Updated on 3 November 2023
க்ளோஸ்ட்ரிடியம் டெட்டனி எனப்படும் பாக்டீரியா, டெட்டனஸ் எனப்படும் அழற்சி நிலையை ஏற்படுத்துகிறது. உடலில் ஏற்படும் காயம், புண் ஆகியவற்றின் மூலம் இந்த பாக்டீரியா உள்ளே நுழைகிறது. ஒரு சிறிய கீறல் வழியாகக் கூட நுழையும்.
மேல்தோல் வழியாக இரத்த ஓட்டத்தில் நுழைந்தவுடன், இந்த பாக்டீரியம் டெட்டானோஸ்பாஸ்மின் எனப்படும் நச்சுத்தன்மையை உருவாக்குகிறது. உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த நச்சு, நரம்பு மண்டலத்தை குறிவைத்து மரணத்தைக்கூட ஏற்படுத்தி விடக்கூடும்.
இந்த நிலை ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. கர்ப்ப காலத்தில் டிடி தடுப்பூசியின் முக்கியத்துவம் இதனால்தான் அதிகரிக்கிறது. கர்ப்பிணிகளும் அவர்கள் கருவில் சுமக்கும் குழந்தைகளும் டெட்டனஸ் டோக்ஸாய்டு தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதன் மூலம் டெட்டனஸ் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
டெட்டனஸ் டாக்ஸாய்டு (டிடி) தடுப்பூசி ஒரு நபர் டெட்டனஸ் நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.
கூடுதலாக, கர்ப்பமாக இருப்பவர்களுக்கு மருத்துவர் இந்த தடுப்பூசியை அறிவுறுத்துவார். ஒரு டிடி தடுப்பூசி, தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை டெட்டனஸ் நோயால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும்.
இந்த தடுப்பூசியைப் போட்ட பிறகு, உடல் நோய் எதிர்ப்பு சக்திகளை உற்பத்தி செய்யும். அது குழந்தைக்கு அனுப்பப்படும். தற்காலிக பாதுகாப்பை தடுப்பூசி வழங்கும்.
பிறந்த குழந்தைகள் நியோனடால் டெட்டனஸ் எனப்படும் மிகவும் ஆபத்தான நோய்க்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்.
கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படாத வெட்டுக் கருவிகள் மற்றும் குணமடையாத தொப்புள் கொடி ஆகியவை இந்த நோய்க்கான முக்கிய காரணங்களாகும். பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை டெட்டனஸ் குறைப்பதால் குழந்தைகளை அது பாதிக்கலாம்.
இதன் விளைவாக, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது டெட்டனஸ் டாக்ஸாய்டு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு, இது குழந்தைக்கு பாதுகாப்பை வழங்கும். எனவே, இந்தத் தடுப்பூசிக்கு நன்றி கூறுங்க.
கருவுறும் பெண்களுக்கு டெட்டனஸ் டாக்ஸாய்டு (டிடி) தடுப்பூசி பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில், டெட்டனஸ் பாதிப்புக்குள்ளான பெண்கள், டெட்டனஸ் டாக்ஸாய்டு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும், அவர்கள் நோய் பரவல் அபாயத்தைக் குறைக்க இதை கட்டாயம் செய்ய வேண்டும். இந்த தடுப்பூசியை மருத்துவர்கள் பரிந்துரை செய்ய காரணம் என்னவென்றால், பிரசவங்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற முறைகளில் நிகழ்கின்றன. அப்போது பாதுகாப்பு கவசமாக இந்த தடுப்பூசி விளங்கும்.
எந்தவொரு பாதகமான விளைவுகளையும் தவிர்க்க, தடுப்பூசியைப் போடுவதற்கு முன், நோயாளிகள், குறிப்பாக கர்ப்பிணிகள், சில நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கூடுதலாக, அவர்கள் கர்ப்ப காலத்தில் டெட்டனஸ் ஊசி போடும்போது ஒரு கால அட்டவணையை கடைபிடிக்க வேண்டும்.
இந்தத் தடுப்பூசியைப் போட்டு விடும் சுகாதார நிபுணர்கள், தடுப்பு மருந்து உள்ள பாட்டிலை நன்கு குலுக்குகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தப் பாட்டிலில் உள்ள திரவம் மற்றும் துகள்கள் சரியாக ஒன்று சேர்ந்து கலக்கிறதா என்பதை சரிபார்க்க அவர்கள் இதை செய்கிறார்கள்.
மருந்து உறைதல் மற்றும் கரைக்கும் போது பாட்டிலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மருந்து பாட்டிலை குலுக்கி சோதனை செய்வது அவசியமாகிறது.
மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே ஒருவருக்கு போட பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அதையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து மருத்துவ பதிவுகளையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே மருத்துவர் தடுப்பூசி போடுவார்.
குழந்தை பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, சுகாதார வல்லுநர்கள் வழக்கமாக டிடி(TT)/டிடி(Td) தடுப்பூசியை கர்ப்பிணிக்கு செலுத்துவார்கள். இருப்பினும், கர்ப்பிணிக்கு தடுப்பூசி போடவே இல்லை என்றாலோ அல்லது அவரது நோய்த்தடுப்பு குறித்து தெரியவில்லை என்றாலோ அவர்கள் கூடுதல் டோஸ் போடுவார்கள்.
கர்ப்பிணி ஏற்கனவே 1 முதல் 4 டெட்டனஸ் டாக்ஸாய்டு டோஸ்கள் போட்டிருந்தால் குழந்தை பிறப்பதற்கு முன்பு டிடி(TT)/டிடி(Td) மீதமுள்ள டோஸை போடலாம்.
கடைசி டிடி தடுப்பூசி பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் கொடுக்கப்பட வேண்டும். தனிப்பயனாக்கப்பட்ட நோய்த்தடுப்பு சான்றிதழில் டோஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - இந்தியாவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி விளக்கப்படம்
இது உங்களுக்கு முதல் கர்ப்பமாக இருந்தால், கர்ப்ப காலத்தில் டெட்டனஸ் டாக்ஸாய்டை இரண்டு டோஸ் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்துவார்.
கர்ப்பத்தின் ஏழாவது மாதம் அல்லது கடைசி மூன்று மாதங்களில், கர்ப்பிணி முதல் டோஸ் எடுக்க வேண்டும். முதல் டோஸ் எடுத்து நான்கு வாரங்களுக்குப் பிறகு, இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு டோஸ்கள் போட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. பல டோஸ்கள் டெட்டனஸ் கிருமிகளிலிருந்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை பாதுகாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.
கர்ப்பத்தின் 28 ஆவது வாரத்தின் தொடக்கத்தில் இருந்து 3 டோஸ் தடுப்பூசி போடலாம் என்று சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வேறு சில மருத்துவ நிபுணர்கள் முதல் மூன்று மாத காலத்தில் தடுப்பூசி போட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மற்ற நடைமுறைகள் பாசிட்டாவாக வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைப்பதால் முதல் மூன்று மாதத்தில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள்.
டிடி ஊசியை கர்ப்பிணிக்கு பரிந்துரைக்கும் முன் முழு நோய்த்தடுப்பு பதிவையும் மருத்துவர் ரிவ்யூ செய்வார்.
முதல் கர்ப்பம் உண்டாகி இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தான் ஆகியிருக்கிறது எனும் நிலையில், முந்தைய கர்ப்ப காலத்தில் இரண்டு தடுப்பூசியை அந்தப் பெண் போட்டிருந்தால், அவருக்கு இந்த முறை ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மட்டும் போதும்.
குறிப்பிடத்தக்க இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது கர்ப்பம் ஏற்பட்டால் தடுப்பூசி அட்டவணை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருவுற்றிருக்கும் பெண் தன்னையும் குழந்தையையும் பாதுகாக்க கர்ப்ப காலத்தில் டெட்டனஸ் டாக்ஸாய்டு (டிடி) தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். எனவே, இந்த தடுப்பூசி கர்ப்ப காலத்தில் முக்கியமானதாகிறது. தொடக்க கர்ப்ப காலத்தில் டிடி தடுப்பூசியை எப்போது போட்டுக் கொள்ள வேண்டும் என்று எழுந்த கேள்விக்கு வாசகர்களுக்கு சாத்தியமானதாகவும் நியாயமானதாகவும் பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali
গর্ভাবস্থায় হিং | ঝুঁকি, সুবিধা এবং অন্যান্য চিকিৎসা | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Bengali
স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali
গর্ভাবস্থায় পোহা: উপকারিতা, ধরণ এবং রেসিপি | Poha During Pregnancy: Benefits, Types & Recipes in Bengali
গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |