
பல பெற்றோர்கள் மருத்துவர்களிடம் பெரும்பாலும் கேட்கும் ஒரு கேள்வி, "குழந்தைகள் எப்போது விமானத்தில் பறக்கலாம்?" அதற்கு குழந்தை நல மருத்துவர்கள், உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு நன்றாக வளர்ச்சியடைந்த பின்னர் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து விமானத்தில் பறக்கலாம் என்றே பரிந்துரைக்கின்றனர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், குழந்தைக்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆன பின்பு நீங்கள் குழந்தையுடன் சேர்ந்து விமானத்தில் பயணிக்கலாம். ஆனால், இதய அல்லது நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் உள்ள பச்சிளங் குழந்தைகள், விமானத்தில் காற்றழுத்தம் குறையும் போது, மூச்சுவிடுவதில் சிரமத்தை எதிர் கொள்வார்கள். இத்தகைய சூழலில் நீங்கள் முதலில் உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகுவது அவசியமாகும். சில விமான நிறுவனங்கள் குழந்தைகளுடன் விமானத்தில் பயணிப்பதற்கு ஏதேனும் கொள்கைகள் வைத்திருப்பார்கள். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் அவற்றை கவனமாக படித்தல் அவசியமாகும். ஆனால், குழந்தை எப்போது விமானத்தில் செல்லலாம் என்ற கேள்வி உங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ள இந்தப் பதிவினை தொடர்ந்து படியுங்கள்.
பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தைக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆன உடனே விமானத்தில் செல்லலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், அது எந்த நோய் நொடியும் இல்லாத ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தான்.
அதோடு, குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை என்றால், அதற்கு நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். அதனால், குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை இத்தகைய திட்டங்களை ஒத்தி வைப்பதே நல்லது. அதே போல், பிரசவத்தின் போது சிக்கல்களை எதிர் கொண்டிருந்தால் அல்லது சிசேரியன் செய்யப்பட்டு இருந்தால், அந்த தாய்மார்கள் கட்டாயமாக சற்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குழந்தைக்கும் லேயர்களாக ஆடைகளை அணிவியுங்கள். விமானத்தில் குழந்தைக்கு அசௌகரியமாக இருந்தால், நீங்கள் சில ஆடைகளை கழட்டி விடலாம்.
தொட்டில், வாக்கர், போன்ற குழந்தைக்கு தேவையானவற்றை நீங்கள் இறங்கும் இடத்திற்கு வந்து சேரும் வகையில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு பயணம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நீங்கள் உங்கள் விமான நிறுவனத்தின் இன்ஃபேன்ட் டிராவல் பாலிசியை படித்திடுங்கள்.
நீங்கள் உங்கள் கைக்குழந்தையுடன் பயணிக்கிறீர்கள் என்று கேபின் குழுவிடம் தெரிவித்து விடுங்கள்.
உங்கள் குழந்தை எப்போது தூங்குவார் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற விமானத்தை முன்பதிவு செய்திடுங்கள்.
டயப்பர்கள், வெட் வைப்ஸ், டயப்பர் கிரீம், மற்றும் கூடுதல் நாப்பீஸ்.
பிளாஸ்டிக் கவர்கள், கக்கும் போது அதனை துடைக்கத் தேவையான துணி, குழந்தையின் ஆடை பாழாகி விடாமல் இருக்க அவர்களின் கழுத்தில் கட்டப்படும் துணி போன்றவை.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மாற்றிக் கொள்ளத் தேவையான கூடுதல் ஆடைகள்
போர்வைகள், ரப்பர் நிப்பில் மற்றும் நர்சிங் கவர்கள்.
ஜாரில் அல்லது டின்னில் விற்கப்படும் பால் பவுடர் போன்ற பொருட்கள் மற்றும் பால் பாட்டில்
ஐஸ் பேக்ஸ், கிலு கிலுப்பு, பொம்மைகள் போன்ற குழந்தைக்குத் தேவையான விளையாட்டு ஜாமான்கள்
பல்க்ஹெட் என்பது விமானத்தின் பார்டிஷன் அருகில் இருக்கும். அதில் கால் வைப்பதற்கு அதிக இடம் இருக்கும். அதனால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வசதியாக இருக்கும். இந்த இருக்கைகள் வழக்கமாக அமரும் பிரிவின் முன் பகுதியில் இருக்கும்.
அது மட்டுமல்ல, இந்த இருக்கைகள் ஆனது மடியில் அமர்ந்து இருக்கும் உங்கள் கைக் குழந்தைக்கு கூடுதல் ஆக்சிஜன் மாஸ்க்ஸ் வழங்குகின்றன. இது பெரும்பாலும், விமானத்திற்குள் கேரிகாட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இருந்தாலும், பல்க்ஹெட் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் இரண்டு டிராபேக்குகள் உள்ளன. ஒன்று இதில் ஹேன்ட் லக்கேஜ் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லை. இன்னொன்று என்னவென்றால், ஆர்ம்ரெஸ்ட்கள் அதேவாக தான் இருக்கும்.
நீங்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பின் வரிசையில் முன்பதிவு செய்யலாம். ஆனால், இந்த இருக்கைகள் முழுவதுமாக பின்னால் சாய்ந்து கொள்ள வசதியாக இருக்காது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அதோடு, அங்கு அமர்ந்தால் எஞ்சினின் சத்தம் அதிகமாக கேட்கும். அதனால் உங்கள் குழந்தைக்கு அசௌகரியமாக இருக்கும்.
ஆனால், அதே சமயத்தில் உங்கள் குழந்தை சத்தம் போட்டுக் கொண்டே இருப்பவராக இருந்தால், இந்த இருக்கை உங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமையும். அதே போல், இந்த இருக்கைகள் கழிவறைக்கு அருகாமையில் இருப்பதால், நீங்கள் விரைவில் அதனை பயன்படுத்தி இருக்கைக்குத் திரும்பி விடலாம்.
தரையிறங்கிய பின்னர் வேகமாக வெளியே செல்லும் வகையில் நீங்கள் முன்பக்க இருக்கைகளையும் தேர்வு செய்யலாம். அல்லது விமான இறக்கையில் இருக்கும் இருக்கைகளைக் கூட தேர்வு செய்யலாம். ஏனென்றால், அங்கு குழந்தைக்கு டர்புலென்ஸ் (நிலையற்ற இயக்கங்கள்) குறைவாக இருக்கும்.
இந்த விஷயத்தைப் பொறுத்த வரை, நிபுணர்கள் ஆம் என்றே கூறுகின்றனர். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கண்டிப்பாக தனி இருக்கை வழங்க வேண்டும். அது குழந்தையை பாதுகாப்பாக வைப்பதோடு, பெற்றோருக்கும் பயணத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும்.
ஆம். உங்கள் குழந்தைக்கு எத்தனை வயது ஆகி இருந்தாலும், உங்கள் மடியில் வைத்திருந்தால், அவர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. திடீர் டர்புலென்ஸ் இருக்கும் போது இறக்கும் அபாயம் கூட உள்ளது. ஆகையால், நீங்கள் குழந்தைக்கென ஒரு இருக்கையை முன்பதிவு செய்து கொள்வது நல்லது. அவர்களுக்கு பாலூட்டாத போது சீட் பெல்ட்டை சரியாக அணிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே! - 8 மாத குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் தேவையான குறிப்புகள்
டேக் ஆஃப் ஆகும் போது நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம் அல்லது ரப்பர் நிப்பிளைக் அல்லது பால் பாட்டிலைக் கொடுக்கலாம். இது அவர்களின் காதுகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து சற்று நிவாரணம் அளிக்கும்.
ஆம். விமானத்தில் இருக்கும் அதிக சத்தம் உங்கள் குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கக் கூடும். அதனால், விமானத்தில் பயணிக்கும் போது அவர்களுக்கு இயர் மஃப்ஸ் (ear muffs) பயன்படுத்தலாம்.
டிரான்ஸ்அட்லாண்டிக் விமானங்களில் இவை வழங்கப்படுகின்றன. ஆனால், இதற்கு நீங்கள் முன் பதிவு செய்வது அவசியமாகும்.
Yes
No















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |