


Care for Baby
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு குழந்தைக்கு டயப்பர் போடும் போது அது உட்காரும் இடத்தில் ஏற்படும் சிகப்பான, அரிப்பு தன்மை கொண்ட ரேஷ் ‘டயப்பர் ரேஷ்’ எனப்படுகிறது. டயப்பர் ரேஷ் என்பது மிக பொதுவானது மட்டுமின்றி தீவிரமான நிலை அல்ல. ஆனால், இது உங்கள் குழந்தைக்கு அதிக வலி கொடுப்பதாக இருக்கலாம். புதிய பெற்றோராக இருப்பவர்கள், எப்படி குழந்தையை இந்த வலிமிகுந்த நிலையிலிருந்து காப்பாற்றுவது என கலங்கலாம். அத்தகையவர்களுக்கு உதவவே, இந்த கட்டுரை பலவேறு டயப்பர் ரேஷ் வகைகள், டயப்பர் ரேஷ் ஏற்படும் காரணங்கள் மற்றும் அதற்கு கிடைக்கும் சிகிச்சை முறைகள் போன்றவற்றை விளக்குகிறது.
மேலும் அறிய தொடர்ந்த படிக்கவும்!
பெரும்பாலான குழந்தைகள் அவர்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் டயப்பர் ரேஷை அனுபவிக்கும் நிலை ஏற்படும். டயப்பர் ரேஷ் என்பது ஈரமான அல்லது நிரம்பிய டயப்பர்கள், தோல் ஒவ்வாமை மற்றும் உராய்வு போன்றவற்றால் ஏற்படக்கூடிய தோல் எரிச்சல். குழந்தை உட்காரும் இடம் அல்லது பிறப்புறுப்புகளில் எரிச்சலூட்டும் பகுதியில் பெரும்பாலும் சிகப்பு நிறத்தில் தோன்றுவதே டயப்பர் ரேஷ் எனப்படுகிறது. பாக்ட்ரியல் தொற்றுநோய், ஃபங்கள் தொற்றுநோய், இவ்வளவு ஏன் அலர்ஜிக் ரியாக்ஷன்ஸ் போன்றவற்றிற்கும் வெவ்வேறு டயப்பர் ரேஷ்கள் காரணமாக அமையும். இருப்பினும், பெரும்பாலான டயப்பர் ரேஷ்களை ஓவர்-தி-கவுண்டர்(OTC) கிரீம்ஸ் மற்றும் ஆயிமெண்ட்ஸ் மூலம் வீட்டிலேயே குணப்படுத்தலாம். ஒருவேளை ஒருவாரத்திற்கு குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் ரேஷ் வீட்டு சிகிச்சையினால் குணப்படுத்த முடியவில்லை என்றாலோ அல்லது ரேஷ் தீவிரமாக இருந்தாலோ மருத்துவரை அழைக்கவும்.
ஏராளமான வெவ்வேறு வகையான டயப்பர் ரேஷ் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அதற்கென பிரத்யேகமான அறிகுறிகளையும் கொண்டிருக்கின்றன. காண்டாக்ட் டெர்மடிடிஸ் (தோலழற்சி), கண்டிடா டெர்மடிடிஸ், பாக்டீரியல் டெர்மடிடிஸ் மற்றும் அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி போன்றவை மிக பொதுவான டயப்பர் ரேஷ் வகைகளுள் அடங்கும்.
சிறுநீர், மலம், அல்லது சோப் போன்ற எரிச்சலூட்டிகள் சருமத்தில் படுவதினால் மிக பொதுவாக ஏற்படும் டயப்பர் ரேஷ் தொடர்பு தோலழற்சி ஆகும். இவ்வகை ரேஷ் பொதுவாக சிகப்பு நிறத்திலும், வீக்கத்துடனும் இருப்பதுடன் அரிப்பு அல்லது எரிச்சலுடனும் சேர்ந்து வரலாம். இத்தகைய ரேஷ்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் பெட்ரோலியம் ஜெல்லி போன்ற பேரியர் கிரீம்களை உபயோகிக்கலாம்.
காண்டிடியாஸிஸ் என்பது இரண்டாவது டயப்பர் ரேஷின் வகை. இது பெரும்பாலும் ஈஸ்ட் தொற்றினால் ஏற்படுகிறது. சருமத்தின் ஈஸ்ட் தொற்றே காண்டியல் டயப்பர் ரேஷ் எனப்படுகிறது. இது சிகப்பான, புடைத்த, சிறிய சிகப்பு போன்ற செதில்களை ஏற்படுத்தலாம். பொதுவாக அந்த பகுதியை உலரந்ததாக வைத்திருக்க சில பொடியுடன் ஆன்டி ஃபங்கல் OTC பரிந்துரைக்கப்படுகிறது.
சரும மடிப்புகளில் மிக எளிதாக மாட்டிக்கொள்ளும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா பாக்ட்ரியல் டெர்மடிடிஸ் ரேஷ் எனப்படுகிறது. இது சிகப்பான, செதில் போன்ற சிறிய மஞ்சள் அல்லது வெள்ளை கட்டி போன்றும் இருக்கலாம். பொதுவாக, இதனால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்துக்கு வழங்கப்படும் டயப்பர் ரேஷி சிகிச்சையில் ஆன்டிபேக்டீரியல் க்ரீம்கள் மற்றும் லேசான ஸ்டீராய்டு கிரீம் போன்றவை வழங்கப்படும்.
ஒவ்வாமை தொடர்பு தோலழற்சி / அலர்ஜிக் காண்டாக்ட் டெர்மடிடிஸ் என்பது புதிய லாண்டரி டிடர்ஜென்ட், வைப்ஸ், அல்லது கிரீமின் ஒவ்வாமை எதிர்வினையால் ஏற்படும் மற்றோரு வகை டயப்பர் ரேஷ் ஆகும். பெரிய, சிகப்பு நிற, கொப்புளம் போன்ற கட்டிகள் மூலம் இவ்வகை ரேஷ்களை வகைப்படுத்தலாம். வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பெரும்பாலும் லேசான ஸ்டீராய்டு கிரீம் பரிந்துரைக்கப்படுகிறது.
வேனிற் கொப்பளம்/ வியர்க்குரு
கைகள், பாதம், மற்றும் வாயில் ஏற்படும் நோய்
சொரியாசிஸ்
எக்சிமா
இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான டயப்பர் வகைகள் இருக்கின்றன. இருப்பினும், அவை அனைத்தும் ஒரே மாதிரி தயாரிக்கப்படுவதில்லை. சில வகைகள் குழந்தைகளுக்கு டயப்பர் ரேஷ்கள் வராமல் தடுப்பதில் மற்றவகைகளை விட சிறந்தது. பெற்றோர்கள் அவர்கள் குழந்தை சௌகரியமாக, ரேஷ் இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணினால், அவர்கள் சரியான வகை டயப்பரை தேர்வு செய்வது மிக அவசியம். இது அவர்கள் குழந்தையின் வயது மற்றும் எடையை பொறுத்தது.
மூன்று வகை டயப்பர்கள் இருக்கின்றன: டிஸ்போஸபிள், துணி, மற்றும் ஹைபிரிட். டிஸ்போஸபிள் டயப்பர்கள் மிக பொதுவானவை. ஏனெனில், அவை உபயோகப்படுத்த மற்றும் டிஸ்போஸ் செய்ய மிக எளிமையானது. துணி டயப்பர்கள் விலை உயர்ந்தது. ஆனால், அவை டிஸ்போஸபிள் டயப்பர்களை விட சுற்றுசூழலில் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். ஹைபிரிட் டயப்பர்களை துணி அல்லது டிஸ்போஸபிள் டயப்பர் என இரண்டாகவும் பயன்படுத்தலாம். ஒருவருக்கு பணம் சேமிக்க வேண்டுமெனில் இது மிக பொருத்தமானது. ஆனால், டிஸ்போஸபிள்களுக்கு பதிலாக துணி கோமணங்களை உபயோகிப்பது சாலச்சிறந்தது.
காட்டன் லைனிங் கொடுக்கப்பட்ட துணி டயப்பர் அல்லது கெமிக்கல்ஸ் அல்லது டைகள் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்ட டிஸ்போசபிள் டயப்பரே சிறந்த சாய்சாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தையின் மலம் அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன கூறுகிறது?
டயப்பர் ரேஷை தடுக்க அல்லது அதற்கு சிகிச்சையளிக்க பல வகைகள் இருக்கின்றன. டயப்பர் ரேஷை தடுக்க பெற்றோர்கள் டயப்பர் மற்றும் சருமம் உராய்வதை தடுக்க பேரியர் கிரீம் அல்லது ஆயிமென்ட்டை உபயோகிக்கலாம். ஒருவேளை ரேஷ் மிக தீவிரமாக இருப்பின், அவர்களுக்கு கிரீம் அல்லது ஆயிமென்ட் எழுதப்பட்ட மருந்து சீட்டு தேவைப்படலாம். வெகு சில குழந்தைகளுக்கு, டயப்பர் ரேஷ் பாக்ட்ரியல் அல்லது ஃபங்கள் தொற்றிற்கு வழிவகுக்கும். வீட்டு சிகிச்சையில் ரேஷ் குணமாகவில்லை எனில், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது மிக அவசியம்.
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)