
சுருக்கம்




சப்போட்டா என்பது, சிக்கூ என்றும் அழைக்கப்படுகிறது, இதற்கு அதிக ஊட்டச்சத்து மதிப்பு இருப்பதால் இது சூப்பர் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, மற்றும் சி, பொட்டாசியம், கால்ஷியம், மற்றும் ஆண்டிஆக்சிடென்ட்ஸ் போன்றவை சிக்கூ பழத்தில் இருக்கும் சில அத்தியவசிய ஊட்டசத்துக்கள் ஆகும். இந்த பழம் அதிக கலோரிகளை கொண்டிருப்பது மட்டுமின்றி பழத்தின் 10 கிராமில் 83 கிலோ கேலரி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பழம் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகம் தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் அவர்களது மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவர்களது டயட்டில் எந்த விதமான புதிய உணவையும் சேர்க்கக்கூடாது. இது ஏனெனில், பெரும்பாலான பெண்களுக்கு அவர்களது கர்ப்ப காலத்தின் போது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் உணவு உணர்திறன்கள் உருவாகலாம். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்யவும், அபாயத்தை தவிர்க்கவுமே மருத்துவர்கள், கர்ப்பிணிகளின் இரத்த மாதிரிகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
மருத்துவர்கள் கர்ப்பிணிகளிடம் தினசரி ப்ரெஷ் ஆன பழங்களை உண்ணுமாறு பரிந்துரைக்கின்றனர். அதிக ஊட்டசத்து நிறைந்த சப்போட்டாவை எல்லா கர்ப்பிணி பெண்களும் தாராளமாக சாப்பிடலாம். ஒருவேளை உங்களிடம் மருத்துவர்கள் சப்போட்டா சாப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தால், அதை தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண் எத்தனை சப்போட்டா சாப்பிட வேண்டும் என்று எந்தவிதமான குறிப்பிட்ட அளவு எதுவும் இல்லை. ஆனால், ஒரு பழமாக இதில் அதிக இனிப்பும், கலோரியும் இருப்பதால் ஒரு நாளைக்கு ஒரு பழம் அதாவது 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. இது கர்ப்பிணிகளின் எடை அதிகரிப்பை குறைக்கவும், மற்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவதால் பெண்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கலாம்:
சப்போட்டாவில் அதிக சேக்ரோஸ் உள்ளடக்கம் இருக்கிறது, இது உடனடி ஆற்றல் கொடுக்க உதவும். இந்த பழத்தை காலை உணவிற்கு பிறகு மதிய உணவிற்கு முன் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்கள் அவர்களது உணவு வேலைகளுக்கு இடையே அவர்களது ஆற்றல் அளவை பராமரிக்க உதவும்.
கர்ப்பிணிப் பெண்களின் மத்தியில் மலச்சிக்கல் என்பது பொதுவான ஒன்றே. கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது அவர்களது செரிமானத்தை சீர்படுத்தும், ஏனெனில் இந்த பழத்தில் சிறந்த நார்ச்சத்து இருக்கிறது. இது குமட்டலை குறைப்பது மட்டுமின்றி வயிற்றில் ஏற்படும் அழற்சியையும் குறைக்க உதவும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதல் கால்சியம் தேவைப்படும், மேலும் அடிக்கடி அதன் அளவுகளை சரியாக பராமரிக்க மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது. இயற்கை ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ளது.
தொடர்ந்து சப்போட்டா சாப்பிடுவதால் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தம் சீரமைக்கப்படும். இந்த பழத்தில் அதிக அளவு மெக்னிஷியம் மற்றும் பொட்டாஷியம் இருக்கிறது, இந்த இரண்டு சத்துகளுமே இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
கர்ப்பிணிகள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க, அவர்களது பழங்கள் மற்றும் காய்கறிகளை மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும். ஒரு நல்ல சப்போட்டா பழத்தை தேர்வு செய்வது சவாலாக இருக்கலாம், ஏனெனில் சந்தையில் பழுத்த பழத்தை தேர்வு செய்வது மிக கடினம்.
தொடுதலின் போது மிக கடினமாக இருக்கும் சப்போட்டாவை தேர்வு செய்ய வேண்டும்.
கீறல்கள் அல்லது ஓட்டைகள் இருக்கும் பழங்களைத் தவிர்க்கவும்.
சுருங்கிய தோல் அல்லது துர்நாற்றம் அடிக்கவும் பழங்களை தவிர்க்கவும்.
வெள்ளை நிற சாறு படிந்திருக்கும் பழங்கள் ஃபிரஷ்ஷாக பறிக்கப்பட்டவை.
ஆகவே, மேற்கூறப்பட்ட குறிப்புகளை கொண்டு சந்தையில் நீங்கள் நன்றாக உள்ள பழங்களை தேர்வு செய்யலாம்.
சப்போட்டா பழங்களை வாங்கிய பிறகு, அவற்றை சுத்தம் செய்து நன்கு காய வைக்க வேண்டும்.
காயாக உள்ள பழங்கள் விரைவாக பழுக்க அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் வைக்கவும்.
பழங்கள் கெட்டுப் போகாமலோ அல்லது அதிகம் பழுக்காமல் இருப்பதை சோதிக்க ஒரு நாளைக்கு ஒரு முறை அதை சோதித்துப் பார்க்கவும்.
கர்ப்பிணிப் பெண்கள் இனிப்பு வாசனையும், சுவை மிகுந்த பழுத்த சப்போட்டாக்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட அளவு சப்போட்டாவை சாப்பிடும் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு எந்த பக்க விளைவும் ஏற்பட்டதில்லை. ஆனால், சில கர்ப்பிணிப் பெண்களுக்கு, இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதால் பின்வரும் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
சப்போட்டா பழங்கள் அதிக கலோரிகளை கொண்டது, எனவே கர்ப்பகாலத்தில் இந்தப் பழத்தை தொடர்ந்து உண்பதால் எதிர்பாராத அளவு கர்ப்பிணிகளின் எடை அதிகரிக்கலாம். இந்த கூடுதல் எடை மற்ற ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
சப்போட்டா பழத்தில் அதிக சேக்ரோஸ் மற்றும் பிரக்டோசு அளவுகள் இருக்கின்றன. இந்தப் பழத்தை அதிகம் உண்பதால் கர்ப்பிணிகளின் இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதுடன் கெஸ்டெஷனல் டயபிட்டிஸையும் ஏற்படுத்தும்.
கர்ப்பிணிகள் கூடுதல் சப்போட்டாவை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இது டிஹைட்ரேஷனை அதிகரிப்பதுடன் மற்ற மருத்துவம் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் செர்ரி பழத்தின் நன்மைகள் & பக்க விளைவுகள்
பரிந்துரைக்கப்பட்ட சப்போட்டா பழத்தின் அளவை உட்கொள்ளவும், அவர்களது கிரேவிங்களை பூர்த்தி செய்யவும் சப்போட்டா பழத்தை மில்க்ஷேக்காக அருந்துவது மிக சரியான வழியாக இருக்கும். ஒரு ஹெல்தி சிக்கூ மில்க்ஷேக்கை தயாரிப்பதற்கான எளிமையான ரெசிப்பி:
1 அல்லது 2 பழுத்த சப்போட்டா பழங்கள்
1 கப் பால்
தேன்/சர்க்கரை
திக் சிக்கூ மில்க் ஷேக்கைப் பெற, ஒரு பிளெண்டரில் மேல் கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் ஓடவிடவும். சப்போட்டா பழம் கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய பழம் அல்ல. ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கான கூடுதல் எடை அதிகரிப்பு மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோயைத் தவிர்க்க இந்தப் பழத்தை அளவாக சாப்பிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் சப்போட்டா பழத்தை தங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது .
உங்கள் கர்ப்ப கால ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்ற, பாதுகாப்பான மற்றும் நம்பகமான தயாரிப்புகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest




Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each




Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress




Compression Stocking Socks - S
Compression Stockings for Varicose Veins | Reduces Swelling | Boosts Blood Circulation







This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |