This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உங்கள் முதல் டிரைமெஸ்டரில் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றலாமா?

Pregnancy Journey
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
 உங்கள் முதல் டிரைமெஸ்டரில் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றலாமா?
Read time6 min

கர்ப்ப காலத்தில் நீங்கள் கடைபிடிக்கும் உணவுமுறை உங்கள் குழந்தைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆம், இது உங்கள் குழந்தை கருப்பையில் அதன் பயணம் முழுவதும் வளரவும் மேம்படவும் உதவும். எனவே, இச்சமயத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியம். நீங்கள் சமீபத்தில் தாயாகி இருந்தால் அல்லது கர்ப்பத்தின் முதல் மாதத்தில் இருந்தால், முதல் மாத கர்ப்பத்திற்கான டயட் சார்ட்டை பின்பற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் ஏற்கனவே மருந்துகளை உட்கொண்டிருந்தால், மருந்துகளை உட்கொள்ளும் போது என்னென்ன உணவுகளைச் சேர்க்க வேண்டும், என்னென்ன உணவுகளைச் சேர்க்கக்கூடாது என்பதைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெனில், மருந்துகள் சில வகை உணவுகளுடன் இணைந்தால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இது உங்கள் குழந்தையின் வளர்ச்சியை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பாதிக்கலாம்.

முதல் டிரைமெஸ்டர் பிரக்னன்சி டயட் பிளானை எவ்வாறு பின்பற்றுவது

உங்கள் முதல் மாத கர்ப்ப டயட் பிளானை பின்பற்றும்போது, நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை சீட் டே (ஏமாற்று தினம்) கொண்டாடலாம். அதற்காக நொறுக்குத்தீனிகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லப்படுவது போல், அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.

சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவு உங்கள் குழந்தையின் மூளையின் சரியான வளர்ச்சிக்கு உதவும். ஆரோக்கியமான கரு வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு பல பிறவு குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக இது குறைக்கிறது. உங்களுக்கு இரத்த சோகை அல்லது பிற கர்ப்பம் தொடர்பான கோளாறுகள் இருந்தால், நீங்கள் சமச்சீரான உணவை உட்கொள்வது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் இருக்கக் கூடிய பொதுவான அறிகுறிகளில் சோர்வு மற்றும் மசக்கை ஆகும்.

அடிப்படை முதல் மாத கர்ப்ப டயட் பிளான்

உங்கள் வசதிக்காக நாங்கள் உங்களுக்காக ஒரு அடிப்படை முதல் மாத டயட் சார்ட் கீழே கொடுத்துள்ளோம். இது போன்ற கர்ப்ப கால டயட் பிளானை பின்வற்றுவதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முதலில், உங்கள் நுகர்வுகளை நீங்கள் கண்காணிக்க முடியும், உங்கள் சிறந்த ஆரோக்கியத்தையும் உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்தையும் உறுதிப்படுத்தலாம். மேலும், உங்களுக்குப் பிடித்த உணவுக்கான ஒதுக்கீட்டைச் சேர்த்து உங்கள் கர்ப்பகால டயட் பிளானை தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் உணவின் நிலையைக் கண்காணிக்க விரும்பினால், இந்த டயட் சார்ட்டை பின்பற்றுவதை நீங்கள் பரிசீலிக்கலாம். கீழே தென்னிந்திய அசைவ உணவு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை

காலை உணவாக, தேங்காய் சட்னியுடன் அப்பம் அல்லது இட்லியை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் காலை சிற்றுண்டியாக வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடுங்கள். மதிய உணவிற்கு சாதத்துடன் சேர்த்து சோயா பீன்ஸ் மற்றும் கறிவேப்பிலை சட்னி சாப்பிடலாம். எப்பொழுதுமே உங்கள் மதிய சிற்றுண்டியை எளிமையாக வைத்திருங்கள். நீங்கள் உருளைக்கிழங்கு சாலட் அல்லது வேகவைத்த சோளம் சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இரவு உணவிற்கு அரிசி மற்றும் சாலட் உடன் சிக்கன் நெஞ்சுக்கறியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

திங்கட்கிழமை

முற்றிலும் புதிய நாளில், எலுமிச்சைப்பழச்சாறு, கொத்தமல்லி சட்னி மற்றும் ரொட்டி ஆகியவை உண்மையில் ஒரு அற்புதமான காலை உணவாகும். பேரிக்காயை சிற்றுண்டியாக சாப்பிடலாம். சப்பாத்தியுடன் சிக்கன் வறுவல் மற்றும் மாதுளையை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் அடுத்த உணவு நேரத்தில் சற்று ஃப்ளெக்ஸிபிளாக இருக்கலாம். அதனால், ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள், நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் சில நொறுக்குத் தீனிகளையும் உண்ணலாம். இருப்பினும், முன்பு சொன்னது போல் அவற்றை அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டாம். பாகற்காய், மற்றும் சாதத்துடன் ஆட்டிறைச்சி ஆகியவை இரவு உணவிற்கு சிறந்த தேர்வாக அமையும்.

செவ்வாய்க் கிழமை

காலை உணவின் போது நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள முயற்சிக்க வேண்டும். உருளைக்கிழங்கு, மாம்பழம் மற்றும் முழு தானியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு சிற்றுண்டி வேளையில் ஆப்பிள் சாப்பிடலாம். மதிய உணவிற்கு வெண்டைக்காய் மற்றும் சப்பாத்தியை உண்ணலாம். மாலையில், உங்கள் சிற்றுண்டிக்கு வேறு ஏதாவது எடுத்துக் கொள்ளலாம். உங்கள் மெனுவில் சோளம் அல்லது சாலட்டைச் சேர்க்க முயற்சி செய்யுங்கள். இரவு உணவிற்கு அசைவ பிரியாணியை சமைத்து சாப்பிடலாம்.

புதன் கிழமை

காலை உணவுக்கு காபியுடன் ஓட்ஸ் சாப்பிடலாம். நீங்கள் நிச்சயமாக வெளியே சென்று கொஞ்சம் கொக்கோ மிட்டாய்களை எடுத்துக் கொள்ளலாம் அல்லது வெகுமதியாக நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிடலாம். மதிய உணவிற்கு கோதுமையுடன் கத்தரிக்காய் கறியை உட்கொள்ள முயற்சி செய்யலாம். உங்கள் அடுத்த உணவு நேரத்தில் பழச்சாறு அல்லது ஏதேனும் சத்தான பானத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இரவு உணவில் ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்), இறால் மற்றும் குயினோவா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

வியாழக்கிழமை

தேங்காய் தண்ணீருடன் சேர்த்து காலை உணவை எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். காலை மற்றும் மதிய உணவிற்கு இடையே புதினா சட்னியுடன் ரவா தோசையை சாப்பிடலாம். பழுத்த அவகாடோ பழத்தை சிற்றுண்டியாக சாப்பிடலாம். மதிய உணவிற்கு கீரை மற்றும் செடார் சீஸ் உண்ணலாம். அதன் பிறகு, உங்கள் அடுத்த உணவிற்கு ஓட்ஸ் பால் சாப்பிடலாம். இரவு உணவில் தட்டைப்பயறு, மாங்காய் பச்சடி மற்றும் மீன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை

நட்ஸ் கொண்ட ஓட்ஸை காலை மற்றும் மதிய உணவிற்கு இடையே சாப்பிடலாம். பழுத்த மாம்பழங்கள் அல்லது சப்போட்டா போன்றவற்றை பசியைத் தூண்ட சேர்க்கவும். மதிய உணவில் காரமான பீன்ஸ் அல்லது இறால் இருப்பது நல்லது. உங்கள் அடுத்த சிற்றுண்டி வேளையில் கேரட் டிஷ் அல்லது இனிப்பு ஏதாவது சாப்பிடலாம். இரவு உணவிற்கு சால்மன் மீனுடன் கத்திரிக்காய் சாப்பிலாம்!

சனிக்கிழமை

காலையில் சோயா புரோட்டீன், ஜீரக தண்ணீர், மெல்லுவதற்கு பாதாம், மதிய உணவிற்கு இறால் மற்றும் தானியங்கள், சிற்றுண்டிக்கு பெர்ரி மற்றும் இரவு உணவிற்கு சிக்கன் நெஞ்சுக்கறி, பீட்ரூட் பொரியல் ஆகியவை உண்மையில் மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கும். முடிந்தவரை இந்த டயட் பிளானை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

முதல் டிரைமெஸ்டரில் உங்கள் டயட் பிளானை தனிப்பயனாக்குதல்

அதுமட்டுமின்றி, சனிக்கிழமையை நீங்கள் சீட் டே ஆகவும் வைத்துக் கொள்ளலாம். அன்று நீங்கள் விரும்பியதைச் சாப்பிடலாம். எனவே, உங்கள் ஆசை அடங்கும். பல நபர்கள் பொதுவாக தங்கள் முதல் மூன்று மாத கர்ப்ப காலத்தில் டயட் சார்ட்டை கடைபிடிக்க கஷ்டப்படுவார்கள். ஏனென்றால், அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தங்களுக்குப் பிடித்த நொறுக்குத்தீனிகளை முழுவதுமாக நிறுத்தி விடுவார்கள்.

உங்கள் முதல் மூன்று மாத கர்ப்பகால டயட் சார்ட்டைத் தனிப்பயனாக்க விரும்பினால், முதலில் உங்கள் உணவியல் நிபுணரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் உணவில் சிரமமின்றி சேர்க்கக்கூடிய சில உணவுப் பொருட்களை உங்கள் உணவியல் நிபுணர் பரிந்துரைப்பார்.

இதையும் படிக்கலாமே! - பிரக்னன்சியின் மூன்றாவது டிரைமெஸ்டரின் போது சைவ உணவு முறையை பின்பற்றலாமா?

முடிவுரை

உங்கள் கர்ப்பத்தின் முதல் மாதம் முழுவதும் உங்கள் முழு டயட் பிளானையும் கண்காணிப்பது, கர்ப்பத்தின் முதல் மூன்று மாத டயட் சார்ட்டை கடைபிடிப்பதை உங்கள் உடலுக்கு மிகவும் எளிதாக்கும். மேலும், இது நாள் முழுவதும் உங்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும். இதனோடு நீங்கள் ஒரு சில உணவுகளை இணைத்து, உங்கள் டயட் பிளானை உங்களுக்கேற்ப தனிப்பயனாகிக் கொள்ளலாம். தவிர, சைவ உணவு உண்பவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து மேலே குறிப்பிட்ட கால அட்டவணையை கடைபிடிக்கலாம்.

மீண்டும், உங்கள் குழந்தை மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க மாதந்தோறும் உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரைப் பார்ப்பது மிகவும் அவசியம். உங்கள் உணவில் வித்தியாசமான ஏதேனும் ஒன்றைச் சேர்க்க விரும்பினால், உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவரும் பகலில் நீங்கள் ருசித்து சாப்பிட இரண்டு கூடுதல் சத்தான சிற்றுண்டிகளை பரிந்துரைக்கலாம்!

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.