hamburgerIcon

Orders

login

Profile

Profile
Skin Care
Skin Brightening
Anti Ageing
Skin Hydration
Acne and Blemishes
Dry and Dull Skin
Dark Circles
Skin Care Super Saver Combos
Hair Care
Hairfall
Dry and Damaged Hair
Hair Growth
Super Saver Combos
Preg & Moms
Boost Breast Milk Supply
Breast Pump
Fertility
Stretch Marks Care
Maternity Wear
Maternity Gear
Baby Care
Diapers & WipesBaby DiapersCloth DiapersBest Baby Wet Wipes in IndiaSuper Saver Combos
Baby WellnessDiaper Rash Mosquito Repellent Anti-ColicSuper Saver Combo
Baby CareSkinHairBath & BodySuper Saver Combos
Feeding & LactationFeeding BottleBoost Breast Milk SupplySipperBreast PumpTeethers & NibblersGrooved NippleNursing PadsSuper Saver Combos
Baby ClothingBaby Detergent & Cleanser in IndiaBaby TowelCap, Mittens & BootiesSocksWrappersWinter Clothing
Baby GearCarriersStrollersDiaper BagBathtubs and Potty Seat Carry NestDry SheetBaby Pillow
Diapers
Baby Diapers
Cloth Diapers
Best Baby Wet Wipes in India
Super Saver Combos
More
Bath & BodyBody MoistureBrighteningTan Removal
FertilityFertility For Her
HygieneUTI and Infection
WeightWeight ManagementDigestive HealthSuper Saver Combos
Daily WellnessDigestive Health
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • 30 வயதில் கர்ப்பமடையும் போது ஏற்படக் கூடிய அபாயங்கள் (Pregnancy at 30 and the risks involved In Tamil) arrow

In this Article

    30 வயதில் கர்ப்பமடையும் போது ஏற்படக் கூடிய  அபாயங்கள் (Pregnancy at 30 and the risks involved In Tamil)

    Pregnancy

    30 வயதில் கர்ப்பமடையும் போது ஏற்படக் கூடிய அபாயங்கள் (Pregnancy at 30 and the risks involved In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது என்பது, இன்றைய சூழலில், குறிப்பாக வேலை பார்க்கும்/தொழில் ரீதியாக சாதிக்க நினைக்கின்ற பெண்களிடையே அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிற ஒரு விஷயமாகும். 30 வயதிற்கு மேல் கர்ப்பமாவது குறித்து பலரும் கவலை கொள்கின்றனர். இந்த விஷயத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொண்டு, அதன் மூலம் தவறான புரிதல்களை களைய முயற்சிப்போம்.

    முந்தைய காலங்களை விடவும், இப்போதெல்லாம் பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். முன்பு பெண்களின் திருமண வயதென்பது 22 ஆக இருந்தது, இப்போது 27 வயதில் தான் திருமணம் செய்கின்றனர் அல்லது அதற்கு மேலும் கூட ஆகின்றது. குடும்பம் குறித்து திட்டமிடுவதும், கர்ப்பமடைவதும் அதற்கு பின்னர் தான் நிகழும். 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஒரு பெண் 30 வயதிற்கு மேல் கர்ப்பமாகும் போது, மருத்துவ ரீதியான சிக்கல்களை தவிர்ப்பதற்கு அவள் தன் கர்ப்பகாலம் குறித்து சரியாக திட்டமிட வேண்டும். முதல் நடவடிக்கையாக சரியான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்ற வேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

    நிச்சயமாக, தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் போது சில அபாயங்களை நாம் சந்தித்தாக வேண்டும், அவை பின்வருமாறு:-

    • கருச்சிதைவு

    • பிறவிக் குறைபாடுகள்

    • இரட்டையர் (சிலர் இதனை அபாயமாகவோ அல்லது பிரச்சினையாகவோ பார்ப்பதில்லை, சிலர் நினைக்கக் கூடும்)

    • உயர் இரத்த அழுத்தம்

    • கர்ப்பகால நீரிழிவு நோய்

    • சிரமமான பிரசவம்

    மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளில் சில விரிவாக கீழே விவரிக்கப்பட்டுள்ளன (Some above-said problems are described in detail below):-

    • சற்று வயதான கர்ப்பவதி பெண்களுக்கு கருச்சிதைவு (முன்கூட்டியே கர்ப்பம் கலைவது) ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எல்லா பெண்களுக்குமே, கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்கள் (முதல் மும்மாதம் என்று குறிப்பிடுவது) மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    • தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதால், பிறவிக் குறைபாடுகள் ஏற்படலாம். பெண்களுக்கு வயதாகும் போது, குரோமோசோம் பிரச்சினைகளின் அபாயமும் அதிகரிக்கிறது, இதனால் தவறிய, சேதமடைந்த, அல்லது கூடுதல் குரோமோசோம்களுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது.

    • 30 வயதிற்கு மேல் கர்ப்பமாகும் போது மல்டிபிள் பிரக்னன்ஸி (ஒன்றுக்கு மேற்பட்ட கரு) ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதற்கு காரணமென்னவென்றால், கருப்பை வயதாகும் போது, அவை ஒவ்வொரு மாதமும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை வெளியிடுகிறது. இதனால் சில சமயங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவானதன் காரணமாக, குறைப்பிறப்பு அல்லது குறைப்பிரசவம் ஏற்படுகின்ற அபாயம் உள்ளது.

    • தற்போதைய சூழலில், உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் சந்திக்கின்ற பொதுவான ஒரு பிரச்சினையாகும். நீங்கள் 25-30 வயதிற்குள் கர்ப்பமானாலும் அல்லது அதற்கு மேல் ஆனாலும், எல்லா வயதினரிடையேயும் இந்த பிரச்சினை பொதுவாக காணப்படுகிறது. ஆகவே, நீங்கள் தாமதமாக கர்ப்பமாகும் போது, நீங்கள் உப்பு எடுத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கர்ப்பகாலத்தின் முதல் நாளிலிருந்தே இது குறைக்கப்பட்டுக் கொண்டே வர வேண்டும்.

    • தாமதமாக கர்ப்பமாகும் போது, நாம் சந்திக்கக் கூடிய இன்னொரு பிரச்சினை கர்ப்பகால நீரிழிவு நோயாகும். வயதான பெண்களுக்கு இது பொதுவாகவே நேரக் கூடிய பிரச்சினையாக உள்ளது. எனவே நீங்கள் கர்ப்பமாவதற்கு முன், நல்ல தாய்மை மருத்துவ வல்லுநர் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    • டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) என்பது தாமதமாக குழந்தை பெறுவோருக்கு ஏற்படும் குரோமோசோம் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

    • ஃபீட்டல் இன்டர்வென்ஷன், யூஹெச் க்ளீவ்லேண்ட் மெடிக்கல் சென்டரை சேர்ந்த எல்லி ரேக்ஸ் டேல், எம்.டி, டைரக்டர் என்பவர் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி குறிப்பிடுகிறார் :

    கர்ப்பமாக சிரமப்படுவது (Trouble conceiving)

    30-களின் ஆரம்பங்களிலிருந்தே, பெண்களின் கருவுறும் திறன் குறைகிறது, எனவே அவர்கள் கர்ப்பமாவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம்.

    கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் - 30 வயது நிரம்பிய பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. வயதான பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் (Complications during pregnancy)

    சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகள் பெரும்பாலும் பிறக்கும் வாய்ப்புள்ளது. தன் முதல் குழந்தையை 30 வயதிற்கு பிறகு பெற்ற பெண்களும், நீண்ட நேர பிரசவ வலி போன்ற பிற பிரசவ சிக்கல்களையும் சந்திக்க நேரும் அபாயம் அதிகமாக உள்ளது.

    30 வயது அல்லது அதற்கு மேல் கர்ப்பமாகும் வாய்ப்புகள் (Chances of pregnancy at the age of 30 years or older):-

    30 வயது முதல் கர்ப்பமாகும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. பெண்கள் வயதாகும் போது, கருப்பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை குறைகிறது, இது அவர்களின் கருவுறும் திறனை பாதிக்கிறது. சமீபத்திய ஆய்வின் படி, 100 கருவுறும் திறனுடைய 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் கர்ப்பமாவதற்கு முயற்சி செய்யும் போது, 1 சுழற்சியில், சுமார் 20 பேர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள், மற்றவர்கள் திரும்பவும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

    சுருக்கம் (summary)

    வாழ்க்கைமுறை மாறுதல்கள் மற்றும் நாம் முன்னுரிமையளிக்கும் விஷயங்கள் மாறுதல் அடைந்திருப்பதால், தாமதமாக குழந்தை பெறுவதென்பது அதிகமாகி உள்ளது. பெண்கள் குழந்தை பெறுவதற்கும் அல்லது குழந்தையை வளர்க்கும் பொறுப்பினை எடுத்துக் கொள்வதற்கும் முன்னர், தங்கள் பணி சம்பந்தப்பட்ட இலக்குகளை அடைவதற்கு விரும்புகிறார்கள். கூடிய சீக்கிரமே, 30 வயது அல்லது அதற்கு மேல் பிள்ளை பெறுவதென்பது இயல்பானதாகி விடும்.

    இதன் பொருள், 30 வயதில் நீங்கள் பிள்ளை பெற நினைத்தால், கர்ப்பகாலத்தில் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான குழந்தையையும் பெற முடியாது என்பதல்ல. உங்கள் உடல்நலத்தையும், உணவு கட்டுப்பாட்டினையும் நல்ல முறையில் பேணும் பட்சத்தில் ஆரோக்கியமான பிள்ளைப்பேறு சாத்தியமே. உங்கள் தாய்மை மருத்துவ வல்லுநர்-மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை பெற்று நீங்கள் மகப்பேற்றுக்கு முந்திய பரிசோதனையையும் (ப்ரீநேட்டல் டெஸ்ட்) செய்து கொள்ளலாம்.

    • குரோமோசோம்கள் (Chromosomes)

    உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள அமைப்புகள்.

    • டவுன் சிண்ட்ரோம் ( Down Syndrome)

    இது குழந்தையின் உடல் மற்றும் முக பாகங்களில் அசாதாரண தோற்றத்தை உண்டாக்குவது மட்டுமின்றி, இதய கோளாறுகள், மனநல கோளாறு போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்குகின்ற ஒரு வகை மரபணு கோளாறாகும்.

    • தாய்மை மருத்துவ வல்லுநர் (Obstetrician-gynaecologist )

    மகப்பேறு மருத்துவர்- பெண்களின் ஆரோக்கியம் பற்றிய கல்வி மற்றும் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்.

    • சிக்கல்கள் ( Complications )

    வேறொரு நோய் அல்லது நிலைமையின் விளைவாக ஏற்படுகின்ற நோய்கள் அல்லது நிலைமைகள். உதாரணத்திற்கு, கர்ப்பகால சிக்கலுக்கு உதாரணமாக குறை பிரசவம் என்பதை சொல்லலாம்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் குனிந்து வேலை செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்

    • முட்டைகள் (Eggs )

    கருப்பையில் பெண்களின் இனப்பெருக்க செல்கள் உருவாக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றன.

    • உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)

    இது ஹைப்பர்டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது.

    • மல்ட்டிபிள் பிரக்னன்ஸி (Multiple Pregnancy)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கரு உருவாவது (கர்ப்பத்தில் உண்டாவது)

    • ப்ரீநேட்டல் கேர் (Prenatal care)

    குழந்தை பிறக்கும் முன்னர் கர்ப்பவதியான பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை

    • குறை பிரசவம் (Preterm)

    37 வாரங்களுக்கு உட்பட்ட காலம்

    TAGS :

    aged pregnancy in tamil, 30+ pregnancy in tamil, risks of aged pregnancy in tamil, Pregnancy at 30 and the risks involved In English, Pregnancy at 30 and the risks involved In Hindi, Pregnancy at 30 and the risks involved In Telugu, Pregnancy at 30 and the risks involved In Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Questions

    • Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

      arrow
    • Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

      arrow
    • Baby kicks KB Marta hai Plz tell mi

      arrow
    • PCOD kya hota hai

      arrow
    • How to detect pcos

      arrow

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on TOI
    Mylo featured on inc42
    Mylo featured on Business Standard
    Mylo featured on YourStory
    Mylo featured on ANI
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.