hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Care for Baby arrow
  • குழந்தைகளுக்கு சிறந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எது? (Which Are The Best Vitamin C Rich Foods For Babies In Tamil) arrow

In this Article

    குழந்தைகளுக்கு சிறந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எது? (Which Are The Best Vitamin C Rich Foods For Babies In Tamil)

    Care for Baby

    குழந்தைகளுக்கு சிறந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எது? (Which Are The Best Vitamin C Rich Foods For Babies In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    முன்னுரை (Introduction)

    • குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் விட்டமின் சி சத்து மிகவும் அவசியமானதாகும். விட்டமின் சி என்பது அப்சார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையக் கூடிய ஊட்டச்சத்து ஆகும். குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளுமே அவசியமானவை தான் என்றாலும், விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் மூலமாக குழந்தைகளுக்கு சில தனிப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன.

    • நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பு, திசுக்களின் மறுகட்டமைப்பு மற்றும் மறு உருவாக்கம் போன்ற பலன்களை பெறுவதற்கு விட்டமின் சி உதவிகரமாக இருக்கிறது. நம் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சிக் கொள்ள இது வகை செய்கிறது.

    • குழந்தையின் உடலானது விட்டமின் சி சத்தை சொந்தமாக உற்பத்தி செய்து கொள்ள இயலாது. குழந்தை சாப்பிடுகின்ற உணவுகளில் இருந்து தான் விட்டமின் சி சத்தை பெற்றுக் கொள்ள இயலும்.

    • 6 மாத பச்சிளம் குழந்தைகளுக்கு, தினசரி அவர்கள் உட்கொள்ளும் தாய்ப்பால் அல்லது புட்டிபால் மற்றும் இதர உணவுகளில் இருந்து விட்டமின் சி சத்து கிடைக்கிறது.

    விட்டமின் சி நிறைந்த உணவுகள் (Vitamin C rich foods)

    விட்டமின் சி சத்தானது பழங்கள் (சிட்ரஸ்) மற்றும் காய்கறிகளில் இயற்கையாகவே கிடைக்கப் பெறுகிறது. விட்டமின் சி சத்து நிறைந்த சில உணவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

    • மென்மையான இறைச்சி

    • தக்காளி

    • பாலக்கீரை

    • டோஃபு

    • மீன்

    • வெண்ணெய்

    • மிளகு

    • தானியங்கள்

    • திராட்சை

    • முளைகட்டிய பயறுகள்

    • முட்டை

    • பால்

    • புளிக்காத தயிர்

    விட்டமின் சி சத்து நிறைந்த, குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு வகைகள் இதோ:

    • விட்டமின் சி சத்து நிறைந்த சிவப்பு நிற கேப்சியம் மிளகாய் குழந்தைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    • ஸ்ட்ராபெர்ரி

    • கிவி

    • டேங்கரின்

    • சமைக்கப்பட்ட ப்ராக்கோலி

    • பப்பாளி

    குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்து குறைபாடு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்(Symptoms of Vitamin C deficiency in babies include):

    • புண் ஆறும் நடவடிக்கையில் தாமதம்

    • அடிக்கடி சளி மற்றும் இருமல் பிரச்சினை

    • உடல் சோர்வு

    • பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி

    • வறட்சியான, சுருங்கிய சருமம்

    • எரிச்சல்

    • நகரும்போது வலி

    • அனோரெக்ஸியா

    • எலும்பு வளர்ச்சி பாதிப்பு

    • ரத்த கசிவு மற்றும் ரத்த சோகை

    விட்டமின் சி மூலமாக குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்கள்(Vitamin C Benefits in Babies In Tamil)

    குழந்தையின் உடல் நலனுக்கு விட்டமின் சி சத்து மிக அவசியமாகும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி அடைந்து வரும் பருவத்தில் இந்த சத்து முக்கியமானது. விட்டமின் சி சத்து எப்படி குழந்தைகளுக்கு பலன் அளிக்கிறது என்பதற்கான காரணங்கள்:

    • ரத்த செல்கள், எலும்புகள், திசுக்கள் போன்றவற்றை அது சரி செய்கிறது

    • ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

    • ரத்த குழாய்களை பலப்படுத்துகிறது

    • வெட்டுக் காயங்கள் மற்றும் புண்கள் குணமடையும் வேகம் அதிகரிக்கும்

    • குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்

    • உணவுகளில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது

    இந்தியாவில் விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் (Vitamin C Rich Foods in India In Tamil)

    • சிட்ரஸ் பழங்கள் (Citrus Fruits)

    சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி சத்து மிகுதியாக உள்ளது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவை சிட்ரஸ் பழங்கள் ஆகும்.

    • கேப்சியம் (Bell Peppers)

    விட்டமின் சி சத்து நிறைவாக உள்ள உணவுகளில் கேப்சியம் மிளகாய் முக்கியமானதாகும். இது மட்டுமல்லாமல் இதில் விட்டமின் ஏ, பி, இ மற்றும் கே போன்றவை உள்ளன. மேலும், இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துகளும் கிடைக்கின்றன.

    • பப்பாளி பழம் (Papaya)

    பப்பாளி பழத்தில் விட்டமின் சி சத்து குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

    • கிவி (Kiwi)

    கிவி பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக விட்டமின் சி சத்து. அதேபோல நார்ச்சத்து மற்றும் ஃபிளேவனாய்ட்ஸ் போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன.

    • ப்ராக்கோலி (Broccoli)

    இதில் விட்டமின் சி சத்து மிக அதிகமாக உள்ளது. மேலும் ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் நிறைந்த என்ஜைம்கள் நிறைந்துள்ளன.

    • பாகற்காய் (Cantaloupe)

    விட்டமின் சி சத்து நிறைந்த இந்த காய்கறியில் கலோரி சத்துகள் குறைவு.

    • கொய்யா (Guava)

    கொய்யா கனியில் விட்டமின் சி சத்து மிகுதியாக உள்ளது. தொடர்ந்து கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை கட்டுக்குள் வரும்.

    • தக்காளி (Tomatoes)

    விட்டமின் சி சத்து அபரிமிதமாக கொண்ட உணவுப் பொருள் இதுவாகும். ஒரு தாக்காளியில் 20 மி.கி அளவுக்கு விட்டமின் சி சத்து மற்றும் ஃபோலோட், பொட்டாசியம், விட்டமின் கே மற்றும் லைகோபென் போன்ற இதர ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

    • ஸ்ட்ராபெர்ரி (Strawberries)

    விட்டமின் சி சத்து மிக அதிகமாக உள்ள உணவுப் பொருளில் ஸ்ட்ராபெர்ரியும் ஒன்றாகும். ஒரு பவுல் ஸ்ட்ராபெர்ரியில் 90 மி.கி அளவுக்கு விட்டமின் சி சத்து உள்ளது. இது மட்டுமல்லாமல் ஃபோலேட், ஃபிளேவனாய்ட்ஸ் ஆகிய சத்துக்களும், புற்றுநோய், தூக்கமின்மை, இதய நோய் போன்ற பிரச்சினைகளை தடுக்கக் கூடிய உயர் தரமான ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை உள்ளன.

    இதையும் படிக்கலாமே! - 9 மாத குழந்தைக்கான ஃபுட் சார்ட்/மீல் பிளான்

    • நாவல்பழம் (Indian Gooseberry)

    நாவல்பழத்தில் விட்டமின் சி சத்து கொட்டிக் கிடக்கிறது. 100 கிராம் அளவுக்கான நாவல்பழத்தில் 20 ஆரஞ்சு பழங்களில் இருக்கக் கூடிய அளவுக்கு விட்டமின் சி சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

    விட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் (Vitamin C- And Zinc-Rich Foods In Tamil)

    வளர்ச்சி மற்றும் உடல் நல ஆரோக்கியத்தை தக்க வைக்க ஜிங்க் சத்து நம் உடலுக்கு தேவையாகும். உடல் முறைப்படி இயங்க வேண்டும் என்றால் ஜிங்க் சத்து அவசியமானது. எனினும், உடலில் ஜிங்க் சத்து போதுமான அளவில் இருக்காது. ஆகவே, வெளிப்புற உணவுகள் மூலமாக இந்த சத்தை நாம் திரட்டிக் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவுப் பட்டியலில் இடம்பிடிக்கும் பழங்களில் ஜிங்க் சத்து ஏராளமாக உள்ளது.

    அதே சமயம், சிவப்பு இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போன்றவற்றில் ஜிங்க் சத்து கூடுதலாக உள்ளது. புரதம் நிறைந்த இந்த உணவு வகைகளில் ஜிங்க் சத்து மிகுதியாக உள்ளது. ஜிங்க் சத்து உள்ள இதர உணவுகள்:

    • கோதுமை

    • முழு தானிய கோதுமை

    • முழு தானியங்கள் (குழந்தைகளுக்கான ஓட்மீல்ஸ்)

    • பட்டானி மற்றும் பீன்ஸ்

    • பருப்புகள்

    • கொண்டக்கடலை

    • வெண்ணெய்

    • புளிக்காத தயிர்

    • ஈஸ்ட்

    • ஆஸ்பாரகஸ்

    • நட்ஸ்

    • முட்டை

    சைவ உணவுப் பிரியர்களுக்கு விட்டமின் சி சத்து கொண்ட உணவுகள் (Vitamin C Rich Foods for Vegetarians In Tamil)

    • கருப்பட்டி

    • சிவப்பு கேப்சியம் மிளகாய்

    • காலே

    • பச்சை கேப்சியம் மிளகாய்

    • பப்பாளி

    • கீரைகள்

    • கிரேன்பெர்ரி ஜூஸ்

    • பிரஸ்ஸல்ஸ்

    • ப்ராகோலி

    • முட்டைக்கோசு

    • மாங்காய்

    • ஆரஞ்சு

    • காளிஃபிளவர்

    • உருளைக்கிழங்கு

    • பாலக்கீரை

    முடிவுரை (Summary)

    ஒட்டுமொத்த உடல் நலனுக்கு விட்டமின் சி சத்து உதவிகரமாக இருக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. பல நோய்கள் மற்றும் கிருமிகளை எதிர்கொள்ளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பை தயார் செய்கிறது. எனவே, உங்கள் குழந்தைக்கான தினசரி உணவுப் பட்டியலில் விட்டமின் சி இடம்பெறுவது அவசியமாகும்.

    உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால், புட்டிப்பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கேப்சியம் மிளகாய் போன்ற உணவுகளில் இருந்து விட்டமின் சி சத்து கிடைக்கிறது.

    TAGS :

    Vitamin c rich foods in tamil, vitamin c rich foods for babies in tamil, babies food in tamil, Which Are The Best Vitamin C Rich Foods For Babies In English, Which Are The Best Vitamin C Rich Foods For Babies In Hindi, Which Are The Best Vitamin C Rich Foods For Babies In Telugu, Which Are The Best Vitamin C Rich Foods For Babies In Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.