This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தைகளுக்கு அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

Care for Baby
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
குழந்தைகளுக்கு அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள் மற்றும்  சிகிச்சை முறைகள்
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • குழந்தைகளுக்கு அதிகமாக வியர்வை ஏற்படுவதற்கு உடல் சூடாதல், அழுகை, காய்ச்சல், தூங்கும்போது மூச்சுநிற்றல் மற்றும் காரணமிலா மிகைவியர்ப்பு போன்ற பொதுவான காரணங்கள் இருக்கலாம்.
  • நோய்த்தொற்றுகள், மிகை தைராய்டு சுரப்பு, உயர் இரத்த அழுத்தம், பிறவி இதயக் குறைபாடுகள் மற்றும் நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் குழந்தைகளுக்கு அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்தக்கூடும்.
  • அதிகப்படியான வியர்வை உடல் முழுவதிலும் பொதுவாக ஏற்படலாம் அல்லது தலை, கழுத்து, அக்குள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தோன்றலாம்; காரணம் கண்டறிந்தபின் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • குழந்தையின் வியர்வையை எப்படி வசதியாக நிர்வகிப்பது? Explore our Mylo Baby Mosquito Repellent Fabric Roll-On (10ml).
Mylo Baby Mosquito Repellent Fabric Roll-On (10ml)
Mylo Baby Mosquito Repellent Fabric Roll-On (10ml)
Rating4.5
Airprime Premium Diaper Pants S (5–9 kg, 26 Count) + 100% Plant-Based Baby Wipes (Pack of 2)
Airprime Premium Diaper Pants S (5–9 kg, 26 Count) + 100% Plant-Based Baby Wipes (Pack of 2)
Rating4.6
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Rating4.8

வியர்வை என்பது உடலைக் குளிர்விக்க உதவும் ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால், சிறுபிள்ளைகளையும் குழந்தைகளையும் பொறுத்தவரை இது சில அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். ஏனென்றால், சிறுபிள்ளைகளும் குழந்தைகளும் சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் அரிதாகவே வியர்க்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கு அசாதாரணமான மற்றும் அதிகப்படியான வியர்வை உண்டானால் பெற்றோர்கள் மருத்துவரை அணுகவேண்டும்.

குழந்தைகளின் அதிகப்படியான வியர்வைக்கான காரணங்கள்

அதிகம் வியர்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தையின் தலை வியர்ப்பதைக் கவனிக்கிறார்கள். இதன் விளைவாக, பெற்றோர்கள் அடிக்கடி தங்கள் மருத்துவரிடம் என் குழந்தைக்கு ஏன் தலை இவ்வளவு வியர்க்கிறது? என்று கேட்கிறார்கள். சிறுபிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கும் அதிகமாக வியர்க்கப் பல காரணங்கள் இருக்கலாம். சில அவ்வளவாகப் பாதிக்காதவை. எளிதில் தவிர்க்கப்படக்கூடியவை. மற்றவை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியவை.

குழந்தைக்கு அதிகப்படியான வியர்வை ஏற்படுத்தக்கூடிய சில பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

1. உடல் சூடாதல் (Overheating)-

குழந்தையின் அறையில் அதிக வெப்பநிலை இருந்து அதன் காரணமாக சூடாக உணர்ந்தால் அல்லது அதற்குப் பல அடுக்குகளுள்ள துணிகளை உடுத்தியிருந்தால் குழந்தைக்கு வியர்க்கலாம். குழந்தையின் உடல் அதிக வெப்பமடைவது ஆபத்தானது என்பதால் பெற்றோர்கள் இந்த சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். மேலும், வியர்வை அவர்களின் உடலை விரைவாகக் குளிர்விக்கும். இந்தத் திடீர் உடல் வெப்பநிலை மாற்றத்தால் குழந்தைக்கு சளி பிடிக்கும். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க பெற்றோர்கள் அறை வெப்பநிலையை சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். தங்கள் குழந்தைக்கு ஆடை மீது ஆடையாக பல அடுக்குகளை உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

2. அழுகை (Crying)-

குழந்தை நீண்ட நேரம் அழுதால் வியர்க்கத் தொடங்கலாம். ஏனென்றால், குழந்தை அழும்போது சூடாக உணரும்.

3. காய்ச்சல் (Fever)-

குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும்போது அல்லது காய்ச்சல் விட்டு வெப்பநிலை இயல்பு நிலைக்கு வரத் தொடங்கும்போது வியர்க்கத் தொடங்கலாம்.

4. தூங்கும்போது மூச்சுநிற்றல் (sleep apnoea) -

இந்த நிலை அதிக வெப்பத்தால் ஏற்படுகிறது. குழந்தை தூக்கத்தில் சுவாசிப்பதை நிறுத்துகிறது. தூங்கும்போது குழந்தையின் தலை வியர்ப்பதைப் பெற்றோர்கள் கவனிப்பார்கள்.

5. காரணமிலா மிகைவியர்ப்பு (idiopathic hyperhidrosis) -

குழந்தைக்கு அதிகப்படியான வியர்வை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய முடியாதபோது மருத்துவர்கள் பெரும்பாலும் இந்தப் பெயரைப் பயன்படுத்துகின்றனர். குழந்தையின் வியர்வைச் சுரப்பிகள் வழக்கத்தை விடச் சுறுசுறுப்பாக உள்ளன என்பதே இதன் பொருள்.

ஒரு சில குழந்தைகளுக்கு அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்தும் சில உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம். பிறவிக்குறைபாடுகளும் மரபணுக்குறைபாடுகளும் குழந்தைகளுக்கு அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்தக்கூடும்.

குழந்தைகளுக்கு அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்தக்கூடிய சில உடல் நோய்கள்:

1. நோய்த்தொற்றுகள் (infections) -

குழந்தைகளுக்கு லேசான அல்லது கடுமையான நோய்கள் தொற்றினால் அப்போது வியர்க்கலாம்.

2. மிகை தைராய்டு சுரப்பு (hyperthyroidism) -

அதிகப்படியான தைராய்டு சுரப்பிச் செயலாக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகப்படியான வியர்வை, பதட்டம், விவரிக்கப்படாத எடை இழப்பு மற்றும் வேகமான இதயத் துடிப்பு போன்ற சில அறிகுறிகள் இருக்கும்.

3. உயர் இரத்த அழுத்தம் (high blood pressure) -

உயர் இரத்த அழுத்தம் உள்ள குழந்தைகளும் அதிகமாக வியர்க்கிறார்கள். குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் சில மருந்துகளைப் பயன்படுத்துவதால் அல்லது மூளைக் கட்டிகளால் ஏற்படும்.

4. இதய நோய் (Heart disease)-

பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக வியர்க்கும். அத்துடன் எடை அதிகரிக்காமை, வேகமான மூச்சு வீதம் போன்ற பிற அறிகுறிகளும் தென்படும்.

5. நீரிழிவு நோய் (Diabetes)-

நீரிழிவு குழந்தைகள் கடுமையான தாகம், அதிக வியர்வையுடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பல அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.

குழந்தைகளின் அதிகப்படியான வியர்வை வகைகள்

குழந்தைகளின் அதிகப்படியான வியர்வை வியர்வை தோன்றுமிடத்தைப் பொறுத்து இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.

1. பொதுவான அதிகப்படியான வியர்வை –

இதில் குழந்தையின் உடல் முழுவதும் அதிகமாக வியர்க்கிறது. இதனால் அவர்களின் ஆடைகள் ஈரமாகின்றன.

2. பகுதியில் அதிகப்படியான வியர்வை -

இங்கே, குழந்தையின் உடலின் ஒரு பகுதியில் மட்டுமே அதிகமாக வியர்க்கிறது. உதாரணமாக, தலை, கழுத்து, அக்குள் போன்றவை.

வியர்க்கும் குழந்தைக்கான சிகிச்சைகள்

குழந்தைக்கு வியர்க்கும் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்த பின்னரே மருத்துவர்கள் அதற்குப் பொருத்தமான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். குழந்தைக்கு அதிகப்படியான வியர்வை இருப்பது பொதுவாகவா அல்லது பகுதியிலா என்பதை மருத்துவர் மதிப்பிட்ட பிறகே அவரால் பொருத்தமான சிகிச்சை முறைகளைப் பற்றிக் கூற முடியும்.

வியர்வையுடைய குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் சில சிகிச்சை முறைகள்:

1. மேற்புற மருந்துப்பூச்சுத் தயாரிப்புகள் (Topical preparations) -

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜெல்கள், பொடிகள், களிம்புகள், லோஷன்கள் போன்ற மருத்துவர் பரிந்துரைத்த மேற்புற மருந்துப்பூச்சுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

2. வாய்வழி மருந்துகள் (Oral medicines) -

சில நேரங்களில் வியர்க்கும் குழந்தைக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் வாய்வழி மருந்துகளை பரிந்துரைக்கலாம். கோலின் எதிர்ப்பி மருந்துகள் எனப்படும் இந்த மருந்துகள் வியர்வைச் சுரப்பிகள் தூண்டப்படுவதைத் தடுத்து அதிகப்படியான வியர்வை ஏற்படாமல் செய்கின்றன.

3. அயனி இடப்பெயர்வு (iontophoresis) -

இது வியர்வை சுரப்பிகளைத் தடுக்கப் பயன்படும் குறைந்த மின்னழுத்த மின்சிகிச்சை. இந்த சிகிச்சை பயனளிக்க பல அமர்வுகள் தேவை.

4. போடோக்ஸ் (botox) -

போடோக்ஸ் ஊசிகள் அதிகப்படியான வியர்வையைக் குறைக்க உதவுகின்றன. ஏனெனில் அவை வியர்வை சுரப்பிகள் தூண்டப்படுவதைத் தடுக்கின்றன. இந்த சிகிச்சை பயனளிக்க சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செய்யப்பட வேண்டும்.

இதையும் படிக்கலாமே! - உங்கள் பள்ளி பருவ குழந்தைகளும் அவர்களின் தூக்க நேரமும்

கண்டறிதல்

தங்கள் குழந்தைகளுக்கு அதிகப்படியான வியர்வை ஏற்படுவதைக் கவனிக்கும் பெற்றோர்கள் நோயைக் கண்டுபிடிக்க மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதிகப்படியான வியர்வைக்குத் தீவிரமான காரணங்கள் எதுவும் இருப்பதில்லை. ஆனால், சில குழந்தைகளுக்கு அடிப்படை உடல்நலக் கோளாறுகள் இருக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நிலைக்கு மருத்துவரிடம் சென்று சரியான சிகிச்சையைப் பெற வேண்டும்.

முடிவுரை

குழந்தைகளுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணங்களையும் சிகிச்சை முறைகளைப் பற்றியும் மேலும் அறிய, மைலோ செயலியைப் பார்க்கவும்.

அன்பான அம்மாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு

உங்கள் குழந்தையின் சருமத்தை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்க மென்மையான, சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு பொருட்கள் உதவும்.

Mylo Baby Mosquito Repellent Fabric Roll-On (10ml)

Mylo Baby Mosquito Repellent Fabric Roll-On (10ml)

100% Natural | DEET-Free | Stain-Free | Babies & Kids Safe | Apply on Fabric | Travel-Friendly

838 Moms bought
₹79₹9920% Off
Rating
4.5
(11)
Airprime Premium Diaper Pants S (5–9 kg, 26 Count) + 100% Plant-Based Baby Wipes (Pack of 2)

Airprime Premium Diaper Pants S (5–9 kg, 26 Count) + 100% Plant-Based Baby Wipes (Pack of 2)

Rash-free | Paediatrician Tested | Dermatologically Tested | Breathable | Expert Approved | No Harsh Bleaching Chemicals | Super-Saver Combo

₹849₹129735% Off
Rating
4.6
(55)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

418 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles

5762 Moms bought
₹59₹7925% Off
Rating
4.8
(118)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.