This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த ஸ்ட்ரோலரை எவ்வாறு தேர்வு செய்வது?(How To Choose The Safest & Best Stroller For Your Baby?In Tamil)

Baby Care
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
உங்கள் குழந்தைக்கு  பாதுகாப்பான மற்றும் சிறந்த ஸ்ட்ரோலரை எவ்வாறு தேர்வு செய்வது?(How To Choose The Safest & Best Stroller For Your Baby?In Tamil)
Read time18 min
  • தங்கள் குழந்தைகளை வெளி உலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதே வேலையில், தாங்களும் சுதந்திரமாக அங்கும் இங்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ள பெற்றோர்களுக்கு பேபி ஸ்ட்ரோலர்ஸ் மாறுவேடத்தில் வந்த ஒரு வரமாக அமைகிறது. இன்று பல பெற்றோர்களுக்கு ஸ்ட்ரோலர்ஸ் ஒரு நவீன கால அத்தியாவசியமாக உள்ளது. உங்கள் குழந்தைகளை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் அல்லது புதிய இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல உதவுவதோடு, ஸ்ட்ரோலர்ஸ் குழந்தையை சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க ஒரு இடமாக அமைகிறது. கூடுதலாக, நல்ல ஒரு ஸ்ட்ரோலரானது உங்கள் குழந்தையை பாதுகாப்பாக வைப்பதற்கான ஒரு இடமாக மட்டும் இல்லாமல், வைப்ஸ் மற்றும் டையப்பரில் இருந்து மாற்று துணி வரையிலான சில அத்தியாவசிய பொருட்களை சேமிக்க உதவும் இடமாகவும் அமைகிறது.

  • ஆனால் சிறந்த ஒரு பேபி ஸ்ட்ரோலரை கண்டுபிடிப்பது என்பது சவாலான காரியம் தான். பல விதமான மாடல்களில், வெவ்வேறு விலைகளில் ஸ்ட்ரோலர்கள் கடைகளில் விற்கப்படுகிறது. ஆகவே, இதனை வாங்குவதற்கு முன், முதலில் உங்கள் பட்ஜெட்டை முடிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு, உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை முடிவு செய்யுங்கள். இதனை எங்கு பயன்படுத்த போகிறீர்கள்? இதனை எங்கு நிறுத்தி வைக்கப் போகிறீர்கள்? எத்தனை குழந்தைகள் அதனை பயன்படுத்த போகிறார்தள்? மற்றும் அவர்களிடம் எத்தனை பொருட்கள் உள்ளன போன்ற கேள்விகளை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

  • ஒரு பேசிக் மாடல் ஸ்ட்ரோலர், பயணம் மற்றும் பொருட்கள் சேமிப்பு போன்ற விஷயங்களை எளிதாக்குகிறது. அதே நேரத்தில், ஹை-ஃபங்ஷன் ஸ்ட்ரோலர்களில் கூடுதல் சேமிப்பு இடம் மற்றும் ஸ்நாப்-ஆன் பேசிநெட்ஸ் அல்லது கார் சீட்டுகள் உட்பட பல கூடுதல் அம்சங்களைக் கொண்டிருக்கும்.

பேபி ஸ்ட்ரோலர் என்றால் என்ன?(What Is A Baby Stroller?In Tamil)

ஒரு ஸ்ட்ரோலர் என்பது குழந்தையை நேராக உட்கார வைத்து எடுத்து செல்ல உதவும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு சாதனம் ஆகும். இந்த சாதனமானது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சேஃப்டி பெல்டுகள், ஒரு கிராட்ச் ஸ்ட்ராப் மற்றும் ஒரு ஹார்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒரு சில மோசமான வானிலையை சமாளிக்க உதவும் அளவிற்கு ஒரு கனோப்பியும் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் உட்கார பழகிய குழந்தைகளுக்கும் அல்லது சிறந்த தலை சமநிலையைப் பராமரிக்கும் குழந்தைகளுக்கு இது சிறந்தது. ஸ்ட்ரோலர்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது குழந்தைகளை சௌகரியமாக வைக்கும் அதே நேரத்தில் பெற்றொர்களையும் சௌகரியமாக நடக்க அனுமதிக்கிறது.

உங்கள் குழந்தைக்கு ஒரு ஸ்ட்ரோலர் தேவையா?(Do You Need A Stroller For Your Baby?In tamil)

  • உங்கள் குழந்தையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல ஸ்ட்ரோலர் உதவுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் ஸ்ட்ரோலர் பயன்படுத்துவதன் முக்கிய காரணம் சௌகரியம் தான். ஸ்ட்ரோலர் என்பது பேபி கேரியர், ஒரு கார் சீட் மற்றும் உங்கள் குழந்தையைப் பெற்றிருக்கும் ஒரு கூடுதலாக அமைகிறது என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். பயணிக்க கடினமாக இருக்கும் இடங்கள், கூட்டம் அதிகமாக உள்ள இடங்கள், அல்லது டையப்பர் பேக், சிப்பி கப்புகள், ஸ்நாக்ஸ் அல்லது மாற்று துணிகள் போன்றவற்றை கொண்ட பைகளை பெற்றோர்கள் தங்கள் கைகள் மற்றும் முதுகில் மாட்டிக்கொள்ளும் தேவையை அகற்றி, நீங்களும் உங்கள் குழந்தையும் பாதுகாப்பாக செல்வதற்கு ஸ்ட்ரோலர் மிகவும் உதவியாக இருக்கும்.

  • நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் ஸ்ட்ரோலர்களின் வகைகள் குறித்து பார்ப்பதற்கு முன், ஸ்ட்ரோலர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த சில முக்கியமான வழிமுறைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு ஸ்ட்ரோலர் குறித்த தயாரிப்பாளர் வழிமுறைகளையும் நீங்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

  • உதாரணமாக, பெரும்பாலான ஸ்ட்ரோலர்கள் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கானது அல்ல. புதிதாக பிறந்த குழந்தையின் பாதுகாப்பு கருதி, ஒரு சில ஸ்ட்ரோலர்களுக்கு லை-ஃபிளாட் சீட்ஸ் அல்லது பிராம் காட்ஸ் போன்ற கூடுதல் பாகங்கள் தேவைப்படும். எனினும், ஒரு சில ஸ்ட்ரோலர்கள் கார்களின் இருக்கைகளின் பொருத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உங்கள் குழந்தைகளை காரில் இருந்து சுலபமாக ஸ்ட்ரோலருக்கும், அதையும் தாண்டி கொண்டு செல்லவும் எளிதாக இருக்கும். புதிதாக பிறந்த குழந்தை என்ற கட்டத்தைத் தாண்டி, ஸ்ட்ரோலர்களுக்கு எடை மற்றும்/அல்லது உயரம் குறித்த தேவைகள், பாதுகாப்பிற்கான குறிப்பிட்ட கட்டமைப்புகள், மற்றும் உங்கள் குழந்தைக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யும் ஒரு சில அபாய எச்சரிக்கைகளும் உள்ளன. ஸ்ட்ரோலர் மிகவும் பயனுள்ளது என்பதைத் தாண்டி அந்த நகரும் வண்டியில் உங்களின் விலைமதிப்பில்லாத குழந்தை உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்கள் குழந்தைக்கான சிறந்த ஸ்ட்ரோலரை எவ்வாறு தேர்வு செய்வது?(How To Choose The Perfect Stroller For Your Baby? In tamil)

பேபி ஸ்ட்ரோலர்கள் வெவ்வேறு விதமான விலைகளில் கிடைக்கிறது. ஒரு சில ஸ்ட்ரோலர்கள் மட்டுமே உங்கள் பட்ஜெட்டிற்குள் அடங்கும். நீங்கள் வாங்க நினைக்கும் ஸ்ட்ரோலரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு செக்லிஸ்டை தயார் செய்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். சிறந்த பேபி ஸ்ட்ரோலரை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு:

  • இது கை குழந்தைக்கு ஏற்றதா?

பெரும்பாலான ஸ்ட்ரோலர்கள் தலை முழுவதுமாக நின்ற மற்றும் தற்போது தான் உட்கார பழகிய குழந்தைகளுக்காகவுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு சில ஸ்ட்ரோலர்கள் கை குழந்தைக்கு ஏற்ற வகையில், ஆழமான ரிக்லைன் அல்லது ஒரு பேசிநெட்டுடன் கூடிய மாடல்களில் கிடைக்கிறது. ஆகவே, நீங்கள் புதிய பேபி ஸ்ட்ரோலரை வாங்கும் போது உங்கள் குழந்தைக்கு எது ஏற்றது என்பதை பார்த்து வாங்கவும்.

  • இதனை இயக்குவது எவ்வளவு எளிது?

ஸ்ட்ரோலர்களை பட்டியலிட்டு அவற்றில் ஒன்று உங்களுக்கு தோதான ஒன்றாக தோன்றும் பட்சத்தில் அதனை வாங்கவும். கடைகளில் பார்ப்பதற்கு அழகாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ரோலர்கள் அனைத்தும் இயக்குவதற்கு எளிதாக இருப்பதில்லை. அதனை ஒரு டெஸ்ட் ரைடு எடுத்து சென்று, உங்களால் அதனை கையாள முடிகிறதா என்பதை சோதிக்கவும். தேர்ந்தெடுக்கும் முன்பு உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் பின்வருமாறு:

  • ஸ்டியரிங் வளைப்பதற்கு எளிதாக உள்ளதா?

  • அவசர காலத்தின் போது, அதனை ஒரு கையால் இயக்க முடிகிறதா?

  • நீங்கள் வளைக்க முயற்சிக்கும் போது என்ன ஆகிறது?

எந்த விதமான ஆபத்தையும் தவிர்க்க அது பயன்படுத்துவதற்கு எவ்வளவு எளிதாக உள்ளது என்பதை கண்டுபிடிப்பது எளிது.

  • நீங்கள் அதை எங்கே பயன்படுத்த போகிறீர்கள்?

நீங்கள் எங்கு பயன்படுத்த போகிறீர்கள் என்பது ஸ்ட்ரோலர்களை தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஆகும். நீங்கள் அதை நகரத்தின் குறுகிய சாலைகளில் பயன்படுத்த உள்ளீர்கள் என்றால் பெரிய அளவிலான ஸ்ட்ரோலர் உங்களுக்கு ஏற்றது. அம்பரல்லா மாடல் உங்களுக்கு ஏற்றதாக அமையும். எனினும், அம்பரல்லா மாடலில் டையப்பர் பேக்குகள், உங்கள் பர்ஸ் மற்றும் பிற பொருட்கள் வைக்க மட்டுமே இடம் இருக்கும். எனவே, நீங்கள் ஸ்ட்ரோலரை எங்கே பயன்படுத்த போகிறீர்கள் என்பதை முடிவு செய்து விட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கலாம்.

  • அதனை விரிப்பதும், பின்னர் மடக்குவதும் எவ்வளவு எளிது?

நீங்கள் ஸ்ட்ரோலரை விரிக்க வேண்டும் என்றாலும் சரி, மடக்க போகிறீர்கள் என்றாலும் சரி, ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு மறுகையை பயன்படுத்தி மட்டுமே ஸ்ட்ரோலரை இயக்க போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். ஆகவே, நீங்கள் வாங்கும் ஸ்ட்ரோலர் விரிப்பதற்கும், மடக்குவதற்கும் எளிதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்கவும். புராடக்ட் விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மட்டுமே வைத்து ஸ்ட்ரோலரை வாங்க வேண்டாம். வாங்குவதற்கு முன் அவற்றை சோதித்து பார்ப்பது இன்னும் மேல். பெரும்பாலான ஸ்ட்ரோலர்களை விரிப்பதும், மடக்குவதும் எளிதாக தான் இருக்கும். இது போன்ற விஷயங்களை முன்கூட்டியே சோதித்து பார்ப்பது நல்லது.

  • பேபி ஸ்ட்ரோலரின் எடை என்ன?

நீங்கள் வாங்க நினைக்கும் பேபி ஸ்ட்ரோலரின் எடை என்ன என்பதையும், அதனை சாலைகளில் உங்களால் கையாள முடியுமா என்பதையும் சோதித்து பார்ப்பது அவசியம். ஒரு சில இரகங்கள் 12 பவுண்டுகளை லைட்வெயிட் என்று சொன்னாலும், வேறு சில இரகங்கள் 25 பவுண்டுகளை லைட்வெயிட் என்று கூறலாம். லைட்வெயிட் என்பதன் அர்த்தம் நபருக்கு நபர் மாறுபடும். ஆகவே, ஸ்ட்ரோலரின் எடையை உங்களால் கையாள முடியுமா என்பதை சோதித்த பின்னரே அதனை வாங்கவும்.

ஸ்ட்ரோலர்களின் வெவ்வேறு வகைகள் என்ன?(What Are The Different Types Of Strollers?In Tamil)

மார்கெட்டில் பல இரகங்கள் கொண்ட ஸ்ட்ரோலர்கள் கிடைக்கிறது. ஆறு அடிப்படை வகை ஸ்ட்ரோலர்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

ஃபுல் சைஸ்டு ஸ்ட்ரோலர்(Full-sized stroller) :

பெயர் குறிப்பிடுவது போல, ஃபுல்-சைஸ்டு ஸ்ட்ரோலர்கள் கனமாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் குழந்தைக்கு தளர்நடைப்போடும் பருவம் வரும் வரை ஸ்ட்ரோலரை நீங்கள் பயன்படுத்த போகிறீர்கள் என்றால், இந்த வகை ஸ்ட்ரோலர் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். பெரும்பாலான நபர்கள் தேர்வு செய்யும் நிலையான இரகம் இது. கூடுதலாக, பல மாடல்கள் குழந்தையின் பயணத்தை மகிழ்ச்சியூட்டுவதாக செய்யவும், பெற்றோர்களுக்கு எளிதாக அமையும் வகையிலும் எக்கச்சக்கமான அம்சங்களுடன் கிடைக்கின்றன. ஃபுல் சைஸ்டு ஸ்ட்ரோலர்களின் சில அம்சங்கள் பின்வருமாறு:

  • அகலமான, சௌகரியமான மற்றும் கால்களை வசதியாக வைத்துக்கொள்ளக்கூடிய இருக்கைகள் உள்ளன.

  • டீப் சீட் ரிக்லைனுடன் வருகிறது.

  • இருக்கையை முன்னும் பின்னுமாக நகர்த்தக்கூடிய வகையில் கிடைக்கிறது.

  • இதனை கார் இருக்கையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

  • உங்கள் குழந்தை வளர வளர அவரின் அளவிற்கு ஏற்ப மாற்றியமைக்கும் வகையில் உள்ளது. மேலும் கை குழந்தைக்கான கார் சீட்டும், தளர்நடைபோடும் பருவத்தில் ஆப்ஷனல் பேசினெட்டும் இதில் உள்ளது.

  • விரிவாக்கம் செய்து கொள்ளும் வசதி உள்ள கனோப்பிகள் உள்ளது.

  • தரமான டயர்களுடன் போதுமான அளவு அதிர்வை தாங்கும் வகையில் அமைந்துள்ளது.

  • சேமிப்பு இடம் நிறையவே உண்டு.

  • கப் ஹோல்டர் அல்லது ஸ்நாக்ஸ் டிரே போன்ற அம்சங்களும் இருக்கிறது.

எனினும், இதில் ஒரு சில குறைபாடுகளும் உள்ளது:

  • இது கட்டுறுதி வாய்ந்தது மற்றும் கனமானது.

  • சேமிப்பு இடம் குறைவாக உள்ள வீடுகளில் வைப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்.

லைட்வெயிட் அல்லது அம்பரல்லா ஸ்ட்ரோலர்(Light Weight or Umbrella stroller):

இது போன்ற ஸ்ட்ரோலர்கள் லேசான எடையுடன் இருக்கும். ஃபுல் சைஸ்டு ஸ்ட்ரோலர் போன்ற கனமான ஒன்றை கையாள விரும்பாதவர்களுக்கு இது சிறந்தது. இதன் அம்சங்கள் சில பின்வருமாறு:

  • ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தோதாக அமையும் வகையில் லைட்வெயிட் ஸ்ட்ரோலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாடல்கள் ஷோல்டர் ஸ்ட்ராப்புடன் வருகின்றன.

  • இது போன்ற மாடல்களை எளிதில் மடக்கி, எதன் மீது வேண்டுமானாலும் சாய்த்து வைத்து விடலாம்.

  • பார்ஷியல் சீட் ரிக்லைன், எக்ஸ்பான்டபிள் கனோப்பி, ஸ்டோரேஜ் பாஸ்கெட், மற்றும் பில்ட்-இன் கப் ஹோல்டர் அல்லது ஸ்நாக்ஸ் டிரே போன்ற பல அம்சங்கள் இதிலுள்ளது.

இதிலுள்ள சில குறைபாடுகள் பின்வருமாறு:

  • உங்கள் குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே இந்த லைட்வெயிட் ஸ்ட்ரோலரை நீங்கள் பயன்படுத்த முடியும். பெரும்பாலான அம்பரல்லா மாடல்கள் ஆறு மாதங்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்படுகின்றன.

  • இதில் கன்வெர்டபிள் ஆப்ஷன் கிடையாது.

ஜாகிங் ஸ்ட்ரோலர்(Jogging stroller):

  • நீங்கள் ஓடும்போது ஸ்ட்ரோலரை பயன்படுத்த விரும்பினால் ஜாகிங் ஸ்ட்ரோலர் சிறந்த தேர்வாக இருக்கும். இது போன்ற ஸ்ட்ரோலர்களில் பெரிய, கட்டுறுதியான சக்கரங்கள் மற்றும் மேடு பள்ளங்களில் பயணிப்பதை எளிதாக்க நல்ல சஸ்பென்ஷன் உள்ளது. ஜாகிங் ஸ்ட்ரோலரின் சில நன்மைகள் பின்வருமாறு:

  • நடைபயிற்சி, ஜாகிங் அல்லது ஹைக் போன்றவற்றின் போது உங்கள் குழந்தையை சௌகரியமாக வைக்க உதவும் உயர்தர சஸ்பென்ஷன் உள்ளது.

  • பெரும்பாலான ஜாகிங் ஸ்ட்ரோலர்களில் உள்ள முன் சக்கரத்தை சுழற்றலாம் அல்லது நிலையானதாகவும் வைத்துக்கொள்ளலாம்.

  • கார் சீட்டுகள், டீப் ரிக்லைனிங் சீட்டுகள், டெலஸ்கோப்பிங் ஹேண்ட் பார்ஸ், மற்றும் ஸ்டோரேஜ் பாஸ்கெட்டுகள் ஆகியவற்றுடன் இணக்கத்தன்மை போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது. ஒரு ஹேண்ட் பிரேக், ஒரு ஃபைவ் பாயிண்ட் ஹார்னஸ், மற்றும் ஒரு ரிஸ்ட் ஸ்ட்ராப் போன்றவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்த ஸ்ட்ரோலர்களின் சில பின்னடைவுகள் பின்வருமாறு:

  • இது போன்ற ஸ்ட்ரோலர் மாடல்கள் கனமானதாக இருக்கும் மற்றும் இவற்றை பொருத்துவது சவாலான காரியம் ஆகும்.

  • இடம் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் இந்த ஸ்ட்ரோலர்களை அம்பரல்லா மாடல் ஸ்ட்ரோலர்களைப் போல மடக்கி வைக்க முடியாது.

  • இவை ஃபுல்-சைஸ்டு ஸ்ட்ரோலர்களை விட அகலமாக இருக்கும்.

டபுள் ஸ்ட்ரோலர்(Double stroller):

  • டிவின்ஸ் அல்லது ஸ்ட்ரோலர்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விடலாம் என நினைக்கும் தளர்நடை பருவத்தில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இந்த ஸ்ட்ரோலர்கள் ஏற்றது. இது இரண்டு வெவ்வேறு விதமான அமைப்புகளில் வருகிறது. அவற்றில் ஒன்றில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தைக்கு பின்னால் அமர்ந்திருக்கும். இரண்டாவது வடிவமைப்பில் இரண்டு குழந்தைகளும் அருகருகே அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. இவற்றின் நன்மைகள் பின்வருமாறு:

  • இந்த மாடல் ஒரே ஒரு ஸ்ட்ரோலரில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை எளிதில் கையாள உதவுகிறது.

  • இது போன்ற மாடல்கள் பெரியதாக இருப்பதால், போதுமான அளவு சேமிப்பு இடத்தை அளிக்கிறது.

இந்த மாடல்களின் சில குறைபாடுகள் பின்வருமாறு:

  • இவை பெரியதாகவும், கனமாகவும் இருப்பதோடு பெரிய சுவடுகளுடன் வருகின்றன.

  • ஒரு சில மாடல்கள் லேசான எடையுடன் இருந்தாலும், மேடு பள்ளங்களில் பயணிப்பது இதில் சற்று கடினமாகவே இருக்கும்.

கார் சீட் கேரியர்(Car seat carrier):

  • இந்த சக்கரங்களுடன் கூடிய ஃப்ரேம்கள் குழந்தையின் கார் சீட்டை ஸ்ட்ரோலராக மாற்றக்கூடியது. இதன் சில நன்மைகள் பின்வருமாறு:

  • இவற்றை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது, சிறிய வடிவிலும் மற்றும் குறைவான எடை கொண்டதாகவும் இருக்கும்.

  • இது சௌகரியமானது மற்றும் காரிற்குள் கொண்டு செல்வதும், வெளியே எடுப்பதிலும் எந்த ஒரு குழப்பமும் ஏற்படாது என்பதால் பயணத்திற்கு மிகவும் ஏற்றது.

  • ஒரு சில மாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்துக்கொள்வதற்கான வசதியுடன் வருகின்றன.

இதையும் படிக்கலாமே! - குழந்தைக்கு பயனுள்ள பொருட்களை வாங்குவது எப்படி?: உங்களுக்கான பட்டியல் இதோ!(How To Shop Sensibly For Your Baby: Here's A Checklist In Tamil)

சில குறைபாடுகள் பின்வருமாறு:

  • இது போன்ற மாடல்கள் குறுகிய கால பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்றது. ஏனெனில், குழந்தை இதிலிருந்து எளிதாக கார் சீட்டிற்கு தாவ தொடங்கி விடும். மேலும், ஒரு ஃபுல்-ஃபீச்சர்டு ஸ்ட்ரோலர்கள் கார் சீட் போல செயல்படுகின்றன. பின்னர் அவற்றை தளர்நடை பருவ குழந்தைக்கு ஏற்ற ஸ்ட்ரோலர்களாக மாற்றிக் கொள்ளலாம்.
  • இதில் கப் ஹோல்டர்கள் அல்லது சேமிப்பு இடம் போன்ற கூடுதல் அம்சங்கள் இல்லை.

டிராவல் சிஸ்டம்(Travel system):

  • டிராவல் சிஸ்டத்தில் பேபி கார் சீட் மற்றும் ஒரு ஸ்ட்ரோலர் ஆகிய இரண்டும் இருக்கும். ஃபுல்-சைஸ், லைட்வெயிட், மற்றும் ஜாகிங் ஸ்ட்ரோலர் என உங்களுக்கு விருப்பமான ஸ்ட்ரோலர்கள் உடனான டிராவல் சிஸ்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இது போன்ற மாடல்களின் சில நன்மைகள் பின்வருமாறு:
  • பேபி கார் சீட்டை ஒரு அடாப்டரின் உதவியுடன் உங்கள் ஸ்ட்ரோலருடன் இணைத்து கொள்ளலாம். இதன் மூலமாக உங்கள் குழந்தை தூங்கிக் கொண்டு இருந்தால் கூட, குழந்தையை எழுப்பாமலேயே காரில் இருந்து ஸ்ட்ரோலருக்கு மாற்றிக் கொள்ளலாம்.

  • இரண்டு பொருட்களையும் ஒன்றாக வாங்கி விடுவதால் பணத்தை சேமிக்கலாம்.

இதன் குறைபாடுகள் சில பின்வருமாறு:

  • ஸ்ட்ரோலரை இன்னும் சில வருடங்கள் பயன்படுத்தலாம் என்றாலும் கூட உங்கள் குழந்தை கார் சீட்டின் அளவை விட பெரியதாக வளர்ந்திருக்கும்.

  • உங்கள் குடும்பத்தில் பல கார்கள் இருக்கும் பட்சத்தில், உங்கள் இரண்டாவது காருடன் பயன்படுத்துவதற்கு நீங்கள் கார் சீட் அல்லது பேஸை தனியாக வாங்க வேண்டி இருக்கும்.

ஸ்ட்ரோலர் வாங்கும் போது நான் எந்தெந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?(What Should I Consider When Buying A Stroller?In Tamil)

எந்த ஒரு ஸ்ட்ரோலரை வாங்கும் முன், பின்வரும் ஒரு சில முக்கியமான விஷயங்களை மனதில் வைப்பது நல்லது. அவை:

  • விலை(Cost)

ஒவ்வொரு மாடல் ஸ்ட்ரோலரும் ஒவ்வொரு மாதிரியான விலையில் கிடைக்கும். அதிக விலையிலான மாடல்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஹேண்டில்பார்ஸ், ரெயின் ஷீல்டு, லார்ஜ் அன்டர்கேரியேஜ், மற்றும் மல்டிபிள் சீட் போன்ற ஒரு சில நேரங்களில் மட்டுமே தேவைப்படும் எக்கச்சக்கமான அம்சங்களுடன் கிடைக்கிறது.

  • வாழ்க்கை முறை(Lifestyle):

தினமும் ஸ்ட்ரோலரை அதிக அளவில் பயன்படுத்த உள்ளீர்களா? அல்லது எப்போதாவது வெளியே செல்லும்போது மட்டுமே தேவைப்படுமா? இது போன்ற சில வாழ்க்கை முறை காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் ஸ்ட்ரோலரை காரில் எடுத்து செல்ல முடியுமா? போன்ற பிற காரணிகளும் அடங்கும்.

அல்லது ஸ்ட்ரோலரை நகரம் முழுவதும் பயன்படுத்த உள்ளீர்களா? இது போன்ற கேள்விகளை உங்களிடம் நீங்களே கேட்பது, நீங்கள் அடிப்படை, லைட்வெயிட் மாடல் அல்லது கனமான ஓன்றை வாங்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவும்.

  • குடும்பத்தின் அளவு(Family size):

நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணி உங்கள் குடும்பத்தின் அளவு. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள நீங்கள் திட்டமிட்டு இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்துக்கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒன்றை வாங்குவது புத்திசாலித்தனம் ஆகும்.

ஒரு ஸ்ட்ரோலரில் கவனிக்க வேண்டிய சில உதவிகரமான அம்சங்கள்(Helpful Features To Look For In A Stroller In Tamil):

உங்கள் ஸ்ட்ரோலரில் இருக்க வேண்டிய ஒரு சில கூடுதல் அம்சங்கள் பின்வருமாறு:

  • துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி(Washable fabric):

உங்கள் ஸ்ட்ரோலர் மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தக்கூடிய துணியால் ஆனதா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவும். குழந்தை செய்யும் சுட்டித்தனத்தால் துணி அழுக்கடையக்கூடும். சாப்பிடும் பண்டங்களை கூட குழந்தை சிந்துவதற்கு விட வாய்ப்புள்ளது. ஆகவே, ஸ்ட்ரோலரின் துவைத்து பயன்படுத்தக்கூடியதாக இருந்தால், அதனை சுத்தமாகவும், ஃபிரஷாகவும் வைத்துக் கொள்ளலாம். ஸ்ட்ரோலரை நன்றாக பராமரித்து வந்தால் அது நீண்ட காலம் உழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • சேமிப்பு(Storage):

உங்கள் குழந்தையை ஒரு சிறிய நடைப்பயிற்சிக்கோ அல்லது ஷாப்பிங் அழைத்து செல்லும்போதோ உங்களுக்கு சில கூடுதல் பொருட்கள் தேவைப்படலாம். ஆகவே, பொருட்களை சேமித்து வைக்கும் வசதியுடன் கூடிய ஒரு பாஸ்கெட் இருப்பது உங்கள் வேலையை எளிதாக்குகிறது.

  • தரமான சக்கரங்கள்(Quality wheels):

ஸ்ட்ரோலர்களில் சக்கரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், அவை கட்டுறுதியாகவும், நீடித்து உழைக்கும் ஒன்றாகவும் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

  • பாதுகாப்பு அம்சங்கள்(Safety features):

மேலும், நீங்கள் வாங்கும் ஸ்ட்ரோலர் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

  • சன் கனோப்பி(Sun canopy):

கனோப்பியுடன் கூடிய ஸ்ட்ரோலர் உங்கள் குழந்தையை வெயில், மழை, மற்றும் பிற மோசமான வானிலைகளில் இருந்தும் பாதுகாக்கும். ஒரு சில மாடல்களில் ஒட்டுமொத்த ஸ்ட்டோலரையும் மறைக்கும் அளவிற்கு கனோப்பி இருக்கலாம் அல்லது குழந்தையை மட்டும் பாதுகாக்கும் வகையில் ஜன்னல் அமைந்திருக்கலாம்.

  • நீடித்த பயன்பாடு(Longevity):

உங்கள் குழந்தை வளர்ந்தாலும் கூட பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ரோலரை வாங்கவும்.

உங்கள் ஸ்ட்ரோலர் பாதுகாப்பானது என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?(How To Make Sure Your Stroller Is Safe?In Tamil)

குழந்தையை வெளியே அழைத்து செல்லும் போது எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இன்றைய நாட்களில், பெரும்பாலான ஸ்ட்ரோலர்கள் அடிப்படை பாதுகாப்பு தரத்துடன் வருகின்றன. எனினும், ஒரு ஸ்ட்ரோலர் வாங்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சில பின்வருமாறு:

  • ஃபைவ்-பாயிண்ட் சேஃப்டி ஹார்னஸ் உள்ளதா என பார்க்கவும்(Look for a five-point safety harness):

ஃபைவ்-பாயிண்ட் சேஃப்டி ஹார்னஸ் பொதுவாக அனைத்து மாடல்களிலும் இருக்கும். இருப்பினும், ஒரு சில அம்பரல்லா மாடல்கள் த்ரீ-பாயிண்ட் ஹார்னஸ் மட்டுமே கொண்டுள்ளன. ஸ்நாப்களை மாட்டுவதும், அதற்கு பக்கிள் போடுவதும் எளிதாக உள்ளதா என்பதை சோதித்து பார்க்கவும்.

  • பிரேக்குகளை சோதிக்கவும்(Put on the brakes):

பிரேக்குகள் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளனவா என்பதையும், அது எவ்வளவு விரைவாக டிரிப் ஆகிறது என்பதையும் சரிபார்க்கவும். தேவை ஏற்படாமலேயே பிரேக்குகளை நீ பயன்படுத்தி விடுகிறீர்களா? பிரேக் பயன்படுத்திய உடனேயே ஸ்ட்ரோலர் நிற்கிறதா?

  • மூலைகள் மற்றும் ஓரங்களை கவனிக்கவும்(Examine the hinges and edges):

குழந்தைகளின் உபகரணங்களில் மூலை முடுக்குகள் சற்று தந்திரமானதாக இருந்தாலும், ஸ்ட்ரோலர்களைப் பொறுத்தவரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், ஏதேனும் பாகங்கள் நீட்டிக் கொண்டு இருக்கிறதா அல்லது கூர்மையான ஓரங்கள் இருக்கிறதா என்பதை கவனிக்கவும். உங்கள் குழந்தையின் பிஞ்சு விரல்கள் சிக்கிக் கொள்ளும் வகையில் ஏதேனும் இடுக்குகள் உள்ளதா என்பதையும் பார்க்கவும்.

  • நிழல் குடை அவசியம்(Get some shade):

வெயில், மழை, அல்லது நிலையற்ற வானிலையில் பயணிக்கும் வகையில் ஸ்ட்ரோலர்களில் கனோப்பி இருத்தல் அவசியம்.

குழந்தையால் பின்புறம் சாய்ந்து கொள்ள முடியுமா? நீங்கள் ஸ்ட்ரோலரில் கை குழந்தையை வைக்க திட்டமிட்டால், தட்டையான ரிக்லைன் அல்லது பேசினெட் இணைப்புடன் கூடிய மாடல்களை தேர்வு செய்யுங்கள்.

  • அனைத்து பாகங்களையும் ஒன்றாக இணைக்கவும்(Put all the pieces together):

நீங்கள் ஒரு டிராவல் சிஸ்டத்தை வாங்க முடிவு செய்திருந்தால், கார் சீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மதிப்பீடு என்ன என்பதையும், கார் சீட் ஸ்ட்ரோலருடன் எவ்வாறு இணைக்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இது பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளதா அல்லது ஒன்-கிளிக் சிஸ்டம் கொண்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். ஸ்ட்ரோலர்கள் முடிந்தவரை எளிதாக இருத்தல் மிக மிக அவசியம்.

முடிவுரை

இந்த உலகிலேயே உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான இடமாகவும், அதில் பயணிக்கும் மகிழ்ச்சியாகவும் பேபி ஸ்ட்ரோலர் அமையலாம். சரியான ஸ்ட்ரோலரை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் அவர்களின் சௌகரியத்திற்கும், பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் அளிக்கிறீர்கள். எப்போதும் உங்கள் குழந்தையை கையில் சுமந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு நீங்களும் சுதந்திரமாக உங்களின் ஜாகிங், ஷாப்பிங் போன்ற உங்களின் பொழுதுபோக்குகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம். மேலும் நீங்கள் தேர்வு செய்வதற்கென ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உள்ளன. ஆகவே, எந்த வகையான ஒரு ஸ்ட்ரோலரை வாங்கும் முன்பும் அதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை கவனித்தல் அவசியம்.

Tags: stroller in tamil, best stroller in tamil, types of stroller in tamil, types of stroller in tamil, which stoller is best for kids in tamil, advantages of stroller in tamil, drawbacks of stroller in tamil How to Choose the Best Stroller for Baby in English How To Choose The Safest & Best Stroller For Your Baby in Hindi How To Choose The Safest & Best Stroller For Your Baby in Bengali How To Choose The Safest & Best Stroller For Your Baby in Telugu

Riviera Ultra-Light Premium Baby Stroller - Blue

Riviera Ultra-Light Premium Baby Stroller - Blue

Baby Pram for Toddlers & Kids | 5 Point Safety Harness | Compact Design | Air Travel Friendly

862 Moms bought
₹4999₹859942% Off
Rating
4.4
(34)
Vista Ultra-Light Baby Stroller - Blue & Grey

Vista Ultra-Light Baby Stroller - Blue & Grey

Baby Pram for Toddlers & Kids | 5 Point Safety Harness | Front Wheel Swivel Function | Umbrella Fold

194 Moms bought
₹3846₹699945% Off
Rating
4.4
(16)

Article Posted Under

Related Articles

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.