
கொசுக்கள் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா என அனைத்து வகையான நோய்களையும் கொண்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, இதனால் உங்கள் குழந்தைகளிடம் சிடுசிடுப்பு, உடலில் தடிப்புகள், அரிப்பு மற்றும் வீறிட்டுஅலறல் போன்றவையும் அதிகரிக்கும்.
குழந்தைகளை மட்டுமன்றி அனைவரையும் கொசுக்கள் அதிகம் சுற்றி மொய்ப்பதற்கான காரணம், நாம் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுதான்.
பிறந்து இரண்டு மாதங்களுக்கும் குறைவாவாக உள்ள குழந்தைகளின் விஷயத்தில், மஸ்கிட்டோ ரிப்பலன்ட்கள், லோஷன்கள் மற்றும் ஸ்ப்ரேக்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
நீங்கள் இவற்றை பயன்படுத்த முடியாததால் கொசுக்கள் அதிக சுறுசுறுப்பாக இருக்கும் விடியற்காலை மற்றும் மாலை நேரங்களில் உங்கள் குழந்தையை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கவும். கொசுக்கள் உள்ளே பறந்து வராதபடி விண்டோ மற்றும் டோர்களை முழுமையாக மூடி விட வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு தளர்வான நீண்ட கைகளைகொண்ட ஆடைகளை உடுத்தி, வெளியே அழைத்துச் செல்லும் போது ஸ்ட்ரோலர்களின் மேல் பொருத்தப்பட்ட வலையை கொண்டு மூடி பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும்.
உங்கள் வீட்டைச் சுற்றி எங்கேனும் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை செக் செய்யவும். ஏனெனில், இந்த தேங்கியுள்ள நீரில் தான் கொசுக்கள் வளரும். எனவே, அவ்வாறு தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றி சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
வாசனை திரவியங்கள், ஹேர் ஸ்ப்ரேக்கள் மற்றும் பிற நறுமணம் கொண்ட பேபி புராடக்ட்டுகளை தவிருங்கள். இவை பூச்சிகளை மிகவும் கவர்ந்திழுக்கும்.
பிறந்து 2 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு, மஸ்கிட்டோ ரிப்பலன்ட் லோஷனை தடவலாம். இருப்பினும், மிகக் குறைந்த கெமிக்கல் கான்சன்ட்ரேஷன் கொண்ட சரியான மஸ்கிட்டோ ரிப்பலன்ட்டைத்தேர்ந்தெடுங்கள்.
கொசுக்களை விரட்ட கிராம்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற வீட்டு வைத்தியம் மற்றும் இயற்கை முறைகளை மட்டும் நம்பி இருக்காதீர்கள். நீங்கள் வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க விரும்பினால், உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு உடைகள் மற்றும் கொசுவலைகளை வைத்திருக்கும் போது அதைப் பயன்படுத்துங்கள்.
கொசு மூலம் பரவும் நோய்களை அடையாளம் காண கற்றுக்கொள்ளுங்கள். வெப்பமான மற்றும் குளிர் காலங்களில் கொசுக்கள் மிக அதிக அளவில் இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் குழந்தை நன்றாக போர்த்தி மூடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், நீங்கள் வெளியில் செல்லும்போது, கூடவே மஸ்கிட்டோ ரிப்பலன்ட்டை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் குழந்தைக்கு காய்ச்சல், தடிப்புகள் அல்லது நோயின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அருகிலிருக்கும் உங்கள் சுகாதார வழங்குநரைத் உடனடியாகத் தொடர்பு கொண்டு அதற்கான காரணத்தை உறுதிப்படுத்தி, அதற்கான சிகிச்சையை விரைவாகத் தொடங்குங்கள்.
How to prevent baby from mosquitoes in tamil, Why are mosquitoes attracted to babies In English, Why are mosquitoes attracted to babies In Hindi, Why are mosquitoes attracted to babies In telugu, Why are mosquitoes attracted to babies In Bengali
This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |