This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

பிரசவத்திற்குப் பிந்தைய கால நிலைகள் என்னென்ன?(Postpartum Period (Puerperium): What are the stages?In Tamil)

Postnatal Care
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 29, 2026
பிரசவத்திற்குப் பிந்தைய கால நிலைகள் என்னென்ன?(Postpartum Period (Puerperium): What are the stages?In Tamil)
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • பிரசவத்திற்குப் பிந்தைய காலம் சுமார் ஆறு வாரங்கள் நீடிக்கும், இதில் ஹார்மோன் அளவுகளும் கர்ப்பப்பையின் அளவும் கர்ப்பத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்பும். இது மூன்று கட்டங்களாக பிரிக்கப்படுகிறது.
  • கடுமையான காலகட்டம் முதல் 6-12 மணிநேரம், சப்அக்யூட் காலம் உணர்ச்சி மற்றும் உடல் மாற்றங்களை உள்ளடக்கியது, தாமதமான காலம் ஆறு மாதங்கள் வரை நீடித்து தசைகளை மீட்டெடுக்கிறது.
  • பிரசவத்திற்குப் பிறகு குறைந்தது ஆறு வாரங்கள் உடலுறவை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு முதல் மாதவிடாய் ஆறு மாதங்கள் வரை தாமதமாகலாம்.
  • பிரசவத்திற்குப் பிந்தைய மீட்சிக்கு என்ன உதவும்? Explore our Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2.
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Rating4.8
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7

பிரசவத்திற்குப் பிந்தைய காலம் என்பது மகப்பேற்றையடுத்த நான்குவார காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது, இந்த கால கட்டம் பிரசவத்தின் நான்காவது நிலை என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு பெண் உணர்வுப்பூர்வகமாகவும் மற்றும் பல உடல் ரீதியாகவும் மாற்றங்களை அனுபவிக்கிறாள். எனவே, அதன் வெவ்வேறு கட்டங்கள் மற்றும் இந்த காலகட்டத்தில் ஒருவர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தின் நிலைகள்(Stages of postpartum period)

பிரசவத்திற்குப் பிந்தைய காலம் சுமார் ஆறு வாரங்கள் ஆகும். இந்த காலத்தில் ஹார்மோன் அளவுகளும் தாயின் கர்ப்பப்பையின் அளவும் கர்ப்பத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்பும். பிரசவத்திற்கு பிந்தைய காலத்தை மூன்று வெவ்வேறு தொடர்ச்சியான கால கட்டங்களாக பிரிக்கலாம்.

பிரசவத்திற்கு பிந்தைய கடுமையான காலகட்டம்(Acute postpartum period)

  • பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தின் கடுமையான அல்லது ஆரம்ப கட்டம் பிரசவத்திற்குப் பிறகு முதல் ஆறு முதல் பன்னிரண்டு மணிநேரங்களை உள்ளடக்கியது ஆகும். இந்த காலகட்டத்தில், குழந்தை பெற்ற தாய்க்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் செவிலியர் பார்த்துக் கொள்கிறார்.

  • இந்த கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களில் ஒன்று பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு ஆகும்.

  • இந்த இரத்தப்போக்கு முதன்மையாக ஏற்படுகிறது. ஏனெனில், நஞ்சுக்கொடி கர்ப்பப்பை சுவருடன் இணைக்கப்பட்ட இடத்தில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. மேலும், கர்ப்பப்பை சுருங்காத வரை, மருத்துவர்களால் இந்த இரத்தப்போக்கை நிறுத்த முடியாது. மேலும், அம்னியோடிக் திரவ எம்போலிசம், கர்ப்பப்பை இன்வெர்ஷன் மற்றும் எக்லாம்ப்சியா போன்ற சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

பிரசவத்திற்குப் பிந்தைய சப்அக்யூட் காலம்(Subacute postpartum period)

  • பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தின் இரண்டாம் கட்டம் சப்அக்யூட் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டத்தில், ஒரு பெண்ணின் உடல் மரபணு மீட்பு, உணர்ச்சி நிலை, ஹீமோடைனமிக்ஸ் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. இது ஒரு மெதுவான கால கட்டமாகும், மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தையும் ஒருவர் தெளிவாக உணரலாம்.

  • ஒரு பெண் இந்த மாற்றங்களை பெரினியல் அசௌகரியம் அல்லது மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு வடிவத்தில் எளிதில் உணர முடியும். ஆய்வுகளின் படி, எண்பத்தி ஏழு முதல் தொண்ணூற்று நான்கு சதவீதம் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் பெண்கள் குறைந்தது ஒரு உடல்நலப் பிரச்சனையை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.

தாமதமான பிரசவத்திற்குப் பிந்தைய காலம்(Delayed postpartum period)

  • பிரசவத்திற்கு பிறகான காலத்தின் மூன்றாவது மற்றும் கடைசி கட்டம் பிரசவத்திற்கு பிறகான காலம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். இது தசைகள் மற்றும் இணைப்பு திசுக்களை மீட்டெடுக்கும் கட்டமாகும். மேலும் உடல் கர்ப்பத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்புகிறது. சிறுநீர் மற்றும் மலத்தை அடக்க முடியாமை மற்றும் வலிமிகுந்த உடலுறவு போன்றவற்றின் வழியாக பிரசவ சிக்கல்களிலிருந்து ஒருவர் மீண்டு வருவதை உணர்கிறார்.

  • மேலும், பிடிஎஸ்டி போன்ற மனநோய்களும் இந்த நிலையில் குறைகின்றன. உடல் படிப்படியாக கர்ப்பத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்பினாலும், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் உறுப்புகளுடன் தொடர்புடைய மாற்றங்கள் பழைய நிலைக்கு திரும்ப கொஞ்ச காலம் எடுக்கும்.

பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் உடலுறவு(Sex during the postpartum period In Tamil)

  • பிரசவத்திற்குப் பிறகு, உடலுறவுக்கு சரியான நேரம் எது என்று ஒருவர் ஆச்சரியப்படலாம்? சில பெண்கள் பிரசவத்திற்கு பிறகான காலத்தில் குறைந்த அளவில் தான் பாலியல் எண்ணங்களுடன் இருக்கின்றனர். இது ஒரு சாதாரண நிகழ்வு தான். பிரசவத்திற்குப் பிறகு குறைந்தது ஆறு வாரங்களாவது உடலுறவு கொள்ள காத்திருக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இருப்பினும், ஒரு பெண் தான் தயாராக இருப்பதாக உணர்ந்தால், உடலுறவு கொள்ள தொடங்கும் முன் மருத்துவரை அணுகி கலந்தாலோசிக்க வேண்டும்.

  • பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் பதட்டம் அல்லது உடலுறவின் போது வலியை உணரும் பயம் காரணமாக உடலுறவின் மீதான ஆர்வம் குறைய காரணமாக இருக்கலாம். ஒரு பெண் மற்றொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டால், கர்ப்பத்திலிருந்து முழுமையாக குணமடைய குறைந்தது பன்னிரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

பிரசவத்திற்குப் பிறகு முதல் மாதவிடாய் எப்போது வரும்?(When is the first menstrual period after giving birth?In Tamil)

பிரசவத்திற்குப் பிறகு, லோச்சியா எனப்படும் பிறப்புறுப்பு இரத்தப்போக்கு ஏற்படுகிறது, இது மாதவிடாய் இரத்தப்போக்கு என்று குழப்பமடையக்கூடாது. முதல் மாதவிடாயின் நேரம் என்பது, ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாளா அல்லது ஃபார்முலா பால் கொடுக்கிறாளா என்பதைப் பொறுத்தது.

இதையும் படிக்கலாமே - பிரசவத்திற்குப் பிறகு விரைவான இயல்பு நிலை மற்றும் எடை குறைவதற்கான 5 முக்கிய உணவுகள்

தாய்ப்பால் கொடுத்தால், முதல் மாதவிடாய் ஆறு மாதங்கள் வரை வர வாய்ப்புகள் குறைவு. சில சமயங்களில் பெண் தனது குழந்தையை தாய்ப்பால் கொடுப்பதை படிப்படியாக நிறுத்தும் வரை வராது. அதேசமயத்தில், குழந்தைக்கு ஃபார்முலா பால் ஊட்டும் ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்குப் பிறகு ஆறு முதல் எட்டு வாரங்களுக்குப் பிறகு முதல் மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பிரசவத்திற்கு பிந்தைய செக்அப்கள்(Postpartum checkups In Tamil)

பிரசவத்தின் ஆரம்ப அறிகுறிகளைப் புரிந்து கொள்ள, பிரசவத்திற்குப் பிந்தைய காலம் என்றால் என்ன மற்றும் அதன் நிலைகள் என்ன என்பது குறித்து ஒருவர் படித்து புரிந்து கொள்ள வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பின் பரிசோதனைக்கு வருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் சிசேரியன் பிரசவம் நடந்தால், அவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பரிசோதனைக்கு செல்ல வேண்டும். பிரசவத்திற்குப் பிறகான சில உடல்நலப் பரிசோதனைகள்:

  • உடல் எடையை சரிபார்த்தல்

  • இரத்த அழுத்தத்தை சரிபார்த்தல்

  • மார்பகம் , வயிறு மற்றும் இடுப்புப் பரிசோதனை

  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரத்த சர்க்கரை

  • அளவை பரிசோதித்தல்

இந்த சோதனைகளுடன் மேலும் சில சோதனைகளுக்கு ஒருவர் அடிக்கடி மருத்துவரை சந்திக்க வேண்டியது இருக்கும்.

பிரசவத்திற்குப் பிந்தைய காலம் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்(Know more about postpartum period In Tamil)

பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் எடை இழப்பு ஏற்படுமா?(Can a postpartum period trigger weight loss?In Tamil)

அம்னியோடிக் திரவம், நஞ்சுக்கொடி மற்றும் பிற திரவங்கள் உடலை விட்டு வெளியேறுவதால், பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒரு பெண்ணின் எடை குறைகிறது. மேலும், உடல் கர்ப்பத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்புகிறது.

எனது முதல் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் கருத்தடை மாத்திரைகளை நான் தொடங்கலாமா?(Can I start birth control before my first postpartum period? In Tamil)

பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தாய்ப்பால் கொடுக்கும் போது பால் விநியோகத்தை பாதிக்கலாம்; தாய்ப்பால் கொடுக்கத் திட்டமிடாத பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு மூன்று வாரங்களுக்குப் பிறகு கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

பிரசவத்திற்குப் பிந்தைய காலகட்டம் எவ்வளவு?(How long is the postpartum period?In tamil)

பிரசவத்திற்குப் பிந்தைய காலம் ஆறு வாரங்கள் நீடிக்கும்.

பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் என்ன சாப்பிட வேண்டும்?(What to eat in postpartum period?In Tamil)

பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் பெண்கள் நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் சாப்பிட வேண்டும். அதிக அளவு உப்பு மற்றும் கொழுப்புகள் கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் தவிர்க்க வேண்டும்.

பிரசவ காலத்திற்கும் பிரசவத்திற்கு பிந்தைய காலத்திற்கும் என்ன வித்தியாசம்?(What is the difference between puerperium & postpartum period?In Tamil)

பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனெனில் இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கிறது. அதாவது, பெண்களிடம் உடலியல் மாற்றங்கள் குறைந்து, அவர்கள் பழைய நிலைக்கு திரும்பும் காலம் என்று கூறலாம்.

Tags :

Postpartum period in tamil, what is postpartum period in tamil, puerperium meaning in tamil, diet for postpartum period in tamil, howlong postpartum period will be In tamil, Puerperium in tamil

புதிய அம்மாக்களால் நம்பப்படும் மீட்சி துணைகள்

பிரசவத்திற்குப் பிந்தைய ஆறு வார பயணத்தில் உங்கள் உடல் மீட்சிக்கும் ஆறுதலுக்கும் உதவும் மென்மையான பராமரிப்பு பொருட்கள்.

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles

5763 Moms bought
₹59₹7925% Off
Rating
4.8
(118)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

419 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.