This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் கருவின் அசைவுகள் மற்றும் உதைகளின் எண்ணிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

Baby Movements
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
கர்ப்ப காலத்தில்  கருவின் அசைவுகள் மற்றும் உதைகளின் எண்ணிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
Likes77 Likes|
Read time9 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கருநெளிவு உணர்தல் (க்விக்கெனிங்) என்பது வழக்கமாக கர்ப்ப காலத்தின் 17வது வாரத்திற்குப் பின்னர் நிகழும் குழந்தையின் முதல் அசைவுகள், ஆனால் 13-25 வாரங்களுக்கு இடையில் ஏற்பட்டாலும் இயல்பானதே.
  • 28வது வாரத்தில் இருந்து தினமும் இரண்டு முறை உதைகளை எண்ண வேண்டும் - ஒரு மணி நேரத்திற்கு 10 உதைகள் அல்லது 30 நிமிடத்திற்கு 3 உதைகள் இயல்பானதாகும்.
  • உணவு, ஜூஸ் அல்லது இனிப்பு உட்கொண்ட பின்னரோ, இரவு நேரத்திலோ, இடது பக்கம் படுத்திருக்கும் போதோ கருவின் அசைவுகள் அதிகமாக உணரப்படும், இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கான அறிகுறி.
  • கர்ப்ப காலத்தில் வசதியாக ஓய்வெடுக்க என்ன உதவும்? Explore our Compression Stocking Socks - S.
Compression Stocking Socks - S
Compression Stocking Socks - S
Rating4.5
Baby Wooden Cot with Rocker & Wheel
Baby Wooden Cot with Rocker & Wheel
Rating4.6
Buddy Ultra-Light Baby Stroller - Blue
Buddy Ultra-Light Baby Stroller - Blue
Rating4.7
Baby Wooden Cot cum Desk with Wheel
Baby Wooden Cot cum Desk with Wheel
Rating4.9

பொதுவாக கருவுற்றிருக்கும் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தை வயிற்றில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதிப்படுத்தக் கூடிய சிறு சிறு விஷயங்களை ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அவ்வாறு சரியான படி தான் தங்கள் குழந்தை வளர்கிறது என்று பெற்றோருக்கு உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கருநெளிவு உணர்தல் (க்விக்கெனிங்) ஆகும்.

கருநெளிவு உணர்தல் (க்விக்கெனிங்) என்றால் என்ன?

வழக்கமாக வயிற்றில் குழந்தை நகர்வதற்கு தொடங்கும் போது தான் கருநெளிவு உணர்தல் (க்விக்கெனிங்) நிகழ்கிறது. சொல்லப் போனால் இது பொதுவாக கர்ப்ப காலத்தின் 17வது வாரத்திற்குப் பின்னர் நிகழும். அப்பொழுது தான் தாய்மார்கள் வயிற்றில் உதைகள் மற்றும் பிற குழந்தை அசைவுகளை உணர ஆரம்பிப்பார்கள். இருப்பினும், ஒரு சில சந்தர்ப்பங்களில், குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து இது 17வது வாரத்திற்கு முன்னர் அல்லது பின்னர் நிகழலாம். ஆனால், அது குறித்து பெற்றோர் ஐயம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இது 13வது மற்றும் 25வது வாரங்களுக்கு இடையில் ஏற்படும் வரை இது முற்றிலும் இயல்பானது தான்.

அது மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில், ஒருவர் ஏற்கனவே குழந்தை பெற்றெடுத்திருந்தால், அதனை தற்போது உணராமல் போகலாம். அதற்காக இது உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று அர்த்தமல்ல.

கர்ப்ப காலம் முழுவதையுமே ஒவ்வொரு பெண்ணும் சுகமாய் அனுபவித்தாலும், இந்த சுகமானது குழந்தை உதைக்கத் தொடங்கும் போதில் இருந்து தான் தொடங்குகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் சிறு குத்துகள், நெளிவுகள் மற்றும் அசைவுகள் என அனைத்தும் உங்கள் இதயத்தை மெழுகு போல் உருகச் செய்துவிடும்.

கர்ப்ப காலம் முழுவதும், உங்கள் கருவின் அசைவுகள் பல கேள்விகள் மற்றும் சந்தேகங்களை உங்கள் மனதில் தூண்டக் கூடும். உங்கள் குழந்தை உதைக்கிறதா, அல்லது அது வேறு ஏதாவது இருக்குமா? குழந்தை உங்களை குறைவாக அல்லது அதிகமாக உதைக்கிறதா? கருவின் அசைவுகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வது வழக்கம். இயல்பான தினசரி கருவின் அசைவு எண்ணிக்கைப் பற்றி சில விஷயங்களைக் குறித்து வைத்துக் கொள்வது உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும்.

கருவின் இயல்பான அசைவு எப்படி இருக்கும்?

பொதுவாக, தாய்மார்களுக்கு கருநெளிவு உணர்தலின் (க்விக்கெனிங்) போது படபடப்பு, உட்குத்தல் போன்ற உணர்வு ஏற்படும். இது பெரும்பாலும் வாயு போன்று உணரப்படலாம். காலப்போக்கில் இந்த அசைவுகள் அதிகமாக இருக்கும்.அதோடு தாய்மார்கள் வாயு எது மற்றும் கருநெளிவு எது என்று தெளிவாக உணர்வார்கள். ஆரம்பத்தில், கரு இளமையாக இருப்பதால் மற்றும் அதனால் அதிகமாக நகர முடியாது என்பதால் தினமும் இந்த அசைவுகளை ஒரு தாயால் உணர முடியாமல் இருக்கலாம். இருப்பினும், குழந்தை வளர வளர, ​​குழந்தைக்கு நகர்வதற்கு போதுமான இடம் இல்லாததால், கருவின் அசைவுகள் அதிகப்படியான கிளர்ச்சியுடன் சற்று பலமாக இருக்கும். இன்னும் மாதங்கள் ஆக ஆக, அசைவுகள் இன்னும் பலப்படும் மற்றும் அவ்வாறு மூன்றாவது ட்ரைமெஸ்டர்களில் அசைவுகள் பலப்படுவதையே தாய்மார்களும் கூறுகிறார்கள்.

கருவின் அசைவுகளை நீங்கள் எப்போது அதிகம் உணர்வீர்கள்:

  • காலையிலும் பிற்பகிலும் குழந்தை ஓய்வெடுப்பதால் வழக்கமாக இரவு நேரத்தில் தான் கருவின் அசைவுகள் அதிகரிப்பதை ஒரு தாய் உணர்வார்.

  • உணவு அருந்திய பிறகு, உங்கள் குழந்தை உங்கள் வயிற்றில் அதிகமாக உதைப்பதை நீங்கள் உணரக் கூடும். உடலின் உள்ளே இரத்த சர்க்கரை பீறிட்டு செல்வதால் கருவின் அசைவுகள் அதிகப்படியான கிளர்ச்சியுடன் சற்று பலமாக இருக்கும்.

  • இதனால் நீங்கள் சற்று பதட்டமாகவோ சோர்வாகவோ கூட உணரலாம். உங்கள் உடல் அசைக்க முடியாத நிலையில் இருப்பதால் உங்கள் குழந்தையின் அசைவைத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்வது எளிது.

  • நீங்கள் நீண்ட நேரம் நகராமல் இருக்கும் போது மற்றும் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைவதற்கு நீங்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்று உங்கள் குழந்தை விரும்பும்போது

  • நீங்கள் சத்தமாக சிரிக்கும்போது, ​​இசையைக் கேட்டு ரசிக்கும் போது அல்லது உங்கள் குழந்தையுடன் பேசும்போது - அடடா!

  • இடது பக்கமாக படுங்கள், குழந்தை அதற்கு பதிலளிக்கும்

  • ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் அல்லது ஜுஸ் உட்கொள்ளும் போது, உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளுக்கு குழந்தை பதிலளிக்கும்.

  • தினமும் ஒரு கட்டத்தில் தாலாட்டுப் பாடுங்கள், உங்கள் குழந்தை அதன் அசைவுகள் மூலம் அழகாக பதிலளிக்கும்

  • வயிற்றில் டார்ச் அடித்துப் பாருங்கள், உடனே உங்களை குழந்தை உதைக்கக் கூடும்!

குழந்தை கருவில் எத்தனை முறை உதைக்கிறது என்பதை குறித்து வைத்திருப்பதன் முக்கியம் என்ன?

உதைப்பது என்பது உங்களுக்குள் இருக்கும் சிறிய உயிரானது சரியாகத் தான் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான மிகத் தெளிவான ஒரு அறிகுறியாகும். அதனால் தான் கர்ப்ப காலத்தின் போது குழந்தை எத்தனை முறை உதைக்கிறது என்பதை கணக்கிடுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எளிமையாகச் சொன்னால், உதை எண்ணிக்கை என்பது ஒரு மணிநேரம் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குழந்தை எத்தனை முறை நகர்கிறது என்பதைக் கணக்கிடுவதே ஆகும். கருவின் உதை எண்ணிக்கையானது சீரானதாக இருந்தால் அது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால், கருவின் அசைவு குறைவாக காணப்பட்டால், அது ஒரு ஆபத்தான விஷயம் ஆகும். இது ஏதேனும் ஒரு பிரச்சனையின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். அதாவது கருவின் அசைவுகள் குறைவது என்பது அம்னோடிக் திரவம் குறைவதை அல்லது மிகவும் கவலையளிக்கும் வகையிலான அம்னோடிக் சாக் சிதைவதையும் குறிப்பிடக்கூடும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளின் அசைவுகளை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பது மிகவும் அவசியமாகும். இதனால் ஏதேனும் சாத்தியமான சிக்கல் இருப்பின் அதனை விரைவில் கண்டறிந்து அதற்குத் தேவையான மருத்துவ உதவி எளிதில் வழங்கப்படும். குறிப்பாக குழந்தை பிறப்பதற்கான தேதி நெருங்கும் பட்சத்த்தில், உதைகளை எண்ணுவதன் மூலம் கருவின் அசைவுகளை தொடர்ந்து கண்காணிப்பது இன்னும் முக்கியமானதாகிறது. அதுவும் 9வது மாதத்தில், நாளைக்கு பல முறை உதைகளை எண்ண வேண்டும்.

கருவின் அசைவு எண்ணிக்கையை எப்போதில் இருந்து கவனிக்க வேண்டும்?

28வது வாரத்தில் தொடங்கி உங்கள் கர்ப்ப காலத்தின் இறுதி வரை மூன்றாவது ட்ரைமெஸ்டரில் உதைகளை எண்ணத் தொடங்கும் படி உங்கள் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். நீங்கள் காலை மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை உதைகளை எண்ண வேண்டும்.

தாய்மார்கள் குழந்தையின் உதை எண்ணிக்கையைப் பற்றி விழிப்புடன் இருந்து அதில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டறிந்து மருத்துவமனைக்கு விரைந்ததால், பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டு, கர்ப்ப காலத்தில் நிகழக்கூடிய விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. குழந்தையின் வரவை எதிர்நோக்கும் ஒரு தாயாக, நீங்கள் உதைகளை தீவிரமாக எண்ண வேண்டும் மற்றும் அதைப் பற்றிய உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

உதைகளை எண்ணும் முறை -

  • 28 வது வாரத்தை அடைந்தவுடன் உங்கள் குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் நன்கு வளர்ந்திருக்கும். எனவே, அப்போதில் இருந்து உங்கள் குழந்தையின் உதைகளை எண்ண ஆரம்பிக்கலாம். அடடா, ஏகப்பட்ட உதைகளை அள்ளித் தர உங்கள் குழந்தை தயாராகிவிட்டது, நீங்கள்?

  • ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் உதைகளைக் கண்காணிக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பகலில் உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக இருப்பதாக நீங்கள் நினைக்கும் நேரத்தை ஆராய்ந்து அதனை அதற்கு தேர்வு செய்து கொள்ளலாம். அது குழந்தை ஓய்வெடுக்கும் நேரமாக இருக்கக் கூடாது. ஏனெனில், அப்போது உங்கள் குட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் எந்த உதையும் இருக்காது, அதற்காக வீண் பயம் கொள்ள வேண்டாம்!

  • பொதுவாக, வயிற்றில் உள்ள குழந்தை 30 நிமிடத்திற்கு 3 முறை அல்லது ஒரு மணி நேரத்திற்கு 10 முறை உதைக்கும். அவ்வாறு ஒரு மணிநேரத்திற்கு உதைகளின் எண்ணிக்கையானது 10-ஐ எட்டவில்லை எனில், நீங்கள் அது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். ஸ்னாக்ஸ் அல்லது ஜூஸ் சாப்பிட்டுவிட்டு மீண்டும் சற்று கவனியுங்கள். அதுவே போதும். ஆனால், அப்பொழுதும் நீங்கள் எந்த அசைவையும் உணரவில்லை என்றால், மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் அதனை மதிப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

  • அதோடு, நீங்கள் வசதியாக உங்கள் இடது பக்கம் படுத்திருக்கும் போது அல்லது உட்கார்ந்திருக்கும் போது இந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தையின் உதைகளை எண்ணும் போது பலதரப்பட்ட பணிகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது உங்கள் கவனத்தை சிதறடித்து, எண்ணிக்கையை சரியாக எண்ண இயலாதபடி செய்து விடலாம்.

  • கை கால்களை நீட்டுதல், சுவாசித்தல், திரும்புதல் போன்ற லேசான அசைவுகள் கூட உதைகளாகவே கருதப்படுகின்றன.

பொதுவான விதி - எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியாக உதைப்பதில்லை! ஒவ்வொன்றும் வேறுபட்டு இருக்கும்.

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை

  • கருவின் இயல்பான அசைவுகளில் ஏதேனும் மாற்றத்தை நீங்கள் கண்டால், உடனடியாக அது பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

  • ஒரு குழந்தையின் உதைகள் மற்றொரு குழந்தையின் உதைகளைப் போலவே இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஒரே தாய் கூட தன் இரண்டு வெவ்வேறு குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு உதை முறைகளை அனுபவிக்கக் கூடும்.

  • குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்திலும் ஓய்வெடுக்கும் நேரத்திலும் அசைவுகளை கவனிக்க வேண்டும். அதையே பின்பற்ற வேண்டும்.

  • குறைவான கருவின் அசைவுகள் என்பது மாறி நாட்கள் செல்லச் செல்ல குழந்தையின் அசைவுகள் மேம்பட வேண்டும்.

கவனிக்க வேண்டிய விஷயம்

ஒரு உதையில் இருந்து மற்றொன்றிற்கு உதை எண்ணிக்கை நேரமானது வேகமாக மாறுவதை நீங்கள் உணர்ந்தால் அல்லது உங்களுக்குள் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். மேலும், நீண்ட நேரம் உங்கள் குழந்தையிடம் எந்த விதமான அசைவும் இல்லை என்றால், குழந்தைக்கு போதுமான ஆக்ஸிஜன் சப்ளை வழங்கப்படாமல் போகலாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தின் போது கருவின் வளர்ச்சி மற்றும் அதன் வளர்ச்சி நிலைகள்

குறைவான கருவின் அசைவுகள் காணப்படுவதற்கான காரணங்கள் -

  • குறைவான கருவின் அசைவுகள் காணப்படுவதற்கு உங்கள் உடலின் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் நீண்ட நேரம் அசையவில்லை அல்லது எழுந்து நிற்கவில்லை/உட்கார்ந்து இருந்தால், உங்கள் குழந்தை அசைவுகள் ஏதும் இன்றி இருக்கலாம்.

  • உங்கள் உணர்ச்சி நிலையும் கூட உங்கள் குழந்தையின் அசைவுகளையும் உதைகளையும் நேரடியாக பாதிக்கிறது.

  • இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லாத போது உதைகள் குறையக்கூடும்.

  • முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, ஆக்ஸிஜன் சரியாக வழங்கப்படாமல் இருத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக அம்னோடிக் திரவம் குறையும், இதனால் கருவின் அசைவுகளும் குறையும்.

  • தொப்புள் கொடி சுற்றிக் கொண்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, சரியான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் போய்விடும். அதனால் கூட உங்கள் குழந்தை சரியாக அசையாமல் போகலாம்.

  • இந்த சூழ்நிலையில் உங்கள் மருத்துவரை அணுகுவது தான் சரியானது. ஏனெனில், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலமாக உங்கள் குழந்தையின் உதைகள் மற்றும் அசைவுகள் ஏன் குறைகின்றன என்பதற்கான காரணத்தை உங்கள் மருத்துவரால் தான் கண்டறிய முடியும்.

கர்ப்பிணித் தாய்மார்களால் நம்பப்படும் வசதியான தேர்வுகள்

கருவின் அசைவுகளை அமைதியாக உணர்வதற்கும், இடது பக்கம் வசதியாக படுத்திருப்பதற்கும் தேவையான ஆதரவை பெறுங்கள்.

Compression Stocking Socks - S

Compression Stocking Socks - S

Compression Stockings for Varicose Veins | Reduces Swelling | Boosts Blood Circulation

460 Moms bought
₹364₹59939% Off
Rating
4.5
(31)
Baby Wooden Cot with Rocker & Wheel

Baby Wooden Cot with Rocker & Wheel

265 Moms bought
₹7427₹1659955% Off
Rating
4.6
(17)
Buddy Ultra-Light Baby Stroller - Blue

Buddy Ultra-Light Baby Stroller - Blue

Baby Pram for Toddlers & Kids | 3 Point Safety Harness | 360° Front Wheel Swivel| Umbrella Fold

264 Moms bought
₹4046₹579530% Off
Rating
4.7
(15)
Baby Wooden Cot cum Desk with Wheel

Baby Wooden Cot cum Desk with Wheel

156 Moms bought
₹7415₹1559952% Off
Rating
4.9
(13)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.