Get MYLO APP
Install Mylo app Now and unlock new features
💰 Extra 20% OFF on 1st purchase
🥗 Get Diet Chart for your little one
📈 Track your baby’s growth
👩⚕️ Get daily tips
OR
Article Continues below advertisement
Growth & Development
22 December 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பொதுவாக குழந்தைகள் தங்களுடைய தேவைகளை எல்லாம் சைகைகள் மூலமாகவே நமக்கு உணர்த்துவர்கள். உதாரணமாக, அசௌகரியத்தை உணரும் போது கை கால்களை அசைப்பார்கள் அல்லது பசியாக இருக்கும்போது அடிக்கடி வாயைத் திறந்து மூடுவார்கள்.
குழந்தைகளின் அத்தகைய சைகைகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால், அவர்கள் உடனே அழத் தொடங்கிவிடுவார்கள். ஆய்வின் படி, புதிதாகப் பிறந்த உங்களுடைய குழந்தையின் தேவையை அவர்/அவள் வருத்தமடைவதற்கு முன்பு நீங்கள் பூர்த்தி செய்துவிட்டால், அவர்கள் கவனிக்கப்படுகிறார்கள் என்ற தன்னம்பிக்கையை குழந்தைக்கு கொடுக்கிறது. இது குழந்தையின் மூளையை சாந்தமாக வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில், இது மன அழுத்தத்தைத் தவிர்த்து குழந்தைக்கு மன ஆறுதலைத் தருகிறது.
உங்களுடைய குழந்தை மகிழ்ச்சியான குழந்தையாக மாறுவதற்கு எப்படி உதவுவது
Article continues below advertisment
துரதிர்ஷ்டவசமாக, கைக் குழந்தைகளால் பேச இயலாது. அதனால் எந்த வித அசௌகரியம் ஏற்பட்டாலும் அவர்களால் வாய் விட்டு சொல்ல முடியாது. எனவே, குழந்தைகளுக்கு எந்த விதமான அசௌகரியங்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை சற்று ஆராய்ந்து பாருங்கள். குழந்தை அழுக்கு டயபரை போட்டு இருக்கிறதா அல்லது குழந்தைக்கு எரிச்சலூட்டும் வகையில் நீங்கள் ஏதேனும் ஆடை போட்டுவிட்டிருக்கிறீர்களா என்று அவ்வப் பொது சரிபார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நீங்கள் அவர்களுக்கு மசாஜ் செய்யலாம் அல்லது வெது வெதுப்பான நீரில் குளிக்க வைக்கலாம்.
உங்களுடைய குழந்தையை மெதுவாகத் தழுவி, மெதுவாகத் தடவிக்கொடுங்கள். இப்படி செய்வது உங்களுடைய குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும். மேலும், இது ஆக்ஸிடாஸின் (பால்சுரப்பு நீர்) உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் அவர்களைப் பாதுகாப்பாக உணர வைக்கிறது. அதோடு உங்கள் குழந்தையை அன்புடன் அரவணைத்துக் கொள்வது மற்றும் கட்டிப்பிடிப்பதன் மூலமாக உங்களுக்குள் இனிமையான உணர்வையும், நல்ல ஹார்மோன்களையும் தூண்டும்.
புதிதாகப் பிறந்த குழந்தை பெரியவரைப் போன்று எதையும் பேசி வெளிப்படுத்த முடியாது என்பதால், அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வம்பு செய்து அழுவார்கள்.
இங்கு நாம் அவர்களின் காணோட்டத்தில் இருந்து சிந்தித்து, அவர்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா அல்லது அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை எல்லாம் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வது அவசியம்.
இதையும் படிக்கலாமே! - புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஏன் முணுமுணுக்கின்றனர்
Article continues below advertisment
குழந்தை வளரும் போது, அதாவது குழந்தை தவழ்ந்து செல்வது, நடப்பது, உட்காருவது அல்லது உணவு எடுத்துக் கொள்வது போன்ற சமயங்களில் அவன்/அவள் வருத்தப்படுவது இயல்பானது தான். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை கொஞ்சமாவது அழ விட வேண்டும். ஏனெனில், அது அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். உங்களுடைய குழந்தைக்கான மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, அவர்/அவள் முதல்முறையாக நடக்கும் போது தான் திறம் வாய்ந்ததாக பெருமிதம் கொள்வது தான். அவ்வாறு அவர்களிடத்தில் தன்னம்பிக்கை பெருகும் போது, தாங்கள் வளர வளர அவர்கள் சவால்களை எளிதில் எதிர்கொள்வார்கள்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
நர்சிங் டேங்க் டாப் வாங்கும் போது பின்வருவனவற்றில் மீது கவனம் கொள்ளவும்
கருத்தரிப்பதற்கான சிறந்த உடலுறுவு நிலைகள்
குழந்தைகள் எப்போது கண்ணோடு கண் பார்க்கிறார்கள்?(When do infants make eye contact in Tamil)
கர்ப்பமாக இருக்கும் போது முள்ளங்கி சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில் கசகசா விதைகள்: அதன் பொருள், நன்மைகள் மற்றும் அபாயங்கள் | Poppy Seeds During Pregnancy: Meaning, Benefits & risks in Tamil
உங்கள் குழந்தையை எப்போது மசாஜ் செய்ய வேண்டும்- குளிக்க வைக்கும் முன்பா அல்லது பின்பா? (When should you massage your baby- before bath or after a bath in Tamil)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |