


Diet & Nutrition
20 December 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது
கோழி இறைச்சி சுவையான, அதிக புரதம் கொண்ட உணவாகும். ஒரு கர்ப்பிணிப் பெண் எடுத்துக் கொள்ளும் உணவு இருவருக்கானது என்பதால் அவரின் உடலுக்கு அதிக அளவு புரதம் தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இப்புரதத் தேவைக்கு கோழி இறைச்சி சாப்பிடலாமா என்ற கேள்வி எழுந்தால், அது தவறல்ல என்பதே பதில். எனினும், இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து, நன்கு சமைத்து, சூடாக பரிமாற வேண்டும். கர்ப்ப காலத்தில் கோழி இறைச்சி உண்பதால் ஏற்படும் நன்மைகள், பக்க விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் விளக்கமாக காண்போம்.
கோழி இறைச்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கர்ப்பிணித் தாய்க்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக புரதம், கொழுப்பு அற்ற கோழியின் (100 கிராம்) ஒரு சர்விங் தினசரி தேவையில் சுமார் 3.5 மடங்கு புரோட்டீன்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், சூடாக பரிமாறப்படாமல் அல்லது அல்லது நன்றாக சமைக்கப்படாமல் இருப்பது சிக்கலை ஏற்படுத்தும். சமைக்கப்படாத அல்லது பச்சையான கோழியில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கும்.
பச்சையாகவோ அல்லது நன்கு சமைக்கப்படாத இறைச்சி சால்மோனெல்லா பாக்டீரியாவின் கேரியராக இருக்கலாம். இது கர்ப்பிணிப் பெண்ணுக்கு உப்புசம், வாந்தி, குமட்டல், தசை பிடிப்புகள், காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தீவிர சந்தர்ப்பங்களில், சால்மோனெல்லா கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
எனவே, கோழிக் கறியை குறைந்தபட்சம் 71 டிகிரி வெட்பத்தில் சமைக்க வேண்டியது அவசியம், குறிப்பாகக் கோழியின் அடர்த்தியான பகுதிகள் இவ்வாறு தான் சமைக்கப்பட வேண்டும். இதனால், கோழியில் ஏதேனும் பாக்டீரியாக்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருந்தால் அவை கிருமி நீக்கம் செய்யப்பட்டு சாப்பிடுவதற்கு ஏற்றதாக மாறும்.
குளிர்சாதன பெட்டியில் ஸ்டோர் செய்யப்பட்ட கோழி இறைச்சியை உண்ணலாமா? சமைத்த பிறகு, கோழி இறைச்சி குளிர்சாதன பெட்டியில் 24 மணி நேரத்திற்கு மேல் ஸ்டோர் செய்யப்பட்டால் அதை உண்ணக் கூடாது. அதோடு, கோழியை நன்றாகச் சமைத்திருந்தாலும், அதை உண்ணும் முன், மீண்டும் சூடுபடுத்த வேண்டும். இது பாக்டீரியாக்களையும் அழிக்க உதவும்.
டெலி கவுண்டர்களில் இருந்து கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைச் சாப்பிடலாமா என்ற கேள்வி எழலாம்? டெலி கவுண்டர்களில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியில் லிஸ்டீரியா அல்லது சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். கோழி எங்கிருந்து பெறப்பட்டது என்பதை நீங்கள் உறுதியாகக் கூற முடியாததால் இந்த வகையான கறித்துண்டுகளைத் தவிர்ப்பது சிறந்தது. பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை உண்பதை உங்களால் தவிர்க்க முடியாவிட்டால், சிக்கன் நன்றாகச் சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து, சூடாகச் சாப்பிடுங்கள்.
கோழி இறைச்சி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும், சில சமயங்களில் அது தீங்கு விளைவிக்கவும் வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில், பச்சையாகவோ அல்லது சமைக்காத கோழியையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். பச்சையான அல்லது நன்கு சமைக்கப்படாத கோழியில் உள்ள சால்மோனெல்லா அல்லது லிஸ்டீரியா பாக்டீரியாக்களால் உணவு விஷமாக மாறலாம்.
நன்கு சமைக்காத அல்லது பச்சையாகக் கோழி இறைச்சி உண்பதால் வாந்தி, குமட்டல், வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பிடிப்புகள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். சில அரிதான சந்தர்ப்பங்களில், பாக்டீரியாவைக் கொண்ட உணவு கருச்சிதைவுக்கும் வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தில், கோழி இறைச்சி சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இதில் தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சியை நன்றாக சமைத்து சூடாக உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். கோழி இறைச்சி உடல் தசைகளை வளர்க்க உதவுகிறது மற்றும் இதில் உள்ள வைட்டமின்கள் உடலில் புதிய செல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று.
குறைந்த கொழுப்பு உள்ள கோழி இறைச்சியில் அதிக புரதத்தோடு, இரும்பு மற்றும் துத்தநாகமும் கிடைக்கிறது, இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால், எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் அல்லது கர்ப்ப காலத்தில் தங்கள் எடையைப் பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கும் கோழிக்கறி பரிந்துரைக்கப்படுகிறது. இது வளரும் குழந்தையின் ஊட்டச்சத்துக்கு உதவுகிறது மற்றும் கருப்பையில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
குறைந்த கொழுப்பு சத்துள்ள கோழி இறைச்சியில் கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும். இதில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. கோலின் வைட்டமினின் ஆதாரமான கோழி இறைச்சி குழந்தைகளின் மூளை மற்றும் நினைவாற்றல் செயல்பாட்டை வளரும் மற்றும் ஆரம்ப ஆண்டுகளில் வளர்க்க உதவுகிறது. இது தவிர, உடலுக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் A, தியாமின் மற்றும் செலினியம் ஆகியவையும் கிடைக்கிறது.
கால்சியம், ஃபோலேட், இரும்பு, வைட்டமின்கள் பி12, ஏ, சி, இ, டி, கே, மெக்னீசியம், புரதம், நியாசின், பொட்டாசியம், பாஸ்பரஸ், தியாமின், துத்தநாகம், ரிபோஃப்ளேவின், சோடியம் போன்றவை கோழி இறைச்சியில் இருந்து நமக்குக் கிடைக்கும்ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பாஸ்தா சாப்பிடலாமா?
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips


கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு எப்போது தொடங்கும்?

கர்ப்பத்திற்கான IUI (கருப்பைக்குள் கருவூட்டல்) சிகிச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் (All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Tamil)

லேப்ராஸ்கோபிக் ஓவாரியன் துளையிடல் : பி.சி.ஓ.எஸ் தொடர்பான கருவுறாமைக்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு (Laparoscopic Ovarian Drilling: A Safe and Effective Solution for PCOS-Related Infertility In Tamil)

குழந்தை உங்களின் வயிற்றின் மீது தூங்குவது சரியா? (Is it Ok for a baby to sleep on his/her stomach In Tamil)

இரத்த சோகை(அனீமியா) என்றால் என்ன - அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்

10-வார கர்ப்ப வயிறு எப்படி இருக்கும்?

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |