This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your ovulation on mylo app

வீட்டிலேயே செய்யக் கூடிய டாப் 10 மேக்-அப் ஹேக்ஸ்

Makeup Hacks
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 22, 2026
வீட்டிலேயே செய்யக் கூடிய டாப் 10 மேக்-அப் ஹேக்ஸ்
Read time7 min

விரைவாக அழகுபடுத்திக் கொள்வதற்கு தேவையான, வீட்டிலேயே பின்பற்றக் கூடிய டாப் 10 மேக்-அப் ஹேக்ஸ்

நீங்கள் மேக்-அப் செய்வதில் அனுபவமற்றவராகவோ, மேக்-அப் செய்வதில் ஓரளவு நிபுணத்துவமும், அனுபவமும் பெற்றவராகவோ அல்லது உங்கள் கர்ப்பகாலத்தில் பொலிவுடன் தோன்றுவதற்கு விரும்புபவராகவோ இருக்கும் பட்சத்தில், சில மேக்-அப் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது உங்களுக்கு எப்போதுமே, எந்த நேரத்திலும் கை கொடுக்கக் கூடியதாக இருக்கும். உங்கள் கண் இமைகள், கன்னங்கள், கழுத்து, நெற்றி அல்லது உங்கள் அழகிய முகம் என எந்தவொரு பகுதியாக இருந்தாலும் சரி, அதனை மேற்கொண்டு அழகாக காட்டுவதற்கு தேவையான சில யுக்திகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. மேக்-அப்பின் அடிப்படைகள் எளிதாக இருப்பினும், வீட்டிலேயே எளிதாக செய்து கொள்ளக் கூடிய மேக்-அப் குறிப்புகளை தெரிந்து கொண்டு, அதனை முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் செய்யும் மேக்-அப் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது மட்டுமில்லாமல், பகலோ இரவோ எந்த நேரமானாலும் அதற்கான பாராட்டுதல்களையும் பெறும். உங்கள் மேக்-அப் ஸ்டைலை மேம்படுத்துவதற்கான 10 குறிப்புகளும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

முக்கோண வடிவத்தில் கண்களின் கீழ் கன்சீலரை போடுதல்

உங்கள் கண் இமைகளிலுள்ள கரும்புள்ளிகளையும், கறைகளையும் மறைப்பதற்காக கன்சீலர் பயன்படுத்துவது நன்றாக இருப்பினும், அதன் இயல்பான பருமனாக தெரியும் தோற்றத்தை கன்சீலர் போட்டு மறைக்காமல் இருப்பது தான் சிறந்தது. அதற்கு பதிலாக, உங்கள் கண்களின் கீழே முக்கோண வடிவில் கன்சீலரை அப்ளை செய்வதன் மூலம், உங்கள் கண்களின் கீழே சுத்தமாகவும், பளிச்சென்றும் இருக்கும். இதனால் உங்கள் கண்களின் கருமணி பிரகாசமாகவும், மிக அழகாகவும் தெரியும். மேக்-அப் நிபுணர்கள் கண்களுக்கு பயன்படுத்தும் உதவிகரமான மேக்-அப் குறிப்புகளில் இதுவும் ஒன்று.

உங்கள் புருவங்களை விரைவாக வீட்டிலிருந்த படியே சுயமாகவே ஷேப் செய்தல்

புருவங்களை அவ்வப்போது ஷேப் செய்து கொள்ள வேண்டும், இதற்காக பார்லருக்கு ஒவ்வொரு முறையும் செல்வது சற்று கடினமான காரியம் தான். அதற்கு பதிலாக, உங்கள் புருவங்களை நீங்களே சுயமாகவே வீட்டிலிருந்தபடியே ஷேப் செய்து கொள்வதற்கான மேக்-அப் குறிப்புகளை நீங்கள் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் வெளியே கிளம்பி செல்வதற்கு தயாராவதற்கு முன், இதனை நீங்களே சுயமாகவே செய்து கொண்டு சுத்தமாக, அழகாக தோன்றலாம். ஸ்பூலி ப்ரஷ்ஷை பயன்படுத்தி உங்கள் புருவங்களை ஷேப் செய்து கொள்ளவும், பின்பு ஐ-ப்ரோ பென்சிலை பயன்படுத்தி புருவங்களுக்கு வெளிக்கோடிடவும் (அவுட்லைன் போடவும்). அடுத்து, பென்சிலை பயன்படுத்தி நன்றாக உங்களின் புருவங்களில் வரைந்து கொள்ளவும், பின்பு சிறிதளவு வாசிலினை தடவி விட்டு விடவும். இதனால் புருவங்கள் ஒட்டிக் கொண்டும், சரியாக அதனிடத்தில் அமைந்த மாதிரியும் இருக்கும்.

சரியான ஐ-லைனரை பயன்படுத்தி உங்கள் கண்களின் ஷேப்பினை அழகுறச் செய்தல்

உங்கள் ஐ-லேஷ்களை (இமைமயிர்) அழகாக காட்டிக் கொள்ளும் போது தான், உங்கள் மேக்-அப் மிக கவர்ச்சிகரமாக, அழகாக தெரியும். உங்கள் கண்களின் ஷேப்பினை அழகாக காட்டும் லைனிங் தான் சிறந்ததாக கருதப்படும். உங்கள் கண்கள் உருண்டையாகவோ, பாதி மூடியது போன்றோ, மோனோலிட் (மேல் இமையில் கோடு இல்லாதது) போன்றோ, கீழ்நோக்கி இருப்பது போன்ற வடிவமோ, இதில் எதுவாக இருந்தாலும் சரியான ஐ-லைனரின் மூலம் உங்கள் ஐ-லேஷ்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். சரியாக லைனர்களை பயன்படுத்துவதே, மேக்-அப் செய்வதில் தொடக்க நிலையாளர்களுக்கான சிறப்பான மேக்-அப் குறிப்புகளில் ஒன்றாகும்.

உங்கள் லிப்ஸ்டிக் அழிந்து போகாமல் நீண்ட நேரம் தக்க வைத்திருத்தல்

சிறந்த லிப்ஸ்டிக்குகள் கூட கண்ணாடிக் கோப்பைகள், டிஷ்யூ பேப்பர்கள் மற்றும் இது போன்ற பிற மேற்பரப்புகளில் படும்போது கறையாக ஒட்டுகின்றன. இதனால் உங்கள் உதட்டில் உள்ள லிப்ஸ்டிக்கின் நிறம் சீக்கிரமே மங்கிப் போய், அதனை ஒளி இழந்து விட செய்து விடக் கூடும், இதனை தவிர்ப்பதற்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் மேக்-அப் குறிப்பின் மூலம் நீங்கள் ஒரு எளிதான உத்தியை கையாண்டு பார்க்கலாம். உங்கள் உதடுகளின் மீது மெலிதான டிஷ்யூவை வைத்து அழுத்தி, லேசாக ட்ரான்ஸ்லுசென்ட் பவுடரை தொட்டு தேய்த்து விடவும்.

ஃபவுண்டேஷன்-கன்சீலர் பயன்படுத்தி பொலிவான, மென்மையான சருமத்தினை பெறுதல்

நீங்கள் மேக்-அப் செய்வதற்கு அடித்தளமாக ஃபவுண்டேஷன் மற்றும் கன்சீலரின் கலவையை தேர்வு செய்யும் பட்சத்தில், அழகிய, நேர்த்தியான தோற்றத்தை பெறுவது மிக எளிதானது. இந்த இரண்டையும் மாய்ஸ்சுரைஸர் அல்லது எசென்ஷியல் எண்ணெயுடன் கலந்து மேக்-அப் போடுவதற்கு முன் பயன்படுத்தவும். இவ்வாறு செய்வது மேக்-அப் போடாமலேயே, உங்கள் சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் ஆக்கி, நீங்கள் அவசரமாக வெளியே கிளம்புகின்ற சூழலில் உங்களை அழகாக காட்டுகிறது. இதுவும் தொடக்க நிலையாளர்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் மேக்-அப் குறிப்புகளில் சிறந்த ஒன்றாகும்.

முழுமையான, அழகான தோற்றத்தை பெறுவதற்கு ஐ-லேஷ்களின் அடிப்பகுதிகளை அடர்த்தியாக ஆக்குதல்

மேக்-அப் செய்யும் போது, கண்கள் முழுமையாகவும், தனித்தும் தெரியும் போது தான் நீங்கள் மற்றவர்களை உங்கள் அழகால் கவர்ந்திழுக்க முடியும். இதனை ஐ-லேஷ்களை அடர்த்தியாக ஆக்குவதன் மூலம் சுலபமாக செய்யலாம். ஆம், இந்த மேக்-அப் குறிப்பினை பயன்படுத்தி உங்களால் விரைவாக செய்து முடிக்க முடியும். உங்கள் ஐ-லேஷ்களின் அடிப்பகுதியில் லைனர் போட்டாலே போதும். இதற்கு ஜெல் ஐ-லைனர் உபயோகிப்பது சிறந்தது. ஐ-லேஷ்களின் வேர்கள் வரையிலும் சென்று லைனரை போட வேண்டும்.

முகம் பொலிவுற ப்ளஷ் செய்தல்

உங்களுடைய சருமத்தில் நீங்கள் முதலில் ஃபவுண்டேஷனை போட விரும்பவில்லையென்றாலோ, அல்லது நீண்ட நேரம் மேக்-அப் போட்டுக் கொள்ளும் அவஸ்தையிலிருந்து நீங்கள் விடுபட விரும்பினாலோ, ப்ளஷ் செய்து கொள்ளலாம். ஃபவுண்டேஷன் போடுவதற்கு முன்பு உங்கள் கன்ன எலும்புகளிலிருந்து தொடங்கி, உங்கள் தாடை வரை ப்ளஷ் செய்து கொள்ளலாம். இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும். உங்கள் சருமத்தில் நீர்ச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவதும் அவசியமாகும். எண்ணெய்ப் பசையுள்ள சருமமும் நீண்ட நேரம் மிளிர்வதற்கு வேண்டிய மிகச் சிறப்பான மேக்-அப் குறிப்பு இதுவாகும்.

ஒரே நிமிடத்தில் கவர்ச்சியான, அழகிய கண்களை பெறுதல்

அழகிய, கவர்ச்சியான கண்களை பெறுவதற்கு நீங்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை, எளிதாக, சற்று நீளவாக்கில் மை அல்லது ஐ-லைனரை பயன்படுத்தி உங்கள் கண்களுக்கு மேலேயும், கீழேயும் வரையவும். க்ரீமி ஐ-லைனரை பயன்படுத்துவது இன்னும் சிறப்பான தோற்றத்தை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

உங்கள் லிக்விட் லிப்ஸ்டிக்-கை ஐ-லைனராக பயன்படுத்துவது

ஐ-லைனர் போட்டவுடன், அடுத்து, விளையாட்டாக இப்போது ஒன்றை முயன்று பார்ப்போம். ஐ-லைனரின் மீதே உங்கள் லிக்விட் லிப்ஸ்டிக்-ஐ போடுவதன் மூலம், அதனை வண்ணமயமாக்கலாம். இதனை எளிதாக அகற்றுவதற்கு சிறிதளவு மாய்ஸ்சுரைஸரோடு கலந்து போடவும். உங்கள் ஐ-லேஷ்களின் விளிம்புகளில் கூட லிக்விட் லிப்ஸ்டிக்-ஐ பயன்படுத்தலாம். வேறென்ன, வண்ணமயமான ஐ-லைனர் வாங்காமல் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் இது உதவுகிறது!

நகங்களில் நெயில் பெயிண்ட்-ஐ சுத்தமாக அகற்ற பேஸ் கோட்டிங்கில் க்ளூ (பசை)வை சேர்த்தல்

உங்கள் நகங்களில் உள்ள நெயில் பெயிண்ட்-ஐ அகற்றும் போது, அவற்றை முழுமையாக அகற்றி சுத்தப்படுத்துவதற்கு, ஒரு விரைவான யுத்தி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நகங்களில் நெயில் கலரை போடுவதற்கு முன், நீங்கள் போடும் பேஸ் நெயில் கோட்டிங்கில் சிறிதளவு பசையை (க்ளூ) கலந்து விடவும். அப்போது தான் அதனை அகற்றும் போது, மிச்சம் மீதி எதுவுமின்றி உங்கள் நகங்களிலிருந்து எளிதாக உரித்தெடுக்க முடியும்.

உங்கள் மேக்-அப்பை விரைவாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் செய்வதற்கு தேவையான ஏகப்பட்ட மேக்-அப் குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. உங்கள் சரும பராமரிப்பிற்கு தேவையானவற்றை நீங்கள் தவறாமல் செய்து வருவது, உங்கள் முகத்தினை பொலிவாக வைத்திருக்க உதவும். உங்கள் சருமத்தில் இயற்கையான பொலிவு இருந்தால் மட்டுமே, மேக்-அப் செய்யும் போது அது பிரகாசிக்கும். அதோடு, நீங்கள் தூங்கும் போது மேக்-அப்பை கலைத்து விட வேண்டும். இவ்வாறு சரியாக நீங்கள் அதனை அகற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டால், சருமத்தில் உள்ள துளைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, நீங்கள் அடுத்த நாளுக்கான மேக்-அப் போடுவதற்கு தயாராக முடியும். இது போன்று மேலும் அழகு குறிப்புகளையும், யுத்திகளையும், மற்றும் மேக்-அப் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளையும் பெறுவதற்கு, மைலோ பியூட்டி கட்டுரைகளை வாசித்து பார்க்கவும். மேலும் நீங்கள் ஆரோக்கியமான, அழகான சருமத்தைப் பெறுவதற்கு தேவையான அழகு சாதன பொருட்களை வாங்குவதற்கு மைலோ ஸ்டோருக்கு சென்று பார்க்கலாம்.

Article Posted Under

Related Articles

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.