Pregnancy
Updated on 3 November 2023
புழு தொற்று என்பது மிகவும் பொதுவானது. மேலும் இது எளிதில் பரவக்கூடியது. இருந்தாலும், இதற்கு ஒரு சில அறிகுறிகள் மட்டுமே தெரிவதால், அதன் பரவலைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் கடினம்.
உங்களுடைய குழந்தையின் விஷயத்தில், உங்கள் குழந்தை வெறுங்காலுடன் நடக்கும்போது, அசுத்தமான நீரில் விளையாடும்போது அல்லது சுகாதாரமற்ற உணவை உண்ணும்போது புழுக்களின் தொல்லை ஏற்படலாம். பல வகையான புழு நோய்த்தொற்றுகள் உள்ளன. குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான வகை புழுக்கள் முள்புழுவாக இருக்கும்.
பெரும்பாலான நேரங்களில், புழு தொல்லைக்கு அறிகுறிகள் எதுவும் அதிகமாக இருக்காது அல்லது சில நேரங்களில் கவனிக்கப்படாதவை மிகவும் குறைவாக இருக்கும்.
வயிறு வலி
எடை இழப்பு
எரிச்சல் மிகுந்த உணர்வு
மலம் கழிக்கும் போது இரத்தம் வருதல்
வாந்தி அல்லது இருமல்
ஆசனவாயைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் அரிப்பு
சிறுநீர்ப் பாதை தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் கழித்தல்
புழுக்கள் பின்வரும் வழிகளில் உடலைத் தாக்கலாம்:
பாதிக்கப்பட்ட பகுதி அல்லது மண்ணில் வெறுங்காலுடன் நடப்பதால் குழந்தைகள் கொக்கிப்புழுவால் பாதிக்கப்படலாம். குழந்தைகள் கையில் மண் இருக்கும்போதும் மற்றும் அவர்கள் தங்களுடைய அழுக்கு கையை வாயில் வைக்கும் போதும் புழுக்கள் உடலில் நுழையும் மற்றொரு வழியாக இருக்கும்.
சில நேரங்களில் புழுக்கள் ஏரிகள் மற்றும் குட்டைகள் போன்ற நீர்நிலைகளில் இனப்பெருக்கம் செய்யும். இந்த அசுத்தமான பகுதிகளில் நீந்தும்போதும் அல்லது குளிக்கும்போதும் புழு தொற்று ஏற்படும்.
சமைக்கப்படாத அல்லது பாதிக்கப்பட்ட உணவு புழுக்களின் தொல்லைக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். அசுத்தமான மண்ணில் வளரும் காய்கறிகள் தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் இருக்கலாம்.
இதையும் படிக்கலாமே! - குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான உணவு
இதற்கு சிகிச்சை அளிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், இதன் விளைவு கடுமையாக இருப்பதோடு குடல் இரத்தப்போக்கும் ஏற்படலாம். மேலும் இதனால், குழந்தை தொற்றுநோயால் பாதிக்கப்படலாம் மற்றும் குறைந்த எடை மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற பிற சிக்கல்களும் இருக்கலாம்.
இந்த நோய்த்தொற்று நீண்ட காலம் இருந்தால் அது குழந்தையின் எதிர்காலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும்.
உங்களுடைய குழந்தை மருத்துவரால் பரிசோதிக்கப்படுவதுதான் புழு நோய்த்தொற்றிற்கு, சரியான சிகிச்சையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும். இதற்கான முக்கிய காரணத்தை தெரிந்து கொள்வதற்கு மருத்துவர் மல பரிசோதனையை செய்வதோடு மேலும் ஒரு சில பரிசோதனைகளையும் பரிந்துரைக்கலாம். புழு தொற்று ஏற்பட்டால், மருத்துவரால் வாய்வழி மருந்து பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது.
மூலிகை வைத்தியம் அல்லது வீட்டு வைத்தியத்திற்கு மாற நீங்கள் ஆசைப்படலாம் ஆனால் நீங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றிற்கு மாறாதீர்கள். புழுக்கள் எளிதில் பரவி மீண்டும் தொற்றுநோயை உண்டாக்கும். அந்த மாதிரியான சமயத்தில் உங்களுடைய முழு குடும்பத்திற்கும் குடற்புழு நீக்க சிகிச்சையை மேற்கொள்வதற்கு மருத்துவர் ஆலோசனை வழங்கலாம், இதனால் குடும்பத்தில் யாருக்கும் நோய்த்தொற்ற இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
Worm infections in tamil, baby's worm infection in tamil, reasons for worm infections in tamil, How to know if your baby has worms In English, How to know if your baby has worms In Hindi, How to know if your baby has worms In Telugu, How to know if your baby has worms In Bengali
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali
গর্ভাবস্থায় হিং | ঝুঁকি, সুবিধা এবং অন্যান্য চিকিৎসা | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Bengali
স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali
গর্ভাবস্থায় পোহা: উপকারিতা, ধরণ এবং রেসিপি | Poha During Pregnancy: Benefits, Types & Recipes in Bengali
গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |