This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey
கர்ப்ப காலத்தில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லதா?
Preparing For Delivery
Written by - Mohana Priyaகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 4, 2023
2 Likes|
7 min
இந்தியர்கள்அனைவரின் சமையலறையிலும் நெய் இருக்கும். இது நம் பாரம்பரியச் சமையலில் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நெய் கண்டிப்பாக அவசியம். வயிற்று வலி, இருமல், ஜலதோஷம் போன்ற பொதுவான நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை நெய் அளிப்பதால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தினமும் நெய்யைஉணவில் சேர்க்கிறார்கள். பெரும்பாலும், கர்ப்பிணிப் பெண்களும் நெய்யை உட்கொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள், குறிப்பாக குடும்பத்தில் வயதானவர்கள், நெய்சுகப்பிரசவத்திற்கு உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மேலும், கர்ப்ப காலத்தில் பெண்கள் நெய்யை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சீரான செரிமானத்திற்கு உதவும் என்றும், குடலை மென்மையாக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
நெய்யில் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது. தயிரிலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெயை சூடுபடுத்தும்போது தெளிந்த நெய் கிடைக்கிறது. காய்ச்சிய நெய் சூடாக இருக்கும்போது திரவமாக இருக்கிறது. ஆறிய பின் நெய் இறுகுகிறது.
·நெய்எடைஇழப்புக்குஉதவுவதால்இது நன்றாக பசியெடுக்கச் செய்யும்.
·அதுஅத்தியாவசியமானகொழுப்புஅமிலத்தைக்கொண்டிருப்பதால்இருதயநோய் ஏற்படும் அபாயத்தைக்குறைக்கிறது.
கர்ப்ப காலத்தில் நெய் சாப்பிடுவது பாதுகாப்பானதா?
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் மிதமான அளவு நெய் உட்கொள்வது பாதுகாப்பானதே. நெய் ஜீரணிக்க எளிதானது என்பதாலும் வளர்சிதைமாற்றத்தைத் தூண்டுகிறது என்பதாலும், நீங்கள் அதிக எடையுடனோ அல்லது பருமனாகவோ இருந்தால் மற்ற பால் பொருட்களைப் போலல்லாமல், அதைக் குறைந்த அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடுதலாக, உருக்கிய நெய் ஆரோக்கியமான கொழுப்பு என்பதால் , எண்ணைக்குப் பதிலாக பெரும்பாலும் நெய்யை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், அதை உணவில் சேர்ப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் எவ்வளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்?
கர்ப்ப காலத்தில் தினம் சுமார் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். உணவில் ஒரு நாளைக்கு ஆறு தேக்கரண்டி கொழுப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், அதில் நெய் போன்ற நிறைவுற்ற கொழுப்பின் அளவு 10 முதல் 12% இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாமா?
கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இறுதி வரை நெய்யை அதனை தாராளமாக நீங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும், உங்கள் எடை அதிகமாக இருந்தால், அதன் அளவு குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மூன்றாவது டிரைமெஸ்டரில் நெய் சேர்த்துக் கொள்வது
நெய், குடலிளக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், இது பிரச வலியைத் தூண்டும் என்று நம்பப்படுகிறது. மூன்றாவது டிரைமெஸ்டரில் நெய் உண்பது குடலை இளக்கச்செய்து, கருப்பை சுருக்கங்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரசவத்தைத் தூண்டுகிறது. நெய் யோனியின்உராய்வுநீக்கியாகச்செயல்படுவதாகவும் சுலபமான பிரசவத்திற்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், அறிவியல் ஆதாரங்கள் கொண்டு இவை இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. எப்படியாயினும், நெய் கொழுப்பின் ஆரோக்கியமான மூலமாக இருப்பதால் இது உங்களுக்கும் குழந்தைக்கும் பயனளிக்கிறது.
கர்ப்ப காலத்தில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
நெய்யில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றத்தடுப்பிகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை இருப்பதால், இது கர்ப்ப காலத்தில் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
நன்மைகள் பின்வருமாறு :
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது :
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி செரிமானமாகாமல் அவஸ்தைப்படுவதால், நெய் பரிந்துரைக்கப்படுகிறது. நெய்யில் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அதில் ப்யூட்ரிக் அமிலமும் உள்ளது. இது குடல்கள், பெருங்குடல் செல்கள், மற்றும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியம் அனைத்திற்கும் உதவியாக இருக்கும் ஒரு குறுகிய சங்கிலிக் கொழுப்பமிலமாகும். ஒரு சில டீஸ்பூன்கள் நெய் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
மன அழுத்தத்தைக்குறைக்க உதவுகிறது :
பல ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்ற எடைஇழப்பு உணவுகளில் நெய் இடம்பெறுகிறது. ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்க இது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தம் தொடர்பான பல பிரச்சினைகளை அனுபவிப்பதால், நெய் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உகந்தது. நெய்யில் வைட்டமின்களும் ப்யூட்ரேட்டும் இருப்பதால் இது நிலையற்ற மூலக்கூறுகளையும் (ஃப்ரீ ரேடிக்கல்ஸ்) ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் உடல்மந்தமாக இல்லாமல் இருக்க உதவுகிறது.
சுவையைக் கூட்டுவதோடு சத்தில்லா உணவைத் தவிர்க்க உதவுகிறது :
நெய் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்தும் ஒரு சுவையான மற்றும் நல்ல கொழுப்பின் மூலாதாரமாக உள்ளது. இதுசேர்க்கப்படும் ஒவ்வொரு உணவின் சுவையையும் வாசனையையும் மேம்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 200-300 கூடுதல் கலோரிகள் தேவை. எனவே, நெய் கொண்டு தாளிப்பதாலோ அல்லது சப்பாத்தியின் மேல் நெய் தடவியோ இந்தத் தேவையான கலோரிகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். நெய்யில் தயாரிக்கப்பட்ட உலர்பழ லட்டுக்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுண்டு பசியைத்தணித்துக் கொள்ளவும் திருப்தியடையவும் உதவுகின்றன.
ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது :
நெய் ஈரப்பதமூட்டும் விளைவைக் கொண்டிருப்பதால், இது சருமம் நீரிழக்காமல்பாதுகாக்கிறது. பெரும்பாலும், ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்யும் போது இது ஒரு முக்கியமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வீக்கம், காயங்கள், வெட்டுக்கள், புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பமிலங்கள் நிறைந்திருப்பதால், நெய் மசாஜ் செய்வது அடிக்கடி வீக்கத்தால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப்பெண்களுக்குப் பயனளிக்கும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது :
நெய் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் வைட்டமின்கள் நிறைந்த சூப்பர்ஃபுட் ஆகும். இதில் ஒமேகா -3 கொழுப்பஅமிலம் டிஹெச்ஏ (DHA) உள்ளது, இது ஞாபகசக்திக்கும் அறிவாற்றல் திறன்களுக்கும்நல்லது. மனித மூளை கொழுப்புகளால் ஆனது. நெய் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டிருப்பதால் கருப்பையில் குழந்தையின் சரியான உடல் வளர்ச்சியையும் மூளை வளர்ச்சியையும் உறுதிசெய்கிறது. இது வைட்டமின்கள் ஏ, டி, கே ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கு வழிவகுக்கிறது :
கர்ப்ப காலத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பிரசவத்திற்குப் பிறகு அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் டிஹெச்ஏ (DHA) மற்றும் சிஎல்ஏ (CLA) நிறைந்திருப்பதால் கொழுப்பு இழப்பு உணவுகளிலும் அவசியம் இடம்பெறுகிறது.
ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் தாய்ப்பாலை சுரக்கச் செய்தல்: நெய்யில் வைட்டமின் கே2 இருப்பதால் அதிகப்படியான கால்சியம் படிவுகளால் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. நெய்யில் காணப்படும் சி.எல்.ஏ கெட்ட கொழுப்பைக் குறைத்து உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது; வீக்கத்தையும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய கர்ப்ப காலத்தில் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எளிதாகப் பிரசவமாகவும் உதவுகிறது. பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பாலின் சுரப்பை
This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.
AWARDS AND RECOGNITION
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022