This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் மஞ்சள் கலந்த பால் அருந்துதல்: பலன்கள் மற்றும் விளைவுகள் | Turmeric Milk during Pregnancy: Benefits and Effects In Tamil

Diet & Nutrition
Written by - Dhanlaxmi Raoகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கர்ப்ப காலத்தில் மஞ்சள் கலந்த பால் அருந்துதல்: பலன்கள் மற்றும் விளைவுகள் | Turmeric Milk during Pregnancy: Benefits and Effects In Tamil
Likes2 Likes|
Read time7 min

கர்ப்ப காலத்தை கடலில் பயணிப்பதோடு ஒப்பிடலாம். எப்படி கடலில் பயணிப்பது ஏற்ற தாழ்வுகளைக் கொண்ட பயணமாக இருக்குமோ அதுபோல கர்ப்ப காலம் முழுமையும் உயர்வும் தாழ்வும் உண்டு. இக்கட்டம் முழுவதும் மிகவும் விழிப்புடன் இருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண் வீட்டில் இருக்கும்போது மிகவும் சாதாரணமான விஷயங்கள் கூட கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பாக உண்ணும் பொருள் எதுவாகினும் கூடுதல் கவனம் செலுத்துவது மிக முக்கியம். இதைப் பின்பற்றுவது மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் சிக்கல் இல்லாத கர்ப்ப காலப் பயணத்தை உறுதி செய்யும்.

இந்தக் கட்டுரையில், இந்திய சமையலறைகளில் காணப்படும் மிகவும் பொதுவான மசாலா பொருளான மஞ்சள் பற்றிக் காண்போம். இது கர்ப்பத்திற்கு இவ்வகையில் ஏற்றது என்பதைப் பார்ப்போம்!

கர்ப்பத்தின் போது மஞ்சள் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதா? (Is Turmeric Safe during Pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் மஞ்சள் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதா என்பது குறித்த ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. இருப்பினும், கர்ப்ப காலத்தில் உலர்ந்த அல்லது புதிய மஞ்சள் பாதுகாப்பானது என்று ஒருமித்த கருத்து உள்ளது. எனவே, பல காய்கறி உணவுகளில் உபயோகிப்பது போன்று சீரான அளவு மஞ்சள் கொண்ட உணவுகள் கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானதே.

மஞ்சள் எடுத்துக் கொள்தலுக்கும் குறைப் பிரசவம் அல்லது கர்ப்ப இழப்பு ஆகியவற்றுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மஞ்சளை முக்கிய மூலப்பொருளாகக் கொண்ட காப்ஸ்யூல்கள் மற்றும் சப்ளிமெண்ட் மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள். கூடுதலாக, கர்ப்ப காலத்தில் அதிக அளவு குர்குமின் (மஞ்சள் பொடியின் முக்கியக் கலவை) உட்கொள்வது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவை மாற்றக்கூடும் என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இது கருப்பைச் சுருக்கங்கள் அல்லது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

மஞ்சளில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு (Nutritional Value of Turmeric in Tamil)

ஒரு டேபிள்ஸ்பூன் (15 கிராம்) மஞ்சளிள் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது -

கலோரி

42 கிலோகலோரி

கார்போஹைட்ரேட்

7.38 கிராம்

புரத

1 கிராம்

கொழுப்பு

1 கிராம்

நார்ச்சத்து

3.21 கிராம்

சோடியம்

3 மில்லிகிராம்

கால்சியம்

18.3 மில்லிகிராம்

இரும்பு

6.9 மில்லிகிராம்

கர்ப்பத்தின் போது மஞ்சள் கலந்த பால் எடுத்துக்,கொள்வதன் நன்மைகள் (Benefits of Drinking Turmeric Milk during Pregnancy In Tamil)

கர்ப்பத்தின் போது எடுத்துக் கொள்ளத்தக்க குர்குமின் பற்றிய முறையான தகவல்கள் இல்லை. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் குறைந்த அளவு மஞ்சளை உட்கொள்வதுக்கு ஆதாரமாக சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைக்ப்பதில்லை. ஆனால், சிறிய அளவு மஞ்சள் கலந்த பால் பின்வரும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம்:

1. ஈறுகளில் இரத்தக்கசிவைத் தணிக்கும்(Soothing Bleeding Gums)

கர்ப்பம் துவங்கியது முதல் எட்டாவது மாதம் வரை, புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்குப் பல் பிரச்சனைகள் உருவாகக் கூடும். இதில் ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கை ஏற்படுத்தும் ஈறு அழற்சியும் ஒன்று. 30 முதல் 100 சதவீத பெண்கள் கர்ப்ப காலத்தில் ஈறு அழற்சியால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே உணவின் போது கறிகளில் சுவையூட்டும் பொருளாக இதைப் போயன்படுத்தி உட்கொள்வது ஈறு அழற்சியைக் குறைக்கும்.

கர்ப்பம் கொண்டிராத பெண்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், மஞ்சள் கொண்ட மவுத்வாஷ் மற்ற பொதுவான நுண்ணுயிர் கொல்லி/ஆன்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதையும் பனால் அளிப்பதாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. இது பிளேக் மற்றும் ஈறு அழற்சியைத் தடுக்க உதவுகிறது. இருப்பினும், கர்ப்ப காலத்தில் மஞ்சள் கொண்ட மவுத்வாஷைப் பயன்படுத்துவது குறித்து மருத்துவர் மற்றும் பல் மருத்துவரிடம் ஆலோசித்து அறிவது பரிந்துரைக்கப்படுகிறது. தயாரிப்பு குறைந்த அளவு மஞ்சள் உள்ளடக்கத்தையும் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தேன்: தொடர்புடைய நன்மைகள் & தீமைகள்(Honey During Pregnancy: Benefits & Effects In Tamil)

2. ப்ரீக்ளாம்ப்சியா/ முன்சூல்வலிப்பைத் தடுக்கும்(Preventing preeclampsia)

  • ப்ரீக்ளாம்ப்சியா கர்ப்பிணிப் பெண்களை மட்டுமே மற்றும் பொதுவாக 20 வது வாரத்திற்குப் பிறகு பாதிக்கும் ஒரு பிரச்சனை. இரத்த அழுத்தம் அதிகமாகவும் சிறுநீரில் அல்லது சிறுநீரகத்தில் புரதம் இருக்கும்போதும் இது நிகழ்கிறது. ப்ரீக்ளாம்ப்சியா கல்லீரல் பிரச்சனைகளாகவும் வெளிப்படலாம்.

  • கர்ப்பிணிப் பெண்களில் 8 சதவீதத்தினரிடம் மட்டுமே இத்தாக்கம் காணப்படுகிறது மற்றும் சிகிச்சை மூலம் சீராக்கக் கூடியதே. ப்ரீக்ளாம்ப்சியா உள்ள பெரும்பாலான பெண்கள் எந்தவிதச் சிக்கல்களும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.

  • எதிர்மறையாக, சில அரிதான சூழ்நிலைகளில் ப்ரீக்ளாம்ப்சியா ஆபத்தான சூழலையும் ஏற்படுத்தலாம். இது தாய் மற்றும் குழந்தை ஊனம் அல்லது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும். இந்த நிலைக்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் வீக்கம் இதன் முக்கிய அறிகுறியாகும்.

  • கர்ப்பிணிப் பெண்களில் குர்குமின் அழற்சி அறிகுறிகளைக் குறைக்கும் என்று ஒரு தனித்துவமான ஆராய்ச்சி கூறுகிறது. இது ப்ரீக்ளாம்ப்சியாவைத் தடுக்கவும் உதவும் என்றாலும் முறையான ஆய்வு முடிவுகள் இல்லை. ப்ரீக்ளாம்ப்சியாவைத் தடுப்பதில் குர்குமின் (மஞ்சள்) வழங்கும் சாத்தியமான நன்மைகளை மருத்துவ சமூகம் மேலும் ஆராய வேண்டும்.

கர்ப்பத்தின் போது மஞ்சள் கொண்ட பாலை அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் (Effects of Consuming Turmeric Milk during Pregnancy In Tamil)

குறைவான அளவில் மஞ்சள் உபயோகித்து பால் உட்கொள்வது மிகவும் பாதுகாப்பானது மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்கக் கூடும். ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளும்போது இது பலன் கிட்டும்.

இருப்பினும், கர்ப்ப இழப்பு மற்றும் குறைப் பிரசவத்திற்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதால், பெரும்பாலான நிபுணர்கள் கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவு மஞ்சள் அல்லது குர்குமின் உட்கொள்ளக்க்கூடாது என்று கருதுகின்றனர்.

கர்ப்பத்தின் போது மஞ்சள் பொடிகலந்த பால் எடுத்துக் கொள்ளும் முறை என்ன (How to Consume Turmeric Milk during Pregnancy In Tamil)

மஞ்சள் கலந்து உட்கொள்ளும் முறை-

  • வெதுவெதுப்பான பாலில் மஞ்சளை தூளைக் கலக்கவும். ஒரு சிட்டிகை மிளகுத் தூள், ஏலக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள் மற்றும் இஞ்சி சேர்த்து ஆரோக்கியமான கலவையை உருவாக்கவும்.

  • வேகவைத்த முட்டை, தானியங்கள் மற்றும் காய்கறிகள் மீது மஞ்சள் பொடியைத் தூவி உட்கொள்ளவும்.

  • மஞ்சள் பாலில் தேநீர் செய்யலாம்.

  • காய்கறி சூப் அல்லது ஸ்டியூ தயாரிக்கும் போது அதில் பானையில் அரைத்த மஞ்சள் கிழங்கைச் சேர்க்கலாம்.

  • இருப்பினும், மஞ்சள் பொடி மற்றும் மஞ்சள் தொடர்பான பொருட்களை உட்கொள்வது பற்றி மகப் பேறு நிபுணருடன் ஆலோசனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ's)

1. கர்ப்பமாக இருக்கும் போது எவ்வளவு மஞ்சள் எடுத்துக்கொள்ளலாம்?

கர்ப்பமாக இருக்கும் போது எப்போதும் எடுப்பது போல வழக்கமான அளவு மஞ்சள் எடுத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. கறிகள் மற்றும் காய்கறி உணவுகளில் சுவையூட்டும் பொருளாக அல்லது பால் அல்லது தேநீரில் சிறிது கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

2. மஞ்சள் கர்ப்பப்பையைப் பாதிக்குமா?

மஞ்சள் எடுத்துக் கொள்வது கருவை பாதிக்கும் என்பதற்கு உறுதியான ஆய்வுகள் அல்லது சான்றுகள் எதுவும் இல்லை. இருப்பினும், கர்ப்ப காலத்தில் அதிக அளவு குர்குமினைத் தவிர்ப்பது நல்லது.

References

1. Tossetta G, Fantone S, Giannubilo SR, Marzioni D. (2021). The Multifaced Actions of Curcumin in Pregnancy Outcome. Antioxidants (Basel).

2. Filardi T, Varì R, Ferretti E, Zicari A, Morano S, Santangelo C. (2020). Curcumin: Could This Compound Be Useful in Pregnancy and Pregnancy-Related Complications? Nutrients.

Tags

Is turmeric safe during pregnancy in Tamil, Turmeric milk during pregnancy in Tamil, Is turmeric milk safe during pregnancy in Tamil, Benefits of turmeric milk during pregnancy in Tamil, Turmeric milk during pregnancy in English, Turmeric milk during pregnancy in Hindi, Turmeric milk during pregnancy in Telugu, Turmeric milk during pregnancy in Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.