This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

புதிதாகத் தாய்மை அடைந்த தாய்மார்களுக்குக் குழந்தைக்கு மசாஜ் செய்வது பற்றிய உதவிக் குறிப்புகள் மற்றும் உத்திகள் (Baby Massaging Tips and Techniques That'll Help All New Moms In Tamil)

Baby Massage
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 20, 2025
புதிதாகத் தாய்மை அடைந்த தாய்மார்களுக்குக் குழந்தைக்கு மசாஜ் செய்வது பற்றிய உதவிக் குறிப்புகள் மற்றும் உத்திகள் (Baby Massaging Tips and Techniques That'll Help All New Moms In Tamil)
Read time6 min

குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டியவை என்ன? (What Should You Do Before Massaging Your Baby? In Tamil)

குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வசதிக் குறைவு ஏற்படாத வகையில் சிறந்த இடத்தை அடையாளம் காண்பது மிக முக்கியமானது. உங்கள் குழந்தையைத் துண்டு அல்லது போர்வையில் கவனமாக வைக்கவும். அறை குழந்தைக்கு வசதியாகவும் இளம்சூட்டுடனும் (மிகவும் சூடாகவோ, குளிராகவோ இன்றி) இருக்கவேண்டும்.

செல்லப்பிராணிகள் அல்லது மொபைல் போன்கள் போன்ற கவனச்சிதறல் ஏற்படுத்தும் விஷயங்களை விலக்கி வைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. மசாஜ் செய்யும் போது மெல்லிய இசை, பாடல் போன்றவற்றை ஒலிக்கலாம். மசாஜ் செய்யும் போது குழந்தையின் சருமத்தில் அல்லது உங்கள் கைகளின் சீராக வழுக்கும் திறன் கொண்ட சிறந்த பேபி ஆயில் அல்லது லோஷனைத் தேர்வு செய்யவும். உங்கள் குழந்தைக்குத் தோலழற்சி போன்ற சில சரும வியாதிகளின் அறிகுறி இருந்தால், மசாஜ் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது.

கடுகு எண்ணெய், நீர்த்த கிரீம், சுத்திகரிக்கப்படாத வேர்க்கடலை எண்ணெய் மற்றும் பிற எண்ணெய்கள் மற்று கிரீம்களை குழந்தைக்கு மசாஜ் செய்யப் பயன்படுத்தக்கூடாது, இந்த எண்ணெய்கள் உங்கள் குழந்தையின் மென்மையான சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடும்.

எப்படி மசாஜ் செய்வது – படிப்படியான முறை (How to Massage a Baby – Step by Step In Tamil)

பின்வரும் குழந்தை மசாஜ் நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையின் தலை, முகம், முதுகு, மார்பு, வயிறு, கால்கள் மற்றும் பாதங்களுக்கு மசாஜ் தரலாம்.

1. தலை (Head)

உள்ளங்கையில் சிறிது எண்ணெயை எடுத்து குழந்தையின் தலையில் வட்ட வடிவில் பரப்பி மெதுவாகத் தடவவும். உச்சந்தலையில் (குழந்தையின் தலையில் உள்ள மென்மையான இடம்) அழுத்தம் தராமல் கவனமாக மசாஜ் செய்யவும்

2. முகம் (Face)

குழந்தையின் முகத்தில் சிறிது எண்ணெய் தடவி, விரல்களால் தட்டவும். நெற்றியில் இருந்து தாடை நோக்கி விரல்களைக் கொண்டு மசாஜ் செய்யவும். புருவங்களின் மீது மென்மையான அழுத்தம் கொடுத்து விரல்களை வெளிப்புற திசையில் கொண்டு செல்லவும். கன்னங்கள், தாடை மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் மென்மையாக மசாஜ் செய்யவும்.

3. வயிற்று முறுக்கு நிவாரணம் (Abdominal colic relief)

வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்து முடித்துதும், குழந்தையின் முழங்கால்களை வயிறு வரை மடித்து, மென்மையான அழுத்தம் தரவும். இந்த நிலையை கிட்டத்தட்ட 30 விநாடிகள் வைத்திருங்கள் மற்றும் இதே முறையில் சில முறை மசாஜ் செய்யவும். குழந்தையின் வயிற்றை, தொப்புள்பகுதிக்குக் கீழே இருந்து, கீழ்நோக்கி மசாஜ் செய்யவும். இது வாயுவை வெளியேற்ற உதவுகிறது.

4. முதுகு (back)

குழந்தையை வயிரு கீழ்பக்கம் இருக்கும்படி படுக்க வைத்து இரு கைகளாலும் குழந்தையின் கழுத்தின் அடிப்பகுதியிலிருந்து பிட்டம் வரை, கையை முன்னும் பின்னுமாக அசைத்து மசாஜ் செய்யவும். குழந்தையின் முதுகுத்தண்டில் விரல்களால் வட்ட இயக்கத்தில் மென்மையான அழுத்தம் தரவும்.

5. மார்பு (chest )

இரு கைகளையும் குழந்தையின் மார்பின் மையத்தில் வைத்தபடி தோள்களை நோக்கி வெளிப்புறமாக ஸ்ட்ரோக் செய்யவயும். இதே போல சில முறை மீண்டும் செய்யவும். உங்கள் கையை கிடைமட்டமாக வைத்து கீழ்நோக்கியும் மசாஜ் செய்யலாம்.

6. வயிறு (stomach)

குழந்தையின் விலா எலும்புக் கூண்டின் அடிப்பகுதியில் தொடங்கி, வயிற்றில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். தொப்புள் பகுதியை சுற்றி |விரல்களை கடிகார திசையில் சுற்றி மசாஜ் செய்யவும். உங்கள் குழந்தையின் வயிற்றில் கையை கிடைமட்டமாக வைத்து, கைகளை ஒருபுறமிருந்து மறுபுறம் வரை நகர்த்தலாம். தொப்புள் கொடி முழுமையாகக் காய்ந்து சரியாகக் குணமடையவில்லை என்றால், குழந்தையின் வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும்.

இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கான சரியான நேரம் எது?

7. கால்கள் மற்றும் பாதம் (leg and foot)

குழந்தையின் தொடைகளில் இருந்து கணுக்கால் வரை கீழ்நோக்கி ஸ்ட்ரோக் செய்யவும். குழந்தையின் தொடையைப் பிடித்து, இரு கைகளையும் எதிரெதிர் திசைகளில் சுழற்றி மசாஜ் செய்யவும் (துவைத்த பிறகு நீங்கள் துணிகளை முறுக்குவதுபோல).

கட்டைவிரலைப் பயன்படுத்தி, குழந்தையின் பாதத்தில் குதிகால் முதல் விரல்வரை மேல்நோக்கி அழுத்தம் தரவும். குழந்தையின் முழு பாதத்தையும் உங்கள் கைகள் அழுத்துவதை உறுதி செய்யவும். மசாஜ் செய்யும் போது ஒவ்வொரு கால்விரலையும் மெதுவாக இழுக்கலாம் மற்றும் உங்கள் குழந்தையின் கணுக்கால்களைச் சுற்றி சிறிய வட்ட இயக்கங்களைப் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.

குழந்தைக்கு மசாஜ் செய்ய மேலே குறிப்பிட்டுள்ள படிகளை நீங்கள் எளிதாகப் பின்பற்றலாம். இருப்பினும், உங்கள் குழந்தையின் உடலின் எந்தப் பகுதியிலும் அதிக அழுத்தம் கொடுக்காமல் கானமாக இருக்கவும்.

சில உதவிக் குறிப்புகள் (Some Tips)

குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது பின்பற்றக்கூடிய சில குறிப்புகள்:

1. மென்மையாக அழுத்தவும் (Press gently)

குழந்தை வலி பொறுக்காது மற்றும் மிகவும் மென்மையானது என்பதால், மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் அல்லது வலுவான ஸ்ட்ரோக் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றி மசாஜ் செய்வதைத் தவிர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

2. குழந்தை நல்ல மனநிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (Make sure the child is in a good mood)

கட்டுப்படுத்த முடியாத நிலையில் குழந்தை இருந்தால் மசாஜ் செய்ய வேண்டாம். குறிப்பிட்ட உடல் பகுதியை மசாஜ் செய்யும் போது குழந்தை அசௌகரியமாக இருப்பதை அறிய நேர்ந்தால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிக்கு மசாஜ் செய்யவும். குழந்தை மகிழ்ச்சியற்றோ, வசதியற்ற நிலையில் இருப்பதாகவோ தோன்றினால், மசாஜ் செய்வதை நிறுத்திவிடவும்.

3. குழந்தையுடன் பேசுங்கள் (Talk to the child)

மசாஜ் செய்யும் போது குழந்தையுடன் பேசி, சிரித்து விளையாட்டு காட்டலாம். குழந்தைக்குப் பிடித்த பாடல்களைப் பாடலாம் அல்லது ஹம் செய்யலாம். குழந்தையை பேச்சில் ஈடுபடுத்துவதால் குழந்தை ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

4. வழக்கமாக ஒரே நேரத்தில் மசாஜ் செய்யப் பழகவும் (Get used to regular massages at the same time)

மசாஜ் சாய தினமும் ஒரே நேரத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். இது குழந்தை யும் ஒரு வழக்கமான முறையில் ஈடுபட உதவுகிறது. இதனால், அந்நேரத்தை குழந்தை மிகவும் வசதியானதாக உணர்ந்து மசாஜ் அமர்வுகளுக்குத் தயாராகவும் இருக்கும்.

5. அதிகப்படியான எண்ணெயை துடைக்கவும் (Wipe off excess oil)

குழந்தைகள் பொதுவாகத் தங்கள் விரல்களை வாயில் வைப்பார்கள் என்பதால், மசாஜ் செய்த பிறகு, குழந்தையின் உள்ளங்கை மற்றும் விரல்களை நன்றாகத் துடைக்க வேண்டும். உங்கள் குழந்தைக்குப் பாதுகாப்பான எண்ணெயைத் தேர்ந்தெடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

குழந்தைக்கு மசாஜ் செய்வது பல நன்மைகளைத் தருகிறது. இது உங்களைக் குழந்தையுடன் பிணைக்கவும் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் விரும்பும் வரை தொடர்ந்து மசாஜ் செய்யலாம். இருப்பினும், குழந்தை மசாஜ் குறித்து கவலைகள் அல்லது கேள்விகள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

TAGS :

Baby massage in tamil, tips for baby massage in tamil, Baby Massaging Tips and Techniques That'll Help All New Moms In English, Baby Massaging Tips and Techniques That'll Help All New Moms In hindi, Baby Massaging Tips and Techniques That'll Help All New Moms In Telugu, Baby Massaging Tips and Techniques That'll Help All New Moms In Bengali

Mylo Herb Enriched Baby Massage Oil - 200 ml

Mylo Herb Enriched Baby Massage Oil - 200 ml

Dermatologically Tested | Made Safe Certified | Nourishes Skin | Strengthens Immunity | Ayurvedic Preparation

11625 Moms bought
₹399₹49920% Off
Rating
4.4
(379)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.