back search
Browse faster in app
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Exercise & Fitness arrow
  • பெண்களுக்கான 8 உடல் எடை குறைப்புப் பயிற்சிகள் arrow

In this Article

    பெண்களுக்கான 8 உடல் எடை குறைப்புப் பயிற்சிகள்

    Exercise & Fitness

    பெண்களுக்கான 8 உடல் எடை குறைப்புப் பயிற்சிகள்

    19 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பெண்களுக்கான எட்டு எடை குறைப்புப் பயிற்சிகள்

    • பெண்களுக்கான மிகவும் பயனுள்ள எடை குறைப்புப் பயிற்சிகளை நீங்கள் தேடுகிறீர்களா? வீட்டில் இருக்கும் பெண்களுக்கான எட்டு எடை குறைப்புப் பயிற்சிகள் இந்தக் கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

    • அதிக எடையானது, உடல் பருமன், இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடல் வகைகளின் காரணத்தினால், உடல் எடையைக் குறைப்பதில் ஒவ்வொருவரின் அனுபவமும் தனிப்பட்டதாக இருக்கும். இதன் மூலமாக அனைவருக்கும் ஒரே அளவிலான தீர்வை வழங்குவது என்பது சவாலாக இருக்கும்.

    • எடை குறைப்பதில் ஊட்டச்சத்தும், உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பெண்ணின் உடல் வகையானது உடற்பயிற்சி இலக்குகளைப் பொறுத்து இருக்கும், சில பயிற்சிகள் மற்றவற்றை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிகமான நன்மைகளைப் பெறுவதற்கு வல்லுநர்கள் பல்வேறு வகையான பயிற்சிகளை ஒன்றாக இணைத்து செய்வதற்குப் பரிந்துரைக்கின்றனர்.

    • உடற்பயிற்சி செய்யும்போது என்டார்பின்கள் வெளியிடப்படுகிறது, இது மனநிலையை மேம்படுத்தவும், உடல் சோர்வைத் தடுக்கவும் உதவுகிறது, மேலும், எடை இழப்பை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. பெண்களுக்கான எடை குறைப்புப் பயிற்சி திட்டமானது நெகிழ்வுத்தன்மை, தசையின் பருமன் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது மேலும் சிறந்த ஆரோக்கியத்திற்காக கூடுதல் நன்மையுடன், உடல் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக இதை விட இன்னும் அதிகமாகச் செய்யலாம்.

    நடைப்பயிற்சி

    நடைப்பயிற்சி என்பது பெண்களுக்கென்று மிகவும் பிரபலமாக இருக்கும் எடை குறைப்புப் பயிற்சியாகும். இதை பெண்கள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்யலாம், மேலும் இது குறைந்த தாக்கம் கொண்ட பயிற்சியாகும். புதிய காற்று மற்றும் வைட்டமின் டி-ஐப் பெறுவதற்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழியாக இருக்கும். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை எளிதாக எரிக்க உதவுவதோடு, படிப்படியாக உடல் எடையை குறைக்கவும் உதவும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் நடைப்பயிற்சியின் போது 30-60 நிமிடங்கள் வரை அதிக வேகத்தில் நடப்பது உடல் எடையை வேகமாகக் குறைப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும். நடைப்பயிற்சியின் போது, ஒரு பெண் தன்னுடைய கைகளை நன்றாக அசைத்துக் கொண்டே நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்கும் மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.

    ஜாகிங் அல்லது ஓடுதல்

    ஜாகிங் அல்லது ரன்னிங் என்பது பெண்களுக்கான மற்றொரு சிறந்த எடை குறைப்புப் பயிற்சியாகும். இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சியாகும், மேலும் இது கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது. மக்கள் வெளிப்புறப் பகுதியில் அல்லது டிரெட்மில்லில் ஓடலாம். ஒருவர் முதலில் 10-15 நிமிடங்கள் வரை ஜாகிங் செய்ய ஆரம்பிக்கலாம், பிறகு படிப்படியாக இதற்கான நேரத்தையும் தூரத்தையும் அதிகரிக்க வேண்டும்.

    ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் ஓட வேண்டும், வாரத்தின் பெரும்பாலான நாட்களில், பெண்கள் இதுமாதிரி ஓடினால், இது அவர்களுக்கு விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். காயங்களைத் தவிர்ப்பதற்காக ஒரு பெண் ஜாகிங் செய்வதற்கு முன்பு லேசான ஸ்ட்ரெச்சிங் மற்றும் வார்ம் அப் செய்ய வேண்டும்.

    சைக்கிள் ஓட்டுதல்

    சைக்கிள் ஓட்டுதல் என்பது பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் உடல் எடையைக் குறைக்கும் சிறந்த பயிற்சியாகும். இது பெண்கள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் செய்யக்கூடிய குறைந்த தாக்கப் பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டுவதால் கால்கள், கைகள் மற்றும் மையப்பகுதிக்கு அதிக நன்மை கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 30 நிமிடம் சைக்கிள் ஓட்டுவதால், பெண்களுக்கு அதிக கலோரியையும் மற்றும் கொழுப்பையும் எரிக்க உதவும் மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். முதலில் பெண்கள் 10-15 நிமிடங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தொடங்கலாம், பின்னர் படிப்படியாக நேரத்தையும் தூரத்தையும் அதிகரிக்கலாம்.

    அதி-தீவிரமான பயிற்சி

    அதி-தீவிரமான பயிற்சி செய்வதற்கு பெண்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட வரம்புகளுக்குள் தள்ள வேண்டும். மிதமான தீவிர உடற்பயிற்சியை விட எடை குறைப்பிற்கு இந்த வகை பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஆய்வில், 16 வாரங்களுக்கு வாரத்திற்கு மூன்று முறை அதி-தீவிரமான பயிற்சி செய்த பெண்கள், அதே நேரத்தில் மிதமான தீவிர உடற்பயிற்சி செய்த பெண்களை விட இரண்டு மடங்கு கொழுப்பை இழந்திருப்பதாக தெரிய வந்தது.

    உடல் எடை பயிற்சிகள், ரெசிஸ்டன்ஸ் பேண்ட்ஸ் அல்லது டம்ப்பெல்ஸைப் பயன்படுத்தி அதி-தீவிரமான பயிற்சியைச் செய்யலாம். ஸ்பிரிண்ட்ஸ், ஜம்ப் ஸ்குவாட்ஸ் மற்றும் புஷ்-அப்கள் போன்றவை அதிக தீவிரமான பயிற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். அதிக தீவிரம் கொண்ட பயிற்சியின் பலனைப் பெறுவதற்கு அவர்கள் அதிகபட்ச அளவில் முயற்சி செய்து வேலை செய்வது முக்கியம். அதிக தீவிரம் கொண்ட பயிற்சியின் முடிவுகளை சீக்கிரமாக பார்க்க வேண்டுமென்றால், அதற்கு அர்ப்பணிப்பு மற்றும் நிலைப்புத்தன்மை மிகவும் முக்கியமானது.

    பெண்களுக்கான எடைப் பயிற்சி

    பெண்கள் பல வழிகளில் எடை தூக்குவதன் மூலமாக நிறைய பயனைப் பெறலாம். முதலாவதாக, பளு தூக்குதலானது உடலை டோன் செய்யவும், மற்றும் செதுக்கவும் உதவும். இரண்டாவதாக, இது வலுவான எலும்புகளை உருவாக்குவதற்கு உதவும். மூன்றாவதாக, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், உடற்பயிற்சியின் போதும் அதற்குப் பிறகும் அதிக கலோரிகளை எரிப்பதற்கு வழிவகுக்கும்.

    சர்க்யூட் பயிற்சி

    சர்க்யூட் பயிற்சி என்பது கார்டியோ மற்றும் வலிமைக்கான பயிற்சியை இணைக்கும் ஒரு வகை உடற்பயிற்சி ஆகும். சர்க்யூட் பயிற்சியில், பெண்கள் ஒரு உடற்பயிற்சியிலிருந்து அடுத்த பயிற்சிக்கு இடையில் சிறிதும் ஓய்வில்லாமல் செய்கிறார்கள். இந்த வகை உடற்பயிற்சியானது கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிப்பதற்கும், உடலை வலுப்படுத்துவதற்கும் சிறந்ததாக உள்ளது. சர்க்யூட் பயிற்சி உடற்பயிற்சிக்கான உதாரணம், முதலில் ஸ்குவாடில் தொடங்கி, அடுத்து புஷ்-அப் செய்யுங்கள், அதனைத் தொடர்ந்து லங்கீஸ் செய்யுங்கள். எடையுடன் அல்லது எடை இல்லாமலும் சர்க்யூட் பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    வலிமை தரும் பலப் பயிற்சிகள்

    வலிமை தரும் பலப் பயிற்சிகள் செய்யும் பெண்களிடையே பல நன்மைகளைப் பார்க்கலாம். முதலாவதாக, இத்தகைய பயிற்சியானது உடலை டோன் செய்யவும் கட்டுக்கோப்பாக செதுக்கவும் உதவும். இரண்டாவதாக, இது வலுவான எலும்புகளை உருவாக்குவதற்கு உதவும். மூன்றாவதாக, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். எடையுடன் அல்லது எடை இல்லாமல் இந்த உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யலாம்.

    இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பிந்தைய எடை குறைப்பு பற்றிய விரிவான வழிகாட்டி

    வாராந்திர உடற்பயிற்சிக்கான அட்டவணையை உருவாக்குதல்

    எடை குறைப்பதற்கான பயிற்சித் திட்டங்கள் ஒருவரின் உடலை மட்டுமன்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தினசரி உடற்பயிற்சியானது மனநிலையை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கிறது. உடற்பயிற்சிக்கான ஒரு அட்டவணையை உருவாக்கி, அதை வழக்கமான பழக்கமாக எப்போதும் பின்பற்றுவது மிகவும் முக்கியம். நீங்கள் தினசரி எப்போது மற்றும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை எல்லாம் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி செய்வது மட்டும் முக்கியம் அல்ல, அதன் முடிவுகளைப் பார்ப்பதற்கு, நீங்கள் அர்ப்பணிப்புடன் தினமும் தவறாமல் அதாவது நிலையாக உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    gajalakshmiudayar

    gajalakshmiudayar

    Read from 5000+ Articles, topics, verified by MYLO.

    Download MyloLogotoday!
    Download Mylo App

    Related Questions

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    100% Secure Payment Using

    Stay safe | Secure Checkout | Safe delivery

    Have any Queries or Concerns?

    CONTACT US
    +91-8047190745
    shop@mylofamily.com
    certificate

    Made Safe

    certificate

    Cruelty Free

    certificate

    Vegan Certified

    certificate

    Toxic Free

    About Us
    Mylo_logo

    Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.

    Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.

    Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.

    All trademarks are properties of their respective owners.2017-2023©Blupin Technologies Pvt Ltd. All rights reserved.