This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் இடையூறு இல்லாமல் தூங்குவது எப்படி?|How to have an undisturbed sleeping hour at the time of pregnancy in Tamil

Pregnancy Journey
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 17, 2026
கர்ப்ப காலத்தில் இடையூறு இல்லாமல் தூங்குவது எப்படி?|How to have an undisturbed sleeping hour at the time of pregnancy in Tamil
Likes1 Likes|
Read time4 min

பேறு காலத்தின் போது உறக்கம் சரியாக இல்லாவிடில் பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பிறந்த குழந்தை, தொடர்ந்து அலறுவதும் அழுவதும், குறிப்பாக ஓய்வு தேவையான நேரங்களில் அழுவது, தூக்கமில்லாத இரவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் இது தவிர்க்கமுடியாத ஒன்று. ஆனால், தூக்கமின்மை கர்ப்ப காலத்திலிருந்தே துவங்கிவிட்டது என்பதை எதிர்பார்க்கும் தாய்மார்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

இரவில் உறக்கம் வராததன் காரணங்கள் என்ன? (What are the reasons that can make you go sleepless at night in Tamil)

பேறு காலத்தில் உறக்கமின்மைக்குப் பல காரணங்கள் உள்ளன. எந்த மூன்று மாத கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து காரணங்களும் மாறும். அவற்றில் சில இங்கே:

1. நள்ளிரவில் கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருப்பது

2. எடை அதிகரிப்பு மற்றும் அதன் விளைவாக முதுகுவலி

3. குருதி திரட்சி

4. குழந்தை உதைப்பது

நன்றாக உறங்க வழிகள் என்ன? (How can you sleep better in Tamil)

கர்ப்பம் தரித்து, குழந்தை வளர ஆரம்பித்தவுடன், தடையற்ற உறக்கம் என்பது கனவு போலத்தான். ஒரு மணிநேரம் அமைதியான உறக்கமே சவாலானதாக மாறுகிறது. நேரம் கிடைக்கும் போது ஓயவேடுப்பதே இதைச் சமாளிக்க ஒரே வழி.

ஆனால் அமைதியான உறக்கத்தைப் பெறவும் ஒரு ஆரோக்கியமான முறையாக மாற்றவும் இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள் (Establish a routine in Tamil)

ஒரு வழக்கமான உறக்கச் சுழற்சியை நிறுவுவது சில மணிநேரங்கள் நஅமைதியான உறக்கம் கொள்ள உதவிகரமாக இருக்கும். உறங்கும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தைத் தீர்மானித்து, முடிந்தவரை அதைக் கடைப்பிடிக்க முயற்சிக்கவும்.

உறங்கும் முன் எலக்ட்ரானிக் பொருட்களை உபயோகிக்க வேண்டாம் (No electronics before sleeping in Tamil)

உறங்கும் சமயம் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் மூளை மற்றும் கண்கள் குளிர்ச்சியடைவதற்கு நேரம் தேவை. அந்த நேரத்தில் கேட்ஜெட்களைப் பயன்படுத்துவது இச்செயல்முறையைத் தாமதப்படுத்தி, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் கேட்ஜெட்களைப் பயன்படுத்துவத்தைத் தவிர்க்கவேண்டும். உங்கள் வேலை அல்லது வாழ்க்கை முறை அதை அனுமதிக்கவில்லை என்றால், திரையின் பிரகாசத்தைக் குறைக்கவும்.

முறையான உணவு முறையைப் பின்பற்றவும் (Maintain a proper diet in Tamil)

சரிவிகித உணவை உட்கொள்வது உடல் எளிதாக ஓய்வெடுக்க உதவும். காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும். இது உங்களுக்கு ஆற்றல் தருவது போன்ற எண்ணத்த உருவாக்கலாம் ஆனால் வழக்கமான உறக்க நேரத்தைத் தாமதப்படுத்தும். கால் தசைப் பிடிப்புகளும் உறக்கம் வராமல் தடுக்கும். எனவே, போதுமான அளவு நீர் அருந்துவது இச்சிக்கலைத் தவிர்க்கும்.

பேறுகால அல்லது வெட்ஜ் தலையணை உபயோகிக்கவும் (Use a maternity or a wedge pillow in Tamil)

கப்பத்தின் போது வயிற்றின் அளவு மாற மாற, உங்கள் வழக்கமான தூக்க நிலைகள் வேலை செய்யாது. உங்களுக்கு முன்பை விட அதிக வலியும் சோர்வும் உண்டாகும. இந்நிலையில் உங்களுக்கு மைலோவின் மல்டிபர்ப்பஸ் வெட்ஜ் வடிவ பேறுகாலத் தலையணை போன்ற கூடுதல் ஆதரவு தேவைப்படும். இந்தத் தலையணையானது தாயின் வளைவுகள் மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்ப மாறும் வகையில் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் மிகவும் வசதியான பொருட்களைப் பயன்படுத்தி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசதியான உறக்க நிலை (Comfortable sleeping position in Tamil)

வசதியான உறக்க நிலையைக் கொண்டிருப்பது மிக அவசியமானது. பக்கவாட்டில் ஒருக்களித்து உறங்குவது நல்லது என்பதால், பேறுகால தலையணைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால், நிவாரணம் பெற தலையை உயர்த்திய நிலையில் வைப்பது நல்லது.

முடிவுரை (Conclusion)

ஒரு மணி நேரம் நல்ல உறக்கத்திற்காகக் கூட எதையும் செய்யலாம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உறக்கமின்மைக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள உதவிக் குறிப்புகளைப் பின்பற்றினால் முறையான உறக்கத்தைத் தழுவலாம்.

பரிந்துரைகள் (Suggested)

பேறு காலத்தின் போது இரவு வேளையில் தொந்தரவு இல்லாத உறக்கத்தைப் பெற உதவும் நான்கு விஷயங்கள் யாவை?

பேறு காலத்தில் இரவு வேளையில் இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெற உதவும் நான்கு தந்திரங்கள்

Tags

How to have an undisturbed sleeping hour at the time of pregnancy in English, How to have an undisturbed sleeping hour at the time of pregnancy in Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.