This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்பிணி பெண்கள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? | Can pregnant women get the flu shot in Tamil

Pregnancy Journey
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 1, 2024
 கர்ப்பிணி பெண்கள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? | Can pregnant women get the flu shot in Tamil
Read time6 min

பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது இன்ஃபுளூவென்சா தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் காய்ச்சல் ஏற்படக் கூடும். கர்ப்பம் அல்லாத பெண்களைக் காட்டிலும், கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், கர்ப்பிணி பெண்களுக்கான தொந்தரவுகள் மிக தீவிரமானதாக இருக்கும். நோய் அபாயம் குழந்தைக்கு பரவவில்லை என்பதை உறுதி செய்ய மிகத் தீவிரமான கண்காணிப்பு தேவைப்படலாம்.

கர்ப்பிணி பெண்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும், சிலர் உயிரிழக்கவும் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் தான் காரணமாக இருக்கிறது என்று CDC தெரிவிக்கிறது. இதனால், காய்ச்சல் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இது மட்டுமல்லாமல் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் என்ன விலை கொடுத்தாவது இவற்றை தடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பான வழிமுறைகளில் ஒன்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகும்.

கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பின் விளைவுகள் ஏற்படும் என்று தோன்றுகிறதா? கர்ப்ப காலத்தில் இன்ஃபுளூவென்சா காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்த அனைத்து தகவல்களும் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், நோயாளிகளுக்கு தகுந்தவாறு இந்த பரிந்துரைகள் மாறலாம். காய்ச்சலை தடுப்பதற்கான முதலாவது மற்றும் மிக முக்கியமான நடவடிக்கை என்பது தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான். காய்ச்சலுக்கு எதிரான ஆன்டிவைரல் மருந்துகளை கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்வது, இந்த பிரச்சினையில் இருந்து காத்துக் கொள்வதற்கான இரண்டாவது வழிமுறை ஆகும்.

கர்ப்பகாலத்தில் இன்ஃபுளூவென்சா தடுப்பூசி (Influenza Vaccine Dose in pregnancy in Tamil)

  • மருத்துவ ஆய்வு தகவல்களின்படி, கர்ப்பிணி பெண்கள் பருவகால காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் இவர்களுக்குத் தான் அதிகம் உள்ளது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது நோய் எதிர்ப்பு திறன், நுரையீரல் மற்றும் இதய செயல்பாடு ஆகியவற்றில் மாற்றம் உண்டாகியிருக்கும். இந்த சூழலில், அவர்களுக்கு காய்ச்சல் எளிதாக தொற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், வெளிப்புற காற்றை சுவாசித்தால் காய்ச்சல் எளிதில் தொற்றிக் கொள்ளும். இது மட்டுமல்லாமல், ஒரே வயது உடைய கர்ப்பம் ஆகாத பெண்களை ஒப்பிடுகையில், கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சலை எதிர்த்து போராடுவது அல்லது அதிலிருந்து வெளிவருவது சிரமமான காரியமாகும்.

  • காய்ச்சலை தடுப்பதற்கு கர்ப்பிணி பெண்கள் இன்ஃபுளூவென்சா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இது கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயத்தை தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒருவேளை காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான தேவையை குறைக்கிறது. அதாவது, பாதிப்பு தீவிரமானதாக இருக்காது.

  • கர்ப்பிணி பெண்கள் இன்ஃபுளூவென்சா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பட்சத்தில், அவர்களது குழந்தைக்கும் வைரஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை பிறக்காத சமயத்தில் மட்டுமல்ல, பிறந்த ஓரிரு மாதங்கள் வரையில் குழந்தைக்கு இந்த பாதுகாப்பு கிடைக்கும். ஏனெனில், இந்த சமயத்தில் தனக்கென தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அளவுக்கு குழந்தைகளின் வயது பக்குவம் அடைந்திருக்காது.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பிணி பெண்கள் பெயிண்ட் அடிக்கலாமா?(Can pregnant women paint? In Tamil)

கர்ப்ப காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஏற்படும் சாதக, பாதகங்கள்(Pros and Cons of Flu Shot During Pregnancy in Tamil)

இன்ஃபுளூவென்சா தடுப்பூசி முழுமையான பாதுகாப்பு கொண்டதாகும். கர்ப்பிணி பெண்கள் ஆண்டுதோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பருவகால காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ள கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட கால வரையறை எதுவும் கிடையாது என்று மகப்பேறு மருத்துவ அமெரிக்கன் கல்லூரி தெரிவிக்கிறது. அதேசமயம், காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஏதேனும் விளைவுகள் ஏற்படலாம் என்ற கவலைகள் இருக்குமானால், கர்ப்பிணி பெண்கள் அதுகுறித்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

கர்ப்ப காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஏற்படும் சாதக, பாதக பலன்கள் இதோ:-

சாதகங்கள்

  • பிரசவத்திற்குப் பிறகும் குழந்தைக்குப் பாதுகாப்பு

  • குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் சமயத்தில், தாய்ப்பால் வழியாக ஆன்டி இன்ஃபுளூவென்சா ஆன்டிபாடீஸ் கடத்தப்படும். இதனால், குழந்தை பாதுகாப்பாக இருக்கும்.

  • கர்ப்ப காலத்தில் மூச்சுத்திணறல் போன்ற அபாயங்களை தவிர்க்கலாம்.

  • குழந்தை வளர்ச்சியை தடுக்கும் அபாயத்தை தவிர்க்கலாம்.

  • கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை தடுக்கலாம்.

  • கரு தொடர்பான ஆரோக்கிய அபாயங்களை தடுக்கலாம்.

கர்ப்ப காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் பாதகங்கள் எதுவுமில்லை என்றாலும் கூட, ஏதேனும் பாதிப்புகள் அல்லது அபாயங்களை தவிர்க்க மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறலாம். குறிப்பாக, நீங்கள் சவால் மிகுந்த கர்ப்பத்துடன் உள்ளீர்கள் அல்லது ஏற்கனவே கவலைக்குரிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்கிறது என்றால் மருத்துவரை ஆலோசிக்கலாம். தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கருச்சிதைவு ஏற்படக் கூடும் என்று சிலர் சொன்னாலும், அது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. உங்கள் உடலுக்கு எது சிறப்பு என்பது குறித்து மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்(Flu Vaccine in Pregnancy Side Effects in Tamil)

கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கான தடுப்பூசி எடுத்துக் கொள்கிறீர்களா? பக்க விளைவுகள் இயல்பானது தான். கீழ்காணும் பக்க விளைவுகளை எதிர்பார்க்கலாம்.

  • உடல் சிவந்து போகுதல், வீக்கம் அடைதல் அல்லது புண் ஏற்படுதல்

  • உடல் இலகுவானதாக மாறுதல்

  • காய்ச்சல்

  • தலைவலி

  • சோர்வு

  • குமட்டல்

  • தசை வலி

கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றாலும், இவற்றை தாங்கும் அளவுக்கு உங்கள் உடல் பக்குவமாக இருக்கும் என்பதால் நீங்கள் கவலை அடையத் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த பக்க விளைவுகள் மிதமான அளவிலேயே இருக்கும். எனினும், பக்க விளைவுகள் நீண்ட காலத்திற்கு இருந்தால் அல்லது ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • கர்ப்பத்தின் மூன்றாவது அத்தியாய காலத்தில் நான் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா?(Can I get a Flu Shot While Pregnant Third Trimester? In Tamil)

ஆம், CDC மற்றும் ACOG பரிந்துரையின்படி, கர்ப்ப காலத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது தான்.

  • கர்ப்ப காலத்தில் இன்ஃபுளூவென்சா தடுப்பூசி செலுத்திக் கொள்வது பாதுகாப்பானதா?(Is it safe to get the Influenza Vaccine Dose in pregnancy? In Tamil)

ஆம், இது பாதுகாப்பானது மட்டுமல்ல. கர்ப்ப காலத்தில் கட்டாயம் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் மருத்துவர் வேண்டாம் என்று அறிவுறுத்தும் பட்சத்தில் மட்டும் தவிர்க்கலாம்.

References

1. SteelFisher GK, Caporello HL, Broussard CS, Schafer TJ, Ben-Porath EN, Blendon RJ. (2021). Seasonal Influenza Vaccine in Pregnant Women: Views and Experiences of Obstetrician-Gynecologists. J Womens Health (Larchmt).

2. Mother To Baby | Fact Sheets [Internet]. (1994). Brentwood (TN): Organization of Teratology Information Specialists. Seasonal Influenza Vaccine (Flu Shot)

Tags
How many injection during pregnancy in Tamil, Vaccines during Pregnancy in Tamil, Vaccines for Pregnant women in Tamil, Should Pregnant Women Get Flu Shots in English, SShould Pregnant Women Get Flu Shots in Telugu

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.