hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Motor Skills arrow
  • மோட்டார் ஸ்கில்களின் குழந்தையின் தசைஇயக்கு திறன் முக்கியத்துவம் என்ன?(What is the significance of motor skills? In Tamil) arrow

In this Article

    மோட்டார் ஸ்கில்களின் குழந்தையின் தசைஇயக்கு திறன் முக்கியத்துவம் என்ன?(What is the significance of motor skills? In Tamil)

    Motor Skills

    மோட்டார் ஸ்கில்களின் குழந்தையின் தசைஇயக்கு திறன் முக்கியத்துவம் என்ன?(What is the significance of motor skills? In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    • குழந்தையின் உடல் வலிமை மற்றும் இயக்கம் ஆகியவற்றிற்கு, மோட்டார் ஸ்கில்கள் இன்றியமையாதவை ஆகும்.

    • ஒவ்வொரு நாளும், நாம் நம் மோட்டார் ஸ்கில்களை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்துகிறோம். பெரிய பொருட்களை தூக்குவது முதல் கீபோர்டில் டைப்பிங் செய்வது வரை பலவற்றை செய்கிறோம். குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்கள் மற்றும் கன்ட்ரோல் அவர்கள் பிறந்த உடனேயே உருவாகத் தொடங்குவதுடன் குழந்தைப் பருவம் முழுவதும் மேம்படுகிறது.

    • குழந்தைகளின் மோட்டார் ஸ்கில் மேம்பாட்டை நிர்வகிப்பதற்கான குழந்தையின் திறன் ஆனது பல்வேறு வழிகளில் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிய உதவும்.

    • கிராஸ் மோட்டார் ஸ்கில்கள் மற்றும் ஃபைன் மோட்டார் ஸ்கில்கள் என்ற இரண்டு வெவ்வேறு வகையான மோட்டார் ஸ்கில்கள் காணப்படுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை இந்த இரண்டு ஸ்கில்களிலும் நன்கு தேர்ச்சி பெறும்.

    • குழந்தைகளுக்கான கிராஸ் மோட்டார் ஸ்கில் செயல்பாடுகள் கால்கள், கைகள் மற்றும் முதுகுத் தண்டு போன்ற குறிப்பிடத்தக்க தசைகளைப் பற்றியது. கை மற்றும் மணிக்கட்டில் உள்ள சிறிய தசைகள், ஃபைன் மோட்டார் ஸ்கில்களில் ஈடுபட்டுள்ளன.

    எனது குழந்தை எப்பொழுதெல்லாம் மற்றும் எவ்வளவு காலம் மோட்டார் ஸ்கில்களை பிராக்டிஸ் செய்ய வேண்டும்?(How long and how frequently should I have my kid practice their motor skills?In tamil)

    இதற்கு சுருக்கமான, பதில் ஆம்!

    குழந்தைகள் ரெகுலர் ஆக்டிவிட்டிகளில் பங்கேற்பதைத் தவிர, உங்கள் குழந்தை தினசரி அவர்களின் மோட்டார் ஸ்கில்களைப் பயன்படுத்துகிறார்கள். பிறந்த குழந்தைகளுக்கும் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் மோட்டார் ஸ்கில் ஆக்டிவிட்டிகளின் வளர்ச்சி மிகவும் கடினம். உடல் செயல்பாடு மற்றும் இந்த திறன்களின் வளர்ச்சியை குழந்தைகளின் அன்றாட வழக்கத்தில் சேர்க்க மறக்காதீர்கள்.

    மோட்டார் டெவலப்மென்ட்டில் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் குறிப்பிட்ட மைல்ஸ்டோன் ஏதேனும் உள்ளதா?(Is there a particular milestone in motor development that you'd want to know about?in Tamil)

    குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்களை அடைய பல முக்கியமான டைம்லைன்கள் உள்ளன, அவை அனைத்தும் முக்கியமானவை! இதன் விளைவாக, உங்கள் குழந்தையின் வளர்ச்சியை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

    ஒரு இலக்கை அடையும்போது, அது பெரும்பாலும் புதிய ஒன்றிற்கு பாதை அமைத்துத் தரும். குழந்தைகள் பொதுவாக 6 முதல் 9 மாதங்கள் வரை ஊர்ந்து செல்லத் தொடங்குவதில்லை. அவர்கள் ஏற்கனவே பல பேபி மோட்டார் ஸ்கில் மைல்ஸ்டோன்களை சந்தித்துள்ளனர், அது அவர்களுக்கு தேவையான பலத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்திருக்கும்.

    குழந்தைகளின் முதல் வருடத்தில் மோட்டார் டெவலப்மென்ட்டை ஊக்குவிக்க நான்கு வழிகள்(Four Ways to Promote Motor Development in Babies in Their First Year In tamil)

    நகர்வு, தலையை உயர்த்துவது, நிமிர்ந்து உட்காருவது, ஊர்ந்து செல்வது, இறுதியில் நடப்பது போன்றவற்றை முதல் வருடத்திற்குள்ளேயே குழந்தை கற்றுக் கொள்ள வேண்டும். இந்த மைல்ஸ்டோன்களை நிறைவேற்ற உங்கள் குழந்தைக்கு உதவ, நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. உங்கள் குழந்தையின் முதல் ஆண்டு முழுவதும் மோட்டார் ஸ்கில்களை மேம்படுத்த உதவும் சில பரிந்துரைகள் இங்கே உள்ளன.

    இதையும் படிக்கலாமே! - பெண்களின் மன நலத்தை மேம்படுத்த எது உதவுகிறது(What Helps in Improving Women's Mental Health In Tamil)

    குழந்தைகள் நகர்ந்து உருண்டு விளையாட போதுமான இடம் இருப்பதை உறுதிப்படுத்தவும்(Ensure that they have enough area to move)

    குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்களை வளர்க்க, குழந்தைகளுக்கு நிறைய இடம் தேவைப்படுகிறது. உங்கள் குழந்தை நகர கற்றுக் கொண்டு வலிமை அடைய நீங்கள் விரும்பினால், குழந்தையை பாய் அல்லது பேபிமேட்டில் நல்ல துணியை பரப்பி அதில் அவர்களை ஃப்ரீயாக நகர விடுங்கள். பவுன்சர்கள் மற்றும் ஸ்விங்ஸ் போன்ற "உபகரணங்களில்" உங்கள் குழந்தை அதிக நேரம் செலவிடாதவாறு கட்டுப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கான வாக்கர் அல்லது ஜம்பர் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி குறையக்கூடும், இவை குழந்தைகள் தாங்களாகவே நிற்க ஊக்குவிக்கிறது (புஷ் டாய்கள் பரவாயில்லை) ஆனால் அதிலேயே நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. உங்கள் குழந்தையை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க, ஒரு ப்ளேபென் அல்லது போர்ட்டபிள் கட்டில் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

    டம்மி டைமிற்கான (குப்புற படுத்தல்) நேரம்!(It's never too early for tummy time!)

    டம்மி டைம் ஆனது குழந்தைகளின் கழுத்து, தோள்கள் மற்றும் கைகளை வலுப்படுத்த சிறந்த நுட்பமாகும், இதனால் குழந்தைகள் கூடிய விரைவில் எளிதில் ஊர்ந்து செல்ல முடியும். உங்கள் குழந்தையை உங்கள் மார்பின் மீது அரை சாய்ந்த தோரணையில் வைத்து, வயிற்றை அசைக்க அனுமதிக்கவும். உங்கள் முன் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான ஒரு பிரகாசமான வண்ணப் பொருளை வைப்பது, ஒரு கண்ணாடி அல்லது உங்கள் முகம் கூட டம்மி டைமிற்கு உதவும். குழந்தைக்கு தானாக தலையை உயர்த்தும் வலிமை வந்த பிறகு, குழந்தையை தரையில் அல்லது முதுகில் ஒரு டவலைக் கட்டி அதில் குழந்தைகளை வைக்கலாம். உங்கள் குழந்தையால் கொஞ்ச நேரம் மட்டுமே உட்கார முடிகிறது அல்லது தலையை தூக்கி பார்க்க முடிகிறது என்றால், தினமும் சிறிது நேர பிராக்டீஸ் போதும், குழந்தைகளுக்கு படிப்படியாக பிராக்டீஸை அதிகரிக்கவும்.

    உங்கள் குழந்தைக்கு "சரியான" டெஸ்ட்டைக் கொடுங்கள்(Give your child the "just right" test. In tamil)

    டிரையல் அண்ட் எரர், மோட்டார் டெவலப்மென்ட்க்கு அவசியம், இதை செய்ய சற்று அச்சமாக இருந்தாலும் கூட செய்யுங்கள். உங்கள் குழந்தை சிலவற்றை கற்கும் முன் சில தவறுகளைச் செய்ய அனுமதிக்கவும். உங்கள் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவ, குழந்தைகள் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற பணியின் சிரமத்தை படிப்படியாக அதிகரிக்கலாம். உதாரணமாக, உங்கள் குழந்தை தனியாக உட்கார முடிந்தால், கைக்கு எட்டாத ஒரு பொம்மையை அடைய குழந்தையை ஊக்குவிக்கவும். குழந்தைகளால் முடிந்தால், சற்று பெரிய அல்லது கனமான பொம்மையைப் பிடிக்க முயற்சி செய்யட்டும்.

    சுவாரஸ்யமாக்குங்கள்!(Make it enjoyable!)

    குழந்தை சுய உந்துதல் மற்றும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடும்போது குழந்தை கற்றல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய திறன்களைக் கற்பிக்கும் போது, பேபிஸ் மோட்டார் ஸ்கில் டாய்கள் மற்றும் உங்கள் குழந்தை ரெகுலராக செய்யும் ஆக்டிவிட்டிளைப் பயன்படுத்தவும் (பல்வேறு சத்தங்கள், உடலமைப்பு மற்றும் வண்ணங்களைக் கொண்ட பொம்மைகளை முயற்சிக்கவும்). உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் முதன்மை ஆதாரம் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அவர்களின் வெற்றிகளுக்கு எப்போதும் கிளாப்ஸ் அல்லது வாழ்த்து தெரிவிக்க மறக்காதீர்கள்!

    இறுதியாக...

    பிறந்து 7 முதல் 10 மாதங்கள் வரை ஆன பின்பு, பெரும்பாலான குழந்தைகள் சுதந்திரமாக தவழ்ந்து விளையாடுவார்கள். உங்கள் குழந்தை மற்றவர்களை விட விரைவில் அல்லது தாமதமாக கூட நகர ஆரம்பிக்கலாம். சில குழந்தைகள் சம வயதுடைய மற்ற குழந்தைகளைப் போல் சீக்கிரம் தவழ்ந்து வரக் கற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், அதில் ஓன்றும் தவறில்லை.

    ஒவ்வொரு குழந்தையும் அவர்களுக்கான முறையில் வளர்க்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை பிற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம். பிறக்கப்போகும் உங்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.

    மேற்கோள்:

    • மனித நரம்பியல் அறிவியலின் எல்லைகள்: "தசைஇயக்கு திறன்-செறிவூட்டப்பட்ட கற்றல் செயல்பாடுகள் முன்பருவ குழந்தைகளில் கணித செயல்திறனை மேம்படுத்தலாம்."

    • மனித இயக்க அறிவியல்: "கணினிமயமாக்கப்பட்ட தட்டச்சு தலையீட்டைத் தொடர்ந்து குழந்தைகளின் சிறந்த மோட்டார் ஸ்கில்களில் முன்னேற்றம்," "வரைதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் துல்லியம்: சிறந்த மோட்டார் கன்ட்ரோலின் வெவ்வேறு அம்சங்களுக்கான வெவ்வேறு நடவடிக்கைகள்."

    • ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ்: "அடிப்படை மோட்டார் ஸ்கில்கள், ஸ்கிரீன்-டைம் மற்றும் ப்ரீஸ்கூல் குழந்தைகளின் உடல் செயல்பாடு," "மோட்டார் செயல்திறன் அல்லது நகர்வதற்கான வாய்ப்புகள் என்னென்ன? குழந்தைகளுக்கு மிகவும் தேவையானது என்ன?"

    Tags :

    motor skill in tamil, motor skill meaning in tamil, types of motor skill in tamil, how to diagnose motor skills in tamil, how to cure motor skills in tamil, tests for motor skills in tamil, treatments for motor skills in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.