This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

வயது தெரியாமல் இளமையாகத் தோன்ற தேவையான முக்கிய குறிப்புகள்

BeautyTips
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 20, 2026
வயது தெரியாமல் இளமையாகத் தோன்ற தேவையான முக்கிய குறிப்புகள்
Read time5 min

விளக்கம்

காலத்தையும் வயதாவதையும் நிறுத்த முடியாது. நீண்ட காலத்திற்கு இளமையாகத் தோன்ற விரும்பும் ஒருவர் சீக்கிரமே அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கவேண்டும். ஏனெனில், இளமையில் உண்ணும் உணவும் பின்பற்றும் வாழ்க்கைமுறையுமே வயதாகும்போது ஒருவர் பார்ப்பதற்கு எப்படி இருப்பார் என்பதைத் தீர்மானிக்கும். நீண்ட ஆயுளை மேம்படுத்தப் பல வழிகள் உள்ளன. அப்படி வாழும் ஒருவர் இளமையாகத் தோன்றுவதும் உணர்வதும் உள்ளிருந்து வெளிவர வேண்டிய ஒரு முழுமையான செயல்முறையாகும். வயதானவர் போலில்லாமல் இளமையாகத் தோற்றமளிக்க விரும்புவோர் பின்பற்றவேண்டிய சில உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.

1. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவை உண்ணுதல்

ஆக்ஸிஜனேற்றத்தடுப்பிகள் (antioxidants) என்பவை உடலில் அழற்சியையும் நிலையற்ற மூலக்கூறுகள் (free radicals) ஏற்படுத்தும் சேதத்தையும் எதிர்த்துப் போராடுகின்றன. மாதுளை, நெல்லி, எலுமிச்சை, கொய்யா, தக்காளி போன்ற பழங்கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பிகள் நிறைந்தவை. இவற்றை உண்பது சருமத்திற்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்.

2. தவறாமல் உடற்பயிற்சி செய்தல்

மக்கள் அன்றாட வாழ்க்கையில் வேலைகளில் மூழ்கி, தங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள். இளமையாகத் தோற்றமளிக்கவும், வயதாவதால் உடலில் நேரும் மாற்றங்களைத் தவிர்க்கவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது பயன் தரும். நடைப்பழக்கத்தை மேற்கொள்ளுங்கள் அல்லது யோகா வகுப்புகளில் சேருங்கள். உடல் தோரணையை மேம்படுத்த உதவும் உள்ளுறுப்புப் பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள்.

3. போதுமான அளவு தண்ணீர் குடித்தல்

உடல் நீரை இழந்தால் நம் சருமம் சுருக்கங்களுடையதாகவும் மங்கியதாகவும் மட்டுமல்லாமல், முதிர்ந்ததாகவும் தோற்றமளிக்கிறது. அதனால், தினமும் நிறையத் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கவேண்டும். தண்ணீரானது தீங்கு விளைவிக்கும் நச்சுகளை உடலில் இருந்து அகற்றி சருமத்தைப் பளபளப்பாக்குகிறது. சருமத்தின் pH அளவை சமப்படுத்த உதவுகிறது.

4. நிறையப் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடுதல்

பழங்களும் காய்கறிகளும் உடலின் காரத்தன்மையை மேம்படுத்தி, கல்லீரலின் நச்சுத்தன்மையை அகற்றுகின்றன. பச்சைக்காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவது நச்சுத்தன்மையை நீக்குவதற்கான சிறந்த வழியாகும். எலுமிச்சை, கேரட், பீட்ரூட், வெண்ணெய், கீரைகள், பப்பாளி போன்றவை சருமத்தை இளமையாகத் தோற்றமளிக்கச் செய்கின்றன.

5. சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ளுதல்

தோலில் புறஊதாக் கதிர்கள் படப்பட, அதில் சுருக்கங்கள், இறந்த செல்கள், கரடுமுரடான தன்மை, புள்ளிகள் போன்ற வயது தொடர்பான மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. சன்ஸ்கிரீன் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் வெப்பத்தடுப்பிகளைத் தவறாமல் பயன்படுத்துவது சருமம் முதிர்வதைத் தடுப்பதோடு சுருக்கங்களையும் திட்டுக்களையும் குறைக்கிறது.

6. உங்கள் தோரணையை சரியாகவைத்தல்

நல்ல தோரணை ஒரு நபரை உயரமாகவும் ஒல்லியாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கச் செய்கிறது. தோரணையை மேம்படுத்துவது ஒரு நபரை இளமையாகவும் உடலுறுதி கொண்டவராகவும் தோற்றமளிக்கச் செய்கிறது. நல்ல தோரணை நேர்மறையான தன்னம்பிக்கையுடனும் இளமைத்தோற்றத்துடனும் தொடர்புடையது.

7. ஒழுங்காகத் தூங்குதல்

நல்ல தூக்கம் இல்லாவிட்டால், கண்களுக்கு அடியில் பைகள் தோன்றும்; உடலின் ஆற்றல் குறையும். இளமையாகத் தோற்றமளிக்க வேண்டுமானால் தவறாமல் சரியான நேரத்தில் தூங்குவது அவசியம். தினசரி இதை வழக்கமாக்கிப் பின்பற்றுவது உடலை இயற்கையான தூக்கமுறைக்கு மாற்றியமைத்துப் பலன் தரும்.

8. சருமத்தைப் பாதுகாத்தல்

ஆளி விதைகள், சப்ஜா விதைகள் போன்றவை முதுமையைத் தடுக்கும் (anti-ageing) ஆல்பா லிபோயிக் அமிலம் (alpha lipoic acid) நிறைந்தவை. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சருமநலனுக்கு உதவும் ரெட்டினோல் பால்பொருட்களில் உள்ளது. பாலேடுகளைப் பூசியும் தேவையென்றால் ரெட்டினோல் கொண்ட களிம்புகளைப் பயன்படுத்தியும் சருமத்தை நன்கு பேணலாம்.

9. தோல் பராமரிப்பை வழக்கமாக்கிக்கொள்ளுதல்

காலம் கடந்துவிடும் முன், தோல் சேதத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்குங்கள். தோல் பராமரிப்புக்கான ஒரு நல்ல வழக்கத்தைப் பின்பற்றவும். மிதமான தூய்மிகளையும் (cleansers) இறந்தசெல்நீக்கிகளையும் (exfoliants) பயன்படுத்துங்கள், மேலும் இரவு சீரம் (serum) பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஈரப்பதமாக்கிகளை (moisturisers) தினசரி பயன்படுத்துவது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து அதை நீரிழப்பிலிருந்து பாதுகாக்கிறது.

10. மது மற்றும் காஃபியைக் குறைவாகக்குடித்தல்

அதிகப்படியான மது, காஃபி ஆகியவற்றை அருந்துவது சருமத்தை நீரிழக்கச்செய்து, அதை முதிர்ந்ததாகவும் மங்கியதாகவும் தோற்றமளிக்கச் செய்யும். இது அத்தியாவசியமான ஊட்டப் பொருட்களை உடல் உள்ளீர்ப்பதைத் தடுக்கும். எனவே, இரண்டையும் மிதமாக அருந்தவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் வயதுக்கான தோற்றத்தை விட 10 வயது குறைந்த தோற்றம் பெறுவது எப்படி?

உங்களை இளமையாகக் காட்டும் ஒப்பனையை அணியலாம். பல ஒப்பனை பாணிகள் இளமையான தோற்றத்தைத் தரக்கூடியவை. இது இயற்கை அம்சங்களை இன்னும் ஈர்க்கும் வண்ணம் மாற்றும். கீழே குறிப்படப் பட்டவற்றைச் செய்து பயன்பெறலாம்:

1. கிரீமி கன்சீலரைப் (creamy concealer) பயன்படுத்தவும்.

2. கன்னத்து எலும்புகளின் மேற்புறம் ப்ளஷைத் (blush) தடவவும்.

3. கருப்பு நிற ஐலைனருக்கு பதிலாக பழுப்பு நிற ஐலைனரைப் பயன்படுத்தவும். வயதாகும்போது, கருப்பு முகத்தில் தனியாகத் தெரியத் தொடங்குகிறது. பழுப்பு நிற ஐலைனர் மென்மையான தோற்றத்தை அளிக்கிறது.

4. கண் இமைகளில் கவனம் செலுத்தவும்.

5. உதட்டுச்சாயங்களின் நிறத்தைக் கம்மியாக்கவும். வெளிர் நிற லிப்ஸ்டிக் பயன்படுத்துவது முகத்தை இளமையாகக் காட்டும். பளிச்சென்ற லிப்ஸ்டிக் அணிவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது வயதான தோற்றத்தை அளிக்கும்.

இதையும் படிக்கலாமே ! - வீட்டிலேயே செய்யக் கூடிய டாப் 10 மேக்-அப் ஹேக்ஸ்

இயற்கையாகவே இளமையாகத் தோன்றுவது எப்படி?

1. ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றவும்.

2. போதுமான அளவு நீர் குடிக்கவும்.

3. மது அருந்துவதைக் குறைக்கவும்.

4. இயற்கையான தோல் சிகிச்சைகளைப் பயன்படுத்தவும்.

5. தேவையானால் இணை உணவுகளை (food supplements) எடுத்துக்கொள்ளவும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.