Get MYLO APP
Install Mylo app Now and unlock new features
💰 Extra 20% OFF on 1st purchase
🥗 Get Diet Chart for your little one
📈 Track your baby’s growth
👩⚕️ Get daily tips
OR
Article Continues below advertisement
Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பக்காலத்தின் ஒன்பதாவது வாரத்தில் நீங்கள் பூரித்து போகும் பல விஷயங்கள் நடக்க துவங்கலாம். இரண்டாம் மூன்று மாதித்திற்குள் நுழைய சில வாரங்களே இருக்கும் பட்சத்தில், கர்ப்பக்காலத்தின் 9ஆவது வாரத்தின் அல்ட்ராசவுண்டின் போது உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் நடக்க துவங்கும். உங்கள் கருமுட்டை இப்போது கருவாக மாறத் துவங்கியிருக்கும். மேலும், இது தொடர்ந்து வளர்ச்சியடையும் போது, ஒன்பதாவது வாரத்தின் இறுதியில் இது தோராயமாக 3.1 சென்டிமீட்டர்கள் வளரும் (கடந்த வாரத்தை விட இரண்டு மடங்கு). இருப்பினும், உங்கள் குழந்தையின் பிறப்புறுப்புகள் வளரத் துவங்கிருந்தாலும், 9ஆவது வார அல்ட்ராசவுண்டில் குழந்தை என்ன பாலினம் என்பதை சொல்லமுடியாது. இந்த தருணத்தில், உங்கள் குழந்தையின் இதயத்தில் 4 சேம்பர்கள் இருக்கின்றன. மேலும், அது ஒரு பெரியவரின் இதயத்தை விட இரண்டு மடங்கு வேகமாக துடிக்கும்.
நஞ்சுக்கொடி என்பது குழந்தை வளரும் போது அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்து, கழிவு பொருட்களையும் வெளியேற்றுகிறது. கூடுதலாக, அதனால் ஹார்மோன்களின் உருவாக்கத்திற்கும் உதவ முடியும். அதுவே தலையாய கடமையும் கூட. நீங்கள் கொஞ்சம் எடை கூடியிருப்பது போன்ற உணரலாம். குறிப்பாக வயிற்று பகுதியில். இது உடலில் ஏற்படும் நீர்தேக்கத்தினால் கார்ப்பக்காலத்தின் 9ஆவது வாரத்தில் மிக பொதுவாக நடக்கக்கூடிய ஒன்றே. அத்துடன், உங்கள் ஆற்றல் முழுவதும் நஞ்சுக்கொடியை உருவாக்கவும், கருவையும் அதன் வளர்ச்சியையும் தொடர்ந்து ஆதரிக்க உபயோகப்படுத்தப்படுவதால் நீங்கள் இன்னும் சோர்வாகவே உணர்வீர்கள். உங்கள் மெட்டபாலிக் விகிதமும், ஹார்மோன் அளவுகளும் அதிகரிப்பதால், உங்கள் இரத்த சர்க்கரை அளவும், உங்கள் இரத்த அழுத்தமும் உங்கள் சொல் பேச்சு கேட்காததை உணருவீர்கள். ஒருவேளை உங்களுக்கு உடல் சோர்வின் அளவு அல்லது காலையில் ஏற்படும் குமட்டல் போன்றவற்றை எண்ணி கவலையாக இருந்தால், நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரையோ அல்லது செவிலியரையோ சந்திக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு நெஞ்செரிச்சல் அல்லது அஜீரண கோளாறு போன்றவை ஏற்பட்டால், சர்க்கரை இல்லாத சுவிங்கத்தை மெல்லுவது உங்களுக்கு உதவலாம்.
9ஆவது வாரத்தின் அல்ட்ராசவுண்டின் போது நீங்கள் எதிர்பார்க்க வேண்டியவை பின்வருமாறு:
Article continues below advertisment
வெஜினாவில் இரத்தப்போக்கு ஏற்படுவது சாதாரணமானது அல்ல. சில நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்படுவது சாத்தியம்தான். ஆனால், பெரும்பாலான வழக்குகளில், இது தீவிரமான சிகப்பிலிருந்து இருண்ட சிகப்பு நிறமாகவும் பின்னர் பிரவுன் நிறமாகவும் மாறி, தானாகவே நின்றுவிடும். இருப்பினும், ஒரு வாரம் முழுவதும் இரத்தப்போக்கு தொடர்ந்தால், நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை தொடர்புக்கொள்ள வேண்டும்.
உங்கள் கர்ப்பக்காலத்தின் ஆரம்பத்தில் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டாலும், நிறைய வயிற்று வலியிருந்தாலும், உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். அதிக எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படலாம். மார்பக வலி, குமட்டல், நெஞ்சரிச்சல், அல்லது மலச்சிக்கல் போன்ற லேசான அறிகுறிகள் பொதுவானவையே. இருப்பினும், ஒருவேளை உங்களுக்கு கூடுதலான குமட்டல் இருப்பின், நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
உங்கள் கர்ப்பக்காலத்தின் முதல் மூன்று மாதத்தில், உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்:
வலிமிகுந்த அடிவயிற்றுவலி மற்றும் இரத்தப்போக்கு
கருப்பையிலிருந்து வெளியாகும் நீர் (சாதாரணமாக ஏற்படுவதை விட)
Article continues below advertisment
வெஜினாவில் துர்நாற்றம்
100.4 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல்
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் அசௌகரியம் அல்லது எரிச்சல் தன்மை
வயிறு அல்லது அடிவயிற்று வலி
பதட்டம் அல்லது கவலைக்கான அறிகுறிகள்
Article continues below advertisment
கூடுதல் எடை இழப்பு
உண்ணும் உணவு அல்லது குடிக்கும் நீர் வயிற்றில் தாங்காமல் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முறை வாந்தி எடுத்தல்.
அடிக்கடி ஏற்படும் தலைவலி
உங்கள் கர்ப்பக்காலத்தின் ஆரம்பக்கால அறிகுறியின் விளைவு மிக அதிகமாக இருக்கலாம்.
உங்களுக்கு உணவு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம். அதுமட்டுமின்றி நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படலாம்.
Article continues below advertisment
உங்கள் குழந்தை நன்றாக வளர்கிறது: கால்கள், விரல்கள், கண்களின் இமை மற்றும் காதுகள் இந்நிலையில் வளர்ச்சி அடைகின்றன.
உங்கள் மார்பகம் நிரம்பிவிடும். அதுமட்டுமின்றி உங்கள் முலைக்காம்புகள் கருப்பாக மாறத் துவங்கும்.
நிறைய குழந்தைகளை சுமக்கும் சில கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு குழந்தையை சுமக்கும் கர்ப்பிணியை விட கூடுதல் அறிகுறி ஏற்படலாம். எடுத்துக்காட்டிற்கு, கர்ப்பக்காலத்தின் போது ஏற்படும் தீவிரமான குமட்டல் மற்றும் வாந்தி உங்களை டிஹைட்ரேட்டடாக்கி, உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டசத்துக்கள் மற்றும் நீர்காரங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளாமல் தடுக்கும். மேலும், இவ்வேளையில், உங்கள் கருப்பை உங்கள் வளரும் குழந்தைக்கு ஏற்ப விரிவடைவதால், உங்கள் கர்ப்பக்காலம் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் உங்கள் செரிமானத்தை குறைக்கும். எனவே நீங்கள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதனால், உங்களுக்கு அதீத வயிறு உப்பசம் மற்றும் மலசிக்கல் ஏற்படலாம்.
நீங்கள் புகைப்பிடித்தாலோ அல்லது நிக்கோட்டின் சேர்ந்த எந்த பொருளையாவது உபயோகித்தாலோ, நீங்கள் அதை நிறுத்துவதற்கான சிரத்தையை மேற்கொள்ள வேண்டும். பின்வருபவை உட்பட கர்ப்பக்காலத்தில் புகைப்பிடித்தல் என்பது கூடுதல் அபாயம் வாய்ந்த பலவித ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்:
கருச்சிதைவு
Article continues below advertisment
குறைந்த எடையுடன் பிறத்தல் அல்லது குறைமாத பிரசவம்
குழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி (SIDS)
இரத்தம் கட்டுவதற்கான அபாயம்
பிறவி இதய நோய், பிளவுபட்ட உதடு அல்லது அண்ணம் போன்ற பிரசவத்திற்கு முன்பே ஏற்படும் முரண்பாடுகள்
சரியாக சமைக்கப்படாத கரி, மீன் அல்லது முட்டை போன்றவற்றை தவிர்த்தல்
Article continues below advertisment
ஸ்வார்ட்ஃபிஷ், ஷார்க் மற்றும் கிங் மெகேரல் போன்ற மெர்குரி அதிகமிருக்கும் மீனை தவிர்த்தல்
பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை நன்கு கழுவுதல்.
எப்போதும் காய்கறிகளை நறுக்கும் போர்டும், தட்டுகளும் சுத்தமாக இருத்தலை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எல்லா வைட்டமின் சத்துக்களையும் எடுத்துக்கொள்வதை மறக்காதீர்கள்.
மது அருந்தாதீர்கள்.
Article continues below advertisment
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் சிறுநீர் கசிவிற்கான காரணங்கள் & சிகிச்சை
கர்ப்பக்காலத்தின் 8 ஆவது வாரத்திலிருந்து, 9 வாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படாமல் இருக்கவும் நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இருப்பினும், உங்கள் குழந்தை ஏறத்தாழ நன்கு வளர்ந்துவிட்டது. அது சிறிதாக இருந்தாலும், தொடர்ந்து வளர்ச்சியடைய தயாராக இருக்கும். எனவே, உற்சாகமாக உணர வேண்டிய இத்தருணத்தில், உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ஏற்ற அற்புதமான முடிவுகளை தொடர்ந்து நீங்கள் எடுக்க வேண்டும்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |