hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • ஐவிஎஃப் பிரக்னன்ஸி(IVF pregnancy) : தேவை மற்றும் செயல்முறை arrow

In this Article

    ஐவிஎஃப் பிரக்னன்ஸி(IVF pregnancy) : தேவை மற்றும் செயல்முறை

    Pregnancy Journey

    ஐவிஎஃப் பிரக்னன்ஸி(IVF pregnancy) : தேவை மற்றும் செயல்முறை

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    இன்றைய நவீன உலகில் மன அழுத்தம் என்பது அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில், தம்பதிகளுக்கு ஐவிஎஃப் சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

    ஐவிஎஃப் என்றும் அழைக்கப்படும் இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் செயல்முறையானது ஒரு பெண் கருத்தரிக்க உதவுகிறது. பொதுவாக ஐவிஎஃப் செயல்முறையின்போது, பெண்களின் உடலில் அல்லாமல், ஒரு சோதனைக் குழாயில் தான் விந்தணு மற்றும் முட்டையின் கருவுறுதல் நடைபெறுகிறது.

    ஐவிஎஃப் என்றால் என்ன?

    ஒரு பெண்ணின் கருவுறுதலுக்கு உதவும் செயற்கை செயல்முறையே ஐவிஎஃப் ஆகும். இந்த செயல்முறையின்போது, முட்டை மற்றும் விந்தணு செயற்கை முறையில் இணைக்கப்பட்டு கருவணு (சைகோட்) உருவாக வழிவகுக்கும். மாற்றிப் பொருத்த கருவணு தயாரான பிறகு, இது ஒரு பெண்ணின் உடலுக்குள் வைக்கப்படுகிறது. அதோடு, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க அப்பெண்ணின் உடலைத் தயார் செய்ய அவருக்கு ஐவிஎஃப் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

    ஒரு பெண் எப்போது ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொள்ள பேண்டும்?

    பின்வரும் நேர்வுகளில் ஐவிஎஃப் மேற்கொள்வது கருதப்படுகிறது:

    • கருத்தடைக்கு முன்

    கருத்தடை சிகிச்சை முறையில் கருக்குழாய்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டோ அல்லது அடைக்கப்பட்டோ விடுகின்றன. அவ்வாறு கருக்குழாய்கள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு பெண் மீண்டும் கருவுற விரும்பினால் கருத்தடை சிகிச்சை மீள்திருப்ப அறுவை சிகிச்சைக்கு பதிலாக ஐவிஎஃப் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

    • மருத்துவ ரீதியிலான பிரச்சினைகள்

    கருக்குழாய்களில் அடைப்பு அல்லது ஏதேனும் காயம் இருக்கும் பட்சத்தில், முட்டையானது கருவுறுவது அல்லது கருவணு கர்ப்பப்பையை சென்றடைவது போன்ற நிகழ்வுகள் நடப்பது சவாலாக இருக்கும். இது போன்ற சமயத்தில், ஐவிஎஃப் பரிந்துரைக்கப்படுகிறது.

    • கருப்பையில் கட்டிகள்

    சதைக்கட்டிகள் என்பது கருப்பையில் ஏற்படும் தீங்கிலாக் கட்டி ஆகும். பெரும்பாலான பெண்களுக்கு அவர்களது 30வது மற்றும் 40வது வயதில் இது போன்ற கட்டிகள் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. கருவுற்ற முட்டையின் உட்பதித்தல் செயல்முறையை இது போன்ற சதைக்கட்டிகள் தடுக்கின்றன.

    • சூலகத்தின் செயலிழப்பு

    ஓவுலேஷன் செயல்முறையின் போது தரமான முட்டை வெளியிடப்படாமல் இருந்தாலும் அல்லது ஓவுலேஷன் நடைபெறாமல் போனாலோ கருவுறுதலுக்கு மிகச் சில முட்டைகளே கிடைக்கும்.

    • காரணம் அறியப்படாத மலட்டுத்தன்மை

    சரியான காரணத்தை அறிய பல சோதனைகள் செய்த போதிலும் காரணம் தெரியப்படாமல் இருக்கும் மலட்டுத்தன்மை.

    • புற்றுநோய் போன்ற நாள்பட்ட மற்றும் உறுப்புசார் நோய்கள்

    உங்கள் கருவுறுதல் தன்மையை பாதிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ள உள்ளீர்கள் என்றால் ஐவிஎஃப்-யை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். முட்டைகளை வெளியிடத் தயாராக உள்ள சூலகத்தை ஒரு பெண் கொண்டிருக்கும்போது, அதனை கருவுறுதலுக்கு முன்பாக உறைய வைத்து பின்னர் பயன்படுத்தி கொள்ளலாம். மாற்றாக, கருவுற்ற முட்டைகளையும் உறைய வைக்கலாம்.

    • குறைந்த அளவிலான அல்லது தரம் குறைந்த விந்தணு

    குறைந்த செறிவு, குறைந்த நகர்த்திறன் (மோசமான இயக்கம்) அல்லது அளவு மற்றும் வடிவத்தில் அசாதாரணங்கள் இருந்தால், விந்தணுக்கள் முட்டையை அடைந்து கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கலாம். விந்தணுவில் அசாதாரணங்கள் கண்டறியப்பட்டால், கருவுறாமை நிபுணரின் ஆலோசனை தேவைப்படலாம்.

    • எண்டோமெட்ரியோசிஸ்

    இதில் கருப்பையின் புறணி போன்ற திசுக்கள், கருப்பையின் வெளியே ஃபெலோபியன் குழாய்கள், இடுப்பு, யோனி மற்றும் குடல் உட்பட உடலின் பிற பகுதிகளில் காணப்படுகிறது.

    • மரபியல் நிலை

    உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ ஏதேனும் பரம்பரை பரம்பரையாக வரக் கூடிய ஏதேனும் நோய் உண்டாகும் அபாயம் இருந்தால் நீங்கள் ஐவிஎஃப் சிகிச்சையை தேர்வு செய்யலாம். அனைத்து மரபியல் நிலைகளும் கண்டறியப்படாவிட்டாலும், முட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு கருவுற்ற பிறகு குறிப்பிட்ட மரபியல் பிரச்சனைகள் உள்ளதா என்பது சோதிக்கப்படுகின்றது. பிரச்சனைகள் இல்லாத கருக்களை கருப்பையில் வைக்கப்படுகின்றன.

    ஐவிஎஃப் சிகிச்சை என்றால் என்ன?

    ஐவிஎஃப் என்பது பல படிகளைக் கொண்ட ஒரு சவாலான செயல்முறை ஆகும். இது முடிய சராசரியாக நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம். இது முட்டையை மீட்டெடுப்பதற்கு முன்பில் இருந்து கர்ப்ப பரிசோதனை உறுதிப்படுத்தப்படும் வரை உள்ள காலத்தை உள்ளடக்குகிறது.

    பொதுவாக கருவுறாமை பிரச்சனைகள் அல்லது தம்பதியில் ஒருவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு இருப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஐவிஎஃப் தேர்வு செய்யப்படுகிறது. அதே போல், முன்னதாக தாம் மேற்கொண்ட கருவுறுதல் சிகிச்சைகள் வேலை செய்யாமல் போனாலோ அல்லது அவர்கள் கர்ப்பம் தரிக்கும் வயதைக் கடந்திருந்தாலோ ஐவிஎஃப் சிகிச்சையை தேர்வு செய்கின்றனர். அதுமட்டுமல்ல, ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகளுக்கு ஐவிஎஃப் ஒரு சாத்தியமான செயல்முறையாகும்.

    இந்தியாவில் ஐவிஎஃப் சிகிச்சைக்கான செலவு

    இந்தியாவில் ஐவிஎஃப் சிகிச்சைக்கான செலவு ரூ 1 முதல் 3 லட்சம் வரை ஆகும். இதில் பதிவுக் கட்டணம், ஹார்மோன்கள், மருந்துகள், ஆலோசனைக் கட்டணங்கள், செயல்முறை மற்றும் செயல்முறைக்கு பிந்தைய கவனிப்பு ஆகியவை அடங்கும்.

    இதையும் படிக்கலாமே! - ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய(கர்ப்பம் பொருத்துதல்) பிரக்னன்ஸி இம்பிலாண்டேஷன் அடையாளங்களும் அறிகுறிகளும்!

    முடிவுரை

    ஆய்வகக் கருவுறுதல் என்பது பெண்ணின் உடலுக்கு வெளியே ஆண் விந்து மற்றும் பெண் முட்டையை செயற்கையாக கருவூட்டும் ஒரு முறை ஆகும். இயற்கையாக கருத்தரிக்க முடியாத தம்பதிகள், ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகள் அல்லது தனிப் பெற்றோர்களால் இந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளப்படுகிறது. விந்து அல்லது முட்டையானது சிகிச்சை எடுத்துக்கொள்ளும் தம்பதியினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் அல்லது டோனரிடம் இருந்து பெறப்பட்டதாகவும் இருக்கலாம். டோனர் கொடுக்கும் பட்சத்தில் அவரது பெயர் தெரியாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. ஐவிஎஃப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், இன்றே உங்கள் மருத்துவரை அணுகவும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.