Baby Care
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பேபி கேரி நெஸ்ட் வாங்கியிருக்கிறீர்கள் என்றால், காலப்பருவத்துக்கு ஏற்ப குழந்தையை எப்படி ஆடை அணிவது என்பதையும் நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் குழந்தையை கேரி பேக்கில் எடுத்துச் செல்லும்போது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் ஒன்று, குழந்தைக்கு ஒரு அடுக்கு கொண்ட ஆடை அணிவிப்பது. இரண்டாவது அடுக்காக அந்த கேரி பேக்கே சில நேரங்களில் இருக்கும். மேலும், பருவகாலத்திற்கு ஏற்ப மற்றுமொரு அடுக்கு ஆடையும் நீங்கள் குழந்தைகளுக்கு அணிவிக்கலாம்.
நீங்கள் வசிக்கும் பகுதி, குழந்தை இருக்கும் வெளிப்புற சூழள் இவற்றை மனதில் கொண்டு குழந்தைக்கு எத்தனை அடுக்கு ஆடைகள் நீங்கள் மனதில் கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியமானது. இங்கிலாந்து போன்ற நாடுகளில், குளிர்ந்த காலநிலையில் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிக அடுக்கு ஆடை அணிவார்கள். தவிர, சீசனின் போது கேரி பேக்கே ஒரு கூடுதல் அடுக்கு ஆடையாகப் பணியாற்றும்.
வீட்டிற்குள் கேரி பேக்கைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், குழந்தையைச் சூடாக வைத்திருக்க ஒரு தொப்பி, காலணி மற்றும் ஒரு கோட் அணிவிக்கலாம். இது உங்கள் குழந்தை அதிக வெப்பமடைவதைத் தடுக்க உதவும். எந்தச் சூழலிலும் குழந்தையின் முகத்தை மறைக்காமல் வைத்திருப்பது அவசியம் . குழந்தையின் முகத்தில் எவ்வித ஆடையும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தையின் உடல் வெப்பநிலையைக் கண்காணித்து ஆடைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். பேபி ஸ்லீப்பிங் பேகில் குழந்தை உறங்குகிறது என்றால், இலகுரக காட்டன் சட்டை மற்றும் தொப்பியுடன் கூடிய பேண்ட்டை அணிவிக்கலாம். இது கோடை காலத்திற்கும் ஏற்ற உடை ஆகும். நீங்கள் பருவத்துக்கு ஏற்ப எவ்வாறு உடை அணிகறீர்களோ அதேபோல குழந்தைக்கும் அணிவிப்பதை விதியாகப் பின்பற்றுங்கள்.
கோடைக் காலத்தில் பாதங்களை மறைக்கும் பருத்தி உடையை அணிவிக்க விரும்பினால், பெரிய அளவைத் தேர்வுசெய்வது பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தையின் கால்களில் இதனால் அதிக அழுத்தம் இருக்காது. இல்லையெனில், கால் இல்லாத காட்டன் சூட்டையும் உபயோகிக்கலாம்.
குளிர் காலத்தில், தொப்பி, வார்ம் பிளாங்கட், கால் கையுறை ஆகியவற்றை உபயோகிக்கலாம். முகத்தை மூடாதிருப்பது அவசியம். கோடைக்காலத்தில் தடிமனான கம்பளி உடைகளைத் தவிர்க்கவும், குறிப்பாக பேபி ஸ்லீப்பிங் கேரி பேக்கில் உங்கள் குழந்தையை எடுத்துச் செல்ல திட்டமிட்டால் இது உகந்ததல்ல.
மெத்தை போன்ற மற்றும் சூடான குழந்தைகளுக்கான ஸ்லீப்பிங் பேக் உபயோகித்தால் குழந்தையின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்க முடியாது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் விஷயத்தில் உடல் வெப்பத்தைக் கவனத்தில் கொள்வது மிக அவசியம். .
அனைத்து பருவங்களிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு பின்வரும் அம்சங்களைக் கொண்திருக்கவேண்டும்.
நல்ல பட்டைகள் மற்றும் மென்மையான கேரியர் கொண்ட பேபி நெஸ்ட் லீப்பிங் பேக், குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்களுக்கு வசதி தருகிறது . அதுமட்டுமின்றி, கேரி நெஸ்டின் சிறந்த ஆதரவு உங்கள் குழந்தைக்கு வலுவாகத் தாங்குவதை உறுதி செய்கிறது!
கேரியர் நெஸ்ட் வசதியான இருக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். குழந்தையின் நெஸ்ட்டை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது குழந்தையின் எடை சமமாக விநியோகிக்கப்பட வேண்டும்.
துவைக்கதத்தக்க கேரி பேக்கைத் தேர்வு செய்யுங்கள். காபி கறை அல்லது உங்கள் குழந்தையின் துப்புதல் போன்றவற்றை அகற்றுவது சுலபமானதாக இருக்கவேண்டும்!
இதையும் படிக்கலாமே! - குழந்தை பேபி ஸ்லீப்பிங் கேரி பேக்கில் கொசுக்களிடமிருந்து பாதுகாக்கப்படுகிறதா?
குழந்தையை தூங்கும் கேரி பேக்கில் எடுத்துச் செல்வது, உடள்அதிக வெப்பம் இன்றி அல்லது பிற தொடர்புடைய சிக்கல்கள் இன்றி இருப்பது போன்றவைக்கு ஏற்ப குழந்தையின் ஆடையைத் தீர்மானிப்பது சவான ஒன்று. இருப்பினும், மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, கொசுவலையுடன் கூடிய பேபி ஸ்லீப்பிங் பேகில் குழந்தை பயணத்தை நிச்சயம் அனுபவிக்கும்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |