
சுருக்கம்


பெண்களின் உடலில் பல மாற்றங்களை கர்ப்ப காலம் ஏற்படுத்துகிறது. உடலின் பல பகுதிகளை உணர்ச்சி மிகுந்ததாக இது மாற்றுகிறது. எதிர்பாராத முடி வளர்ச்சி முதல் மலச்சிக்கல், ஏப்பம் என கர்ப்ப காலத்தில் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதைப் போலவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாயு தொல்லை ஏற்படுகிறது.
இது ஆச்சரியம் தரக் கூடியதாக இருந்தாலும், இதுகுறித்து வெட்கப்பட ஒன்றுமே இல்லை. ஹார்மோன்கள் மிகுதியாக உற்பத்தியாகுவதன் காரணமாகவே கர்ப்ப காலத்தில் நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறுகிறது. இந்த ஹார்மோன்களின் உற்பத்தியானது இரைப்பை மற்றும் குடல்களின் செயல்பாடுகளை குறைக்கிறது.
இதில் நல்ல செய்தி என்னவென்றால் வாயு பிரச்சினையை நாம் கட்டுப்படுத்த முடியும். இதை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், வீட்டு முறை சிகிச்சைகள் மூலமாக வாயுவை கட்டுப்படுத்தலாம் அல்லது அதன் நாற்றத்தை குறைக்கலாம். இன்னும் சிறப்பான செய்தி என்னவென்றால், மிகுதியாக தண்ணீர் அருந்துவது, உடற்பயிற்சி செய்வது மற்றும் செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட அல்லது கார்பனேட் குளிர்பானங்களை தவிர்ப்பதன் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு நிவாரணம் பெறலாம்.
கர்ப்ப காலத்தின்போது, வழக்கமான உடலுக்கு கிடைக்கும் சில கட்டுப்பாடுகள் பெண்களின் உடலுக்கு கிடைக்காது. தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. வாயு உற்பத்தி ஆகலாம் மற்றும் இது கர்ப்பத்திற்கான ஆரம்பகால அறிகுறியாகும்.
முதலாவது வாரத்தில், பெண்களின் உடலில் மிகுதியான வாயு உற்பத்தி ஆகக் கூடும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில், மாதவிலக்கு தவறவிட்ட 1 முதல் 2 வாரங்களுக்கு உங்கள் உடலில் வாயு பிரச்சினை நீடிக்கக் கூடும்.
கர்ப்ப காலத்தின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்று, அழுகிய முட்டை வாடையுடன் வாயு வெளியேறுவது ஆகும். இதுகுறித்து வெட்கப்பட ஒன்றுமே இல்லை. ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகுவதன் காரணமாக பெண்களின் செரிமானக் கட்டமைப்புகள் வீக்கம் அடைகின்றன. இதன் எதிரொலியாக அதிக வாயு உற்பத்தியாகிறது. இந்த வாயு உற்பத்தி அசௌகரியமானதாக இருக்கும் மற்றும் வயிற்று வலி, ஏப்பம் அல்லது வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு, இது கர்ப்ப காலத்தின் 9 மாதங்களுக்கும் நீடிக்கும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியே வருமா?(Do Pregnant Women Ovulate?In Tamil)
கர்ப்ப காலத்தின்போது, உடல் ப்ரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் தான் மிகுதியான வாயு உற்பத்தியை தூண்டும். கர்ப்பத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மிக அதிக அளவிலான வாயுவை இந்த ஹார்மோன் உற்பத்தி செய்கிறது. இதன் எதிரொலியாக உடலின் தசைகள் ரிலாக்ஸ் அடைகின்றன. குடல் பகுதி தசைகள் ரிலாக்ஸ் அடையும்போது, அதன் காரணமாக செரிமான நடவடிக்கை குறைகிறது. இதனால், வாயு சேர்ந்து கொள்கிறது. இவ்வாறு வாயு ஒன்று கூடுவதன் காரணமாகத்தான் கர்ப்ப காலத்தில் கெட்ட வாடையுடன் அது வெளியேறுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாயு பிரச்சினை ஏற்படுவது இயல்பான விஷயம் தான் என்றாலும், மோசமான உணவு மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதன் காரணமாகவும் இந்தப் பிரச்சினை தூண்டப்படும். தாய்மார்கள் தங்கள் உணவு குறித்து கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும். அப்போது தான் எந்த உணவு வாயுவை தூண்டுகிறது என்று புரிந்து கொள்ள முடியும்.
மிக வேகமாக சாப்பிடுவதைக் காட்டிலும், நிதானமாக, மெதுவாக சாப்பிடுவது சிறப்பாகும். உணவை நன்றாக மென்று, சவைத்து சாப்பிடவும் மற்றும் கூடுதல் வாயுவுடன் சேர்த்து விழுங்குவதை தவிர்க்கவும். ஆக, உடலில் வாயு சேராது. மிக அதிகமாக தண்ணீர் அருந்த முன்னுரிமை அளிக்க வேண்டும். இனிப்பூட்டப்பட்ட அல்லது கார்பனேட் பானங்களை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஆரம்ப நிலையில், கெட்ட வாடையுடன் வாயு வெளியேறுவது இயல்பான விஷயம் தான் என்றாலும், இதற்கு தீர்வு காண சில வீட்டுமுறை சிகிச்சைகள் இருக்கின்றன. மிக அதிகமாக திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, அதிகமாக தண்ணீர் மற்றும் பழ ஜூஸ் போன்றவற்றை அருந்தலாம். நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வாயுவை கட்டுப்படுத்த நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் உடலுக்கு இறுக்கம் தராத, சௌகரியமான உடைகளை அணியலாம். உங்கள் ஸ்ட்ரெஸ் அளவுகள் குறைவாக இருப்பதை உறுதி செய்யவும்.
கர்ப்ப காலத்தில் வாயு பிரச்சினை என்பது சில மாதங்களுக்கு நீடிக்கலாம் அல்லது கர்ப்ப காலம் முழுவதும் நீடிக்கலாம். குறிப்பாக இது ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாகுவதால் நிகழுகிறது. கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கெட்ட வாடையுடன் வாயு வெளியேறலாம். ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது மற்றும் மிக அதிகமாக தண்ணீர் அருந்துவது ஆகிய நடவடிக்கைகளை தவிர்ப்பதன் காரணமாக இவ்வாறு நடக்கலாம். வயிறு உப்புசம், ஏப்பம் மற்றும் கெட்ட வாடையுடன் வாயு வெளியேற்றம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க மிக கூடுதலாக தண்ணீர் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மற்றும் உடலுக்கு நிறைய பயிற்சிகள் அளிக்க வேண்டும். வாயு சேருவதை நீங்கள் முழுமையாக தவிர்க்க முடியாது என்றாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம் அல்லது உடலில் சேரக் கூடிய வாயுவின் அளவை குறைக்கலாம்.
கர்ப்ப காலத்தின்போது சுரக்கின்ற அதிகப்படியான ஹார்மோன்களால் உற்பத்தியாகும் வாயு அல்லது வயிறு உப்புசம் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு அசௌகரியம் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். எனினும், இந்த தொந்தரவுகளால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. நீண்ட காலத்திற்கு வாயு பிரச்சினை நீடித்தால் அல்லது அதனுடன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
Gas is an Early Pregnancy Symptom in Tamil, Smell in Gas During Pregnancy in Tamil, Is Gas affect your Pregnancy in Tamil, How to relieve the Gas problem During Pregnancy in Tamil, Causes of Farting in Pregnancy in Tamil, Do Pregnant Women Fart A Lot in English, Do Pregnant Women Fart A Lot in Telugu, Do Pregnant Women Fart A Lot in Bengali
வாயு, உப்புசம், செரிமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற உங்களுக்கு உதவும் மென்மையான, பாதுகாப்பான தயாரிப்புகள் இங்கே உள்ளன.

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress




Compression Stocking Socks - S
Compression Stockings for Varicose Veins | Reduces Swelling | Boosts Blood Circulation



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |