This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் தர்பூசணி: தொடர்புடைய நன்மைகள், அபாயங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
கர்ப்ப காலத்தில் தர்பூசணி: தொடர்புடைய நன்மைகள், அபாயங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்
Likes7 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது பாதுகாப்பானது மற்றும் வைட்டமின் சி, ஏ, பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
  • 91% நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி, கர்ப்பிணிகளுக்கு நீரிழப்பைத் தடுக்கவும், மசக்கை, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் தசைப்பிடிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
  • லைகோபீன் மற்றும் லுடீன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, ப்ரீ-எக்லாம்ப்சியா மற்றும் குறைப்பிரசவ அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
  • கர்ப்ப கால ஊட்டச்சத்துக்கு என்ன உதவும்? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக, உங்கள் ஊட்டச்சத்து மற்றும் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் - பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதை விட, இதை செய்ய சிறந்த வழி வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் கர்ப்ப காலத்தில் உடல் நலத்தைப் பேணுவதில் பக்க பலமாக உள்ளன. அத்தகைய பழங்களில் ஒன்று தான் தர்பூசணி.

கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடலாமா என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தாள், அதற்கு பதில் ஆம் என்பது தான். கர்ப்ப காலத்தில் குறிப்பாக கர்ப்பத்தின் முதல் டிரைமெஸ்டரில், தர்பூசணி சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும்.

தர்பூசணிகளில் நிறைய வைட்டமின்கள் உள்ளன - இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரிதும் உதவுகின்றன - தசைப்பிடிப்பை எதிர்த்துப் போராடுவது முதல் தசைகள் ஓய்வெடுக்க அனுமதிப்பது மற்றும் முன்கூட்டிய சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பது வரை, தர்பூசணிகள் கர்ப்பிணிகளுக்கு மசக்கை, அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும், மேலும் நீரிழப்பு உணர்வையும் தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளதா? அது நல்ல விஷயம் தான்! கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்.

தர்பூசணியில் அடங்கி உள்ள சத்துக்கள்

தர்பூசணியில் கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுகளின் ஆரோக்கியமான கர்ப்பத்திற்குத் தேவையான தாவரக் கலவைகள் அனைத்தும் உள்ளன. தர்பூசணிகளில் 91% நீர் உள்ளடக்கம் உள்ளது, எனவே இது கர்ப்பிணிப் பெண்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் குமட்டலை எதிர்த்துப் போராட உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பிட்ட இடைவெளியில், தினசரி ஓரிரண்டு துண்டுகள் சாப்பிடுவது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

லைகோபீன் மற்றும் லுடீன் நிறைந்த தர்பூசணி ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும், இது உடலில் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குறைப்பிரசவம் உட்பட கர்ப்பத்தின் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களின் அபாயத்தைத் தணிக்க உதவுகின்றன. அவற்றில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி6 உள்ளன - இவை அனைத்தும் கண், மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, தர்பூசணிகளின் நுகர்வு ப்ரீ-எக்லாம்ப்சியாவின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

கர்ப்ப காலத்தில் தர்பூசணியினால் ஏற்படக் கூடிய நன்மைகள்

கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அவை இதோ:

  • தர்பூசணிகளில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் எடிமாவைத் தடுக்கும்.

  • மசக்கையை தடுக்க உதவும் ஆற்றலைத் தருகிறது.

  • நீரிழப்பைத் தடுக்கிறது.

  • தசைப்பிடிப்பை எளிதாக்குகிறது.

  • தோல் நிறமியைத் தடுக்கிறது மற்றும் உடலை சுத்தப்படுத்துகிறது.

  • கர்ப்பிணி மற்றும் வளரும் கரு ஆகிய இருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

  • மலச்சிக்கல், மோசமான குடல் இயக்கம் மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

  • சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது, எனவே வறண்ட சரும பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

  • சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்த உதவுகிறது.

  • பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.

  • கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

  • கரு நன்றாக வளர அனுமதிக்கிறது.

  • அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளை சீராக்குகிறது.

பாதகமான விளைவுகள் அல்லது கர்ப்பப் பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைக்கலாம்

தர்பூசணியில் நிறைய நீர்ச்சத்து உள்ளது, மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மூல நோய் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. தர்பூசணிகளை தவறாமல் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் சிறந்தது.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் கருப்பு திராட்சை; நன்மைகள் மற்றும் அதை தவிர்க்க வேண்டிய தருணங்கள்

கர்ப்ப காலத்தில் தர்பூசணி எப்படி சாப்பிடலாம் ?

தர்பூசணியை சாப்பிட பல வழிகள் உள்ளன தெரியுமா? அதை வெட்டி ஒரு பழமாக சாப்பிடுவதைத் தவிர, நீங்கள் தர்பூசணி சாறு மற்றும் லெமனேட் தயார் செய்யலாம், சாலட் அல்லது சல்சாவில் சாப்பிடலாம் அல்லது பாப்சிகல்ஸ் செய்யலாம்!

பாதுகாப்பு கவலைகள்

பொதுவாக, கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருப்பினும், தர்பூசணிகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அவை உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும் - எனவே அதிக சர்க்கரையால் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால், தர்பூசணி உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். தர்பூசணிகளை உட்கொள்வதற்கு முன்பு கழுவி சரியாக வெட்டப்பட்டிருப்பதை உறுதி செய்வதும் முக்கியம். தர்பூசணி சாப்பிடுவதற்கு முன் சரியாக குளிரூட்டப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • தர்பூசணி உடலுக்கு சூடா அல்லது குளிர்ச்சியா?

தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலுக்கு குளிர்ச்சி தரும். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

  • தர்பூசணி சளி மற்றும் இருமலை ஏற்படுத்துமா?

தர்பூசணிகளை உட்கொள்வதால் உடலுக்கு அதிகப்படியான திரவங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும். தர்பூசணிகளில் லைகோபீன் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதாக அறியப்படுகிறது, இது நோய்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது சுவாச இன்ஃப்ளமேஷனின் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

  • தர்பூசணி கருச்சிதைவை ஏற்படுத்துமா?

கர்ப்ப காலத்தில் தர்பூசணிகள் பொதுவாக பாதுகாப்பானவை மற்றும் தர்பூசணி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படாது.

எதிர்பார்க்கும் அம்மாக்களால் நம்பப்படும் ஊட்டச்சத்து துணை

தர்பூசணி போன்ற பழங்களுடன், கர்ப்ப காலத்தில் உங்கள் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்ய சரியான துணை தேவை.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

418 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4133 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.