Lowest price this festive season! Code: FIRST10
Diet & Nutrition
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கருப்பு திராட்சை அதிக அளவு வைட்டமின் சி ஊட்டச்சத்தை கொண்டது என்பது உங்களுக்கு தெரியுமா? கருப்பு திராட்சை சுவையானது மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நற்பண்புகளையும் கொண்டது. உங்கள் கர்ப்ப கால பயணத்தின் போது, சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் நன்மைகளையும், அவை உங்கள் உடல் கர்ப்பத்தை தாங்கும் அளவு தயார் செய்யவும் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு எவ்வளவு உதவுகின்றன என்பதை அறிந்து கொள்ள உதவுவதும் அவசியம்.
கர்ப்ப காலத்தின் போது கருப்பு திராட்சையின் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். நீங்கள் நியூட்ரிஷனிஸ்ட் அல்லது ஆரோக்கிய நிபுணரிடம் கலந்தாலோசித்தால் அவர்கள் நீங்கள் கர்ப்ப காலத்தின் போது உலர் கருப்பு திராட்சை உட்கொள்ளுமாறு கூறுவார்கள். கர்ப்ப காலத்தின் 2 வது ட்ரீம்ஸ்ட்டரின் போது கருப்பு திராட்சை சாப்பிடலாமா அல்லது 2 வது ட்ரீம்ஸ்ட்டரின் போது கருப்பு திராட்சை சாப்பிடலாமா என்று குழப்பமாக இருக்கிறதா? இந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்க தொடர்ந்து படிக்கவும்.
நிபுணர்களின் படி, நீங்கள் கர்ப்பிணியாக இருப்பின் கருப்பு திராட்சைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை. குழந்தையின் வளர்ச்சிக்கும், எலும்பு மேம்பாட்டுக்கும் தேவையான ஏராளமான வைட்டமின் சி கருப்பு திராட்சையில் நிறைந்திருக்கிறது. மேலும், கருப்பு திராட்சைகள் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தான வைட்டமின் ஏ நிறைந்தது.
கர்ப்ப காலத்தில் நாம் கருப்பு திராட்சை உண்டால் என்ன நடக்கும் என்று அறிய ஆவலா? இது சரியான கேள்வி என்றாலும், குறைந்த அளவு கருப்பு திராட்சை உட்கொண்டால் அது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏராளாமான கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பு திராட்சை மிகவும் பிடித்த ஒன்று, ஏனெனில் கர்ப்பகாலத்தில் அவர்களுக்கு புளிப்பான உணவு மிகவும் பிடிக்கும்.
கர்ப்ப காலத்தில் கருப்பு திராட்சை அருந்துவதால் ஏற்படும் சில நன்மைகளை பார்ப்போம்:-
கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின் பி தாய்மார்களின் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் என கண்டறியப்பட்டிருக்கிறது. இது கர்ப்பிணியின் உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது, அத்துடன் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள தேவையான திறனையும் மேம்படுத்துகிறது. குழந்தையின் பொதுவான வளர்ச்சிக்கு வைட்டமின் பி ஊட்டச்சத்தும் அத்தியாவசியமானது.
கருப்பு திராட்சையில் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் அவர்களது கர்ப்ப காலத்தில் ஏராளாமான மெக்னிஷியத்தை பெற வேண்டும். இது பிரசவிக்கும் தருணத்தில் ஏற்படும் பொறுக்க முடியாத வலியையும் கட்டுப்படுத்த உதவும், குறிப்பாக கர்ப்பக்காலம் 2 ஆவது மற்றும் 3 ஆவது மும்மாத காலத்தின் போது இது பேருதவியாக இருக்கும். அத்தகைய தருணங்களில் கருப்பு திராட்சை இம்மாதிரியான வலிகளை கட்டுப்படுத்த உதவும்.
கர்ப்பிணிகளுக்கு கருப்பு திராட்சை மிக சிறந்தது, ஏனெனில் அவற்றில் ஏராளாமான லுமினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருக்கின்றன. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த லுமினால் உதவும் என்பது தெரிந்த ஒன்றே. அதுமட்டுமின்றி இது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். வளர்ந்து வரும் குழந்தையை பாதுகாக்க தொற்று நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். வலுவான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த சிறந்த வழி கருப்பு திராட்சை போன்ற அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொள்வதே ஆகும்.
கர்ப்பிணி பெண்கள் அவர்களது கர்ப்ப காலத்தின் போது சுத்தப்படுத்தும் ஊட்டச்சத்துக்களை பெறுவதும் அவசியம். இது கிட்னி, கல்லீரல் மற்றும் இதயம் போன்றவற்றை ஒழுங்கப்படுத்த உதவுவதுடன் குழந்தை உடலுறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம்: பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பிரசவ வலி தூண்டப்படுமா?
கர்ப்பகாலத்தில் உட்கொள்ள கருப்பு திராட்சை பெரும்பாலும் பாதுகாப்பானவையாகவே இருந்தாலும், பெண்களின் கர்ப்ப காலத்தில் அவற்றை தவிர்க்கும் சில தருணங்களும் இருக்கத்தான் செய்கிறது.
உங்களுக்கு வயிற்றுப்போக்கு இருக்கும் போது, மலசிக்கல் அல்லது வயிறு உப்பசம் இருக்கும் போது, அல்லது ஆஸ்தமாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, போன்ற சூழ்நிலைகளில் கர்ப்ப காலத்தில் கருப்பு திராட்சை சாப்பிடுவதை தவிர்ப்பது சாலச்சிறந்தது. உங்களுக்கு கருப்பு திராட்சையினால் ஒவ்வாமை இருந்தால் நீங்கள் அதை கர்ப்பக்காலத்தில் அடியோடு தவிர்ப்பது நல்லது.
கருப்பு திராட்சைகளுக்கு அழற்சியை தவிர்க்கும், ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் இருந்தாலும், அவற்றை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதால் சில பிரச்சனைகள் எழலாம். நிறைய கருப்பு திராட்சைகள் சாப்பிடுவது கருவின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல, எனவே கொஞ்சம் கருப்பு திராட்சைகளை சாப்பிடுவதை மட்டுமே பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக மூன்றாவது மும்மாத காலத்தில் அளவான கருப்பு திராட்சை சாப்பிடுவது நல்லது.
கருப்பு திராட்சைகளை அதிக அளவில் உட்கொண்டால், கர்ப்பகாலத்தில் உடலில் போதிய இன்சுலின் உற்பத்தி போன்ற கெஸ்டெஷனல் சிக்கல்கல்களுக்கும் வழிவகுக்கும். இது பிந்தைய காலக்கட்டத்தில் டயபெடிக்ஸ் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும், எனவே அளவான கருப்பு திராட்சை உட்கொள்ளல் அவசியம். கர்ப்பகாலத்தில் கருப்பு திராட்சை சாப்பிடுவதால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |