
சாராம்சம்




குழந்தையை சுமக்கும் போது பெண்கள் ஏராளமான அசௌகரியங்களுக்கு உள்ளாவதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல, குழந்தை பெற்றெடுத்த பிறகும் கூட அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உதாரணத்திற்கு, சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு தீவிரமான வாயு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த நிலைக்கு பெயர் பிரசவத்திற்கு பிந்தைய வாயு பிரச்சினை என்பதாகும். பொதுவாக, இது தாமாகவே சரியாகிவிடும். எனினும், சிலருக்கு இந்தப் பிரச்சினை நீடித்து இருக்கக் கூடும். மற்றும் அதன் விளைவுகளுக்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டியிருக்கலாம்.
பிரசவத்திற்கு பிந்தைய வாயு என்ற மருத்துவ குறிப்பு புரிந்து கொள்ள சிக்கலானதாக இருக்கும் நிலையில், பலரும் இதுகுறித்து குழப்பம் அடைகின்றனர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இது குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் பிரச்சினை ஆகும். குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் வாயு அல்லது அதிகப்படியாக உருவாகி வரும் வாயுவைத்தான் நாம் பிரசவத்திற்கு பிந்தைய வாயு பிரச்சினை என்று குறிப்பிடுகிறோம். சில சமயம், பெண்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சினை ஆகிய இரண்டும் இணைந்து வரலாம். பொதுவாக பிரசவத்திற்குப் பிந்தைய வாயு பிரச்சினை என்பது ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரசவத்திற்கு பிந்தைய வாயு பிரச்சினை எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல் சிலர் பதற்றமும், குழப்பமும் அடைகின்றனர். ஆனால், குழந்தை பிறப்புக்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் இயல்பான பிரச்சினை இது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு பிந்தைய வாயு பிரச்சினைக்கான சில பொதுவான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
குழந்தை பிறப்பின்போது பெண்களின் இடுப்புப் பகுதி தசைகள் மிக கூடுதலாக விரிவடையும். இவ்வாறு தசைகள் மிக கூடுதலாக விரிவடையும்போது சில சமயம் பாதிப்பு அடையக் கூடும். இவ்வாறு காயமடைந்த தசைகளானது வாயுவை கட்டுப்படுத்தி வைக்கக் கூடிய திறனை இழக்கிறது. மேலும், இதன் காரணமாக மலக்குடல் இயக்கங்களும் பாதிக்கப்படலாம்.
கர்ப்ப காலத்தில் அவ்வபோது மலக்குடல் தொடர்பான பிரச்சினைகளால் அவதி அடைகின்ற பெண்கள், பிரசவத்திற்கு பிறகு வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சில சமயம், மலம் மிகக் கடினமானதாக இறுகி வெளியேறுவதற்கு சிரமம் கொண்டதாக இருக்கும். இதன் எதிரொலியாகவும் வாயு உற்பத்தியாகும்.
செறிவூட்டப்பட்ட முழு தானிய உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் காரணமாக வாயு அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய வாயு பிரச்சினை உருவாகலாம்.
கர்ப்ப காலத்தின்போது ஆசனவாய் மற்றும் பெண்ணுறப்பு திறப்பு பகுதிக்கு இடைப்பட்ட இடமானது கிழிந்து விடுவதைத் தடுக்க, மருத்துவர் அங்கு செய்யக் கூடிய அறுவை சிகிச்சைக்கு பெயர் எப்ஸியோடமி ஆகும்.
இந்தக் காயம் மெதுவாக குணமாகும் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை பலவீனம் அடையச் செய்யும். சில சமயம், இந்த பிரச்சினை காரணமாக மலச்சிக்கல் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய வாயு போன்ற தொந்தரவுகள் உருவாகலாம்.
பிரசவத்திற்கு பிந்தைய வாயு எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொண்ட நிலையில், அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிரசவத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் ஏற்படும் வாயு பிரச்சினைக்கான சில பொதுவான அறிகுறிகள் இவை:
வாயு வெளியேற்றம்
வயிற்று வலி
வயிற்றுப் பகுதியில் பிடிப்பு
மலக்குடல் நடவடிக்கைகளில் தொந்தரவு
மலச்சிக்கல்
ஏப்பம்
இடுப்பு பகுதியில் ஏற்படும் காயம் காரணமாக பெண் ஒருவருக்கு பிரசவத்திற்கு பிந்தைய வாயு பிரச்சினை ஏற்படுமாயின், சில மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு மூலமாக அவற்றை குணப்படுத்த மருத்துவர் முயற்சி செய்வார்.
ஆசனவாய் பகுதி அசௌகரியம் காரணமாக சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, இடுப்புப் பகுதி தசைகளை வலுப்படுத்தும் வகையில் உடற்பயிற்சிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படும். இந்தப் பயிற்சிகளில் இடுப்புப் பகுதி தசைகளை ரிலாக்ஸ் செய்யவும், அவற்றை இறுக்கமாக வைத்துக் கொள்ளவும் வழிவகை ஏற்படும். இதன் காரணமாக சிறுநீர் கழிக்கும்போது அல்லது வாயு வெளியேறும்போது கட்டுப்பாடு கிடைக்கும்.
இந்த தொந்தரவுகள் நீடிக்கும் பட்சத்தில், இடுப்புப் பகுதி தசை பிரச்சினைகளுக்கு தீர்வு தரக் கூடிய ஃபிசியோதெரபிஸ்ட் நிபுணரை அணுகலாம்.
மருந்தகங்களில் நாமே வாங்கி எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்துகள் மற்றும் மலமிளக்கி போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாம். உணவுகளில் மாற்றம் செய்வதன் மூலமாகவும், பிரசவத்திற்கு பிந்தைய வாயு தொல்லையில் இருந்து விரைவாக தீர்வு அளிக்கும்.
செரிமான நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடிய வகையில் மிக அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் மற்றும் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏதேனும் மருத்துவ பிரச்சினை காரணமாக பெண்களுக்கு தொடர்ந்து தொந்தரவுகள் நீடிக்கும் பட்சத்தில், அவற்றை முழுமையாக குணப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மருத்துவர் மேற்கொள்வார்.
இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிறகு வரும் முதுகு வலி: காரணங்கள், சிகிச்சைகள், நிவாரணத்திற்கான குறிப்புகள்
பிரசவத்திற்கு பிந்தைய வாயு பிரச்சினை ஏன் இவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்று பெண் மனதளவில் உணரும்போது அல்லது பிரவத்திற்குப் பிந்தைய வாயு பிரச்சினையில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவது என்று நினைக்கும்போது, அவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுகலாம்.
பிரசவத்திற்குப் பிந்தைய வாயு பிரச்சினை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. பிரசவத்திற்கு பிறகு ஒரு சில மாதங்களை கடந்தும் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது என்றால், நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். மலம் கழிக்கும்போது பெண்களுக்கு உடல் அளவில் கட்டுப்பாடு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
மலம் கழிக்கும்போது கட்டுப்பாட்டை இழப்பது என்பது ஆசனவாய் அல்லது இடுப்புப் பகுதி தசைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான அறிகுறியாகும். அதை சரியாக குணப்படுத்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினையை எதிர்கொள்ளக் கூடிய பெண்களும் மருத்துவரை அணுகி ஆலோசிக்கலாம்.
பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில், வயிற்றுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு அல்லது வலியை எதிர்கொள்ளும் பெண்கள் மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை கேட்டறியலாம். வயிறு உப்புசம் பிரச்சினைக்கு தயக்கம் காட்டாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும். ஏனென்றால், இந்த பிரச்சினையை அலட்சியப்படுத்துவதால் தொந்தரவுகள் மேலும் அதிகமாகலாம்.
பிரசவத்திற்குப் பிந்தைய வாயு என்றால் என்ன மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய வாயு எதனால் ஏற்படுகிறது என்பது தெரியாமல் அலட்சியம் செய்யும் நிலையில், பிரச்சினைகள் தீவிரமானதாக இருக்கலாம். அதுபோன்ற நிலைகளில், மேலும் சிக்கல்கள் தீவிரம் அடைவதை தவிர்த்து, உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் உதவியை நாட வேண்டும்.
செரிமானத்தை மேம்படுத்தி, வாயு பிரச்சினையில் இருந்து நிவாரணம் தரக் கூடிய மென்மையான தயாரிப்புகள் உங்கள் குணமடைதலுக்கு உறுதுணையாக இருக்கும்.

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles




MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest




Airprime Premium Diaper Pants S (5–9 kg, 26 Count) + 100% Plant-Based Baby Wipes (Pack of 2)
Rash-free | Paediatrician Tested | Dermatologically Tested | Breathable | Expert Approved | No Harsh Bleaching Chemicals | Super-Saver Combo

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each







This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |