This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான சிறந்த 5 வீட்டு வைத்தியம்

Weight Loss
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான சிறந்த 5 வீட்டு வைத்தியம்
Likes26 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • தாய்ப்பால் கொடுப்பது பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கு இயற்கையான வழியாகும், ஏனெனில் பால் உற்பத்திக்காக உடல் சுமார் 850 கூடுதல் கலோரிகளை எரிக்கிறது.
  • சீரான பிரசவத்திற்குப் பிந்தைய டயட் பிளான், போதுமான நீர்ச்சத்து, பாதுகாப்பான நச்சு நீக்கம், பழம் காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகின்றன.
  • வேகமான நடைப்பயிற்சி, கெகல் பயிற்சிகள், சுவாச பயிற்சிகள் மற்றும் தாய்-குழந்தை பயிற்சிகள் வீட்டிலேயே செய்யக்கூடிய சிறந்த உடற்பயிற்சிகளாகும்.
  • எடை இழப்புக்கு எந்த துணைப்பொருட்கள் உதவும்? Explore our Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2.
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Rating4.8
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.6

வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பது கிட்டத்தட்ட அனைத்து புதிய தாய்மார்களும் சமாளிக்க வேண்டிய ஒரு கவலையாகும். அது சிசேரியனாக இருந்தாலும் சரி அல்லது நார்மல் டெலிவரியாக இருந்தாலும் சரி, பிரசவத்திற்குப் பிந்தைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். சிலர் பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்பு உணவுத் திட்டத்தைத் (டயட் பிளான்) தேர்வு செய்கிறார்கள், மற்றவர்கள் உடற்பயிற்சியை நாடுகிறார்கள். பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்பு உணவுத் திட்டத்துடன் (டயட் பிளான்) வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்பவர்களும் உள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இதற்கு பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அவை தலைமுறைகளாக இருந்து வருகின்றன, அவை பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கு நன்றாக உதவுகின்றன. அத்தகைய சிறந்த 5 வைத்தியங்களை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

1. தாய்ப்பால்

பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான சிறந்த மற்றும் இயற்கையான குறிப்புகளில் ஒன்று தாய்ப்பால். இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் எளிமையானது - பால் உற்பத்தி செய்ய, தாயின் உடலானது சேமிக்கப்பட்ட ஆற்றலை அதிகமாக பயன்படுத்த வேண்டும், இன்னும் துல்லியமாக சொல்லவேண்டுமெனில் 850 கிலோ கலோரி செலவாகும். அதாவது, பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பாலின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உடல் கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் தொப்பை கொழுப்பை மிக வேகமாகவும், தாய்ப்பால் கொடுக்காத அம்மாக்களை விட ஒப்பீட்டளவில் எளிதாகவும் இழக்கின்றனர். பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்பு டயட் போன்ற பிற வழிகளில் உடல் எடையை குறைப்பதை ஒப்பிடுகையில், பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கு தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது என்ற கூற்றை ஆதரிக்கும் ஆய்வுகளும் உள்ளன. தாய்ப்பாலின் மற்றொரு முக்கியமான விளைவு, பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கைக் குறைக்கும், அதே வேளையில் கருப்பைச் சுருக்கத்தை எளிதாக்கும் ஆக்ஸிடாஸின் ஹார்மோனின் வெளியீடு ஆகும்.

2. பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான டயட் பிளான் (உணவுத்திட்டம்)

பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உண்மையில் 2 பேருக்கு (தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும்) சாப்பிட வேண்டியதில்லை. உடல் எடையைப் பொறுத்து சுமார் 300 முதல் 500 கலோரிகள் வரை கூடுதல் கலோரி நுகர்வு தேவைப்படுகிறது, ஆனால் அது சீரான உடல் செயல்பாடுகளை பராமரிக்க மட்டுமே. இது இவ்வாறு கணக்கிடப்படுகிறது,

  • ஒரு கப் பால்.

  • முட்டை.

  • பழம்.

  • பிரெட் ஸ்லைஸ்.

பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்பு டயட்டிற்கு இது போதுமானது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் கொழுப்பு நிறைந்த உணவை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய டயட்டில் சில முக்கிய கூறுகளும் அடங்கும்,

  • நிறைய தண்ணீர் குடிப்பது.

  • உப்பு உட்கொள்ளல் அளவைக் குறைத்தல்.

  • சவ்வற்ற ஆட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சி உட்கொள்வது.

  • மீனை உணவில் சேர்த்துக் கொள்வது.

3. பாதுகாப்பான நச்சு நீக்கம்

நச்சு நீக்கம் பொதுவாக எதிர்மறையான பொருளைக் கொண்டுள்ளது, ஏனெனில், பெரும்பாலான டீடாக்ஸ் ரெஜிம்கள் மக்களை அவர்களின் கட்டுப்பாடான தன்மையின் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாக்குகின்றன. ஆனால் பாதுகாப்பான நச்சுத்தன்மை நீக்கம் உண்மையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளை மேம்படுத்தும். இது, ஒரு தொப்பை இல்லாத வயிற்றை அடைவதற்கான ஆற்றல் வாய்ந்தது, குறிப்பாக சி-செக்ஷனுக்குப் பிறகு. எனவே, பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான உணவுத் திட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாயால் பிறந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பாக நச்சு நீக்கும் வழிகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். இதைச் செய்யக்கூடிய சில வழிகள்,

  • எல்லா நேரங்களிலும் நீர்ச்சத்துடன் இருக்க நிறைய தண்ணீர் குடிப்பது.

  • ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை சாப்பிடுவது.

  • பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான டயட்டில் பழங்களையும் சேர்த்துக் கொள்வது.

  • குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் நச்சுக்களை அகற்றும் இயற்கையாக விளையும் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது.

  • எலுமிச்சை அல்லது தேன் தண்ணீர் அல்லது இஞ்சி டீ அல்லது ஒமேகா 3 நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வது பிரசவத்திற்குப் பிந்தைய எடை குறைப்பை துரிதப்படுத்துகிறது.

4. பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான உடற்பயிற்சிகள்

பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான குறிப்பில் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒன்று, வழக்கமான மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது. இவை வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகளாகும். நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில சிறந்த உடற்பயிற்சிகள் பின்வருமாறு:

  • நன்றாக சாப்பிட்ட பிறகு 15-20 நிமிடங்களுக்கு வேகமான நடைப்பயிற்சி செய்யலாம்.

  • உங்களுக்கு நேரமும் சக்தியும் இருந்தால் கிரன்ஞ்சஸ் உடற்பயற்சி செய்யலாம்.

  • வயிற்று தசைகளின் சுருக்கங்களை உள்ளடக்கிய சுவாச பயிற்சிகளை செய்யலாம்.

  • இடுப்பு தசைகளை வலுப்படுத்தும் மற்றும் தொனிக்கும் கெகல் பயிற்சிகளை செய்யலாம்.

  • பேபி கிளைடர், ராக்-எ-பேபி ஸ்குவாட்ஸ் போன்ற தாய்-குழந்தை பயிற்சிகளை செய்யலாம்.

5. பிரசவத்திற்குப் பிந்தைய சப்போர்ட் பெல்ட்

பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான மற்றொரு பயனுள்ள உதவிக்குறிப்பு, பிரசவத்திற்குப் பிந்தைய சப்போர்ட் பெல்ட் பயன்படுத்துவது. இந்த பெல்ட்கள் வயிற்று தசைகளை இறுக்க உதவுவதோடு, வயிற்றைச் சுற்றியுள்ள மடிப்புகளையும் குறைக்கும். சி-செக்ஷன் மூலம் குழந்தை பிறந்தால், ஒரு சப்போர்ட் கிர்டில் தோரணையை மேம்படுத்துகிறது மற்றும் கீறலைப் பாதுகாக்கிறது. பிரசவத்திற்குப் பிந்தைய மிகவும் பொதுவான முதுகுவலியைக் குறைக்க இது பெரிதும் உதவலாம். சி-செக்ஷனுக்குப் பிறகு பிரசவத்திற்குப் பிந்தைய சப்போர்ட் பெல்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது மிகவும் உறுதியான பிணைப்பு மற்றும் அதிகப்படியான கம்ப்ரெஷன்களை வழங்குகிறது.

பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்பு என்பது சவாலானது, மேலும் எந்த வகையிலும் எளிதாக இலக்கை அடைய முடியாது. கர்ப்ப காலத்தில் தொப்பை மற்றும் இடுப்பு பெரிதாவது இயற்கையான நிகழ்வாகும், மேலும் பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்பு டயட் மற்றும் உடல் இயக்கங்கள் ஒரு அளவிற்கு மட்டுமே உதவும். கட்டுக்கோப்பான உடலமைப்பை பெறுவதற்கு சற்று நேரமாகும் என்பதை உணர்ந்து உடலுக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவசரப்பட்டு அதிகமாக எதையும் திணித்து விடக் கூடாது. பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான உணவுத் திட்டத்தைத் தீர்மானிக்கும் முன் மருத்துவரை அணுகுவதும் மிகவும் முக்கியம்.

இதையும் படிக்கலாமே! - குழந்தையை பாதுகாக்கும் முறை

புதிய அம்மாக்களால் நம்பப்படும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு

தொப்பையை இறுக்கி, முதுகுக்கு ஆதரவளித்து, உங்கள் மீட்பு பயணத்தை எளிதாக்கும் தயாரிப்புகள் இங்கே உள்ளன.

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles

5855 Moms bought
₹59₹7925% Off
Rating
4.8
(118)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

4508 Moms bought
₹499₹64923% Off
Rating
4.6
(1000)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.