


Pregnancy Tests
18 January 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
நீங்கள் கர்ப்ப பரிசோதனை செய்து, பாசிட்டிவ் என்ற முடிவைப் பார்த்து, நீங்கள் கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்து கொள்ளும் போது இருக்கும் அந்த தருணத்தை வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாது. சரி, இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கும், எதிர்பார்க்காதவர்களுக்கு அல்லது முயற்சி செய்யாதவர்களுக்கும் கூட இது ஒரு இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கும். ஒரு நபர் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், முழு செயல்முறையும் அவர்களின் வீட்டில் பாதுகாப்பாக நடக்கும் போது அவர் எப்போதும் மிகவும் செளகரியமாக உணர்கிறார். வீட்டில் பரிசோதனை செய்தால், அதன் முடிவைப் பார்த்து உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் இருக்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் மிகவும் நெருக்கமானதாகவும் தனிப்பட்டதாகவும் இருக்கும். எனவே, ‘நாங்கள் வீட்டிலேயே எப்படி கர்ப்பத்தை சரிபார்க்கலாம்’ என்று நீங்கள் யோசித்தால், அதைப் பற்றி எந்த கவலையும் பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம்!
வீட்டிலேயே கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்வது என்பது எளிதாக இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சோதனைக் கருவியை வாங்கி, அதிலிருக்கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும், இல்லையா? சரி, வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனைக்கு இதை விட கூடுதலாக முன்னேற்பாடு தேவைப்படும். மாதவிடாய் தள்ளிப்போன பிறகு அல்லது பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கவலைப்படுவது என்பது இயல்பானது மற்றும் 'கர்ப்பத்திற்கான பரிசோதனையை எப்படி சரிபார்க்க வேண்டும்' என்பதில் ஆர்வமாக இருங்கள். அதிர்ஷ்டவசமாக, வீட்டிலேயே கர்ப்பத்தை எப்படி சரிபார்க்கலாம் என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், அதற்கான பதிலை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இதோ அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்:
நீங்கள் கர்ப்பத்திற்கான பரிசோதனையை செய்வதற்கு முன் இது பற்றி கலந்து பேசுவது நல்லது. நீங்கள் உங்கள் பார்ட்னருடன் அமர்ந்து உங்களிருவருடைய உள்ள உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிவுகளைப் பொருட்படுத்தாமல், உங்களுடைய நடவடிக்கையைத் தீர்மானிக்க இது உதவும். பரிசோதனையில் என்ன முடிவு வந்தாலும் அதற்கு தயாராக இருக்க இது உதவும். இவ்வாறு செய்வதனால் உங்களுடைய துணையுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு அல்லது இணக்கம் அதிகரிக்கும். மேலும், இந்த சமயத்தில் வரக்கூடிய பதட்டம் போன்ற தேவையற்ற உணர்வுகளையும் நீங்கள் போக்கிக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப பரிசோதனை கருவியை (கிட்) எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?(How To Use A Pregnancy Test Kit? In Tamil)
கர்ப்பத்தை எப்படி சரிபார்ப்பது என்பதற்கு உங்களுக்கு ஒரு சில அடிப்படை விஷயங்கள் தேவைப்படும். இந்த கர்ப்பத்திற்கான பரிசோதனைக் கருவியானது வீட்டில் இருக்கக்கூடிய மிகவும் அவசியமான கிட் ஆகும். பிரக்னன்சி கிட்-ஐ வாங்குவதற்கு முன் அது புகழ்பெற்ற பிராண்ட் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதை வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு இதன் காலாவதி தேதியை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இது காலாவதி ஆகி இருந்தால், இது உங்களுக்கு தவறான முடிவுகளைத் தரலாம், இதனால் உங்களுக்கு விரும்பத்தகாத உணர்வுகள் ஏற்படும். பரிசோதனையின் முடிவை முழுமையாகவும், நிச்சயமாகவும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் குறைந்தபட்சம் இரண்டு வெவ்வேறு கர்ப்ப பரிசோதனை கருவிகளை வாங்கிக் கொள்ளுங்கள். கர்ப்ப பரிசோதனை கருவியைத் தவிர, உங்களுக்கு சுத்தமான ஒரு கிண்ணம், பிளாட் ஆன மேற்பரப்பு மற்றும் நேரத்தைக் கண்காணிக்க உதவும் சாதனம் முதலியவைத் தேவைப்படலாம்.
இது பயமுறுத்தும் பகுதியாக இருக்கலாம், ஆனால் இந்தச் செயல்பாட்டினை சரியாகச் செய்வதன் மூலமாக நீங்கள் இதை வேகமாகச் செயல்படுத்த முடியும். பிரக்னன்சி கிட்-ல் அச்சிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை முழுமையாகப் படித்துவிட்டுத் தொடங்கவும். ஒரு சில கிட்-ல், பரிசோதனைக்கென்று இருக்கும் குச்சியின் உறிஞ்சக்கூடிய பகுதியில் நேரடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று இருக்கும். மறுபுறம், சில பிராண்டுகள் நேரடியாக சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பதற்கு, கொள்கலன் மற்றும் ட்ராப்பர் போன்ற உபகரணங்களை வழங்குகின்றன. குச்சியின் மீது சிறுநீர் கழிக்கும் நேரத்தைக் கண்காணிப்பதையோ அல்லது குச்சியில் விடப்பட வேண்டிய சிறுநீர் துளிகளின் எண்ணிக்கையையோ மறந்துவிடக் கூடாது. ஆரம்பத்தில் வெளிவரும் சிறுநீரை விட்டுவிட்டு அதற்குப் பிறகு மத்தியில் வரும் சிறுநீரைப் பயன்படுத்துவது நல்லது, ஏனென்றால் அவை மிகவும் துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும். குச்சியின் மீது சிறிநீரை விட்ட பிறகு, குச்சியை ஒரு பிளாட் ஆன மேற்பரப்பில் வைக்கவும்.
துல்லியமான முடிவுகளைப் பெறுவதற்கு பிரக்னன்சி கிட்-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் வரைக்கும் காத்திருக்கவும். அந்தக் குறிப்பிட்ட கால கட்டம் கடந்தவுடன், முடிவுகளைப் பார்ப்பதற்கு பிரக்னன்சி கிட்-ல் இருக்கும் குச்சியின் மூலமாகச் சரிபார்க்கவும். கர்ப்பம் தரித்து உள்ளீர்களா இல்லையா என்ற முடிவினை அதில் வெளிப்படும் கோடுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் தோன்றும் ஒரு வரியானது நீங்கள் 'கர்ப்பமாக இல்லை' என்பதைக் குறிக்கிறது, இதில் தோன்றும் இரண்டு வரிகள் நீங்கள் 'கர்ப்பிணி' என்பதைக் குறிக்கிறது. இந்த முடிவுகளைப் பார்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
சில பரிசோதனைகளில் முடிவுகளை வண்ணங்கள் மூலம் அறியலாம், சிலவற்றில் 'கர்ப்பமாக உள்ளீர்கள்' அல்லது 'கர்ப்பமாக இல்லை' என்ற வார்த்தைகள் கூட தோன்றலாம். முடிவுகளைப் பார்ப்பதற்கு முன் அதனை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை அறிய உங்களுடைய கிட-ல் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தையும் வழிமுறைகளையும் படிப்பது மிகவும் முக்கியம். மற்றொரு குறிப்பிடத்தக்க காரணியானது பரிசோதனைக்காக கொடுக்கப்பட்டிருக்கும் குச்சியின் கண்ட்ரோல் விண்டோவை சரிபார்ப்பதாகும். இந்த விண்டோவானது, இந்த கிட் எப்படி வேலை செய்கிறது என்பதைக் காட்ட ஒரு கோடு, நிற மாற்றம் அல்லது ஏதாவதொரு வடிவத்தை உருவாக்குகிறது. இந்த விண்டோவில் எந்த மாற்றமும் இல்லை என்றால், ஒருவேளை அந்த கிட் சேதமடைந்து இருக்கலாம், செல்லாததாக இருக்கலாம் அல்லது காலாவதியாகி இருக்கலாம்.
'வீட்டில் கர்ப்பத்தை எப்படி சரிபார்க்கலாம்' என்ற வழிகாட்டியில் இருக்கும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு, உங்களுக்கு நிச்சயமாக கைமேல் பலன் கிடைக்கும். முடிவு எதிர்மறையாக இருந்து, உங்களுக்கு இன்னமும் மாதவிடாய் ஏற்படவில்லை என்றால் நீங்கள் வீட்டிலேயே மற்றொருமுறை கர்ப்ப பரிசோதனையை செய்து பார்க்கலாம். கர்ப்ப பரிசோதனையை எப்படிச் சரிபார்ப்பது என்று யோசிப்பதற்குப் பதிலாக, முழுமையான முடிவுகளைப் பெறுவதற்கு, நீங்கள் உங்களுடைய மகப்பேறு மருத்துவருடனான சந்திப்பை முன்பதிவு செய்யலாம். நீங்கள் எதிர்பார்க்கும் செய்தி உங்களுக்குக் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்!
pregnancy test in tamil, how to check pregnancy in tamil, how to use pregnancy kit in tamil, pregnancy kit in tamil, tips for pregnancy test in tamil, steps for pregnancy kit in tamil
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips





பெண்களுக்கான எடை இழப்பு உணவு முறைகள்

சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம், இரண்டில் எது சிறந்தது | Which Is Better Normal Or Cesarean Delivery in Tamil

ஒவ்வொரு குளியலுக்குப் பிறகு உடல் லோஷனைப் பயன்படுத்துவதற்கான முதல் 10 காரணங்கள் (Top 10 Reasons to Apply a Body Lotion After Every Bath In Tamil)

அறிவுசார்ந்த குறைபாடு: அப்படியென்றால் என்ன, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை

வேலமெண்டஸ் தொப்புள் கொடி செருகல் - முன்னெச்சரிக்கைகள், முடிவுகள் மற்றும் பாதுகாப்பு (Velamentous Cord Insertion - Precautions, Results & Safety In Tamil)

பேறுகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் மற்றும் அதைத் திறம்பட நிர்வகித்தல் I Symptoms & Management Of High Blood Pressure In Pregnancy in Tamil

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |