This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

சி-செக்ஷனுக்குப் பிறகு உங்கள் தொப்பையை இயற்கையாக குறைக்க வேண்டுமா? (Reduce your tummy fat after a C-section naturally In Tamil)

CSec
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
 சி-செக்ஷனுக்குப் பிறகு உங்கள் தொப்பையை இயற்கையாக குறைக்க வேண்டுமா? (Reduce your tummy fat after a C-section naturally In Tamil)
Likes15 Likes|
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • சி-செக்ஷனுக்குப் பிறகு 6-8 வாரங்கள் கழித்து எடை குறைப்பு செயல்முறையை தொடங்குவது பாதுகாப்பானது, ஏனெனில் உடல் குணமடைய நேரம் தேவைப்படுகிறது.
  • தொடர்ந்து தாய்ப்பால் புகட்டுதல் தினசரி 500 கலோரிகளை எரிக்க உதவும், உடற்பயிற்சி, சிறிய போர்ஷன்கள் மற்றும் போதிய தூக்கம் எடையிழப்பை துரிதப்படுத்தும்.
  • முழு தானியங்கள், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து உணவுகள் மற்றும் இந்திய மசாலாக்கள் பிரசவத்திற்குப் பிந்தைய டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • சி-செக்ஷன் அம்மாக்களுக்கு எந்த தயாரிப்புகள் உதவும்? Explore our Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2.
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Rating4.8
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
  • பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் 25–35 பவுண்ட் (11.5-16 கிலோகிராம்) எடையை கூடுதலாகப் பெறுவார்கள். இருப்பினும், கர்ப்ப காலத்தின் உணவு பழக்க வழக்கம் மற்றும் கர்ப்பமாவதற்கு முன் இருந்த எடையை பொறுத்தும் சில அம்மாக்கள் எடை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அதிகரிப்பார்கள்.

  • சி-செக்ஷனாக இருந்தாலும் சரி, சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி, பிரசவத்திற்கு பின் எடையை குறைப்பதற்கு முன் அம்மாக்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சி-செக்ஷனுக்கு பின், வழிகாட்டுதலின் அடிப்படையில், பிரசவத்திற்குப் பின்னான எடையை குறைப்பது மிக எளிது மற்றும் பயனுள்ளது. சி-செக்ஷனுக்கு பின் பிரசவத்திற்குப் பின்னான எடையை குறைப்பதற்கான டயட் பிளான் அம்மாக்களுக்கு அதிகளவு எடையை குறைக்க உதவும்.

  • இருப்பினும், சி-செக்ஷனுக்கு பின் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க 6 லிருந்து 8 வாரத்திற்கு பிறகு பிரசவத்திற்குப் பிந்தைய எடையை குறைப்பதற்கான செயல்முறையை பின்பற்றுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய எடையிழப்பு குறிப்புகள் மற்றும் டயட் பிளான்களை பற்றி அறிந்து கொள்ள இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் சில குறிப்புகள்

  • தொடர்ந்து தாய்ப்பால் புகட்டுதல் (Breastfeed Regularly.)

அம்மாக்களுக்கு, நல்ல செய்தி: தொடர்ந்து பால் புகட்டுதல் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் அம்மக்கள் எடையையும் குறைக்க உதவும். இது அட்டகாசமாக இருக்கிறது இல்லையா? ஆம், தாய்மார்கள் தாய்ப்பால் புகட்டுவதால் தினசரி 500 கேலரிகள் எரிக்கப்படுகிறது.

  • உடற்பயிற்சி செய்வது நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் (Exercising can make a difference.)

பிரசவத்திற்குப் பிந்தைய எடையிழப்பிற்கான டயட் பிளானுடன் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும். உங்கள் அன்றாட வழக்கத்தில் லேசான உடற்பயிற்சி மற்றும் யோகா ஆசனங்களை செய்யலாம். இருப்பினும், சி-செக்ஷன் முடிந்த ஆரம்பக்காலத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும், ஏனெனில் இது அடி வயிற்றில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

  • சிறிய போர்ஷன்களை உபயோகப்படுத்தவும்.(Use small portions)

ஒருவரது தட்டில் இருக்கும் எல்லா உணவையும் சாப்பிட்டுவிடுவது என்பது ஒரு மனித மரபு. அப்படியில்லாமல், சிறிது சிறிதாக உணவருந்துதல் என்பது உங்கள் உடலானது ஊட்டச்சத்துக்களையும், நீராகாரங்களையும் உறிஞ்சி, உங்களது பிரசவத்திற்குப் பிந்தைய எடையிழப்பு செயல்முறைக்கு உதவுகிறது. அதாவது மூன்று வேளைக்கு நீங்கள் உண்ணவிருக்கும் முழு ஊட்டசத்துடனான கொழுப்பு நிறைந்த உணவுகளை ஆறு சிறிய பாகங்களாக பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • தூக்கத்தை சமரசம் செய்ய வேண்டாம்(Don't Compromise on Sleep.)

சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாக்கள் 24/7 நேரமும் அவர்களது குழந்தையுடன் பிஸியாகி தான் இருப்பார்கள். அது சில நேரம் அவர்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த தூக்கமின்மையானது மனஅழுத்தம் மற்றும் மோசமான மெட்டபாலிசத்துடன் தொடர்புடையதாகும். இதன் விளைவாக மிகையளவாக உண்ணும் அல்லது அருந்தும் பழக்கம் வந்துவிடும். இது பிரசவத்திற்குப் பின் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்கும் செயல்முறையை பாதிக்கும்.

பிரசவத்திற்குப் பிந்தைய எடையிழப்பு டயட் பிளானில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் (Foods to Include in a Postpartum Diet Plan for Weight Loss In Tamil)

சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாக்கள் அவர்களது கூடுதல் எடையை குறைப்பதற்கு டயட் சார்ட்டை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. பிரசவத்திற்குப் பிந்தைய எடையிழப்பு பயணத்தில் அவர்களது அன்றாட உணவு பழக்கத்தை பயனுள்ளதாக்க அவர்கள் செய்ய வேண்டியவை சில விஷயங்களை தவிர்த்தல் அல்லது சேர்த்தல் மட்டுமே.

முழு தானியங்கள்(Whole grains): சிசேரியனுக்குப் பிறகு அவசியம் சாப்பிட வேண்டிய உணவு வகை, ஊட்டசத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த முழு தானியங்கள் ஆகும். இது உங்கள் ஆற்றல் திறனையும், தாய்ப்பால் சுரப்பையும் அதிகப்படுத்தும். கோதுமை மற்றும் திணை, சிகப்பரிசி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களே காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ஏற்றவை.

  • பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்(Dairy products):

ஸ்கிம்ட் பால், குறைந்த கொழுப்புடைய யோகர்ட் மற்றும் சீஸ் போன்றவை அம்மாக்களுக்கு தேவையான புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் பி மற்றும் டி வழங்குகிறது. அது மட்டுமின்றி, குறைந்த கொழுப்புடைய பால் சார்ந்த உணவுகளானது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதுடன், தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க உதவும் 8 சூப்பரான டிப்ஸ்

  • பழங்கள் மற்றும் காய்கறிகள்(Fruits and Vegetables):

சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாக்களின் (தாய்ப்பால் புகட்டும்) பிரசவத்திற்கு பிந்தைய எடையிழப்பு டயட்டில் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளும் இடம்பெற வேண்டும். ஏனெனில், அதில் வைட்டமின்கள், இரும்பு சத்துக்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்திருப்பதுடன் பிரசவத்திற்குப் பிந்தைய எடையிழப்பை அது தூண்டுகிறது.

  • இந்திய மசாலாக்கள்(Indian Spices):

மெட்டபாலிசத்தை அதிகரித்தல் மற்றும் உடல் கொழுப்பை விரைவாக குறைத்தல் போன்ற முழு தானியங்களுடன், இந்திய மசாலாக்களும் பிரசவத்திற்குப் பிந்தைய எடையிழப்பிற்கான டயட் பிளானில் இருத்தல் அவசியம். அஜ்வைன், ஜீரகம், மஞ்சள் மற்றும் பெருங்காயம் போன்றவையும் அதலிடங்கும் மசாலா பொருட்கள்.

  1. நார்ச்சத்துக்கள்(Fibers):

சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு அடிக்கடி சி-செக்ஷன் தையலை பாதிக்கும் அளவு மலச்சிக்கல் ஏற்படலாம். நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கும் ஃபைபர், சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் தரும். பெர்ரிகள், ஆரஞ்சுகள், பேரிக்காய்கள், ஆப்பிள்கள், கிவிக்கள், மாங்காய் மற்றும் ப்ரூன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட், காலிஃபிளவர், கேரட்கள், குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணிகள் போன்றவற்றை உங்கள் பிரசவத்திற்குப் பிந்தைய எடையிழப்பு டயட் பிளானில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

  1. பானங்கள்(Drinks):

குறைந்த கொழுப்பு சத்துடைய பால், தேங்காய் தண்ணீர், ஹெர்பல் டீ மற்றும் நீர் மோர் போன்றவை சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாக்களின் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. அத்துடன், இந்த நீராகாரங்கள் பிரசவத்திற்கு பின் அம்மாக்களின் உடல் எளிமையாக குணமடையவும் பிரசவத்திற்குப் பின் எடையை இழக்கவும் உதவும்.

சேர்த்துக் கொள்ள கூடாதவை :

  1. மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல்(Alcohol and Smoking):

மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவை தாய்ப்பால் உற்பத்தியை பாதிக்கும், மேலும் அம்மாக்களின் உடல்நலத்தையும் பாதிக்கும்.

  1. சர்க்கரை நிறைந்த உணவுகள்(Sugary foods):

சர்க்கரை கொண்ட உணவுகள் அதிக கலோரிக்களைக் கொண்டவை. இதை அருந்துவது பிரசவத்திற்குப் பின் எடையை இழக்கச் செய்யும் செயல்முறையில் உங்களுக்கு சிறிதும் உதவாது. மாறாக, இது உங்கள் எடையை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை நிறைந்த உணவை சாறுகள் நிறைந்த பழங்கள் மற்றும் ட்ரை ஃப்ரூட்சுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  1. ஜங்க் அல்லது பொரிக்கப்பட்ட உணவுகள்(Junk or fried foods):

சி-செக்ஷனுக்குப் பிறகு, சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தேவைப்படும். ஜங்க் அல்லது பொரிக்கப்பட்ட உணவுகளில் உயர் கலோரிகள், கொழுப்பு மற்றும் உப்பு நிறைந்திருக்கிறது. இது உங்கள் பிரசவத்திற்கு பிந்தைய எடையிழப்பு செயல்முறையை மட்டுமே பாதிக்கும்.

  1. கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள்(Carbonated drinks):

கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களில் அதிக சர்க்கரை பொருட்கள் இருக்கின்றன. அதிக காபி குடிப்பதை குறைத்திடுங்கள். அதை அருந்துவது அம்மா மற்றும் குழந்தை என இருவரது ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

முடிவுரை

பிரசவத்திற்குப் பிந்தைய எடை அதிகரிப்பு என்பது சாதாரணமே, அதை எண்ணி அவமானப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிரசவத்திற்கு பிந்தைய எடை இழப்பிற்கான டிப்ஸ் மற்றும் டயட் பிளான்களை பின்பற்றுவதினால், சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாக்களால் அவர்களது “ஃபிளாட்டான வயிற்றை” “ஃபிட்டான வயிறாக” மாற்றமுடியும். இருப்பினும், பொறுமையாக இருத்தல் அவசியம். எடையை குறைக்க அவசரப்படக்கூடாது. ஏனெனில், சி-செக்ஷனுக்குப் பிறகு உடல் குணமடைய கொஞ்ச காலம் தேவைப்படும்.

Tags :

after c-sec how to reduce my tummy in tamil, what kind of food taken after pregnancy in tamil, what kind of food avoid to reduce tummy in tamil, weight loss after delivery in tamil, how to loss my weight after delivery in tamil

சி-செக்ஷன் அம்மாக்களால் நம்பப்படும் தயாரிப்புகள்

உங்கள் குணமடையும் பயணத்தில் மென்மையாக ஆதரவளிக்கும் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு தயாரிப்புகள், எடை குறைப்பை இயற்கையாக எளிதாக்கும்.

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles

5762 Moms bought
₹59₹7925% Off
Rating
4.8
(118)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

3701 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(88)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

418 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.