hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Diet & Nutrition arrow
  • கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் உண்பதால் ஏற்படும் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் உண்பதால் ஏற்படும் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள்

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் உண்பதால் ஏற்படும் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் உண்பது சரியானது தானா?(Is it okay to eat raisins during pregnancy?)

    கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் உண்பது பாதுகாப்பானது தானா? இந்தக் கேள்வி உங்கள் மனதில் இருந்தால், அதற்கான பதில் ஆம் என்பது தான்! உலர் திராட்சைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு அநேக நற்பயன்களை அளிக்கக் கூடிய ஆரோக்கியமான, இயற்கையான உணவு ஆகும். சரியான ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அவற்றின் எல்லா நற்பயன்களையும் பெறவும் அவற்றை உங்களின் கர்ப்ப கால உணவுமுறையில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவும். பொதுவாகவே கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகளை உண்பது பாதுகாப்பானது தான், என்றாலும் கூட அதனை போதுமான அளவிற்கு மட்டுமே சாப்பிடுவது முக்கியமானது. அளவுக்கு மீறி உலர் திராட்சைகளை சாப்பிடும் பட்சத்தில், மலச்சிக்கல் அல்லது பிற இரைப்பை-குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

    உலர் திராட்சைகளின் ஊட்டச்சத்து உள்ளடக்கம்(Raisins'nutritional content)

    உலர் திராட்சைகள், உலர் பழ வகைகளில் கிடைக்கப்பெறும் மிகப் பிரபலமான ஒன்றாகும். இவற்றால் கிட்டும் உடல்நல நற்பயன்களால், இது கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறந்ததொரு உணவுத் தேர்வாக கருதப்படுகிறது. உலர் திராட்சைகளில் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது, இரத்தத்தில் ஹீமோகிளோபின் உருவாக்கத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியமாகும், உலர் திராட்சைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அவை மலச்சிக்கலை தடுப்பதற்கு உதவியாய் இருக்கும். கூடுதலாக, உலர் திராட்சைகளில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் (ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்) மற்றும் ஃபீனாலிக் சேர்மங்கள் உள்ளதால், செல் சேதம் ஏற்படுவதையும், நாள்பட்ட வியாதிகளையும் தடுப்பதற்கு உதவியாய் இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது, அவை எண்ணற்ற உடல் நலப் பயன்களை வழங்குகின்றன. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், உங்களுடைய மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

    கர்ப்ப காலத்தில் கிஸ்மிஸ் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(Benefits of eating kismis in pregnancy)

    பொதுவாகவே உலர் திராட்சைகள் ஒரு சத்தான தின்பண்டமாகவே கருதப்பட்டு வருகிறது, ஆயினும் அவை கர்ப்பிணிப் பெண்களுக்கு அநேக நன்மைகளை அளிக்க வல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் உண்பதால் ஏற்படும் சில முக்கியமான நன்மைகள் குறித்து இங்கே காணலாம்:

    • உலர் திராட்சைகளில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது, மேலும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற மினரல்களும் உள்ளன.

    • அவற்றில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளதால், உங்கள் உடலில் செல் சேதமடையாமல் தடுப்பதற்கு உதவும்.

    • கர்ப்ப காலத்தில் கருப்பு உலர் திராட்சைகள் உண்பது, செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து, சிக்கலின்றி மலம் கழிப்பதற்கு உதவுகிறது.

    • உலர் திராட்சைகள் மிகுந்த ஆற்றலை வழங்கும் திறன் மிக்கது, எனவே கர்ப்ப காலத்தில் இவற்றை உண்பதால் உடற்சோர்வு ஏற்படாமல் தடுப்பதற்கு உதவும்.

    • உங்கள் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகளை பெறுவதற்கு உங்கள் உணவுமுறையில் உலர் திராட்சைகளை சேர்த்துக் கொள்வது உதவியாய் இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகளை உண்பதால் ஏற்படும் அபாயங்கள்(Risks of eating raisins during pregnancy)

    • கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகளை சாப்பிடும் பெண்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பொதுவாகவே உலர் திராட்சைகள் உண்பதற்கு பாதுகாப்பானவையாக இருப்பினும் கூட, அவற்றை கர்ப்ப காலத்தில் சாப்பிடும் போது சில அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    • உலர் திராட்சைகளில் இரும்புச் சத்து மிகுதியாக இருப்பதால், இவற்றை கர்ப்ப காலத்தில் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதை தடுக்க உதவும். எனினும், இவற்றில் அதிக அளவிலான சர்க்கரையும், கலோரிகளும் கூட உள்ளன. அளவுக்கு மீறி உலர் திராட்சைகளை உண்பதால் உடல் எடை கூடலாம், மற்றும் கர்ப்ப கால சர்க்கரை நோய் உண்டாகலாம். உலர் திராட்சைகள் முதிர்கருவிற்கு டைப் 2 சர்க்கரை நோய் உண்டாகும் அபாயத்தை கூட அதிகரிக்கக் கூடும்.

    • உலர் திராட்சைகளில் சிறிதளவு பூச்சிக்கொல்லி மருந்துகளும், பிற இரசாயனங்களும் கூட உள்ளன. இந்த இரசாயனங்களின் அளவு பெரியவர்களுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறதென்றாலும் கூட, வயிற்றில் வளரும் முதிர்கருவிற்கு இது தீங்கு விளைவிக்கக் கூடும். கர்ப்பிணிப் பெண்கள் நாள் ஒன்றுக்கு ½ கப்-பிற்கு மேல் உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகளை உண்பதால் ஏற்படும் விளைவுகள்(Effects of eating raisins during pregnancy)

    • கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் போன்ற உலர் பழங்களை உண்பது அநேக உடல்நல நற்பயன்களை வழங்குகிறது. உலர் திராட்சைகளில் இரும்புச் சத்து மிகுதியாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் இன்றியமையாதது. அவற்றில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், மலச்சிக்கலை தடுப்பதற்கு உதவுகிறது. கூடுதலாக, உலர் திராட்சைகளில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் இருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்வதற்கு உதவும்.

    • எனினும், எந்தவொரு உணவுப் பொருளுக்கும் பொருந்துவது போன்று, இதனையும் போதுமான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். ஏனென்றால், அளவுக்கதிகமாக சாப்பிடும் போது தாய், முதிர்கரு ஆகிய இருவருக்குமே இது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

    கர்ப்பிணிப் பெண்கள் எவ்வளவு காலத்திற்கு உலர் திராட்சைகளை உண்ண வேண்டும்?(How long should pregnant women consume raisins?)

    பொதுவாகவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் நாள் ஒன்றுக்கு அரை கப் அல்லது ஒரு கை நிறைய உலர் திராட்சைகள் மற்றும் உலர் கருப்பு திராட்சைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் செரிமான பிரச்சினைகள் மற்றும் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமுள்ளது. பொதுவாக, உலர் திராட்சைகளை நொறுக்குத் தீனியாக கர்ப்ப காலம் முழுவதுமே உண்ணலாம். எனினும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமிருக்கும் பட்சத்தில், நீங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது மேலானது.

    கர்ப்ப கால சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் உலர் திராட்சைகளை சாப்பிடலாமா?(Can pregnant women with gestational diabetes eat raisins?)

    உலர் திராட்சைகளில் சர்க்கரை அளவு மிகுதியாக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகரிக்கக் கூடும். கர்ப்ப காலத்தில் இவ்வாறு ஏற்படுவது உகந்ததல்ல. ஆகவே, கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமுள்ள கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகளை சாப்பிடும் முன்னர் தங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் ஆப்ரிகாட் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விளைவுகள்

    கர்ப்பமாக இருக்கும் போது உலர் திராட்சைகளை உண்பது பாதுகாப்பானதா?(Are raisins & dry grapes safe to eat when pregnant?)

    ஆம், கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகளையும், உலர் கருப்பு திராட்சைகளையும் உண்பது பொதுவாகவே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அவற்றில் கால்சியம், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. எனினும், கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமுள்ள கர்ப்பிணிப் பெண்கள் உலர் திராட்சைகள் அல்லது கிஸ்மிஸ் பழங்களை கர்ப்ப காலத்தில் அளவோடு சாப்பிட வேண்டும்.

    உலர் திராட்சைகளை யாரெல்லாம் ஒதுக்க வேண்டும்?(Who should stay away from raisins?)

    கர்ப்ப காலத்தில் கருப்பு உலர் திராட்சைகளை உண்பதால் தாய்க்கும், குழந்தைக்கும் சில அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, உலர் திராட்சைகளில் உணவை நஞ்சாக்கக் கூடிய (ஃபுட் பாய்சனிங்) தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இருக்கக் கூடும். கூடுதலாக, உலர் திராட்சைகளில் அதிக அளவில் சர்க்கரை உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் அளவுக்கதிகமாக இவற்றை சாப்பிடக் கூடாது, ஏனெனில் இதனால் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேற்கோண்டு, கர்ப்ப காலத்தில் கருப்பு உலர் திராட்சைகளை அளவுக்கு மீறி உண்பதால் வயிற்றுப் போக்கு மற்றும் உப்பிசம் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக் கூடும். கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகளை சாப்பிடுவதற்கு முன்னர் பெண்கள் தங்களின் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.