This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

மூன்று மாத கால அடிப்படையில் கர்ப்ப காலத்திற்கான உடற்பயிற்சி( Pregnancy Exercise Trimester Wise In Tamil)

Exercise & Fitness
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
மூன்று மாத கால அடிப்படையில் கர்ப்ப காலத்திற்கான உடற்பயிற்சி(  Pregnancy Exercise Trimester Wise In Tamil)
Read time7 min

இந்த உலகத்திலிருக்கும் மற்ற உணர்வுகளுடன் கர்ப்பம் எனும் உணர்வு ஒப்பிட முடியாத சிறப்பை கொண்டிருக்கிறது. அறிவியல் பூர்வமாக சொல்லவேண்டுமெனில், அண்டவிடுப்பின் போது கருமுட்டையிலிருந்து வெளியிடப்படும் முட்டையுடன் விந்து கருவுற செய்யும் போது, கரு உருவாக்கி பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர். இருப்பினும், பெண்களுக்கு கர்ப்பம் என்பது உயிரியல் செயல்முறைக்கும் மேற்பட்டது. இது மாற்றமுடியாத ஒரு உணர்வு.

இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் போது, மிக பொதுவாக கேள்விப்படும் ஒரு வார்த்தை ‘மூன்று மாத காலங்கள்’. ஒரு கர்ப்ப காலத்தில் மூன்று மும் மாதக்காலங்கள் இருக்கின்றன: முதல் மூன்று மாத காலம் வாரம் 1 முதல் வாரம் 12 வரை இருக்கும்; இரண்டாவது மூன்று மாத காலம் என்பது வாரம் 13 முதல் வாரம் 26 வரை நீடிக்கும்; வாரம் 27 முதல் கர்ப்ப காலத்தின் இறுதி வரை நீங்கள் மூன்றாம் மூன்று மாத காலத்தில் இருப்பீர்கள்.

கர்ப்ப காலத்தின் போது ஏன் உடற்பயிற்சி செய்தல் அவசியமாகிறது(Why Exercise During Pregnancy is Important?In Tamil)

கர்ப்ப காலத்தில் பெண்களின் உணர்ச்சிகள் ரோலர்கோஸ்டரில் செல்வது போல ஏற்றஇறக்கமாக இருக்கும். நீங்கள் எப்போதும் இருப்பதை விட அதிக எரிச்சலைடையலாம் அல்லது கூடுதல் எடையை சுமந்து செல்வதால் பயங்காரமான இடுப்பு வலி ஏற்படலாம். ஏதும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டே இருப்பது சூழ்நிலையை மேலும் மோசமடைய செய்யும், ஆகவே, இது உங்கள் அற்புதமான கர்ப்பக்கால பயணத்தின் போது நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை நன்மை தரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் செலவிடுவதற்கான அரிய வாய்ப்பு. இது உங்கள் கவனத்தை நல்ல விஷயத்தை நோக்கி திசைத்திருப்பும். இங்கே நாங்கள் உங்களுக்காக திரட்டியிருக்கும் கர்ப்பக்காலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த சிறந்த குறிப்புகள் பின்வருமாறு:

கர்ப்ப காலத்தின் போது மூன்று மாத கால வாரியாக செய்யப்பட வேண்டிய உடற்பயிற்சிகள்(The Best Exercises During Pregnancy by Trimester In Tamil)

உங்கள் மருத்துவர் உங்களது உடற்பயிற்சியை குறைத்துக்கொள்ள சொன்னால் தவிர நடைப்பயிற்சி, நீச்சல், ஜாக்கிங், மற்றும் வீட்டுக்குள்ளேயே சைக்கிள் ஓட்டுதல் போன்றவை மூன்று மும்மாத காலத்தின் போதும் செய்யப்படும் பிரபலமான கார்டியோவஸ்குலர் உடற்பயிற்சிகளாக கருதப்படுகிறது. இல்லையெனில், குறைந்தப்பட்சம் வாரம் ஒருமுறை 30 நிமிட ஏரோபிக் பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாத காலத்தின் போது செய்யவேண்டிய உடற்பயிற்சி(Pregnancy Exercises During the First Trimester In Tamil)

  • முதல் மூன்று மாதக்காலம் என்பது பொதுவாக இளவேனிர்காலம் போன்றது, உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும் பட்சத்திலும், உங்களுக்கு எந்தவித பிரச்சனை இல்லாத பட்சத்திலும், நீங்கள் தொடர்ந்து செய்து வரும் உங்கள் அன்றாட உடற்பயிற்சியை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தொடரலாம்.

  • நன்றாக திட்டமிடப்பட்ட ப்ரீடெர்ம் ஃபிட்னஸ் ரெஜிமெனில் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிட கார்டியோவஸ்குலர் பயிற்சியும் இருத்தல் வேண்டும். அத்துடன் தசை வலிமைப் பெற வேண்டுமெனில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவசியம் தசை வலிமை சார்ந்த பயிற்சிகளை செய்யவேண்டும்.

  • தாயாக போகும் கர்ப்பிணிகள், உங்கள் பிரசவம் எளிதாக அமைவதற்கு செய்யவேண்டிய எல்லா உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும், அத்துடன் உங்கள் உடல் சுகப் பிரசவத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்ய வேண்டும். அத்தகைய ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இடுப்பு மடித்து செய்யப்படும் உடற்பயிற்சி, இதை செய்வதன் மூலம் உங்கள் இடுப்பு எழும்பு வளைந்து உங்கள் குழந்தை வளர்ச்சியடையும் போது உங்கள் வயிற்றை ஆதரிக்கும் வகையில் உங்கள் வயிற்று தசையை வலிமைப்படுத்தும்.

கர்ப்ப காலத்தின் இரண்டாம் மூன்று மாத காலத்தின் போது செய்யவேண்டிய உடற்பயிற்சி(Pregnancy Exercises During the Second Trimester In Tamil)

எந்த நாளானாலும், நடைப்பயிற்சி என்பது கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகும். தற்போதைய காலக்கட்டத்தில், கைனகாலஜிஸ்ட்ஸ் பிரசவிப்பதற்கு முன் பெரும்பாலும் தாயாக போகும் பெண்களை அவ்வப்போது நடைப்பயிற்சி செய்ய ஊக்குவிப்பார்கள். நடைப்பயிற்சி செய்வது உங்கள் உடலின் மேல் பகுதியின் நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமையை அதிகப்படுத்தும்.

ஒருவேளை நீங்கள் கர்ப்பமாக இருப்பின், மென்மையான, வலிமைப்படுத்தும் யோகா உங்களது சிறந்த நண்பராக இருக்கும். இது உங்கள் தசைகளை விரிவடைய செய்து, இடுப்பு வலி மற்றும் உங்கள் இரத்த அழுத்தம் போன்ற கர்ப்பக்கால வலிகளை எளிமைப்படுத்திகிறது. உங்கள் உடல் செயல்பாட்டுடன் மூச்சுப்பயிற்சி செய்தல் யோகா பயிற்சி செய்வதன் மிக முக்கிய பகுதியாகும். இது குழந்தையை பிரசவிக்கும் போது ஏற்படும் பிரசவ வலியை கையாள மிக உபயோகமாக இருக்கும். ஒரு வாரத்திற்கு மூன்றிலிருந்து ஐந்து முறை யோகா பயிற்சி செய்வது சாலச்சிறந்தது.

கர்ப்ப காலத்தின் மூன்றாம் மூன்று மாத காலத்தின் போது செய்யவேண்டிய உடற்பயிற்சி(Pregnancy Exercises During the Third Trimester In Tamil)

  • மூன்றாம் மும்மாத காலம் ஓடும் ரெஜிமென் அல்லது கடிமான உடற்பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கான சரியான நேரம் இல்லை. நீங்கள் முதல் இரண்டு மூன்று மாத காலத்தில் உங்களுக்குள் ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பதில் வெற்றிகரமாக செய்துவிட்டீர்களானால், உங்கள் உடற்பயிற்சி ரெஜிமென்களிலேயே அதை தொடர்வது நல்லது. இந்நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் நேரத்தையும், தீவிரத்தையும் குறைப்பது சாலச்சிறந்தது. இந்நேரத்தில் எப்போதாவது, உங்களுக்கு உடல் நலம் சரியில்லை எனில், உடற்பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தல் அல்லது அதை சிறிது காலம் நிறுத்துவது நல்லது.

  • அதிக பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு கர்ப்ப காலத்தில் அக்குவா ஜாகிங் செய்வது நன்மை பயக்கும். இதற்காக சில ஜிம்களில் நீரில் ஸ்டேஷனரி பைக்கள் நிறுத்தி வைப்பதும் உண்டு. யோகா, பைலெட்ஸ், பாரே மற்றும் சைக்கிளிங் ஆகியவை மூன்றாம் மூன்று மாத காலத்தில் செய்ய வேண்டிய குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகள்.

  • இந்த உடற்பயிற்சிகள் எல்லா தசை குழுக்களின் முக்கிய தசைகளையும் செயல்பட வைக்கும். இது உங்களை அதிக ஃபிட்டாகவும், வலிமையாகவும் இருக்க உதவும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் ஸ்குவாட் செய்தல் (குத்துகாலிட்டு உட்காருதல்) – நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்

கர்ப்ப காலத்தின் போது உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா?(Is it Safe to Exercise During Pregnancy?In Tamil)

நீங்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தை சுமந்து கொண்டிருந்தால், நீங்கள் சுகப்பிரசவத்தை எதிர்பார்த்தால், நீங்கள் ரெகுலர் உடற்பயிற்சி ரெஜிம் அல்லது உடற்பயிற்சியை தொடரலாம். உடற்பயிற்சி செய்வதினால் பிரசவத்தின் போது ஏற்படும் முரண்பாடுகள், கருச்சிதைவு, குழந்தையின் குறைவான எடை, அல்லது குறைப்பிரசவம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கர்ப்ப காலத்தின் போது செய்யப்படும் உடற்பயிற்சி ஏன் சிறந்தது என கூறப்படுகிறது?(Why is Physical Activity During Pregnancy Good? In Tamil)

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் ஆரோக்கியமான எடையை பராமரித்தல், பிரசவத்திற்கு ஏற்ப உங்களை தயார் செய்தல் போன்றவற்றிற்கு உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கையில், நீங்கள் நன்றாக உணர ஆரம்பிப்பீர்கள், மேலும் அது உங்களை உத்வேகத்துடன் இருக்கு உதவும்.

கர்ப்ப காலத்தின் போது செய்யப்படும் உடற்பயிற்சியினால் ஏற்படும் நற்பயன்கள் யாவை?(What are the Advantages of Exercising During Pregnancy?In Tamil)

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் ஏராளமான நன்மைகள் பின்வருமாறு:

  • கர்ப்ப கால நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்

  • நீண்ட நேர பிரசவத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்

  • சி-செக்ஷனுக்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கும்

  • மனநிம்மதி மற்றும் ஆற்றல் நிலையை அதிகரிக்கும்

  • தூக்கத்தை மேம்படுத்தும்

  • இடுப்புவலி, மலசிக்கல், வயிறு உப்பசம் மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

கவனமாக கையாள வேண்டிய செயல்கள்(Activities to be Approached with Caution In Tamil)

அதிக-தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சி உங்கள் கர்ப்பப்பை மண்டலத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அதை தவிர்ப்பது நல்லது. இருப்பினும், நீங்களும், உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் வரை, ஏராளாமான குறைந்த-தாக்கத்தை கொண்ட உடற்பயிற்சிகள் ஓரளவு பாதுகாப்பானவையே.

Tags :

Exercise during pregnancy in tamil, workouts during pregnancy in tamil, is exercise safe during pregnancy in tamil, uses of exercise during pregnancy in tamil, pregnancy exercise for trimesters in tamil.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.