This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

பேபிவேரிங்(குழந்தை அணிதல்)பற்றிய குறிப்புகள், நன்மைகள் & வழிகாட்டி(Babywearing Tips, Benefits & Guide In Tamil)

Care for Baby
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
பேபிவேரிங்(குழந்தை அணிதல்)பற்றிய குறிப்புகள், நன்மைகள் & வழிகாட்டி(Babywearing Tips, Benefits & Guide In Tamil)
Likes2 Likes|
Read time6 min

குழந்தையைச் சுமந்து கொண்டு செல்வது எளிதான வேலையல்ல. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு கனமாக இருப்பதுபோல் தோன்றுவார்கள், குறிப்பாக கவனித்துக்கொள்ள வேண்டிய வேலைகளுடன். எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் பேபி-வேரிங் தயாரிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். இந்த நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும், பல்வேறு தரப்பினரால் தங்கள் குழந்தைகளை வேலை, பயணம் மற்றும் பலவற்றின் போது சுமந்து செல்ல பயன்படுத்தப்படுகிறது.

பேபிவேரிங் என்றால் என்ன?(What is Babywearing?In Tamil)

“பேபிவேரிங்” என்பது, குழந்தையை கேரியரின் உதவியுடன் சுமந்து செல்வதற்கான தயாரிப்பு ஆகும். இந்தக் கேரியர் பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இதில் பாரம்பரிய வழியில் துணியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இன்று, ரிங் ஸ்லிங்ஸ் மற்றும் பேக் பேக்குகள் உட்பட பல வகைகள் மற்றும் வடிவமைப்புகளில் குழந்தை கேரியர்களை பெற்றோர்கள் வாங்கலாம்.

பேபிவேரிங் அணிவதை எப்போது தொடங்கலாம்?(When to start Babywearing?In Tamil)

தங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குக் கூட பேபிவேரிங் தயாரிப்பைப் பயன்படுத்தத் தொடங்கலாம். நிச்சயமாக, சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் உள்ளன. ஏனெனில், புதிதாகப் பிறந்த குழந்தை மிகவும் எடை குறைவாகவும் மென்மையாகவும் இருக்கும். இருப்பினும், பேபிவேரிங் பயன்படுத்துவது குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் பல வழிகளிலும் நீண்ட காலத்திற்கும் பயனளிக்கும்.

பேபிவேரிங் பயன்படுத்துவதன் நன்மைகள்(Benefits of Babywearing In Tamil)

பேபிவேரிங் அதன் சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்த பெற்றோர்களிடமும் இதை உறுதிசெய்து கொள்ளலாம். சிலர் அறிவியல் பூர்வமாக ஆதரிப்பதாகவும் சிலர் ஆதரிக்காமலும் உள்ளனர். இருப்பினும், ஏராளமான மக்கள் அவற்றை நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். எனவே, பல ஆண்டுகளாக அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது(Makes a connection):

ஒரு குழந்தையை எப்போதும் கையில் வைத்திருக்கும் போது பாதுகாப்பாக உணர்கிறது. எனவே, பேபிவேரிங் சாதனம் மூலம், பெற்றோர் ஒரு பிணைப்பை உருவாக்கி, குழந்தையின் பசி, சோர்வு போன்றவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே! - பேபி கேரி நெஸ்டில் குழந்தையை சுமந்து செல்லும் போது எப்படி ஆடை அணிவிக்க வேண்டும்?

ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது(Improves health):

பேபிவேரிங் தயாரிப்பைப் பயன்படுத்துவது, குறிப்பாக குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் இதயத் துடிப்பு, சுவாச முறை, உடல் வெப்பநிலை மற்றும் பலவற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் பல நன்மைகளை வழங்க முடியும்.

அழுகையை குறைக்கிறது(Improves health):

குழந்தை அழும் போது குழந்தையை சுமந்து செல்ல, பேபிவேரிங் தயாரிப்பைப் பயன்படுத்தும் போது, குழந்தை தனது பெற்றோருடன் நெருக்கமாக இருப்பதை உணரும் அளவிற்கு அழுகையை குறைக்க உதவும்.

வேலை செய்ய வசதி(Comfort to work):

குழந்தையை சுமக்க பேபிவேரைப் பயன்படுத்துவது பல வேலைகளின் செயல்முறையை எளிதாக்குகிறது. சமைக்கும் போது, கழுவும் போது அல்லது மளிகைப் பொருட்களை வாங்கும் போது, பேபிவேர் சாதனம் சௌகரியத்தை வழங்குகிறது. இதனால், கைகள் அதிகள் வலிக்காது. மேலும் இரண்டு கைகளும் பணிகளை மேற்கொள்ள சுதந்திரமாக இருக்கும்.

பேபிவேரிங்கை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?(Is Baby Wearing Safe?In Tamil)

பேபிவேரிங் தயாரிப்பை சரியான அளவு மற்றும் அமைப்பில் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானதாக இருப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. TICKS முறையைப் பின்பற்றவும்:

  • குழந்தை பெற்றோருடன் நெருக்கமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் அளவிற்கு இறுக்கமாக இருக்கும்

  • குழந்தையின் முகத்தை முழுமையாக பார்க்கும் வகையில்

  • நெற்றியில் முத்தமிடுவதற்கு எதுவாக பெற்றோரின் கன்னத்தை தொடும் வகையில் நெருங்கமாக இருக்கும்

  • குழந்தையின் மார்பு மற்றும் கன்னத்தில் இருந்து குறைந்தது ஒரு விரல் அளவில் வைத்திருக்கும்

  • காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் முதுகு மற்றும் கழுத்து பகுதி ஆதரிக்கப்படுகிறது.

பேபி கேரியர் வகைகள்(Baby Carrier Types)

ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பல்வேறு வகையான பேபி கேரியர் வகைகளை பெற்றோர்கள் காணலாம். சில பிரபலமானவை பின்வருமாறு:-

பேபி ரேப்கள்(Baby wraps):

இது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும். பேபி ரேப்கள் அடிப்படையில் நெய்யப்பட்ட அல்லது தைக்கப்பட்ட பின்னல் துணியாலான நீண்ட துண்டுகள். அவை குழந்தையை மார்பு அல்லது முதுகில் சுற்றி வைக்கப் பயன்படுகின்றன.

மென்மையான-வடிவமைக்கப்பட்ட பேபி கேரியர்(Soft-structured baby carrier):

இவை பேக் பேக்குகள் போல் இருக்கும், முன்பக்கமாகவும் அணியலாம். இது பேடட் தோள் பட்டைகள், கட்டமைக்கப்பட்ட இடுப்பு பட்டை மற்றும் வசதிக்காக அட்ஜஸ்டபிள் கொக்கிகளுடன் கிடைக்கிறது.

ரிங் ஸ்லிங்ஸ் மற்றும் பவுச்(Ring slings and pouch):

தோளில் புடவை போல் அணியும் வகையில் வடிவமைக்கப்பட்டு, குழந்தையை சுமந்து செல்ல முன்பக்கத்தில் ஒரு பாக்கெட் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிங்களை தேவைகேற்ப சரிசெய்யலாம்.

மெஹ் டே(Meh dai):

இது இடுப்பு மற்றும் தோள்களில் சுற்றி செல்லும் இரண்டு பேடட் பட்டைகளைக் கொண்டுள்ளது. இதில் குழந்தையை முன்பக்கமாக, பின்பக்கமாக அல்லது இடுப்பில் வைத்து கொண்டு செல்ல முடியும்.

பேபிவேரிங் ஒரு தாய்க்கு எவ்வாறு உதவுகிறது?(How Does a Babywearing Help a Mother?In Tamil)

பேபிவேரிங் அணிவது ஒரு தாய்க்கு சிறப்புப் பிணைப்பை உருவாக்கி, தன் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க உதவும் அதே வேளையில், அது எளிதாக தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் உதவுகிறது. மேலும், ஒரு தாய் குழந்தையின் தேவைகளுக்கு உடனடியாக பதிலளிக்கக்கூடிய வகையிலும், அவர்களிடையே மொழி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நபராகவும் இருப்பார். இது குழந்தை பதட்டமடையாமலும் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவுகிறது.

உங்கள் குழந்தையை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான குறிப்புகள்(Tips to Carry Your Baby Safely In Tamil)

பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்த குடும்பத்தில் உள்ள ஒருவரின் அல்லது அனுபவம் வாய்ந்த ஊழியர்களின் உதவியைப் பெறுவது முக்கியம். ஆனால், ஒருமுறை வெற்றிகரமாக முயற்சித்த பிறகு, குழந்தையை சுமப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான குறிப்புகள்:

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு:

குழந்தைக்கு மருத்துவ சிக்கல்கள் இல்லாதிருந்தால் மட்டுமே புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பேபிவேரிங் அணிய வேண்டும். மேலும், குழந்தையின் எடை குறைந்தது 3.5 கிலோவாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்குத் தலையைத் தாங்களாகவே தூக்கும் அளவுக்கு கழுத்தில் போதுமான வலிமை இல்லை. மேலும் குழந்தை கேரியரில் பொருத்தமற்ற நிலையில் இருப்பதால், அவர்கள் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ சாய்வதால் ஆக்ஸிஜன் ஓட்டத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்.

வாங்கும் முன் முயற்சித்துப் பார்க்கவும்(Trying before buying):

பேபி வேரிங் தயாரிப்பைப் பயன்படுத்துவது அனைவருக்கும் வசதியாக இருக்காது. எனவே, பொம்மை அல்லது உங்களுக்குத் தெரிந்தவரின் குழந்தையைக் கொண்டு (உங்களுக்கு பொருத்தமாக இருந்தால்) வாங்குவதற்கு முன்னதாக முயற்சித்துப் பார்ப்பது முக்கியம். வருங்காலத்தில் உங்கள் வயிறு உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் தவிர்க்க, கர்ப்பத்தின் தொடக்கத்திலோ அல்லது அதற்கு முந்தைய காலத்திலோ கர்ப்பமாக இருக்கும் பெண் தாபேபி கேரியரை முயற்சித்துப் பார்ப்பது நல்லது.

முடிவுரை(Conclusion)

நீங்கள் புதிய தாயாக இருந்தாலும் அல்லது அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், பேபி வேரிங் நிச்சயமாக வேலையை எளிதாக்குவதோடு தொடர்ச்சியான பலன்களையும் வழங்குகிறது. இது ஒரு முக்கியமான ஒன்றாகும். மேலும், பெற்றோர்கள் கண்டிப்பாக வாங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

Tags :

Baby wearing in tamil, baby wraps in tamil, benefits for baby wearing in tamil, types of baby wear in tamil, uses of baby wear in tamil, baby carrier in tamil, uses of baby carrier in tamil

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.