This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்(Kiwi fruit benefits during pregnancy In Tamil)

Nutrition Tips
Written by - Mylo Editorகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 29, 2026
கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்(Kiwi fruit benefits during pregnancy In Tamil)
Likes3 Likes|
Read time6 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கிவி பழத்தில் விட்டமின் ஏ, சி, இ, கே, ஃபோலேட், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. நாளொன்றுக்கு 2-3 கிவி பழங்களை கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக சாப்பிடலாம்.
  • முதல் டிரைமெஸ்டரில் ஃபோலேட் சத்து குழந்தையின் நரம்பியல் கோளாறுகளைத் தடுக்கிறது. விட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சவும், கால்சியம் எலும்புகள் வலுவாக இருக்கவும் உதவுகிறது.
  • இரண்டாம் மற்றும் மூன்றாம் டிரைமெஸ்டரில் கிவியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது, குறைந்த குளுகோஸ் நீரிழிவை கட்டுப்படுத்துகிறது, விட்டமின் கே இரத்தக் கட்டுக்களை தடுக்கிறது.
  • கர்ப்ப காலத்திற்கான ஊட்டச்சத்து ஆதரவு தேடுகிறீர்களா? Explore our Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Rating4.9
Compression Stocking Socks - S
Compression Stocking Socks - S
Rating4.5
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating4.0

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக சாப்பிடுவதும், எந்த உணவு நமக்கு சரியானது என்று விழிப்புணர்வோடு இருப்பதும் முக்கியமானதாகும். கிவி பழம் சைனீஸ் கூஸ்பெர்ரி வகையைச் சேர்ந்தது ஆகும். இதில் மினரல்கள் மற்றும் விட்டமின்கள் மிகுதியாக உள்ளன.

கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடலாமா?(Is it okay to consume kiwi during pregnancy In Tamil)

கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கான மிக சிறந்த பழம் கிவி ஆகும். ஒருவேளை கிவி உங்களுக்கு அலர்ஜியை தருகிறது என்றால் மட்டும் தவிர்க்கலாம். போலன் மற்றும் லேடக்ஸ் போன்றவை யாருக்கெல்லாம் அலர்ஜியாக இருக்கிறதோ, அவர்களுக்கு கிவி ஒத்து வராது. சருமத்தில் அரிப்பு, உதடு வீக்கம் மற்றும் இதர அலர்ஜி அறிகுறிகள் பொதுவானதாகும். கிவி பழத்தில் விட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, ஃபோலேட், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், காப்பர் போன்றவை இருக்கின்றன. இதில் சர்க்கரை சத்து குறைவாகும். ஆகவே ஆரோக்கியமான ஸ்நாகஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 முதல் 3 கிவி பழங்களை சாப்பிடுவது பாதுகாப்பானதுதான்.

கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்(Benefits of kiwi during pregnancy In Tamil):

கர்ப்ப காலத்தில் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகமாக இருக்கும். கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிலையிலும் சரியான உணவை எடுத்துக் கொள்வது முக்கியமானதாகும். கர்ப்ப காலத்தில் தினசரி கிவி பழம் சாப்பிடுவதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

முதல் அத்தியாய காலத்தில்(During the first trimester:)

கர்ப்ப காலத்தின் முதல் டிரைமெஸ்டரில் கிவி பழம் சாப்பிடுவதால் கீழ்காணும் ஊட்டச்சத்துகள் உள்பட நிறைய பலன்கள் கிடைக்கும்:

  • (Folate) ஃபோலேட் சத்து மிகுதியான அளவில் உள்ளது. குழந்தைக்கு நரம்பியல் ரீதியான கோளாறு ஏற்படுவதைத் தடுக்க இந்த சத்து மிக முக்கியமானதாகும். கர்ப்பத்திற்கு முன்பாகவும், கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு ஃபோலிக் ஆசிட் போதுமான அளவில் இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட ஃபோலிக் ஆசிட் அளவு 400 mcg ஆகும். ஒவ்வொரு கிவி பழத்திலும் 10 முதல் 20 mcg அளவு ஃபோலிக் ஆசிட் உள்ளது. ஆகவே, தினசரி ஒன்றிரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது பலனுள்ளதாக அமையும்.

  • (Vitamin C) விட்டமின் சி என்பது இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ள வகை செய்யும். கிவி பழத்தில் 70 mcg அளவுக்கு விட்டமின் சி உள்ளது. கர்ப்பிணி பெண்ணின் உடல் தினசரி இரும்புச்சத்தை உறிஞ்ச வேண்டும். தாய்க்கும், குழந்தைக்கும் இரும்புச்சத்து அவசியமாகும். குழந்தைக்கு நியூரோடிரான்ஸ்மிட்டர்ஸ் உருவாக இரும்புச்சத்து உதவியாக இருக்கும். இந்த ரசாயன கடத்திகள் இல்லாமல் உடல் இயங்காது.

  • கிவி பழத்தில் கால்சியம் சத்து கொஞ்சம் இருக்கிறது. தாய் மற்றும் குழந்தையின் எலும்புகள் பலமாக இருப்பது அவசியமாகும். கிவி பழத்தில் 20 முதல் 25 mcg அளவுக்கு கால்சியம் இருக்கிறது. லேக்டோஸ் (பால்) பொருட்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுகின்ற மக்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்

இரண்டாம் அத்தியாய காலத்தில்(During the second trimester) :

  • கிவி பழத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நார்ச்சத்து உள்ளது. கிவி பழத்தில் 2g அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. இது மலக்குடல் நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும். கர்ப்ப காலத்தில் மலக்குடல் சார்ந்து பல விதமான பிரச்சினைகள் உண்டாகின்றன. மலம் இறுகி வெளியேறலாம் அல்லது திரவம் போல வெளியேறலாம். ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக இவ்வாறு நடக்கும்.

  • கர்ப்ப காலத்தின் இரண்டாவது டிரைமெஸ்டரில் விட்டமின் ஏ, ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து, ஐயோடின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் போன்றவற்றுக்கான தேவை அதிகரிக்கும். கிவி பழத்தில் 2 mcg அளவுக்கு விட்டமின் ஏ இருக்கிறது. இதர ஊட்டச்சத்துகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

  • கிவி பழத்தில் விட்டமின் இ சத்து மிகுதியான அளவில் உள்ளது. தாய்க்கும், குழந்தைக்கும் செல் பாதிப்பு ஏற்படுவதை இது தடுக்கிறது. அதுமட்டுமல்ல, சரும ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது.

மூன்றாவது அத்தியாய காலத்தில்(During the third trimester):

  • கர்ப்ப காலத்தில் இரண்டாம் நிலை ஆரோக்கிய மாற்றங்கள் இந்த மூன்றாவது அத்தியாய காலத்தில் தான் பெண்களுக்கு நிகழும். குறிப்பாக, கர்ப்ப கால நீரிழிவு நோய் இதில் முக்கியமானதாகும். கிவி பழத்தில் குளுகோஸ் சத்து மிக குறைவு. அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு உள்ளது. உடலுக்கான சர்க்கரை வேட்கையை குறைக்க இந்தப் பழத்தை சாப்பிடலாம்.

  • கிவி பழத்தில் விட்டமின் கே சத்து உள்ளது. இது புண்களை ஆற்றவும், இரத்தக் கட்டுக்களை தடுக்கவும் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் கிவி பழத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்(Kiwi side effects during pregnancy In Tamil):

  • ஏற்கனவே குறிப்பிட்டபடி சிலருக்கு கிவி பழம் அலர்ஜியை ஏற்படுத்தலாம். ஒன்றிரண்டு முறை கிவி பழம் சாப்பிட்ட பிறகு இந்த அலர்ஜி உண்டாகலாம். அல்லது ஒரு நபர் ஏற்கனவே லேடக்ஸ் அல்லது போலன் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர் என்றால் அவர்களுக்கு கிவி பழமும் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

  • வாய் மற்றும் தொண்டை பகுதியில் அரிப்பு ஏற்படுவதை போன்ற உணர்வு தென்பட்டால் கிவி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். தொடர்ந்து சாப்பிட்டால் அழற்சி உண்டாகும் அல்லது வலி ஏற்படும் அல்லது வாந்தி வரும்.

  • வாய் சார்ந்த அலர்ஜிகள் சில சமயம் உருவாகும். வாய் கூச்சம் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். சிலருக்கு ஆஸ்துமா, சருமத்தில் படை போன்ற தொந்தரவுகள் வரும்.

  • கிவி பழத்தில் விட்டமின் சி சத்து மிகுதியாக உள்ளது. ஆனாலும், இது கனையத்தை பாதிக்கக் கூடியது ஆகும். இது கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகப்படுத்தி, கனையத்தை பாதிக்கக் கூடும்.

  • பூஞ்சைக்கு எதிரான மருந்துகளை உட்கொள்ளும்போது கிவி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதை சேர்த்து உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து உங்களுக்கு தெரியாது என்றாலும், கிவி பழத்தை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் முன்பாக ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் OBGYN நிபுணர் ஆகியோரை ஆலோசிக்கவும். கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறப்பானது எது என்பது குறித்து அவர்கள் தெளிவான விளக்கம் அளிப்பார்கள்.

  • கர்ப்ப காலத்தில் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த சமயத்தில் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கு உதவிடும் பல ஊட்டச்சத்துகள் கிவி பழத்தில் உள்ளன. எனினும், எந்தவொரு உணவும் அளவுக்கு மிஞ்சினால் அது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளவும். ஆகவே, ஆரோக்கியமான உணவு அல்லது ஆரோக்கியமற்ற உணவு என எதுவாக இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடவும்.

TAGS :

Kiwi in pregnancy in tamil, uses of kiwi during pregnancy in tamil, side effects of kiwi during pregnancy in tamil, Kiwi fruit benefits during pregnancy In English, Kiwi fruit benefits during pregnancy In Hindi, Kiwi fruit benefits during pregnancy In Telugu, Kiwi fruit benefits during pregnancy In Bengali

கர்ப்பிணி தாய்மார்கள் நம்பும் ஆரோக்கிய துணைகள்

கிவி போன்ற ஆரோக்கியமான உணவுகளுடன், சரியான ப்ரீநேடல் ஊட்டச்சத்துகள் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு பூரண ஆதரவை வழங்கும்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress

534 Moms bought
₹917₹129829% Off
Rating
4.9
(50)
Compression Stocking Socks - S

Compression Stocking Socks - S

Compression Stockings for Varicose Veins | Reduces Swelling | Boosts Blood Circulation

460 Moms bought
₹364₹59939% Off
Rating
4.5
(31)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

440 Moms bought
₹999₹154535% Off
Rating
4.0
()

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.