Get MYLO APP
Install Mylo app Now and unlock new features
💰 Extra 20% OFF on 1st purchase
🥗 Get Diet Chart for your little one
📈 Track your baby’s growth
👩⚕️ Get daily tips
OR
Article Continues below advertisement
Updated on 13 September 2024
கர்ப்ப காலம் ஒரு பெண்ணின் உடலில் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. உடலை பழைய நிலைக்கு மீட்க நீண்ட காலம் எடுக்கும். இந்த நேரத்தில் சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, அவர்களின் தசைகளை சீர்செய்ய உதவும் பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் அணியும் பெல்ட்டை பயன்படுத்துகிறார்கள். ஒரு பெல்ட் அல்லது பைண்டர் சிசேரியன் காரணமாக வரும் வலியை குறைக்க மற்றும் குணப்படுத்த உதவுகிறது.
பிரசவத்திற்குப் பிறகு தசைகள் மற்றும் உறுப்புகள் மீண்டும் தங்கள் இடத்திற்குச் செல்லும்போது அவற்றை ஆதரிக்கவும் இது உதவும்.
பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் அணியும் பெல்ட், பெல்லி பேண்ட் அல்லது பெல்லி பைண்டர் என்றும் அழைக்கப்படுகிறது. பிரசவத்தின்போது சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை ஏதாவது செய்யப்பட்ட பிறகு, மருத்துவர்கள் இதுபோன்ற பெல்ட்டை அணியுமாறு குழந்தைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு பரிந்துரைப்பார்கள். இதை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:-
Article continues below advertisment
1. வலியைப் போக்க உதவுகிறது
2. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது
3. கீறல்கள் மற்றும் தசைகளை குணப்படுத்த உதவுகிறது
4. அறுவை சிகிச்சையின் போது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
5. சிறந்த உடல் தோற்றத்தை பெற உதவுகிறது
Article continues below advertisment
6. இடுப்புப் பகுதியை ஆதரிக்க உதவுகிறது
சி-செக்சன் அல்லது சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பிறகு வயிற்றில் அணியும் பெல்ட் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்று பெல்ட்டை பயன்படுத்துவதால் சில ஆபத்துகளும் உள்ளன:-
1. வலி
2. அழுத்தம்
3. இடுப்புப் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்துதல்
Article continues below advertisment
4. அரிப்பு அல்லது தடிப்பு
ஒருவர் தவறான வகை பெல்ட்டை அணியும்போது அல்லது மிகவும் இறுக்கமாக அணியும்போது ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பெல்டுகள் ஆதரவையும் ஆறுதலையும் தருவதாகும். ஆனால் ஒருவர் அவற்றை மிகவும் இறுக்கமாக அணிந்தால் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். வயிற்றில் அணியும் பெல்ட், கர்ப்பத்திற்குப் பிறகு உடல் எடையை குறைக்க உதவும் வெயிஸ்ட் டிரைனர்கள் அல்ல.
வயிற்றில் அணியும் பெல்ட்டுகள் பல்வேறு வகைகளில் உள்ளன. ஆனால் அவை தரத்தில் வேறுபடுகின்றன. சில வகைகள்:-
வயிற்றில் அணியும் சிறந்த பெல்ட், மென்மையான மற்றும் எலாஸ்டிக் துணி வகையாகும். இது நெகிழ்வானதாக இருக்க வேண்டும். அதனால் ஒருவர் அதை அணிந்துகொண்டு எளிதாக சுவாசிக்கவும் நகர்ந்து பணிகளை மேற்கொள்ளவும் முடியும். மேலும், இடுப்பு மற்றும் அடிவயிற்றைச் சுற்றிலும் வரும் வகையில் பெல்ட் நீளமாக இருக்க வேண்டும்.
சரியான உடல் அமைப்பு மற்றும் சிசேரியனால் தழும்புகள் உண்டான தசைகளுக்கு சப்போர்ட் செய்ய இந்த வகை பெல்ட் உதவியாக இருக்கும். இடுப்பு மற்றும் முதுகுக்கும் இந்த வகை பெல்ட்டுகள் உதவியாக இருக்கும்.
Article continues below advertisment
இடுப்புப் பகுதியை வலுப்படுத்தவும் இந்த வகை பெல்டுகள் உதவும்.
இவை கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு அணிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஆடைகள் ஆகும். இது ஹை வெயிஸ்ட் அன்டர்வியராகவும், முழு உடலுக்குமான ஆடைகளாகவும் கிடைக்கின்றன.
இதையும் படிக்கலாமே! -
பிரசவத்திற்குப் பிந்தைய கால கட்டத்தில் உள்ள அனைவரும் இதுபோன்ற பெல்ட்டை அணிய முடியாது. இது அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலியைக் குறைக்கும். மீண்டு வரும் உடலுக்கு ஆதரவை வழங்கும். ஆனால் கவலைப்பட வேண்டிய சில விஷயங்களும் உள்ளன.
பெல்ட்டை அணிந்து கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, எலாஸ்டிக் பட்டையைப் பயன்படுத்தி இடுப்பிலிருந்து மேல்நோக்கி சுற்ற ஆரம்பிக்க வேண்டும்.பெண்கள் தவறான முறையில் அணிந்து கொண்டால், அது இடுப்புப் பகுதியில் கீழ்நோக்கி அழுத்தத்தை உண்டாக்குவதற்கு வழிவகுக்கும்.
Article continues below advertisment
பெண்கள் வயிற்றில் அணியும் பெல்ட்டை நாள் முழுவதும் அணியக்கூடாது. நீண்ட நேரம் பெல்ட்டை அணிந்தால், அடிவயிற்றின் தசைகள் வலுவிழந்து அதிக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இறுக்கமான ஆடைகளை குறைவான நேரமே அணிய வேண்டும்.
இந்தப் பொருட்கள் இறுக்கமானவை, கடினமானவை மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் அணிவது பாதுகாப்பானவை அல்ல.
இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பிறகு விரைவான இயல்பு நிலை மற்றும் எடை குறைவதற்கான 5 முக்கிய உணவுகள்
கர்ப்பம் என்பது ஒரு மகிழ்ச்சியான மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வு ஆகும். இது ஒருவரின் வாழ்க்கையின் எதிர்கால போக்கை மாற்றுகிறது. ஒரு பெண்ணின் உடல், மனநிலை மாற்றங்கள் தொடங்கி பசி, எடை அதிகரிப்பு வரை பல மாற்றங்களுக்கு உடல் உட்படுகிறது. வயிற்றில் வளரும் குழந்தை இருப்பதால், அதுவும் ஒன்பது மாதங்கள் முழுவதும் இருப்பதால், வயிற்றுப் பகுதியில் உள் மற்றும் வெளிப்புறமாக மாற்றங்கள் நிகழ்கின்றன. வயிறு பெரிதாக வளரும்போது வயிற்றின் தோல் நீள்கிறது. அதே நேரத்தில் உறுப்புகள் நகர்ந்து குழந்தைக்கான இடத்தை உருவாக்கும்போது தசைகளும் வளர்கிறது.
எனவே, ஒரு வயிற்றில் அணியும் பெல்ட் அல்லது பெல்லி பைண்டர் குழந்தையை பெற்றெடுத்த பிறகு பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் பெண்களுக்கு உதவுகிறது. இது வலியை நீக்குகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, கீறல்கள் மற்றும் வீக்கத்தை விரைவாக குணப்படுத்துகிறது. உடல் அமைப்பு பழையபடி திரும்ப சப்போர்ட் செய்கிறது. இடுப்புப் பகுதியையும் ஆதரிக்கிறது. வலி, தேவையற்ற அழுத்தம், இடுப்புப் பகுதியில் பாதிப்பு மற்றும் வயிற்றைச் சுற்றி தடிப்புகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம் என்பதால், வயிற்றில் அணியும் பெல்ட்டில் சில தீமைகளும் உள்ளன.
Article continues below advertisment
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
Are You Aware of These 11 Early Signs and Symptoms of Pregnancy?
Top 5 tips to build a budget-friendly nursery for your little one
Toddler Teething: What to Expect and How to Help
Adverbs: A Comprehensive Guide to help small children learn the usage of adverbs
Expand Your Child's Vocabulary with words that start with X: Easy, Positive, and Engaging Words, Animals, Countries, and Fruits
Unlocking Language Proficiency: The Ultimate Guide to Top 100 Sight Words for Kindergarten and Beyond
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |