hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Growth & Development arrow
  • குழந்தையின் வளர்ச்சி: குழந்தைகளின் வளர்ச்சி வேகம் எப்போது ஏற்படுகிறது? (Baby Growth: When do growth spurts occur in babies In Tamil) arrow

In this Article

    குழந்தையின் வளர்ச்சி: குழந்தைகளின் வளர்ச்சி வேகம் எப்போது ஏற்படுகிறது? (Baby Growth: When do growth spurts occur in babies In Tamil)

    Growth & Development

    குழந்தையின் வளர்ச்சி: குழந்தைகளின் வளர்ச்சி வேகம் எப்போது ஏற்படுகிறது? (Baby Growth: When do growth spurts occur in babies In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    குடும்பத்தில் புதிதாக பிறந்த குழந்தையால் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் புன்னகைப்பதில் இருந்து கை, கால் விரல்களை அசைத்து விளையாடுவது நமக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். குழந்தையின் வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இது நமக்கு ஆச்சரியத்தை வழங்கும். ஆனால் குழந்தைகளுக்கு இந்த திடீர் வளர்ச்சி எப்போது ஏற்படுகிறது? ஏன் ஏற்படுகிறது? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

    குழந்தையின் வளர்ச்சி வேகம் என்றால் என்ன? (What is a growth spurt? In Tamil)

    குழந்தையின் வளர்ச்சி வேகம் என்பது ஒரு குழந்தை திடீரென்று அதன் வளர்ச்சியின் காலத்தை தீவிரப்படுத்தத் தொடங்கும் போது ஏற்படுகிறது. இந்த வளர்ச்சியின் போது, குழந்தைகள் வெவ்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். அதாவது, அடிக்கடி தாய்ப்பால் குடிப்பது, தூக்க முறையில் மாற்றம், விசித்திரமாக நடந்து கொள்ளுதல் ஆகியவை இருக்கும். இந்த அறிகுறிகள் பல குழந்தைகளிடம் நீண்ட காலமாக காணப்பட்டாலும், மற்ற குழந்தைகளுக்கு அவை சில நாட்கள் அல்லது ஒரு வாரம் மட்டுமே நீடிக்கும்.

    இந்த வளர்ச்சிக் காலமானது குழந்தையின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வளர்ச்சி மேம்பாட்டை குழந்தை வளர்ச்சி சார்ட்டின் உதவியுடன் நன்றாக செய்ய முடியும். தினசரி, வாராந்திர அல்லது மாதந்தோறும் குழந்தையின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்காணிக்க பெற்றோருக்கு இந்த சார்ட் உதவுகிறது. இந்த வளர்ச்சி நிலைகளை குழந்தை நல மருத்துவர் பரிந்துரைத்திருப்பார்.

    குழந்தைகளிடம் வளர்ச்சி எப்போது ஏற்படுகிறது? (When do growth spurts occur in babies In Tamil)

    குழந்தைகளின் வளர்ச்சியின் வேகம் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியது அவசியமில்லை. ஆனால், பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சியானது பொதுவாக பிறந்த முதல் வருடத்தில் நிகழ்கிறது. இது வெவ்வேறு நிலைகளில் நிகழலாம். மேலும், பெற்றோர்கள் இந்த மாற்றங்களை வாரங்கள் முதல் மாதங்கள் வரை உணரலாம். குழந்தைகள் வளரும்போது இருக்கும் பல்வேறு வளர்ச்சி நிலைகளை இங்கே பார்க்கலாம்

    1. 1 முதல் 3 வாரம் வரை

    2. 6 வாரங்கள்

    3. 3 மாதங்கள்

    4. 6 மாதங்கள்

    5. 9 மாதங்கள்

    இந்த சார்ட் குழந்தைகளிடையே வேறுபடலாம். மேலும், இதற்கு பல காரணிகள் இருக்கலாம். எனவே, இந்த காலக்கெடுவின்படி, தங்கள் குழந்தைகளிடம் வளர்ச்சி வேகம் இல்லை என்றால் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தையின் வளர்ச்சி டிராக்கரில் குழந்தை நல மருத்துவர் பரிந்துரைத்துள்ள படி, குழந்தை சரியாக தாய்ப்பால் குடிப்பதும், உடல் கழிவுகளை வெளியேற்றுவதும் மற்றும் சரியான முறையில் தூக்கமும் இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று அர்த்தம்.

    இதையும் படிக்கலாமே! - சரியான குழந்தை எடை சார்ட்: குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை (Ideal Baby Weight Chart: Birth to 1 Year In Tamil)

    குழந்தையின் வளர்ச்சி வேகத்துக்கான அறிகுறிகள் என்ன? (What are the signs of Baby Growth Spurts?)

    இந்த காலகட்டத்தில் ஒரு குழந்தை பல நடத்தை மாற்றங்களை சந்திக்கிறது. குழந்தை வளரும்போது பொதுவான அறிகுறிகளைப் பார்ப்பதன் மூலம், பெற்றோர்கள் இந்த வளர்ச்சிக் காலத்தை எளிதில் கவனிக்க முடியும். இவற்றில் சில பின்வருமாறு:

    அடிக்கடி தாய்ப்பால் கொடுத்தல்(Frequent Feeding):

    இந்த வளர்ச்சிக் காலத்தில் குழந்தைகள் அடிக்கடி தாய்ப்பால் குடிக்கின்றனர். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குப் பிறகு தாய்ப்பால் வேண்டும் என்று குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். ஒருவேளை தாய்ப்பால் கொடுக்கத் தவறினால் மணிக் கணக்கில் அழுவார்கள். அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் பசியை சமாளிக்க பால் உற்பத்தியைத் தூண்டும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதை ஒரு தாய் அறிய வேண்டும். எனவே, வாராவாரம் குழந்தையின் வளர்ச்சி டிராக்கரை பராமரிப்பது முக்கியமாகும். அப்போது தான் குழந்தை நல மருத்துவர் தேவையான ஆலோசனைகளை டிராக்கரை சரிபார்த்து வழங்க முடியும்.

    தூக்க முறைகளில் மாற்றம்(Change in Sleeping Patterns):

    குழந்தைகள் கூட பெரியவர்கள் போல் மிட்நைட் ஸ்நாக்ஸை விரும்புகிறார்கள். ஏனென்றால், பசி அவர்களின் தூக்க சுழற்சியை மாற்றிவிடக் கூடும். இதன் காரணமாக, குழந்தை தூங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு சத்தமாக அழுவதால் பெற்றோர்கள் எழுந்து கவனிக்க வேண்டியதாக இருக்கும். எனவே, குழந்தை தூங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு சத்தமாக அழுவதால் பெற்றோர்கள் எழுந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் விரைவில் அவர்கள் தூங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    வம்பு செய்வது அதிகரிப்பு(Growing Fussiness) :

    குழந்தை அடிக்கடி பசியுடன் இருப்பதால், குறிப்பாக தாய்ப்பால் கொடுக்காதபோது, அவர்கள் வம்பு செய்வது இயற்கையான ஒன்றாகும். தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது கூட அது வம்பு செய்வதை பார்க்கலாம். பால் உற்பத்தி குறைவாக இருக்கும் போது, குழந்தைக்கு போதுமான பால் கிடைக்காமல் இருக்கும் போது இது ஒரு சிலருக்கு ஏற்படும். எனவே, ஒரு குழந்தைக்கு எவ்வளவு அதிகமாக தாய்ப்பால் கொடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதிக பால் சுரக்கும். பால் உற்பத்தியை அதிகரிக்க குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

    முடிவுரை (Conclusion)

    குழந்தையின் வேகமான வளர்ச்சி காலகட்டத்தில், தாய் அடிக்கடி அதற்கு பால் கொடுப்பது போன்று உணரலாம். இந்த உணர்வு பல காரணங்களுக்காக அதிகமாகத் தோன்றலாம். ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை. பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தைக்கான வளர்ச்சி சார்ட் என கிடைக்கும் குழந்தை வளர்ச்சி டிராக்கர்களைப் பயன்படுத்துவதால், அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதில் பெற்றோர்கள் தேவையில்லாமல் கவலைப்படுவதை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    குழந்தைகளுக்கான வளர்ச்சி சார்ட்டை பயன்படுத்தும் போது, உலக சுகாதார அமைப்பு (World Health Organization) போன்ற உண்மையான வலைத்தளங்களின் சார்ட்டுகளை மட்டுமே பயன்படுத்துவது அவசியம். இந்த ஒரிஜினல் சார்ட்டுகள் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தைக்கான துல்லியமான வளர்ச்சி முடிவுகளைப் பெற பெற்றோருக்கு உதவுகின்றன. இரு பாலினங்களின் சதவீதங்களில் வேறுபாடுகள் உள்ளன; எனவே, வளர்ச்சி அட்டவணைகள் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை வளர்ச்சி சார்ட் என இரு வேறு வகைகளில் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    மேலும், சுவாரஸ்யமான வாசிப்புகளுக்கும் மற்றும் பல்வேறு குழந்தை பராமரிப்பு பொருட்களை வாங்கவும் www.mylofamily.com வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

    TAGS :

    Baby growth in tamil, When does a child's growth spurt in Tamil,symptoms of baby growth spurt, Baby Growth: When do growth spurts occur in babies In English, Baby Growth: When do growth spurts occur in babies In Hindi, Baby Growth: When do growth spurts occur in babies In Telugu, Baby Growth: When do growth spurts occur in babies In Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.