது போன்ற உணர்வுவை பெற்றுவிடக்கூடாது. எனவே இருவருக்கும் இடையில் நேரத்தை நிர்வகிக்க முயற்சியுங்கள்.
உங்கள் மூத்த குழந்தைக்கு புதுவரவான குழந்தையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை கேட்கும்படி உற்சாகப்படுத்துங்கள். குழந்தைகள் எப்பொழுதும் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக ஆர்வமாக இருப்பதால், புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் அதன் தேவைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சகோதரர்களிடையே உறவுகளை உருவாக்க அதிக நேரம் எடுக்கும். தொடக்கத்தில், உங்கள் மூத்த குழந்தை புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்த்து பொறாமைப்படுவதும், உங்கள் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதும் இயல்பானது.
முதலில் இது ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால் இந்த மாற்றத்திற்கான செயல்முறையை சீராகக் கொண்டு செல்ல உங்களுக்கு அதிக பொறுமைத் தேவைப்படுகிறது. அதோடு, இதற்காக உங்கள் மூத்த குழந்தையை உற்சாகமூட்டி தயார்ப்படுத்த வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - ஒரு வருடம் ஆன குழந்தைக்கு நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 12 விஷயங்கள்
Yes
No


















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |