
மழலையர் பள்ளிக்கும் பகல்நேர பராமரிப்பு மையத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் நீங்கள் குழப்பமடைகிறீர்களா? ஒருவேளை உங்கள் குழந்தை பகல்நேர பராமரிப்பில் சமத்தாக இருந்தாலும் கூட நீங்கள் அவரை மழலையர் பள்ளிக்கு மாற்றுவது குறித்து யோசித்துக்கொண்டிருக்கலாம்.
உங்கள் குறுநடை போடும் குழந்தையை எதில் சேர்ப்பது சரி என்று நீங்கள் முடிவு செய்ய உதவும் வகையில் இதோ உங்களுக்காக நாங்கள் மெனக்கெட்டு சில தகவல்களை சேகரித்து வழங்கியுள்ளோம்.
இது பொதுவாக மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், குழந்தைப் பருவத்தில் இருந்து மாறிய மழலையர் பள்ளிக்குச் செல்லும் வயதை அடையாதவர்களுக்கும் ஏற்ற பள்ளியாகும். மழலையர் பள்ளியானது குழந்தைகளின் அடுத்த கட்டத்திற்கான அடித்தளத்தை அமைப்பதில் கவனம் செலுத்துகிறது. அதோடு, இது முழுமையான கற்பித்தல் தத்துவத்தை பின்பற்றுகிறது. பொதுவாக மழலையர் பள்ளிகள் தினசரி நாள் முழுவதும் அல்லாமல் சிறிது நேரத்திற்கு மட்டுமே செயல்படுகின்றன. மேலும், நீங்கள் இத்தகைய பள்ளிகளுக்கு உங்கள் குழந்தையை அனுப்புவதற்கு முன் அவர்களுக்கு மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சியை கொடுத்திருப்பது அவசியாயமாகும்.
மழலையர் பள்ளி குறுகிய நேரங்களுக்கு மட்டுமே இயங்கும். அதோடு, தேசிய விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின் போது மூடி இருக்கும்.
மறுபுறம், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மழலையர் பள்ளியைப் போல் அல்லாமல் அதிக நேரத்திற்கு இயங்கும். அதோடு, பொதுவாக விடுமுறை அல்லது மற்ற நாட்களின் போதும் கூட முழு நேரப் பராமரிப்பை வழங்குகின்றன. இது வேலை செய்யும் பெற்றோருக்கு மிகவும் வசதியான தேர்வாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே! - பல ஆண்டுகளுக்குப் பிறகு சி-செக்ஷன் தழும்பு ஏன் வலிக்கிறது?
ஒரு நல்ல மழலையர் பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையம் என இவ்விரண்டுக்கும் பெரிதாக வேறுபாடு இருக்காது.
கல்வி சார்ந்த வேறுபாடுகளைப் பொறுத்தவரையில், மழலையர் பள்ளிகள் கற்றலில் அதிக கவனம் செலுத்துகின்றன, அதே நேரத்தில் பகல்நேர பராமரிப்பு மையங்கள் பொதுவாக பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் அறிவாற்றல், சமூக மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பகல்நேரப் பராமரிப்பு மையத்தின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மழலையர் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதோடு, கற்பித்தலுக்கு ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள்.
பகல்நேரப் பராமரிப்பு பணியாளர்களுடன் ஒப்பிடும்போது மழலையர் பள்ளி ஆசிரியர்கள் முறையான பயிற்சியைப் பெற்றிருப்பார்கள்.
உங்கள் குழந்தைக்கு சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்ய, இரண்டிலும் உள்ள நன்மை தீமைகளின் பட்டியலை நீங்களே தயார் செய்யலாம். ஆம், உங்கள் குழந்தை எங்கு நிறைய கற்றுக் கொள்வார்கள், எங்கு ஈடுபாட்டுடன் இருப்பார்கள், எங்கு நன்றாக விளையாடுவார்கள் போன்ற பல கேள்விகளை நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். மேலும், ஆன்-சைட் (நேரில் சென்று) ஆராய்ச்சி செய்து, உங்கள் குழந்தைக்கு சரியான பொருத்தத்தைக் கண்டறியவும்.
preschool or daycare in tamil, which one is best preschool or daycare in tamil, is preschool best for my kids in tamil, is daycare best for my kids in tamil
Yes
No


















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |