Lowest price this festive season! Code: FIRST10
Conception
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு பெண் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருக்கும்போது, அவள் கருத்தரித்த தேதி மற்றும் பிரசவ தேதியை கணிப்பது கடினம். மாதவிடாய் சுழற்சியின் எந்த நேரத்திலும் அவள் கருத்தரித்து இருக்கலாம். அவளின் கடைசி மாதவிடாயின் முதல் நாள் அல்லது LMP-யைக் கொண்டே பிரசவ தேதி கணக்கிடப்படுகிறது. ஏனெனில், LMP-யின் முதல் நாளில் இருந்து 14 நாட்கள் கழித்தே கருத்தரித்தல் நடைபெறுவதாக ஊகிக்கப்படுகிறது.
"சுழற்சி நீளம்" என்பதைக் கணக்கில் கொண்டு மதிப்பிடும் ஒரு பிரக்னன்சி கால்குலேட்டர் என்பது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியின் போது, பிரசவ தேதியைக் கணக்கிடுவதற்கான ஒரு நிலையான வழியாகும்.
ஒரு பெண்ணின் LMP-யைக் கணக்கிட பல வழிகள் உண்டு. இதில் இதற்கு முன் வந்த மாதவிடாய் சழற்சிகளை காலண்டரில் குறிப்பது அல்லது ஒரு டைரியில் மாதவிடாய் நாட்களை குறித்து வைப்பது போன்றவையும் அடங்கும். ஓவுலேஷன் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதே ஒரு பெண்ணின் LMP-யைக் கணக்கிட இருக்கும் ஒரு எளிய முறையாகும். இந்த எளிமையான ப்ரோகிராமானது உங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பொருந்தும் ஒரு சரியான தேதி கிடைக்கும் வரை பல்வேறு தேதிகளை முயற்சி செய்து பார்க்கக்கூடியது. உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலும் கூட உங்களின் பிரசவ தேதியைக் கணக்கிட உதவும் சில எளிய படிகளை இப்போது பார்க்கலாம்.
பிரசவ தேதி கணக்கிடுதல் என்பதல் பிரக்னன்சி மற்றும் குழந்தை பெற்றெடுப்பதன் ஒரு முக்கியமான பகுதியாகும். பிரசவ தேதியைக் கணக்கிடுவது உங்களுக்கு குழந்தை பிறக்கும் தேதியை தோராயமாக தெரிந்து வைத்துக்கொள்ள உதவுகிறது. இது கர்ப்பகால பராமரிப்பின் ஒரு முக்கியமான அங்கம் ஆகும்.
கடைசியாக ஏற்பட்ட மாதவிடாயின் முதல் நாளோடு 280 நாட்களைச் சேர்ப்பதன் மூலமாக பிரசவ தேதி கணக்கிடப்படுகிறது. இது தோராயமாக 40 வாரங்கள் ஆகும். உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உங்களின் பிரசவ தேதியைக் கணக்கிடுவது சற்று கடினம். இது போன்ற நேரங்களில் நீங்கள் ஆன்லைன் கால்குலேட்டரின் உதவியுடன் உங்களின் பிரசவ தேதியைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கர்ப்பம் தரித்த முந்தைய மாதவிடாயை வைத்தே பிரசவ தேதி கணக்கிடப்படுகிறது.
ஒரு வேலை இதன் மூலமாக உங்கள் பிரசவ தேதியைக் கணக்கிட முடியாமல் போனால், அல்ட்ராசவுண்ட் உங்களுக்கு உதவும். 8 வாரங்கள் முதல் 13 வாரங்கள் வரையிலான நாட்களே அல்ட்ராசவுண்ட் செய்வதற்கான சிறந்த நேரம் ஆகும். இதனை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொரு படியையும் விரிவாகப் பார்க்கலாம்.
இதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முறையாகும். மேலும் இது துல்லியமானது. உங்கள் மாதவிடாயாயின் முதல் நாளை கணக்கில் கொண்டு அதனோடு 280 நாட்களை கூட்டுவதன் மூலம் இது கணக்கிடப்படுகிறது. இதுவே ஒரு கர்ப்பகாலத்தின் பொதுவான நீளமாகும்.
இதனைக் கணக்கிட ஒரு வாய்ப்பாடும் உள்ளது:
LMP ஆரம்பமானதில் இருந்து இருக்கும் நாட்கள் ÷ 7
கருவின் தலையுச்சியில் இருந்து பிட்டம் வரை உள்ள நீளத்தை அளப்பதன் மூலம் உங்கள் பிரசவ தேதி கணக்கிடப்படுகிறது அல்லது நீங்கள் உங்களின் முதல் டிரைமெஸ்டரை முடித்திருந்தால், அது முடிந்து எத்தனை நாட்கள் ஆகிறது என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்து உங்களின் பிரசவ தேதியைக் கணக்கிடுவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், உங்களின் பிரசவ தேதியை ஓரளவு சரியாக தெரிந்து கொள்ள டேட்டிங் அல்ட்ராசவுண்ட் ஒரு சிறந்த முறையாகும்.
நீங்கள் எவ்வளவு தொலைவு வந்துள்ளீர்கள் என்பதைக் கணக்கிட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறுநீரில் உள்ள ஹார்மோன் HCG-யின் இருப்பை அளவிடுவதன் மூலம் நீங்கள் எத்தனை வாரம் கர்ப்பம் என்பதை இம்முறை கணக்கிடுகிறது. 40 வாரங்களில் இருந்து இதனை கழிப்பதன் மூலம் தோராயமாக உங்களின் பிரசவ தேதி கணக்கிடப்படுகிறது.
உங்களுக்கு கருமுட்டை எப்போது வெளிவருகிறது என்பதை அறிவதே உங்களின் சுழற்சி தேதிகளைக் கணக்கிடுவதன் முதல் படி ஆகும். ஓவுலேஷனை சரியாக கணக்கிடுவது சாதாரணமான காரியம் அல்ல. குறைந்தபட்சமாக, உங்கள் மாதவிடாய் சுழற்சியின் எந்த நாளில் ஓவுலேஷன் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதையாவது நீங்கள் கணக்கிட வேண்டும். உங்கள் பீரியட்ஸின் இடைப்பட்ட நாட்களை கண்காணிப்பதன் மூலமாக இதனை நீங்கள் கணக்கிடலாம். உங்கள் பீரியட்ஸின் இடையில் எத்தனை நாட்கள் உள்ளது என்பதை தோராயமாக கணக்கிட்ட பிறகு, அதிலிருந்து 14-யைக் கழித்து அதன் மூலம் கிடைக்கும் நாளை கண்காணிக்கவும். உதாரணமாக, உங்களின் மாதவிடாய் சுழற்சி 36 நாட்களுக்கு நீடித்தால், ஓவுலேஷனானது 22 அல்லது 23- வது நாளில் நடைபெறலாம்.
உங்களுக்கு எப்போது ஓவுலேஷன் நடைபெறுகிறது என்பதை கண்டுபிடிப்பது உங்கள் சுழற்சியை புரிந்து கொள்ள உதவும் முக்கியமான படி ஆகும். இது பொதுவாக 14-வது நாளில் நடைபெறும். இதனைக் கண்டுபிடிக்க உங்கள் மாதவிடாய் சுழற்சியை தொடர்ந்து சில மாதங்களுக்கு கண்காணிக்க வேண்டும். உங்கள் பீரியட்ஸை குறிக்கும் போது, ஒவ்வொரு மாதமும் அதை ஒரே நாளில் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
ஓவுலேஷனின் மூன்று நாட்களுக்கு முன்னரும், பின்னரும் ஒவ்வொரு நாள் காலையில் வெப்பநிலையை அளவிடுவது ஓவுலேஷன் தேதியைக் கண்டுபிடிப்பதற்கான மற்றொரு வழியாகும். வெப்பநிலையில் சரிவு ஏற்பட்டால் அது ஓவுலேஷன் நடைபெற்று முடிந்ததைக் குறிக்கும். மேலும் இந்த நாட்களில் நீங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உங்கள் ஓவுலேஷன் 14-வது நாளில் நடைபெறாமல் 16-வது நாளில் கூட நடைபெறலாம். உங்கள் மாதவிடாய் சுழற்சியின் நீளம் ஒவ்வொரு மாதமும் வேறுபட்டால் இது நிகழலாம். உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் ஓவுலேஷன் கால்குலேட்டர் பயன்படுத்தி எப்போது ஓவுலேஷன் நடைபெறும் என்பதை நீங்கள் கணக்கிடலாம்.
இதையும் படிக்கலாமே! - LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் நாட்களிடையே வித்தியாசம்
ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் போது, உங்களின் பிரசவ தேதியை எப்படி கணக்கிடுவது என்பதை இந்த பதிவு விவரிக்கிறது. இது ஒரு நேரடி செயல்முறையாக இல்லாமல் போனாலும், உங்கள் குழந்தை எப்போது பிறக்கும் என்பது குறித்த ஓரளவு புரிதலும், அறிதலும் இதன் மூலம் கிடைக்கும்.
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |