This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

சிறுவர்களுக்கு வரும் கால் வலி( வளரும் வலிகள்): அர்த்தம், காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்( Growing Pains: Meaning, Causes, Symptoms and Treatments In Tamil)

Growth & Development
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
சிறுவர்களுக்கு வரும் கால் வலி( வளரும் வலிகள்): அர்த்தம், காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்( Growing Pains: Meaning, Causes, Symptoms and Treatments In Tamil)
Read time7 min

ஒரு குழந்தை வளரும் போது, லேசான அசௌகரியங்களை அனுபவிக்கலாம். அவற்றில் ஒன்று தான் வளரும் வலிகள். இந்த வலியானது பெரும்பாலும் ஒரு குழந்தை மூன்று முதல் பன்னிரண்டு வயதுக்குள் இருக்கும் போது நிகழ்கிறது. எனினும், இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது, போக போக வலி குறைந்து விடும்.

வளரும் வலி என்றால் என்ன?(What is Growing Pain? In Tamil)

ஒரு குழந்தை வளரும் போது தன் கால்களில் அனுபவிக்கும் வலி மற்றும் கடு கடுத்தல் போன்றவை வளரும் வலிகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வலியானது முதன்மையாக தொடை, கெண்டை கால் மற்றும் முட்டி பகுதிகளில் அனுபவிக்கப்படுகிறது. சிறுவர்களில் இந்த கால் வலி பெரும்பாலும் இரவு நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ள வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

இருப்பினும், எல்லா குழந்தைகளுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லை. குறைவான வலி உணர்நிலை கொண்ட குழந்தைகளில் இது அடிக்கடி நிகழ்கிறது. மேலும் ஒரு சில சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் இதனை உளவியல் சிக்கல்களுடன் இணைக்கின்றனர். ஒரு சிலர் வளரும் வலிகளை பிற வலிகளோடு குழப்பிக் கொள்வதால், வளரும் வலிகள் என்றால் என்ன என்பதையும், அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

வளரும் வலிகளின் அறிகுறிகள் மற்றும் குறிப்புகள் என்ன?(What are the symptoms and signs of growing pains?In Tamil)

வளரும் வலிகள் என்றால் என்ன மற்றும் அதனை தனித்துவமாக்குவது எது? அறிகுறிகளை வைத்தே இந்த கேள்விக்கான பதில்களை கூறி விடலாம். மேலும் இதுவே வளரும் வலிகளை கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழியாகும். வளரும் வலிகளுக்கான சில முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

  • கெண்டை கால், தொடைகள் மற்றும் மூட்டிகளுக்கு பின் தசை வலி.

  • மூட்டுகளில் வலி இல்லாமை

  • விட்டு விட்டு வலி ஏற்படுதல்

  • பெரும்பாலும் வலியானது மதிய வேலை அல்லது மாலையில் ஆரம்பிக்கும்

  • வலி தீவிரமாக இருக்கும் என்பதால் அதனால் குழந்தை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளலாம்.

  • அவர்கள் பகல் நேரத்தில் எந்த ஒரு வலியையும் அனுபவிக்க மாட்டார்கள்

  • வளரும் வலி காரணமாக குழந்தை நொண்டிக் கொண்டு நடக்கத் தேவையில்லை. மேலும் ஓடுவதிலோ அல்லது விளையாடுவதிலோ குழந்தைக்கு எந்த ஒரு சிக்கலும் இருக்காது.

  • வலியுடன் சேர்ந்து சில சமயம் தலைவலியும் ஏற்படலாம்.

வளரும் வலிகள் ஏற்படக் காரணம் என்ன?(What causes growing pains?In Tamil)

தங்களது வளரிளம் பருவம் முழுவதும் பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பிள்ளைகள் வளரும் வலிகளை அனுபவிக்கிறார்கள். இந்த வலிக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும், அது பின்வரும் காரணங்களால் நிகழலாம்.

  • தசை சோர்வு(Muscle fatigue)

பகல் நேரத்தில் அதிகப்படியாக ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளில் வளரும் வலிகளை ஏற்படுத்தும். எனினும், இது அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தாது. ஒரு சில குழந்தைகள் இதிலிருந்து எளிதில் மீண்டு வரும்போது, ஒரு சில குழந்தைகள் மட்டுமே இரவில் வலியை அனுபவிக்கிறார்கள்.

  • மோசமான தோரணை(Improper posture)

உட்காருதல், நடத்தல் அல்லது நிற்பது போன்றவற்றை தவறான தோரணையில் செய்வது குழந்தையின் உடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும். மேலும், ஒரு குழந்தைக்கு தட்டையான கால்கள் இருந்தால் அவருக்கு வளரும் வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

  • மனதளவில் சோகமாக இருப்பது(Being emotionally upset)

மனதளவில் சோகமாக உள்ள குழந்தைகள் அல்லது மன அழுத்தத்தில் உள்ள குழந்தைகள் இந்த வலிக்கு ஆளாகிறார்கள். இருப்பினும், வலியை அனுபவிக்கும் எல்லா குழந்தையிலும் இதுவே காரணமாக அமையாது.

இதையும் படிக்கலாமே! - பொருட்களை வாங்குவது எப்படி?: உங்களுக்கான பட்டியல் இதோ!(How To Shop Sensibly For Your Baby: Here's A Checklist In Tamil)

வளரும் வலிகளுக்கான ஆபத்து காரணிகள்(Risk factors for growing pains In Tamil)

வளரும் வலியானது பொதுவாக வளரிளம் பருவ பிள்ளைகளில் காணப்படுகிறது. இந்த வயது பிள்ளைகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். எனவே, தங்கள் பிள்ளைக்கு வளரும் வலிகள் இருக்கும் போது, அவர்கள் அதிக அளவில் சோர்வாகவில்லை என்பதையும், போதுமான அளவு ஓய்வு பெறுகிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பகல் நேரத்தில் ஓடுதல், குதித்தல் மற்றும் ஏறுதல் போன்ற விஷயங்களை செய்வது இரவு நேரத்தில் தசை வலியை ஏற்படுத்தும்.

வளரும் வலிகளை அடையாளம் காண்பது எப்படி?(How are growing pains identified? In Tamil)

வளரும் வலிகளைக் கண்டுபிடிக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட பரிசோதனை எதுவும் கிடையாது. எனவே, அறிகுறிகளை வைத்தே மருத்துவர்கள் இந்த நிலையை கண்டுபிடிப்பார்கள். வளரும் வலிகளைத் தவிர தசை வலிகளை ஏற்படுத்தக்கூடிய பிற சுகாதார நிலைகளின் அறிகுறிகளை ஒவ்வொன்றாக மருத்துவர்கள் சரிப்பார்ப்பார்கள். மருத்துவர்கள் தேடக்கூடிய ஒரு சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • குழந்தையின் வெளிப்புற பரிசோதனை நார்மலாக இருந்தாலும், வலி நீடிக்கிறது

  • வலி இரவில் மட்டுமே காணப்படுகிறது. பகல் நேரத்தில் குழந்தை எந்த ஒரு வலியையும் அனுபவிக்கவில்லை.

  • மசாஜ் அல்லது வலி நிவாரணிகளை எடுத்த பிறகு வலி குறைதல்.

வளரும் வலிகளுக்கான சிகிச்சை முறைகள்(Treatment for growing pains In Tamil)

சுகாதார பராமரிப்பு வல்லுநரின் ஆலோசனையைப் பெறுவதே இந்த வலியை நிர்வகிப்பதற்கான சிறந்த வழி ஆகும். தங்கள் குழந்தைகளில் உள்ள வளரும் வலிகளைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் பெற்றோர்களுக்கு விளக்குவார்கள். மருத்துவர் பரிந்துரை செய்டக்கூடிய ஒரு சில விஷயங்கள் பின்வருமாறு:

  • வலியானது சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்ற உறுதியை பெற்றோர்கள் கொடுப்பதன் மூலமாக குழந்தையில் உள்ள மன அழுத்தத்தை குறைக்கலாம்.

  • பாதிக்கப்பட்ட பகுதியில் சிறப்பு எண்ணெய்கள் கொண்டு மென்மையான மசாஜ் கொடுப்பது வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும்

  • வலி உள்ள இடத்தில் ஹீட் பேக் கொண்டு சூடான ஒத்தடம் கொடுப்பது

  • குழந்தையின் வலியைப் போக்க வாய்வழி கொடுக்கப்படும் வலி நிவாரணிகள் கூட உதவலாம். இபுப்ரொஃபென் அல்லது அசிட்டாமினோஃபென் போன்ற மருந்துகள் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவக்கூடும்.

  • குழந்தையின் தோரணையை சரி செய்ய வர்மமுறை மருத்துவர் அல்லது குழந்தை நல மருத்துவரை ஆலோசிப்பது

  • தசை வலியைப் போக்க குழந்தையை நீட்சி பயிற்சி செய்ய சொல்வது

இதையும் படிக்கலாமே! - சிறந்த குழந்தை வளர்ப்பு: நடைமுறைகள் மற்றும் நன்மைகள்

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?(When should I contact a physician? In Tamil)

அனைத்து தசை வலிகளும் வளரும் வலிகளுடன் தொடர்புடையது அல்ல. எனவே, தங்கள் குழந்தைக்கு தசை வலி ஏற்படும் போது, எப்போது மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். வலியானது பின்வருமாறு இருக்கும் போது, மருத்துவரை அணுகுவது அவசியம்:

  • தொடர்ச்சியாக உள்ளது

  • பகல் நேரத்திலும் வலி உள்ளது.

  • குழந்தையின் அன்றாட வேலைகளை பாதிக்கும் அளவிற்கு வலியானது மிகவும் தீவிரமாக உள்ளது

  • மூட்டுகளில் வலி இருக்கும் போது

  • ஒரு மோசமான காயத்திற்கு பிறகு உண்டான வலி

  • குழந்தைக்கு தசை வலியுடன் சேர்த்து வீக்கம், காய்ச்சல், தடிப்பு, நொண்டிக் கொண்டு நடக்க வேண்டிய சூழல், சோர்வு, அல்லது பசியின்மை போன்ற பிற அறிகுறிகளுடன் தோன்றும் போது

எனவே, வளரும் வலிகள் குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இது தான். பெற்றோர்கள் இந்த தகவல்களின் உதவியுடன் தங்கள் குழந்தையின் வலியை அறிந்து, அதற்கான சிகிச்சையும் அளிக்கலாம்.

Tags :

growing pains in tamil, growing pains meaning in tamil, reasons for growing pains in tamil, how to diagnose growing pains in tamil, how to treat growing pains in tamil

YOU MAY ALSO READ :

Growing Pains: Meaning, Causes, Symptoms and Treatments In English

Growing Pains: Meaning, Causes, Symptoms and Treatments In Telugu

Growing Pains: Meaning, Causes, Symptoms and Treatments In Bengali

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
Feeding Tracker
Baby's feeding schedule made easy
arrow_right
undefined icon
Baby Names
Search names with meanings
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
Chandrika Iyer
Chandrika Iyer

Related Articles

Questions about this article

  • Asked when 24 weeks pregnant

    Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

  • 31 weeks pregnant

    Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

  • trying to conceive

    மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

  • 29 weeks pregnant

    3 மந்த் பேபி எப்படி இருக்கும்

  • Asked by 8 weeks pregnant

    அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.