Maternity Shopping/Essentials
18 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பொதுவாக தாயாகப் போகும் பெண்மணிகளுக்கு தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் ஏகப்பட்ட உணர்ச்சிகள் பொங்கும். அதுமட்டுமல்ல, அவர்கள் பல உடல் ரீதியிலான மற்றும் மன ரீதியிலான மாற்றங்களையும் அனுபவிப்பார்கள். ஒவ்வொரு புது அனுபவமும் சமமான கவனத்தை ஈர்க்கும். இந்த லிஸ்டில் அதிக முன்னுரிமை பெறுவது கர்ப்ப காலம் முழுவதும் சௌகரியமாக இருப்பது தான். கர்ப்பிணிகள் காலை சுகவீனம், முதுகு வலி, சோர்வு, மற்றும் அசௌகரியம் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் தான் கர்ப்ப காலத்தில் எந்த விதமான ஆடை அணிய வேண்டும் என்பது குறித்து பல பெண்கள் அதிகம் சிந்திப்பார்கள்.
பொதுவாக நாம் ஆடைகள் வாங்கும் போது எதிர்பார்க்கும் முதல் விஷயம் சௌகரியம் தான். அதுவும், கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்திற்கான ஆடைகளை தேர்வு செய்ய இது தான் மிகவும் முக்கியமானது. ஏனெனில், எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, பருக்கள் மற்றும் வலி, வாந்தி, அசௌகரியம் போன்ற ஏகப் பட்ட மாற்றங்கள் அவர்கள் உடலில் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய உடல் மாற்றங்களுக்கு ஏற்ற ஆடைகளை தேர்வு செய்வது தான் முக்கியம். ஏற்கனவே வாந்தி, மயக்கம் மற்றும் சோர்வு காரணமாக அசௌகரியமாக இருக்கும் போது அசௌகரியமான ஆடைகள் நிலையை இன்னும் மோசமாக்கக் கூடும். சில நேரங்களில் சரியாக நடக்க முடியாமல் இதனால் காயங்களும் ஏற்படலாம்.
ஒருவருக்கு சௌகரியமாக இருக்கும் ஆடை இன்னொருவருக்கு அசௌகரியமாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். இருப்பினும், பெரும்பாலான பெண்கள் எளிதில் மூச்சு விடும் வகையிலான மெட்டீரியலால் ஆன கம்ஃபர்ட்-ஃபிட் மெட்டர்னிட்டி ஆடைகளையே வாங்க விரும்புகின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சௌகரியமான ஆடைகளை அணிந்தால் தான் அவர்கள் அங்கும் இங்கும் நடப்பதற்கு சௌகரியமாக இருக்கும். அது பருத்தி மற்றும் கைத்தறியால் ஆன ஆடைகளாக இருந்தால், அது சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களைத் தடுக்கும். இதன் மூலம் வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்ப உடலானது தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.
கர்ப்ப காலத்தில் என்ன அணிந்து கொள்ளலாம்? இந்த கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது - மாறிக் கொண்டே இருக்கும் உங்கள் உடலுக்கு பொருத்தமான மற்றும் சௌகரியமான எந்த ஒரு ஆடையையும் நீங்கள் அணிந்து கொள்ளலாம். கர்ப்ப காலம் பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருவது போலத் தான் மகப்பேறு ஆடைகளிலும் எண்ணற்ற வடிவமைப்புகள் மற்றும் அளவுகள் உள்ளன. உடலின் வகை, சௌகரியம், வயிற்றின் அளவு முதலியவற்றைப் பொறுத்து கர்ப்பிணிகள் தங்கள் ஆடைகளை தேர்வு செய்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உங்கள் அலமாரியில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆடைகள் பற்றி கீழே பட்டியலிட்டுள்ளோம்:
சௌகரியமான உள்ளாடை
பெரிய அளவிலான பட்டன் உடைய சட்டைகள்
தளர்வான பாவாடைகள்
நீண்ட கம்பளி ஆடைகள் மற்றும் ஸ்வெட்டர்கள்
சௌகரியமான செருப்பு
கர்ப்பிணிகள் தங்கள் வடிவத்திற்கு பொருத்தமான ஆடைகளைத் தேர்வு செய்வதோடு அது தங்களுக்குத் தேவையான சௌகரியத்தைக் கொடுக்கிறதா? என்று பார்க்க வேண்டும். கர்ப்ப கால உடைகளை தேர்வு செய்யும் போது சில்ஹவுட், சௌகரியம் மற்றும் ஆதரவு போன்ற சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் மாறிக்கொண்டே இருக்கும் தங்களின் வடிவத்திற்கு ஏற்ற உடைகளைத் தான் தேர்வு செய்ய வேண்டும். ஒருவர் கூடுதல் எடையை மத்தியில் சுமந்தால், எம்பயர் லைன் டாப்ஸ் அல்லது ஓவர்சைஸ்ட் டாப்ஸ்களை அணிந்து கொள்ளலாம். இடுப்பைச் சுற்றி அதிக எடை இருந்தால், எ-லைன் பாவாடை, தளர்வான ஆடைகள், அல்லது ஸ்ட்ரெட்ச் ஆகக் கூடிய பேண்ட்ஸ் சிறந்த ஆப்ஷன்களாக இருக்கும்.
ஸ்டைல் என்னவாக இருந்தாலும், கர்ப்பிணிகள் சௌகரியத்தை மட்டும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. எம்பயர்-வெயிஸ்ட் டிரெஸ் ஆக இருந்தாலும் சரி, ஸ்ட்ரெட்ச் ஆகக் கூடிய பேண்ட்ஸ் ஆக இருந்தாலும் சரி, மெட்டர்னிட்டி ஆடைகள் மென்மையானதாக இருக்க வேண்டும். அதோடு, உங்கள் வளரும் வயிற்றுக்கு ஏற்றவாறு அது ஸ்ட்ரெட்ச் ஆகக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான ஆடைகளைத் தேர்வு செய்வது சற்று சிரமமாகத் தான் இருக்கும். ஆனால், வாங்குவதற்கு முன்னரே நீங்கள் போட்டு பார்த்து அதன் பின்னர் வாங்கினால், அது உங்கள் நேரத்தை நிறையவே மிச்சப்படுத்தும்.
மாறிக் கொண்டே இருக்கும் உடலுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான உடைகளையே கர்ப்பிணிகள் தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, மாதங்கள் ஆக ஆக தங்கள் வயிற்றுக்கு ஆதரவு மற்றும் சௌகரியம் கொடுக்கும் உடைகள் அல்லது அதிகப்பட்ச ஆதரவு மற்றும் சௌகரியம் வழங்கும் பிராக்கள் தான் அவர்களுக்கு தேவைப்படும்.
மெட்டர்னிட்டி ஃபேஷன் பெண்மை மற்றும் இன்னொரு உயிரை உலகுக்கு கொண்டு வருவதை கொண்டாடும் விதமாக இருக்க வேண்டும். மலிவான, ஃபிட் இல்லாத ஆடைகளை அறவே தவிர்த்திடுங்கள். அதோடு, உங்கள் ஸ்டைலையும் நீங்கள் இதற்காக விட்டுக் கொடுக்கக் கூடாது. ஸ்டைல் மற்றும் சௌகரியத்தை கருத்தில் கொண்டு கர்ப்பிணிகளுக்கு என்றே பிரத்யேகமாக பல நிறுவனங்கள் ஆடைகளை வடிவமைக்கின்றனர். அதனால் பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஸ்டைலஸ் மற்றும் டிசைன்களை முயற்சி செய்து பார்த்து மகிழலாம்.
இதையும் படிக்கலாமே! - பெண்கள் இன்டிமேட் வாஷை தேர்ந்தெடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய பாயிண்டுகள்
இன்றைய காலக்கட்டத்தில் நாம் பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது வழக்கமாகிவிட்டது. அதனால் மெட்டர்னிட்டி ஆடைகளையும் அவ்வாறே வாங்கிக் கொள்ளலாம். இருந்தாலும், ரீடெயிலர்களிடமும் பல வகையான மகப்பேறு ஆடைகள் கண்டிப்பாக இருக்கும். மகப்பேறு உடைகள் பல ரகங்களில் மற்றும் சரியான விலையில் உங்களுக்கு அருகில் எங்கு கிடைக்கும் என்று உங்களுடைய வட்டாரத்தில் விசாரித்து பார்த்து கூட வாங்கலாம். இது உங்கள் முதல் குழந்தை இல்லையென்றால், உங்களுக்கு ஏற்கனவே ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மெட்டர்னிட்டி ஷாப்பிங் ஆப்ஷன்கள் பற்றி தெரிந்து இருக்கும்.
கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனம் மற்றும் பராமரிப்பு கண்டிப்பாக அவசியம். அதோடு, இந்த நேரத்தில் சற்று ஓய்வு எடுக்கத் தான் உங்கள் மனம் ஏங்கும். அதனால் கடை கடையாக அலைந்து திரிந்து எல்லாம் உங்களால் ஆடைகளை வாங்க இயலாது. அதனால், ஆன்லைன் ஷாப்பிங் போர்டல் மூலம் மெட்டர்னிட்டி பிரிவில் தங்களுக்குத் தேவையான ஆடைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்களையும் வாங்கி கொள்ளலாம். இதன் மூலமாக கர்ப்பிணிகள் நூற்றுக்கணக்கான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை தங்கள் வீட்டில் இருந்தபடியே சௌகரியத்தை சமரசம் செய்து கொள்ளாமல் வாங்கலாம். அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கையின் மறக்கமுடியாத கட்டத்தை மகிச்சியாக அனுபவிக்கலாம்.
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
கர்ப்ப காலத்தில் பாப்கார்னின் நன்மைகள் & அபாயங்கள்
தொடை சிராய்ப்பு: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை
அக்கி (ஹெர்பெஸ்): காரணங்கள், அறிகுறிகள், ஆபத்து மற்றும் சிகிச்சை
மலக்குடல் இறக்கம் (Rectocele): காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை
உங்கள் குழந்தை புரள ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்
கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய உணவுகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Diapers & Wipes - For Mom | Maternity Dresses | Maternity Pillows | Pregnancy Belt | Skin | Acne & Blemishes | Dry & Dull Skin | Tan Removal | Anti Ageing | Skin brightening | Dark Circles | Skin hydration | Shop By Ingredient | Kumkumadi | Ubtan | Vitamin C | Tea Tree | Aloe Vera | Skin - Hair | Hairfall |