This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள், தைராய்டு தலைகீழ் மாற்றத்திற்கான சிகிச்சை மற்றும் சிகிச்சை

Common Health Problems
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள், தைராய்டு தலைகீழ் மாற்றத்திற்கான சிகிச்சை மற்றும் சிகிச்சை
Read time6 min

தைராய்டு என்றால் என்ன?

தைராய்டு என்பது கழுத்தில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பியாகும் (எண்டோக்ரின் சுரப்பி). இது கழுத்தின் முன் பகுதியில் மூச்சுக் குழாயை சுற்றியுள்ள, பட்டாம்பூச்சி வடிவத்திலான ஒரு சிறிய உறுப்பு ஆகும். தைராய்டு சுரப்பியானது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு துணை புரிகின்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

ஹைப்பர்தைராய்டிசம் என்றால் என்ன?

ஹைப்பர்தைராய்டிசம் என்பது தைராக்சின் என்னும் தைராய்டு ஹார்மோனை உடல் அதிகப்படியான அளவில் உற்பத்தி செய்யும் போது ஏற்படுகிற ஒரு பிரச்சினையாகும். இது ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதால், வேகமாக உடல் எடை குறைகிறது, மேலும் நிலையற்ற இதயத்துடிப்பு ஏற்படவும் காரணமாக அமைகிறது.

தைராய்டை குணப்படுத்த முடியுமா?

தைராய்டு இயல்பான முறையில் செயல்படுவதற்கு நோயாளி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். ஹைப்பர்தைராய்டிசத்தை குணப்படுத்துவதற்கு உதவும் ஆற்றல் வாய்ந்த சிகிச்சைகள் ரேடியோஆக்ட்டிவ் ஐயோடின்,தைராய்டு எதிர்ப்பு மருந்துகள், மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை ஆகும்.

ஹைப்பர்தைராய்டிசத்தின் அறிகுறிகள்

  • எதிர்பாராத எடை குறைவு

ஹைப்பர்தைராய்டிசத்தின் முதன்மையான அறிகுறியே எதிர்பாராத எடை குறைவு தான். இது உங்கள் வழக்கமான உணவுமுறை மற்றும் உணவு எடுத்துக் கொள்ளும் அளவுகளில் மாறுதல் எதுவும் இல்லாத போதும் ஏற்படக் கூடும்.

  • ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

தைராய்டு செயலிழப்பின் காரணமாக ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்படும், இதன் விளைவாக நெஞ்சு வலி, தலை சுற்றல், மயக்கம் அல்லது நெஞ்சில் படபடப்பு போன்றவை ஏற்படக் கூடும்.

  • பசி அதிகரிப்பது

பசி அதிகரிப்பது ஹைப்பர்தைராய்டிசத்தோடு தொடர்புடையது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும்.

  • பதற்றம் மற்றும் கவலை

ஓவர்ஆக்டிவ் (மிகைப்பு) தைராய்டின் காரணமாக பதற்றமும், கவலையும் கூட ஏற்படக் கூடும்.

தைராய்டு செயலிழப்பு பிரச்சினையை நிரந்தரமாக குணப்படுத்துவது எப்படி?

தைராய்டு பிரச்சினையை முழுமையாக குணப்படுத்த முடியாது என்று பொதுவாகவே பலர் விவாதம் செய்வார்கள். இது குணமடைந்த நோயாளிகள், தாங்கள் குணமான பின்னர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பேணத் தவறுவதால் ஏற்படுகிறது என்பது உண்மை தான். தைராய்டு பிரச்சினையை சரி செய்வதற்கான சில பயனுள்ள வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

  • சமச்சீர் உணவுமுறையை பேணுதல்

தைராய்டை குணப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு, சமச்சீர் உணவுமுறையை பேணுவது ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த வழியாகும். கொட்டை பருப்புகள், விதைகள், உலர் பழங்கள், காய்கறி எண்ணெய், தானியங்கள், பீன்ஸ், அவரையினம், சர்க்கரை, சாக்லேட், மற்றும் நைட்ஷேடு காய்கறிகள் (சோலனேசியா குடும்ப காய்கறிகள்) போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மது, காபி, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கூட கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

  • இயற்கை உணவுகளை உண்ணுதல்

தைராய்டை குணப்படுத்துவதற்கு உதவும் இன்னொரு ஆற்றல்மிக்க வழி, இயற்கை உணவுகளை உட்கொள்வது தா. ஐயோடின், செலினியம், மற்றும் வைட்டமின் டி சத்துகள் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவும். மேலும், ப்ரோபயாடிக்குகள், குர்குமின் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். பெண்களின் ஹார்மோனை சமநிலைப்படுத்துவதற்கு உதவும் சேஸ்ட் பெர்ரியை உட்கொள்வதும் கூட அவசியமாகும்.

  • மன அழுத்தத்தை குறைப்பது

பெரும்பாலான நோய்கள் ஏற்படுவதற்கான முதன்மையான உள்ளார்ந்த காரணம் மன அழுத்தம் தான். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையை வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு தியானம் போன்றவற்றை முயன்று பார்க்கலாம்.

உங்கள் தைராய்டு மேம்படுவதற்கு உதவும் உணவுகள்

தைராய்டு நோயாளிகளுக்கான சமச்சீர் உணவு அல்லது தைராய்டை குணப்படுத்த உதவும் உணவுகள், ஐயோடின் இல்லாத உப்பு, முட்டையின் வெள்ளைக்கரு, கொட்டை வெண்ணெய், உப்பில்லாத கொட்டைகள், ஓட்ஸ், உருளைக்கிழங்குகள் மற்றும் உப்பு, முட்டை அல்லது பால்சார் பொருட்கள் எதுவுமின்றி வீட்டிலேயே செய்யப்படும் ரொட்டி போன்றவை ஆகும். உட்கொள்ள வேண்டிய உணவுகளின் முழுப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பால்சார் பொருட்கள்

தைராய்டு நோயாளிகள் பால்சார் பொருட்களை எடுத்துக் கொள்வதை பொறுத்த வரையில் பல முரண்பட்ட கருத்துகள் உள்ளன. எனினும், கொழுப்பில்லாத பால்சார் பொருட்களையே பெரும்பாலும் தைராய்டு நோயாளிகள் எடுத்துக் கொள்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

  • புரோட்டீன் நிறைந்த உணவு

தைராய்டு நோயாளிகளின் சமச்சீரான உணவில் புரோட்டீன் நிறைந்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறப்பானது. முட்டை மஞ்சள்கரு, எல்லா வகையான மாமிச உணவு மற்றும் கடல்சார் உணவுகள் போன்றவை இதில் அடங்கும்.

  • காய்கறிகள்

முட்டைகோஸ், கார்டன் கிரெஸ், காலிஃப்ளவர், கேல், ப்ரோக்கோலி, பாக் சாய், மற்றும் கிளைக்கோசு போன்ற க்ருசிஃபெரஸ் காய்கறிகளை சிறிதளவு எடுத்துக் கொள்வது நல்லது.

  • ஊட்டச்சத்துகள்

செலினியம் மற்றும் ஐயோடின் போன்ற நுண்ணூட்டப் பொருட்கள் நிறைந்துள்ள உணவுகளை தைராய்டு நோயாளிகள் உண்ண வேண்டும்.

தைராய்டை குணப்படுத்துவதற்கான யோகா

யோகா மூலம் தைராய்டை குணப்படுத்துவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உதவக் கூடிய சில போஸ்கள் இதோ.

  • சப்போர்ட்டட் ஷோல்டர் ஸ்டாண்ட்

தைராய்டு சிகிச்சைக்கு உதவக் கூடிய மிக பயனுள்ள போஸாக சப்போர்ட்டட் ஷோல்டர் ஸ்டாண்ட் கருதப்படுகிறது. இந்த யோகா போஸில், நீங்கள் மல்லாக்க படுத்துக் கொள்ள வேண்டும், பின்பு கால்களை மேலே உயர்த்தி, உங்கள் கீழ் முதுகினை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். உங்கள் முகவாய் நெஞ்சில் இடிக்கும் அளவிற்கு உயர்த்த வேண்டும். இதனால் காயம் ஏற்படும் வாய்ப்புள்ளதால் இது எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை.

  • ப்ளோ போஸ்

தைராய்டை குணப்படுத்துவதற்கான இன்னொரு ஆற்றல் வாய்ந்த ஒன்று ப்ளோ போஸ் எனப்படும். இது மல்லாக்க படுத்துக் கொண்டு, கால்களை உயர்த்தி, கால்களை தலைக்கு பின்புறம் கொண்டு சென்று வைத்துக் கொண்டு, கைகளை இரு பக்கங்களிலும் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை கால்களை தரை வரைக்கும் கொண்டு செல்ல முடியவில்லையென்றால், ஒரு தலையணையை கால்களை தாங்குவதற்கு வைத்துக் கொள்ளலாம்.

  • ஃபிஷ் போஸ்

ஃபிஷ் போஸ், ஷோல்டர் ஸ்டாண்ட் யோகா போஸிற்கு மாற்றாக செய்யப்படும் யோகா போஸ் ஆகும். இது மல்லாக்க படுத்துக் கொண்டு கால்களை நீட்டியவாறு, முன்னங்கைகள் மற்றும் முழங்கைகளை ஊன்றிக் கொண்டு, நெஞ்சினை மட்டும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.

  • லெக்ஸ் அப் தி வால் போஸ்

இது சுவரை நோக்கி மல்லாக்க படுத்துக் கொண்டு, 90 டிகிரிக்கு கால்களை தூக்கி சுவற்றில் சாய்த்து வைத்துக் கொள்ளும் எளிமையான யோகா போஸ் ஆகும்.

  • கேட்-கௌ போஸ்

உங்கள் உடல் எடையை கால் மூட்டுகளிலும், உள்ளங்கைகளிலும் தாங்கியவாறு செய்யப்படுவது கேட்-கௌ போஸ் எனப்படுகிறது. இந்த போஸில் நின்று கொண்டு, முகவாயை நெஞ்சுக்கு அருகே கொண்டு வர வேண்டும், உங்களின் தொண்டையை விரிவாக்குவதற்கு மீண்டும் முகவாயை உயர்த்த வேண்டும்.

  • போட் போஸ்

போட் போஸ் உட்கார்ந்தவாறு செய்யப்படுகிறது, பிடிமானமின்றி சமாளிக்க வேண்டிய தேவையுள்ளது. இந்த போஸில் சுவாசிக்கும் போது, லேசாக முகவாய் உள்நோக்கி இழுக்கப்படுகிறது.

  • கேமல் போஸ்

கேமல் போஸ் என்பது, தைராய்டு சுரப்பியை தூண்டுவதன் பொருட்டு கழுத்தை திடமாக வெளிப்பக்கம் நோக்கி நீட்டியவாறு செய்யப்படுகிறது.

  • கோப்ரா போஸ்

இது குப்புற படுத்துக் கொண்டு, கழுத்தை முழுமையாக வெளிப்பக்கம் நீட்டியவாறு செய்யப்படும் யோகா போஸ் ஆகும்.

இவை ஹைப்பர்தைராய்டிசம் பிரச்சினையை குணப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு உதவும் பயனுள்ள வழிகளாகும்.

இதையும் படிக்கலாமே! - பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்றால் என்ன? இதை எப்படி குணப்படுத்தலாம்?

Article Posted Under

Related Articles

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.